நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக் காட்சியின் முதன்மை ஆசிரியர், குணசேகரனுக்கு, ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ வழங்கப் பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர், ராம்நாத் கோயங்கா நினைவுகளை போற்றும் வகையில், 2004 முதல், ஒவ்வொரு ஆண்டும், ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு, ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ வழங்கப்படுகிறது. பத்திரிகையாளர் களின் நேர்மையான, மிகச் சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில், இந்த விருது வழங்கப்படுகிறது. பிராந்திய மொழியில், ஒரு நிகழ்வு அல்லது மக்கள் பிரச்னையை, விரிவாக, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பதிவு செய்யும், அச்சு மற்றும், ‘டிவி’ ஊடகவியலாளருக்கு, இவ்விருது வழங்கப்படும். அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய, ஊடகவியலாளர் விருதுக்கு, ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ முதன்மை ஆசிரியர் மு. குணசேகரன் தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில், 2017இல், ‘ஒக்கி’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீனவர்கள் சந்தித்த துயரங்களை, தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்ததற்காக,...