ஏழு தமிழர் விடுதலை : ஆளுநரின் தாமதம் சட்டப்படி சரியானதல்ல
ஏழு தமிழர்கள் விடுதலையில் அமைச்சரவை யின் முடிவை ஆளுநர் தாமதப்படுத்துவது சட்டப்படி சரியானது அல்ல என்பதை விளக்கி வழக்கறிஞர் மனுராஜு சண்முக சுந்தரம், ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரையும் விடுதலை செய்து உத்தரவிடுவதை மேலும் தாமதப்படுத்துவது ‘சட்டத்தின் முன்னால் சமமாக நடத்தப்படுவதோ அல்லது சட்டப் பாதுகாப்போ எந்தவொரு நபருக்கும் மறுக்கப்படக் கூடாது’ என்று வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் 14-வது கூற்றை மீறுவதாகும். ஏழு தமிழர்களின் வழக்கு ஏராளமான திருப்பங்களைக் கொண்டது. அவர்களது கருணை மனுக்கள் 2000 தொடங்கி 2011 வரைக்கும் 11 ஆண்டுகள் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமலேயே உயர் அதிகார மையங்களில் கிடப்பில் போடப்பட்டிருந்தன. 2011 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றமே அவர்களது மரண தண்டனையை இரத்துசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய ஒன்றியம் எதிர் வி.ஸ்ரீஹரன் (முருகன்) (2005) வழக்கில், உச்சநீதிமன்றம் மரண தண்டனை இரத்து செய்து எஞ்சிய...