விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘சங்பரிவாரங்களின் சதி வரலாறு’ – கன்னட மொழியில் வெளியீடு : ஒரே நாளில் 2500 பிரதிகள் விற்றன
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தமிழில் எழுதிய ‘சங் பரிவாரங்களின் சதி வரலாறு’ எனும் ஆய்வு நூல் கன்னட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு “சஞ்சகரா சங்க பரிவார” எனும் பெயரில் 20.01.2018 சனிக்கிழமை அன்று பெங்களூரில் வெளியிடப்பட்டது.
பெரியாரியலாளர் கலைச் செல்வி, அகஸ்டியா ஆகியோர் இந்நூலை கன்னட மொழியில் மொழி பெயர்த்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்சின் எம்.எஸ். கோல்வால்கரின் தீய எண்ணங்கள் மற்றும் கொடூரமான கருத் தாக்கங்களை இந்நூல் ஆவணப்படுத்து கிறது.
பெங்களூரில் உள்ள கன்னட பவனில் கன்னட எழுத்தாளர் திரு.முரளிசித்தப்பா இந்நூலை வெளியிட, பிரபல கன்னட ‘அக்னி’ வார இதழ் ஆசிரியர் பத்திரிக்கை யாளர் ‘அக்னி’ ஸ்ரீதர், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் திரு. பி.கே. ஹரி பிரசாத் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ஹரிபிரசாத், ஆர்.எஸ்.எஸ். என்றால் ‘வதந்தியை பரப்பும் அமைப்பு’ (சு.ளு.ளு =‘சுரஅடிரச ளுயீசநயனiபே ளுடிஉநைவல’) என்றும், இது அரசியலமைப்பை எதிர்க் கிறது மற்றும் சமூகத்தில் அனைவரின் சமத்துவத்தையும் ஏற்கவுமில்லை என்றார். பெரியார், ஸ்ரீநாராயண குரு, பசவண்ணா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகள் வேத தர்மத்தில் உள்ள சமத்துவமின்மைக்கு எதிராக செயலாற்றி யவர்கள். இந்தி பேசும் வட மாநிலங்களில் இப்படியான சமூக சீர்திருத்த வாதிகள் உருவாகவில்லை என்றார்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. “அவர்கள் ‘தேசபக்தர்கள்’ அல்ல – ‘துவேச பக்தர்கள்’ (சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் வேறுபாடுகளை விரும்புபவர்கள்)” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஹரிபிரசாத், “ஒரு சில தனிநபர் களால் கட்டுப்படுத்தப்படும் ஊடகம் அதன் அணுகுமுறையில் பாகுபாடு காட்டுகிறது. நிர்பயா எனும் பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை பரபரப்பாக்கப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஆக்கப்பட்ட அதே நேரத்தில் பாஜக ஆளும் ஹரியானா வில் தலித் பெண்ணின் பாலியல் வன் கொடுமை மற்றும் கொலை மறைக்கப்படு கிறது. தென் கனரா மாவட்டத்தில் இந்துக் களின் படுகொலைகளில் ஈடுபட்டோர் பெரும்பாலோர் பஜ்ரங் தள் அமைப்பச் சேர்ந்தவர்களே. சமுதாயங்களுக்கிடையே பகைமையைத் தூண்டி வன்முறையை உருவாக்கவே அவர்கள் அப்படி செயல்படு கிறார்கள்.”
வரலாற்று ஆவணங்களை மேற்கோள் காட்டிப் பேசிய ஹரிபிரசாத், “ஆங்கில அரசிடம் மன்னிப்பு கேட்டதால் அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர் சவர்க்கர், இந்த கோழைத்தனமான செயலை செய்த அவர் எப்படி ‘வீர’ என்று அழைக்கப் படுவார்? ஆக்ரா நீதிபதியிடம் பாஜகவின் மூத்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பேயி இந்திய சுதந்திரத்திற்கு போராடும் எந்த அமைப்பிடமும் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன்” என சமர்ப்பித்த வாக்குமூலத்தை அவர் மேற்கோளிட்டு காட்டினார்.
புத்தகத்தின் வெளியீட்டிற்கு முன்பு புத்தகத்தை முழுமையாக படித்துவிட்டு வந்திருந்த பத்திரிகையாளர் அக்னி ஸ்ரீதர், “சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் பாசிசவாதி களான சங்பரிவார் அமைப்புகளை மறுவாசிப்பிற்கு உட்படுத்தி பொதுப்புத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த இந்நூல் ஒரு கருவியாய் திகழ்கிறது” என்று குறிப்பிட்டார்.
சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்கவில்லை. ஆனால் கோல்க்கான் பீமாவில் உள்ள தலித்துகள் மீது தாக்குதல் நடத்தி தலித் மற்றும் பாபா சாகேப் அம்பேத் கரின் ஆதரவாளர்களை நசுக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ். வேலை செய்தது. ஆங்கில ஆட்சிக்கு எதிராக நான்கு போர்களை நடத்திய திப்பு சுல் தானை ஆர்.எஸ். எஸ். ஏற்கவில்லை. மேலும் திப்பு மக்கள் தங்கள் உணவு களை தேர்வு செய்ய முழு உரிமை உண்டு எனவும் மாட்டுக் கறி உண்பவன் தான் உண்மை யான இந்து என வும் அறிவித்தார். அவர் பட்டியலின சாதிகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மத சிறுபான்மை யினர் ஆகியோரை நசுக்கும் வேத கலாச் சாரத்திற்கு எதிராக போராடுவதற்கு அழைப்பு விடுத்தார். இந்து மதத்தின் தாராளவாத நெறிகளையும், வேத கலாச்சாரத்தின் தடைகள் குறுக்கீடுகள் ஆகியவற்றை அறிய இப்புத்தகத்தை பரப்புவது ஒவ்வொரு இந்துவின் கடமை எனவும், ஒவ்வொரு முஸ்லீமும் தாங்கள் எப்படி பாதிப்படைகிறோம் என்பதன் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நூலை உடனடியாக உருது மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்றார்.
இந்த புத்தகத்தை எழுதிய விடுதலை இராசேந்திரன் தனது உரையில்: “இந்த நூலை மதவெறி குண்டுக்கு பலியான கவுரி லங்கேசுக்கு காணிக்கையாக்கியிருப்பது இந்த நூலுக்குக் கிடைத்த பெருமை” என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். தொடர்ந்து பேசுகையில் –
“தேச பக்தி என்பது ஒரு இந்துவாக வாழ்வதுதான். இந்து மதத்தை ஏற்காதவர்கள் தேச விரோதிகள் என்பதே சங்பரிவார் கொள்கையாக இருக்கிறது. பா.ஜ.க. அமைச்சர்களும் இதையே பேசு கிறார்கள். ஒரு குடிமகனாக ஒவ்வொரு வரையும் அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறது. ‘குடிமகன்/குடிமகள்’ என்ற சொற்களுக்கு மத அடையாளம் கிடையாது. சட்டப்படி அனைத்து குடிமக்களும் மதம், ஜாதி அடை யாளங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கான அடையாளங்களை மொழி வழி மாநிலங்களின் அடிப்படையில் அரசியல் சட்டம் அங்கிகரிக்கிறது. ‘மதச் சார்பின்மை’ என்ற சொல்லே மதங்களுக்கு தொடர்பில்லை என்ற உண்மையை திட்டவட்டமாக தெளிவு படுத்துகிறது. ஆனால் சங்பபரிவாரங்களும் அரசியல் சட்டப்படி உறுதியேற்று அதிகாரத்துக்கு வந்த பா.ஜ.க.வினரும் ‘குடிமக்கள்’ (ஊவைணைநn) இந்துக்களாகவே இருக்க வேண்டும் என்றும், ‘மதச் சார்பின்மை’ என்பது போலியானது; ‘இந்துராஷ்டிரத்துக்கு’ எதிரானது. சிறு பான்மையினரை அங்கீகரிப்பது என்றும், ‘வியாக்யானம்’ செய்து, தாங்களே தேச பக்தர்கள் என்கிறார்கள். அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது. ‘இந்தியர்’களாக இருப்பது தேசபக்தியா? இந்துக்களாக இருப்பது தேசபக்தியா? ‘இந்தியர்கள்’ என்ற சொல்லையே ஏற்காத வர்கள் பா.ஜ.க.வினர், சங்பரிவாரங்கள் என்பதை இந்த நூலில் நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன். ‘இந்தியா’ என்ற வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். தத்துவ நூலிலான கோல்வாக்கர் எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ (ரெnஉh டிக வாடிரபாவள) நூல் கூறுகிறது.
“இன்று பாரதியம் – பாரத் என்ற சொற்கள்கூட தவறான பொருளில் பயன் படுத்தப்படுகின்றன. ‘இந்தியா’, ‘இந்தியன்’ என்ற சொல்லுக்கு மாற்றாக, அதைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியன் என்ற சொல், இந்த நாட்டில் வாழும் கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி போன்ற பல்வேறு சமூகத் தவரையும் சேர்த்துத்தான் குறிக்கிறது. நம்முடைய சமூகமான ‘இந்து’வை மட்டும் குறிப்பது இல்லை. நம்முடைய சமூகத்தை மட்டும் குறிக்கும் பாரதியம் என்ற சொல்லை மற்ற சமூகத்தினரையும் இணைத்துக் கொள்ளும் சொல்லாகக் குறிப்பிடு கின்றனர்.”
– இது கோல்வாக்கர் எழுத்துபூர்வமாக பதிவு செய்த கருத்து. எனவேதான் தங்கள் அமைப்புகளுக்கு பாரதிய ஜனதா கட்சி, பாரதிய கிஸ்தான் சபா, பாரதிய சங்கம் என்ற பெயர் சூட்டுகிறார்களே தவிர, ‘இந்தியா’ என்று குறிப்பிடுவதையே எதிர்க்கிறார்கள். ‘இந்தியா’ என்ற அமைப்பை இந்தியா என்ற சொல்லையே ஏற்க மாட்டோம் என்று கூறுகிறவர்கள், இந்திய சட்டம் அனுமதிக்கும் தேச பக்தர்களா? இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்துக் களுக்காக அவர்களின் நலனுக்காக பாடுபடுகிறோம் என்று இவர்கள் கூறுவதும் பச்சைப் பொய்.
மண்டல் பரிந்துரையில் கூறப்படும் பிற் படுத்தப்பட்டோர் இந்துக்கள் தானே? பிறகு வி.பி.சிங் ஆட்சியை மண்டல் பரிந்துரையை அமுலாக்கியதற்காக ஏன் கவிழ்த்தார்கள்?
அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடும் நாடகத்தை நடத்தும் இவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு உரிமையை – மாட்டுக் கறி சாப்பிடுவதை ஏன் மறுக்கிறார்கள்; மாட்டுக் கறி சாப்பிட்டால் மரண தண்டனை தருகிறார்களே.
போராடும் விவசாயிகள் யார்? பண மதிப்பு நடவடிக்கையாலும் ஜி.எஸ்.டி. விதிப்பா லும் பாதிக்கப்பட்டவர்கள் யார்? இவர்கள் பார்வையில் பெரும்பாலும் இந்துக்கள் தானே. இவர்கள் வெகுமக்களான ‘இந்துக்கள்’ என்போர் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வேத மனுதர்மப் பார்வையில் பார்ப்பனர்களின் சமூக மேலாதிக்க பார்ப்பனியக் கருத்து களை சமூகத்தில் திணித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்தியாவின் ஒரு சதவீத பணக்காரர்களிடம்தான் நடப்பாண்டு மத்திய ‘பட்ஜெட்’ தொகையைவிட அதிக பணம் புரளுகிறது என புள்ளி விவரம் கூறுகிறது. இந்த ஒரு சதவீத பணக்காரர்கள் பார்ப்பனரும் பனியாக்களும்தான்.
அரசு அதிகார அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ‘இந்து’க்களா இருக்கிறார்கள்? மோடியின் காபினட் அமைச்சரவை செயலகத்தில் ஒரு பிற்படுத்தப் பட்டவரோ, தாழ்த்தப்பட்டவரோ இல்லை என்று அண்மையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் கூறு கிறது. இவர்கள் ஒடுக்கப்படுகிற ‘இந்து’ மக்களின் பிரதிநிதிகள் அல்ல; பார்ப்பன – பனியா வுக்கான பிரதிநிதிகள்; வெகு மக்கள் ‘இந்து’ என்று நம்பிக் கொண்டிருக் கிறவர்கள். இந்த மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வு ஊட்ட இந்த நூல்கள் பயன்படும்” என்றார்.
கன்னட எழுத்தாளர் டாக்டர் மார்சுலிப் பாபா இந்தியாவில் மதச்சார்பின்மை அனாதையாகி வருவதாக வருத்தம் தெரி வித்தார். காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ‘இந்துக்கள்’ என்று சொல்லிக்கொண்டு கோயில்களுக்கு செல்கிறார்கள். பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான நமது எதிப்புத்திறன் குறைந்து கொண்டே இருப்பது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் ஒரு வைரஸ் எனவும், அதன் பாதிப்பு ஒருவருக்கு இருக்கிறதா என அடிக்கடி பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம் என்றும் கூறினார். சங்பரிவார அமைப்பை சேர்ந்தவரால் படுகொலை செய்யப்பட்ட மகாத்மா காந்தியைவிட சிறந்த இந்து, புனிதர் இங்கு யாரும் இல்லை என்றார். சிறப்பான இந்த ஆய்வு நூலை வெளியிட்டதற்காக தோழர் விடுதலை ராஜேந்திரன் மற்றும் கலைச் செல்வி ஆகியோரைப் பாராட்டினார்.
கன்னட மொழிபெயர்ப்பாளர் கலைச் செல்வி பேசுகையில், “பிற்படுத்தப்பட்ட மக்களின் 27 சதவிகித இட ஒதுக்கீட் டிற்கான மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்துவதை, அவர்களும் இந்துக்கள் தான் என்றாலும் எதிர்த்தது யார்? என்றும் தலித்துகளும் இந்துக்கள்தான் என்றால் கோயில்களில் ஏன் அவர்கள் நுழைய முடியவில்லை? ஒருவரின் உணவு உரிமை, திருமண உரிமையில் பிறர் ஏன் தலையிடு கிறார்கள்? உணவும், உறவும் தனிமனித உரிமைகள் அவற்றை இவர்கள் ஏன் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்?” என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்தப் புத்தகத்தை கௌரி லங்கேஷ் நினைவாக அவர் கொல்லப்பட்ட நாளில் கன்னடபவனில் வெளியிட முடிவு செய்ததாக கலைச் செல்வி குறிப்பிட்டார்.
கன்னட மொழியில் இந்நூல் போன்ற சங்பரிவாரங்கள் குறித்த ஆய்வு நூல் எதுவும் வரவில்லை, இதுவே முதல் நூல் எனவும் அடுத்து இந்நூல் உருது, இந்தி மொழிகளில் மொழிபெயர்க்கும் பணி துவங்கியுள்ளதாகவும் கூறினார். வெளியீட்டு அரங்கிலேயே 2500 புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. இதில் மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத் 1000 புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடு வதற்கான தொகையை வழங்கினார். 1000 புத்தகங்களை ஒருவரே பெற்றுக் கொண்டார். மேலும் 500 புத்தகங்கள் தலித் அமைப்புத் தோழர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த 500 புத்தகங்களைக் கொண்டு தலித் அமைப்புகளிடம் அறிமுகக் கூட்டங்கள் நடத்த உள்ளதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு களைச் செய்த கலைச்செல்வி தெரிவித்தார்.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் 200 பேர் அரங்கு நிறைந்த அளவில் தோழர்கள் கலந்து கொண் டார்கள்.
(செய்தி : மூத்த ஆங்கில ஊடகவியலாளர் மக்பூல் அகமது சிராஜ்,பெங்களூர்)
பெரியார் முழக்கம் 02022018 இதழ்