ஈரோடு (வடக்கு) மாவட்ட பரப்புரைப் பயணம்

பெரியார்  140 ஆவது பிறந்த நாள் விழாவினை ஈரோடு வடக்கு மாவட்டம் வாரந்தோறும் தமிழர்கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணமாக நடத்தி வருகின்றது. மழை  காரணமாக  மற்றும் செயலவைக் கூட்டம் காரணமாக இரு வாரங்கள் ஒத்திவைக்கப்பட்ட  பரப்புரைப் பயணம் இந்தவாரம் நம்பியூர் ஒன்றியம் குருமந்தூர் பகுதியில் துவங்கியது. குருமந்தூர் மேட்டில் அமைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பத்தில் குருமந்தூர் திமுக பகுதி செயலாளர் குழந்தைவேல் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பகுத்தறிவுப் பாடலை பாட பரப்புரை பயணம் தொடங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வேணுகோபால் தலைமையில் கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, மாநில வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். அலிங்கியம் செந்தில் அனைவருக்கும் நன்றி கூறினார். கழகத் தோழர் செந்தில் அனைவருக்கும் தேனீர் ஏற்பாடு செய்து இருந்தார்.

பயணக்குழு அடுத்து அளுக்குளி பகுதிக்கு வந்தது. அளுக்குளி தங்கம் வரவேற்புரையாற்ற பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பகுத்தறிவு பாடலோடு நிகழ்வு துவங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி நம்பியூர் ஒன்றிய செயலாளர் இரமேசு, தோழர்கள் வேணுகோபால், வேலுச்சாமி, இராம.இளங்கோவன் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். தோழர் செயபால் நன்றி கூற பயணம் நிறைவுற்றது. தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவை  அளுக்குளி தங்கம் ஏற்பாடு செய்து இருந்தார் . பயணத்தின் இறுதிவரை அலிங்கியம் பகுதி விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பயணத்திற்கான ஏற்பாடுகளை குருமந்தூர் மற்றும் அளுக்குளி பகுதி தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

பெரியார் முழக்கம் 29112018 இதழ்

You may also like...