சென்னை பயணக் குழுவுக்கு பக்தர்கள் பொது மக்கள் பேராதரவு
கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் மேற்கொண்ட சென்னைக் குழுவினருக்கு மக்கள் பேராதரவை வெளிப்படுத்தினர்.
- தோழர்கள் இராவணன், முரளி, அருண், இரண்யா, தேன்ராஜ், செந்தில், பிரியா, ஓவியா – வெயில், மழை என்று பாராமல் கழக துண்டறிக்கையைக் கொடுதது கடைகளில் நிதி வசூல் செய்தனர்.
- ஏழு நாளில் 16,000 துண்டறிக்கையை மக்களிடையே கொடுத்தனர். மக்களும் தாமாக முன் வந்து துண்டறிக்கை வாங்கி படித்தது மிகச் சிறப்பு.
- பயணத்தில் கடை வசூல் மட்டும் ரூ.60,000/- கிடைத்தது. இதில் சிறு வியாபாரிகளே அதிக ஆதரவு தந்தனர்.
- கூடுவாஞ்சேரியைச் சார்ந்த நாடி ஜோதிடர் பழனிச்சாமி என்பவர், பயணச் செலவுக்கு ரூ.2000 நிதியளித்தார். கண்டிகையில் பிரச்சாரத்தைக் கேட்ட பக்தர் ஒருவர் ரூ.500 நன்கொடை வழங்கினார். இப்படி பயணத்தில் ஏராளமான பக்தர்கள் நிதி உதவி தந்தும், பழம், குளிர் பானம், தேநீர் என்று அவர்களால் இயன்ற அளவில் வழங்கி ஆதரவு தந்தனர்.
- பெரியார் இயக்கத்தைச் சார்ந்த வர்கள் நம் உரிமைக்கும் சுயமரி யாதைக்கும் குரல் கொடுப் பவர்கள், இவர்கள் நமக்கானவர்கள் என்றுதான் மக்கள் பார்த்தார்கள். கடவுள் மறுப்பாளர்கள் என்று கருதவில்லை.
- பயணத்தில் ரூ.23,000-க்கு கழக வெளியீடுகள் விற்பனையாகின.
- பேராசிரியர் கல்விமணி பயணக் குழுவை வரவேற்று திண்டிவனம் நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி, மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்தார். பல இடங்களில் கழக ஆதரவாளர்கள், தோழர்கள் தங்கு வதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்தது மகிழ்ச்சியளித்தது.
- வீதி நாடகக் குழுவினர் மத்திய கல்வி வேலை வாய்ப்பு மற்றும் பிற மாநில உரிமைகள் பறிப்பு குறித்து மக்களிடையே கேள்வி பதில் மூலம் பிரச்சாரக் குழுவுக்கும் மக்களுக்கு மிடையே ஒரு உரையாடலை ஏற்படுத்தி மக்களை பரப்புரை யுடன் இணைத்தனர்.
9 பயண நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அனைவரும் இதுபோன்ற பயணத்தை மக்களிடையே தொடர்ந்து நடத்துங்கள் என்றே வலியுறுத்தினர். இது பெரும் ஊக்கத்தைத் தந்தது.
- வழக்கம்போல் அல்லாமல் காவல்துறை உரிய பாதுகாப்பு தந்தது, பல காவலர்கள் நிதி உதவி தந்தது, புத்தகங்களை வாங்கினர்.
தொகுப்பு: அய்யனார்
பெரியார் முழக்கம் 06092018 இதழ்