ஜக்கி அவர்களே! பதில் சொல்லுங்கள்!
ஜக்கி வாசுதேவ் – தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவரது பேட்டி தொடர்பான பல கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. ‘ஆதியோகி சிவன்’ சிலை – அதைப் பார்ப்பவர்கள் நினைவி லிருந்து நீங்கவே நீங்காது; அந்த வகையில் 112 அடியில் வடிவமைத்திருக்கிறோம் என்கிறார். அப்படியானால் உருவ வழிபாடே கூடாது என்று இதுவரை இவர் கூறிவந்த கருத்துக்கு விடை கொடுத்து விட்டாரா? ஆதியோகி சிலை கடவுள் சிலை அல்ல; அது சிவன் சிலையும் அல்ல என்கிறார் ஜக்கி. அப்படியானால் அந்த சிலையில் சிவனின் அடையாளத்தைக் குறிக்கும் – கழுத்துப் பாம்பு; தலையில் சந்திரன் உருவங்கள் இடம் பெற்றிருப்பது ஏன்? எனது மய்யம் அமைந்த பகுதியில் ஒரு அங்குலம்கூட வனப்பகுதி கிடையாது; இந்தப் பகுதிகளில் நடமாடும் மான்களை வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர்கள், எங்கள் கட்டிடம் வந்த பிறகு, அது கிடைக்காமல் போனதால் எங்களை எதிர்க் கிறார்கள் என்கிறார். அப்படியானால் மான்கள் நடமாடக்கூடிய, அதன்...