Category: நிமிர்-கட்டுரைகள்

சிறுபான்மை ஜாதிகளை விலக்கி வைக்கும் ‘ஜனநாயகம்’

சிறுபான்மை ஜாதிகளை விலக்கி வைக்கும் ‘ஜனநாயகம்’

எண்ணிக்கை பலம் குறைந்த ஜாதிகளை ஜனநாயக அமைப்பு விலக்கி வைப்பதை ஏன் கட்சிகள் விவாதிக்க முன்வருவதில்லை? பெயரோடு சாதிப் பட்டத்தை வழக்கமாகவே சேர்த்துக்கொண்ட காலத்தில்கூட இப்போதைய சாதி உணர்வு இருந்ததில்லை. போவதாகப் போக்குக்காட்டி, அந்த உணர்வு புது வேகத்தில் தலையெடுத்திருக்கிறது. ஒரு தேர்தல் உத்தியாகச் சாதிகளை உள்ளே இழுத்து, அவற்றைச் சீரணித்துக்கொள்ளலாம் என்று கட்சிகள் நம்புகின்றன. விளைவு என்னவென்றால், கட்சிகள் பெரும்பான்மைச் சாதிகளின் கூட்டமைப்புகளாக மாறிவிடுவதுதான். இந்த நிலையில் சிறிய சாதிகளை ஜனநாயக அரசியல் என்ன செய்கிறது என்பதை விவாதிக்க வேண்டும். ஊருக்கு ஒரு ஆச்சாரி. கொல்லர் ஒருவர். பத்தர், குயவர், மேளக்காரர், வாணியரும் ஒவ்வொருவர். இப்படியே வண்ணார், மருத்துவர் என்று ஊருக்கு ஒன்றிரண்டாக இறைந்து எண்ணிக்கை வலுவிழந்தவை இருநூறுக்கு மேலான சிறிய சாதிகள். கிராமங்கள் தன்னிறைவு பெற்ற குடியரசுகள் என்ற பெருமையைப் பெற்றது இந்தச் சாதிகளின் கைவினைப் பங்களிப்பால். ஆனால், அரசியல் கணக்குக்குள் இவை எப்போதுமே வராதவை. ஒரு பெரும்பான்மைக்...

திருமூலரை எதிர்க்காத பார்ப்பனர்கள் வள்ளலாரை எதிர்ப்பது ஏன்?  கரு. ஆறுமுகத்தமிழன்

திருமூலரை எதிர்க்காத பார்ப்பனர்கள் வள்ளலாரை எதிர்ப்பது ஏன்? கரு. ஆறுமுகத்தமிழன்

வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதீக மதத்திற்கு எதிராக ஆகமத்தை அடிப் படையாகக் கொண்ட சைவ மதம் உருவானது. சாதி, வருண வித்தி யாசத்தை மறுத்த புத்த, சமண மதங்களை வீழ்த்தவேண்டும் என்று வந்தபோது வைதீகத்தோடு சைவம் சமரசம் செய்து கொண் டது. வேதத்தை ஒப்புக்கொண்ட சைவம், வைதீகத்திற்குள் கரைந்து விட்டது. ராஜராஜ சோழன் காலத் தில் சமஸ்கிருதம் கோவிலுக்குள் நுழைந்து அனைத்தும் சமஸ்கிருத மயமானது. தமிழகத்திற்குள் கிறிஸ்துவம் பரவியது. சாதியை மறுத்து அனைவருக்கும் கல்வி கொடுத்தது. இதற்கெதிராக பல இயக்கங்கள் உருவாகின. தமிழை வளர்க்க ஆறுமுக நாவலர் சைவவித்யா சாலைகளை நிறுவினார். வைதீக வயப்பட்ட சைவத்தை கற்பித்தார். இதிலிருந்து வள்ளலார் மாறு பட்டு மணிவாசகர், திருமூலர், தாயுமானவரைப் பின்பற்றி ‘சமரச சன்மார்க்க’ நெறியை உருவாக் கினார். முரண்பட்ட வைதீக மரபையும் தமிழ் மரபையும் ஒன்றென இணைத்த திருமூலர், வைதீகத்தை யும், பிராமணர்களையும் கடுமையாகக் கேலி செய்தார். கோவில், சமயமரபுகளை உருவாக்கிய அவரே,...

அரசு கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்கலாமா? – விடுதலை அரசு

அரசு கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்கலாமா? – விடுதலை அரசு

கோயில்களை அரசுப் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்று இந்துத்துவாதிகள் பார்ப்பனர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறதா? இத்தனை பெரிய கோயில்களை கட்டியது யார்? மன்னர்கள்- அரசுகள். யாருடைய பணம்? மக்களை கசக்கி பிழிந்து வசூலித்த வரிப் பணம். எவருடைய உழைப்பு? மக்களின் உழைப்பு. திருவரங்கம் கோவிலை கட்டிமுடித்த உழைப்பாளிகள்  கூலிகேட்டு குழந்தை குட்டி களோடு ஒட்டிய வயிற்றுடன் நின்றபோது  “இந்த உலகத்தில்தான் பசிக்கும், பசி தீர்க்க காசு வேண்டும்! ஆனால் வைகுந்தத்தில் பசிக்காது… காசும் தேவைப்படாது! உங்களை நித்யமான  வைகுந்தம் அனுப்புகிறேன்”  என்றுகூறி அவர்கள் அனைவரையும் ஓடத்தில் ஏற்றி கரைபுரண்டு ஓடிய கொள்ளிடம் ஆற்றின் நடுவில் ஓடத்தை கவிழ்த்துக் கொன்றான் திருமங்கை ஆழ்வான். திருவானைக்கா கோயிலில் ஒரு மதில் சுற்றின் பெயர்: விபூதி பிரகாரம்! ஏனிந்த பெயர்? ஊரையே வளைத்து மைல் கணக்கில் கட்டப்பட்ட நீண்ட கருங்கல் மதில்சுவற்றை கல்சுமந்து கட்டிய நமது முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட கூலி விபூதி! மட்டும்தான்! எதற்கு? பசியால் கண்கள்...

டார்வினின் பரிணாம கோட்பாடு தவறா? மத்திய அமைச்சருக்கு அறிவியல்பூர்வ மறுப்பு

டார்வினின் பரிணாம கோட்பாடு தவறா? மத்திய அமைச்சருக்கு அறிவியல்பூர்வ மறுப்பு

“டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு விஞ்ஞான ரீதியாக தவறானது. அதனை பள்ளி, கல்லூரிப் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும். மனிதன் இந்த பூமியில் எந்தக் காலத்திலும் மனிதனாகவே இருந்துள்ளான். குரங்கு மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் எங்கும் கூறவில்லை” என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் அதிரடியாகப் பேசியுள்ளார். ஜனவரி 19 அன்று ஒளரங்காபாத்தில் அனைத்திந்திய வைதிக சம்மேளன நிகழ்ச்சியில் பேசும்போது இவ்வாறு உரையாற்றியுள்ளார்.அத்துடன் நில்லாமல் “நான் அடிப்படை ஏதும் இல்லாமல் இதைக் கூறவில்லை. டார்வினுடைய கொள்கைக்கு உலகம்முழுவதும் எதிர்ப்பு இருக்கிறது. நான் கலைப்பிரிவு பின்னணியிலிருந்து வந்தவன் அல்ல. தில்லி பல்கலைக் கழகத்தில் வேதியியல் பிஎச்.டி. பட்டம் வாங்கியவன். நானும் அறிவியல் மனிதன்தான்” என்று கூறி தனது கருத்துக்கு வலுவூட்ட முயன்றிருக்கிறார் சத்யபால் சிங். நமக்கோ `நானும் ரவுடிதான்’ என்று வடிவேலு ஒரு படத்தில் அலப்பறை செய்ததுதான் நினைவுக்கு வருகிறது! கிராஃபிக்சில் காண்பிப்பது மாதிரி நமது முன்னோர்கள்...

தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் நடுவண் ஆட்சி

தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் நடுவண் ஆட்சி

மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிக்க 15ஆவது நிதிக் குழு பின்பற்றும் அளவீடுகள், காரணிகள் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதை புள்ளி விவரங்களுடன்  அலசுகிறது கட்டுரை. நடுவண் அரசு வசூலிக்கும் வரி வருவாயில் ஒரு பகுதியை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 280 (1)ன் படி ‘நிதிக் குழு’ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது. தற்போது 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகள் (2015-20) செயல்பட்டுக் கொண்டிருக்கிறன. கடந்த ஆண்டு நவம்பரில் பதினைந்தாவது நிதிக் குழு அமைக்கப்பட்டு, அதற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் பரிந்துரைகள் வருகின்ற 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் 31 வரையில் அமலில் இருக்கும். இந்த 15ஆவது நிதிக் குழுவின் தலைவராக ஒன்றிய வருவாய்த் துறை செயலாளராக இருந்த என்.கே.சிங் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி 2017ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளார். மேலும் இந்தக்...

கோயில் கொள்ளைகளை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர் ப. திருமாவேலன்

கோயில் கொள்ளைகளை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர் ப. திருமாவேலன்

‘தாடி இல்லாத இராமசாமி’ தகுதி அடிப்படையில் 20 சதவீத இடஒதுக்கீடு செய்த முன்னாள் முதல்வர் பிரகாசம் உத்தரவை இரத்து செய்து வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை உறுதியாக அமுல்படுத்தினார் ஓமாந்தூரார். தமிழகம் வந்த காந்தியிடம் பார்ப்பனர்கள், இவர் இராமசாமி ரெட்டியார் அல்ல; தாடியில்லாத இராமசாமி நாயக்கர் என்று புகார் மனு தந்தனர். தங்களின்  பிள்ளைகளுக்கு பொறியியல் படிப்பு மறுக்கப்படுகிறது என்றார்கள். காந்தியார் பதிலடி தந்தார். பிராமண தர்மம் – வேதம் படிப்பது; வேதம் ஓதுவது தானே; என்ஜினியரிங் படிப்பது எப்படி பிராமண தர்மம் என்று திருப்பி விட்டார். பார்ப்பனர்கள் வாயடைத்துப் போனார்கள். இந்திய சுதந்திரத்துக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. அன்றைய சென்னை மாகாணத்து முதலமைச்சரான பிரகாசம், பல தவறுகளுக்கு  அடித்தளம் இடுபவராக இருந்தார்.  அவரை மாற்றுவதற்கு ராஜாஜியும் காமராஜரும் திட்டமிட்டார்கள். அடுத்ததாக யாரைக் கொண்டு வரலாம் என்று யோசித்தார்கள். அவர்கள் மனதில் உதித்தார் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே...

‘இராஜாஜி’யே கூறுகிறார் ‘ஆண்டாள்’ ஒரு கற்பனை

‘இராஜாஜி’யே கூறுகிறார் ‘ஆண்டாள்’ ஒரு கற்பனை

‘ஆண்டாள் என்பதே ஒரு கற்பனை; அது பெரியாழ்வாரால் உருவாக்கப்பட்டது’ என்று தீவிர வைணவரும் பார்ப்பனர்களின் தலைவராகக் கொண்டாடப்பட்டவருமான இராஜாஜி எனும் இராஜகோபாலாச்சாரியாரே கூறியிருக்கிறார். வைணவத்தைப் பரப்புவதற்காக பல்லாண்டுகாலமாக நடத்தப் பெறும் ‘திருவேணி’ எனும் ஆங்கிலப் பத்திரிகையில் 1946 செப்டம்பர் இதழில் இராஜகோபாலாச் சாரியின் இந்தக் கட்டுரை ‘ஆண்டாள் என்பவர் யார்?’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டாளின் பக்தியை சிலாகித்து, ஜெ.பார்த்தசாரதி என்பவர் ‘திரிவேணி’ ஜூன் இதழில், ‘ஆண்டாளின் காதல் கதை’ (கூhந சுடிஅயnஉந டிக யனேயட) என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரைக்கு மறுப்பாக, இராஜ கோபாலாச்சாரியார் அதே பத்திரிகைக்கு இந்த மறுப்பை எழுதியிருக் கிறார். இராஜகோபாலாச்சாரியார் அனுமதியோடு இது வெளியிடப்படு கிறது என்கின்ற முன்னுரையுடன் ‘திருவேணி’ இதழ் அந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இராஜ கோபாலாச்சாரியின் ஆங்கிலக் கட்டுரையையும் அதன் தமிழாக்கத்தையும் ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது. “Who is Andal? – BY C. R. (After reading the “Romance...

‘தேவதாசி’ முறையை உருவாக்கியது யார்? வாலாசா வல்லவன்

‘தேவதாசி’ முறையை உருவாக்கியது யார்? வாலாசா வல்லவன்

சைவத்தைப் பரப்புவதற்கு பாடுபட்டவர்கள் நாயன் மார்கள். இவர்கள் 63 பேர். வைணவத்தைப் பரப்பு வதற்காகப் பாடுபட்டவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் 12 பேர். இதில் ஆண்டாள் என்பவரும் ஒருவராவார். ஆண்டாள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக வரலாற்றில் எழுதியுள்ளனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது தமிழகத்தில் களப்பிரர்களை அழித்துவிட்டு பல்லவர்கள் கோலோச்சிய காலம். அதாவது சமணத்தையும், பௌத்தத்தையும் அழித்து சைவ, வைணவ சமயங்களைப் புதுப்பிக்கத் தொடங்கிய காலம். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர் களுக்கு இருந்த உரிமைகள் நீக்கப்பட்டன. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டு உழு குடிகளுக்கு கொடுக்கப் பட்டது. எனவே வரலாற்றில் அதை ‘இருண்ட காலம்’ என்று எழுதிவிட்டனர். குப்தர்கள் ஆட்சி ‘பொற்காலம்’ என்று படிக்கிறோம். என்ன காரணம்? பார்ப்பனர்களுக்கு பணமும், பொருளும் வாரிவாரி வழங்கப்பட்டன. இதிகாசங்களில் இடம் பெற்றிருந்த பெயர் களெல்லாம் ஊர்ப் பெயர்களாக மாற்றப்பட்டன. ஆகவே அது பொற்காலம் என அழைக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், பார்ப்பனர்கள் சுகமாக இருந்தால்...

‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2018 இதழ்

‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2018 இதழ்

‘ஆண்டாள்’, ‘தேவதாசி மரபு’ குறித்து ஆய்வுக் கட்டுரைகள் நேர்மையின் சிகரம் ஓமந்தூரார். தமிழ் நாட்டைப் புறக்கணிக்கும் நடுவண் ஆட்சி டார்வின் கோட்பாடு; மத்திய அமைச்சருக்கு அறிவியல் மறுப்பு. திருமூலரை எதிர்க்காத பார்ப்பனர்கள் வள்ளலாரை எதிர்ப்பது ஏன்? சிறுபான்மை ஜாதிகளை விலக்கி வைக்கும் ‘ஜனநாயகம்’. சுயமரியாதைத் திருமணம் பற்றி அண்ணா. புரட்சிக் கவிஞர் நாடகம் குறித்து பெரியார். மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 08032018 இதழ்

வருணமும் சாதியும் ஹேமமாலினி

வருணமும் சாதியும் ஹேமமாலினி

வருணமும் சாதியும் பல நூற்றாண்டு களுக்கு மேலாக பல்வேறு சமூகங்களில் காலூன்றிய ஒரு அமைப்பாக உள்ளது. இவ்விரண்டும் மக்களிடையே ஏற்றத் தாழ்வையும், தீண்டாமையையும் ஏற்படுத்தி மக்களை பல்வேறு சமூகப் படிநிலைகளாக வகைப்படுத்தியுள்ளது. குறிப்பாக சிலர் வருணத்திற்கும், சாதிக்கும் பெரிதும் வேறுபாடுகள் இல்லை என்றே நினைக் கின்றனர். ஆனால், இவை இரண்டிற்கும் அடிப்படையே வேறு வேறு. பண்டையத் தமிழ்ச் சமூகம் வருணமும் சாதியும் இல்லாத ஒரு குடி சமூக அமைப்பாக இருந்துள்ளது. கால ஓட்டத்தால் அந்நியர்களின் படையெடுப் பாலும், ஆட்சியாலும் வட இந்தியாவில் இருந்த வருண அமைப்புமுறை தொடர்ந்து தென்னிந்தி யாவில் பரவத் தொடங்கியது. இவ்வாறு தொடர்ந்த வருண அமைப்பானது பல்வேறு காலகட்டங்களில் பல சாதிகளாகவும், உட்சாதிகளாகவும் பிளவுற்று இன்று பல்வேறு சாதியச் சமூகமாகவும் விரிந்து கிடப்பதையும் காணமுடிகிறது. வருணமும், சாதியும் பற்றி விளக்கம் காண்பதற்கு முன்பு வருணத்திற்கு அடிப்படையாக விளங்கும் மனுவின் தோற்றம் பற்றிய சில குறிப்புகளை காண்போம். மனுதர்மத்தின் பெரும்...

பார்ப்பனிய அதிகாரப் பிடியில் மத்திய அரசு

பார்ப்பனிய அதிகாரப் பிடியில் மத்திய அரசு

ஒரு சதவீதம்கூட வங்கிகளில் பிற்படுத்தப்பட்ட அதிகாரிகள் இல்லை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உயர் அதிகாரிகளாக ஒரு சதவீதம்கூட பிற்படுத்தப்பட்டோர் இல்லை. 1.10.2015ஆம் ஆண்டு நிலவரப்படி பொதுத் துறை வங்கிகளில் பொது மேலாளர் துணை பொது மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை: அலகாபாத் வங்கி: மொத்த பொது மேலாளர் பதவி 19. பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) ஒருவர்கூட இல்லை. துணை மேலாளர் பதவி 63; பிற்படுத்தப் பட்டோர் (பி.சி.) ஒருவர்கூட இல்லை. ஆந்திரா வங்கி: மொத்த மேலாளர் பதவி 16இல், பி.சி. ஒருவர்கூட இல்லை. 48 துணை மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூடஇல்லை. பேங்க் ஆப் பரோடா : 44 மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் ஒருவர் மட்டுமே. 122 துணை மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட் டோர் ஒருவர். பேங்க் ஆப் இந்தியா : 37 மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூட இல்லை. 126 துணை மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர் மட்டுமே. பேங்க் ஆப்...

‘பத்மாவதி’ வரலாறு அல்ல; கற்பனை

‘பத்மாவதி’ வரலாறு அல்ல; கற்பனை

‘பத்மாவதி’ என்ற திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே இந்துத்துவவாதிகள், படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகைகளுக்கு கொலை மிரட்டலையும் தலைக்கு விலை வைக்கும் ‘மனுதர்ம’ப் பண்பாட்டையும் கைகளில் எடுத்து விட்டனர். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களும், படத்தைத் திரையிட முடியாது என்றுஅறிவித்துள்ளனர். ‘இராஜபுத்திர’ பெண்களின் பெருமைக்குரிய அடையாளமாக பேசப்படும் ‘பத்மாவதி’ என்பவர் உண்மையில் ஒரு கற்பனை. வரலாற்றுப் பதிவுகள் இல்லாத கற்பிதம்; கவிஞர்களின் கற்பனையில் இராமாயணம் போல் பல்வேறு ‘பதமாவதி’கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். பத்மாவதி இந்தி திரைப்படத்துக்கு எதிரான போராட்டம் வலுத்துக்கொண்டே வருகிறது. எல்லா ராஜபுத்திரர்களின் சார்பிலும் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள் இரண்டு காரணங்களுக்காக அத்திரைப்படத்தை எதிர்க்கிறார்கள். முதலாவதாக, அது வரலாற்றைச் சிதைக்கிறது என்கிறார்கள். இரண்டாவதாக, ராஜபுத்திர ராணி பத்மினியை (சில நூல்களில் அவரே பத்மாவதி என்று அழைக்கப்படுகிறார்) அவமதிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். ‘பத்மாவத்’ தொடர்பாக தாமஸ் டி பிரியுன், சாந்தனு புகான் – குறிப்பாக ரம்யா சீனிவாசன் ஆகியோரின் ஆழ்ந்த ஆராய்ச்சியால் கிடைத்துள்ள...

பெரியார் எதிர்த்த ‘ஆண்மை’யும் ‘கேட்டர் பில்லர்’ நாயகியும்

பெரியார் எதிர்த்த ‘ஆண்மை’யும் ‘கேட்டர் பில்லர்’ நாயகியும்

“உலகத்தில் ‘ஆண்மை’ நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி.” – பெரியார் கேட்டர் பில்லர் ’ என்னும் ஜப்பானியத் திரைப்படம் பார்த்தேன். கோஜி வாகாமத்ஸு இயக்கி 2010-ல் வெளியான படம் அது. சீன-ஜப்பான் போரில் பங்கேற்ற ஜப்பானிய ராணுவ வீரன் ‘குரோகாவா’வை மையமாகக் கொண்டு படம் சுழல்கிறது. முதல் காட்சியில் சீனக் கிராமத்துக்குள் புகுந்த ஜப்பானிய ராணுவம் அந்தக் கிராமத்தை அழித்துத் துவம்சம் செய்கிறது. தப்பியோடும் சீன மக்களைக் கடமை உணர்வுடன் குரோகாவா சுட்டுக் கொல்கிறான். அலறித் துடிக்கத் துடிக்கச் சீனப் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்கிறான். சொத்துக்களைச் சூறையாடுகிறான். அடுத்த காட்சியில் போர் முடிந்து, குரோகாவா ‘பேராண்மை மிக்க போர் நாயகன்’ என்னும் தேசிய விருதைப் பெறுகிறான். மூன்று தேசிய மெடல்கள் நெஞ்சில் அசைந்தாடச் சொந்த கிராமத்துக்குத் திரும்புகிறான். ஆனால், போரில் இரு கால்கள்,...

அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம்

அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம்

2005 ஆம் ஆண்டு சொராபுதின் சேக் போலி எண்கவுண்டர் மூலமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக தலைவர் அமித்ஷா-வை ஜூலை 2010 அன்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் 2012 அன்று மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் டிசம்பர் 2014 அமித்ஷாவை இந்த வழக்கில் இருந்து விடுவித்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து. இதற்கிடையில் பாஜக தலைவர் அமித் ஷா முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சொராபுதின் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிர்ஜிகோபால் ஹர்கிஷன் லோயா , 2014 நவம்பர் 30 இரவு டிசம்பர் 1 இடையிலான நேரத்தில் நாக்பூருக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது உயிரிழந்தார். அந்த சமயம் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இது குறித்து டிசம்பர் 2016 – டிசம்பர் 2017...

கற்பிதங்களை கட்டுடைத்த ‘அவ்வை’  மயிலை பாலு

கற்பிதங்களை கட்டுடைத்த ‘அவ்வை’ மயிலை பாலு

டிசம்பர் இரண்டாம் தேதி சென்னை பெசன்ட் நகரின் கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்பேசஸ் அரங்க வளாகம் நிரம்பி வழிந்தது. எப்பொழுது நாடகம் தொடங்கும் என்ற ஆர்வம் மேலிட நின்றவர்களுக்கு வழி திறக்கப் பட்டாலும் உட்கார இடமில்லை. கவிஞர் இன்குலாப் மீதான பிணைப் போடும் அவரது படைப்பின் மீதுள்ள ஈர்ப்பாலும் தான் இந்தப் பெருந்திரள் கூட்டம். இன்குலாபின் எண்ணத்திலும் எழுத்திலும் வடிவம் பெற்ற ‘அவ்வை’ நாடகம் அன்று மீண்டும் அரங்கேற்றப்பட்டது. ‘உடலால் வாழ்ந்த இவ்வாழ்க்கை இறப்போடு முடிகிறது’ என்று தமது மரணம் குறித்த கடிதத்தில் மக்கள் கவிஞர் இன்குலாப் எழுதியிருக்கிறார். இறப்போடு உடலியக்கத்தின் வாழ்க்கை முடிந்து போகலாம். ஆனால் மக்களுக்காக வாழ்ந்தவர்கள், மக்களின் மனஎழுச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தவர்கள், அழுகிப் போய் அழிக்கப்பட வேண்டிய முதலாளித்துவ சமுதாயத்திற்கான மாற்றினை அடையாளம் காட்டியவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும் சாவதில்லை. மீண்டும் மீண்டும் உயிர் பெற்று வாழ்ந்து கொண்டேதான் இருக்கும். அந்த உண்மையை மெய்யாக்குவதாகத்தான் தோழர் இன்குலாபின் முதலாம்...

ஆன்மிகவாதி பார்வையில் ‘வாஸ்து’

ஆன்மிகவாதி பார்வையில் ‘வாஸ்து’

கட்டுரையாளர் பொறியாளர் பி. மாணிக்கம், ஆன்மிக நம்பிக்கையாளர். அவரது பார்வையில் ‘வாஸ்து’ குறித்து விளக்குகிறார். ஜோதிடமா? ஆன்மிகமா? பொறியியல் துறையைச் சார்ந்ததா? வாஸ்து ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் உரியதா? முகமதியரானாலும் கிறித்தவரானாலும் வாஸ்து பார்க்க வேண்டியதில்லையா? இதுபோன்ற பல கேள்விகள் வாஸ்து என்ற கூற்றைக் கேட்டவுடன் எழக்கூடிய சாதாரண அய்யங்கள். “வாஸ்து பகவான் நெற்றியில் திரு நீரோடும் பூணுலோடும் மல்லாந்து படுத்திருக் கிறார்; ஆண்டுக்கு எட்டு முறை மட்டுமே விழித்திருக்கிறார். மற்ற நேரத்திலெல்லாம் தூங்கிக் கொண்டேயிருக்கிறார். அவர் விழித்தெழுந்து காலைக் கடன் முடித்து குளித்து, பூஜை செய்து போஜனம் அருந்தி தாம்பூலம் தரிக்கிறார். அந்த நேரத்தில் வாஸ்து பூஜை செய்து வீடு, பூமி பூஜை, கிரகப்பிரவேசம் ஆகியவை செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் வாஸ்து பகவான் வீட்டில் வசிப்போரைத் துன்பத்திற்குள்ளாக்குவார்” என்றெல்லாம் கூறப்படுகிறது. வருடத்தில் 1ஙூ மணி நேரம் மட்டுமே விழித்திருக்கும் வாஸ்து பகவான் மற்ற நேரத்தில் தூங்கிக் கொண்டே...

மோடியின் ‘சுதந்திர’ கனவில் மறந்து போன பக்கங்கள் பேராசிரியர் சிவலிங்கம்

மோடியின் ‘சுதந்திர’ கனவில் மறந்து போன பக்கங்கள் பேராசிரியர் சிவலிங்கம்

சாதிய சர்வாதி கார சமூக அமைப்பி லிருந்து விடுதலை வேண்டும் என்று முழங்கும் தலித் மக்களின் முழக்கங்கள் பொதுவான தேசிய முழக்கங்களின் மூலம் மறைக்கப்படுகின்றன. இத்தகைய போக்கு தலித் விடுதலைக்கு மட்டுமல்ல நாட்டின் உண்மையான விடுதலைக்கு எதிரான சதியேயாகும். 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆரம்பித்த நாள் முதல் இன்று வரையிலும் இந்தியாவின் ஊடகங்கள் நரேந்திர மோடியின் ஒவ்வொரு உச்சரிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு சமூகச் சூழலை உருவாக்கிட சுமார் 70 ஆண்டுகள் இந்துத்துவ சக்திகள் உழைத்திருப் பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமரே தவிர இந்துத்துவத்திற்கான பிரதமர் அல்ல. இந்திய அரசியல் சட்டத்தை மதிக்கும் எவரும் இப்படித்தான் நம்புவார்கள். பிரதமர் நரேந்திரமோடி ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார். “துரதிருஷ்டவசமாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் சில குடும்பங்கள், சில வருடங்கள்,...

‘கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு

‘கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு

‘கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு. இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார். கீழ்வென்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்’ சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத்தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி விடுதலை சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியால சாதிக்க முடியாததை, அவர்கள் இவ்வளவு காலம் போராடியும் செய்யமுடியாததை இராஜாஜி ஆட்சி...

உண்மையின் மீது விழுந்த வெளிச்சம்

உண்மையின் மீது விழுந்த வெளிச்சம்

நடைமுறையில் இருக்கும் தமிழ் சினிமாவில் இருந்து மாறுபட்ட படமாக வெளியாகி அனைவரின் பாராட்டுதல்களையும்  வெற்றியையும் பெற்றுள்ளது கோபி நயினார் இயக்கியுள்ள ‘அறம்’ திரைப்படம். தமிழ்நாட்டின் வறண்ட நில அமைப்பில் போர்வெல்  தவிர்க்க முடியாதது .அதில் நீர் கிடைக்காத நிலை ஏற்படும்போது அதன் உரிமையாளர் அந்த ஏமாற்றத்தில் -பொருள் இழப்பில் அதை மூடாமல் போய் விடுவது இங்குள்ள வினோதமான உளவியல் ஆகும். சரியான  வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை என்பது மற்றுமொரு காரணம்.போர்வெல் போட்டவரின் குழந்தையே அதற்குள் விழுந்த சம்பவம் கூட இங்கு உண்டு .. அப்படி மூடாமல் விடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்க முயலும் மக்கள் உணர்வுகளும்  அரசு இயந்திரமும் எப்படி இயங்குகின்றன என்பதே ‘அறம் ‘படத்தின் கதைக்களம். இந்த மையக் கதையினூடாக  உழைக்கும் மக்கள் வாழ்க்கையையும் அவர்களது கனவுகளையும் ஏமாற்றங்களையும் இப்படம் பதிவு செய்துள்ளது. போர்வெல்லுக்குள் விழுந்த சிறுமியைச் சுற்றி யதார்த்தமான காட்சிகளைக் கொண்டு பார்ப்பவரை படம் கட்டிப்போடுகிறது.....

‘கஜினி முகம்மதுவை’ கோயிலை கொள்ளையடிக்க அழைத்து வந்தது  யார்?

‘கஜினி முகம்மதுவை’ கோயிலை கொள்ளையடிக்க அழைத்து வந்தது யார்?

சோமநாதபுரம் கோயிலை 18 முறை கொள்ளையடிக்கப் படையெடுத்து வந்த கஜினி முகம்மதுவுக்கு துணை செய்தது அந்தக் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்கள்தான். இந்தப் பெயர் இந்திய அரசியலில் இன்றுவரை ஒரு வகையான அருவருப்பு அரசியலை அரங்கேற்றப் பயன்படுத்தப் படுகிறது. யார் இவர்? என்ன செய்தார்? மன்னர்கள் என்றாலே மக்களை அடக்கியவர்கள் என்ற உண்மையை மறந்துவிடலாகாது.அதில் கஜினி மட்டும் ஏன் கொடூர மனிதராக சித்தரிக்கப்படுகிறார் என்ற அரசியல் புரிதலுக்காகவே இந்தப்பதிவு. அந்தக் கால அரசர்கள் எந்தப் பகுதியின் மீது படையெடுத்தால் பெருத்த செல்வத்தை அள்ளிக் கொண்டு வரலாம் என்று கணக்குப் போடுவதில் மட்டுமே குறியாய் இருப்பார்கள். படை யெடுத்து அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு போவது ஒரு வகை. கைப்பற்றிய பகுதியை தொடர்ந்து தன்னுடைய ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டு மேலும் மேலும் கொள்ளையடிப்பது இன்னொரு வகை. இருவகையினரின் நோக்கம் ஒரே வகை யானது தான் என்றாலும், அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓடுபவர்கள் தங்கள் வரலாறை...

குழந்தை வேண்டாம் என்றொரு வாழ்க்கை! பெரியார் முன்மொழிந்த குடும்ப வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் பெண்கள்

குழந்தை வேண்டாம் என்றொரு வாழ்க்கை! பெரியார் முன்மொழிந்த குடும்ப வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் பெண்கள்

படிப்பு, வேலை, திருமணம், குழந்தை…. மனித வாழ்க்கையில் இந்த நான்கும் பிரதானம். இந்தப் படிநிலைகளைச் சரியாகக் கடந்து வருவதே நிறைவான வாழ்க்கையாக நம் நாட்டில் கருதப்படுகிறது. குழந்தை இல்லாத வாழ்க்கையைக் குறையான வாழ்க்கையாகவே பார்க்கிறது சமூகம். குழந்தை இல்லாதவர்களை, தனிப்பட்ட காரணங்களுக்காகக் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களை, இது தொடர்பாக மற்றவர்கள் கேட்கும் கேள்விகள் குத்திக் கிழிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் ‘சைல்ட்ஃப்ரீ சொசைட்டி’ என்கிற பெயரில் ஒரு சமூக அமைப்பே உருவாகி, பிரபலமாகி வருகிறது. குழந்தை இல்லாதவர்களுக்காக அல்ல… குழந்தையே வேண்டாம் என்கிறவர்களுக்கான அமைப்பு அது! இப்போது இந்தியச் சமூகமும் மாறிக் கொண்டிருக்கிறது. குழந்தையைப் பற்றிக் கேட்கப்படுகிற ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிப்பதும், சமூக விமர்சனங்களை எதிர்கொள்வதும் தினசரி சவாலாக இருந்தபோதிலும், குழந்தை தவிர்த்த வாழ்க்கையில் இதையெல்லாம் மீறிய ஒரு சுதந்திரமும் சந்தோஷமும் இருப்பதாகவே சொல்கிறார்கள் ‘குழந்தை வேண்டாம்’ என முடிவெடுத்தவர்கள். அவர்களில் சிலரின் குரல்கள் இங்கே…. என்னோட முடிவெடுக்கும் உரிமைக்கு...

கொலைப்பட்டியலில் சமூக நீதி ஆய்வாளர்  காஞ்சா அய்லய்யா

கொலைப்பட்டியலில் சமூக நீதி ஆய்வாளர் காஞ்சா அய்லய்யா

‘தேச பக்தி பேசும் பார்ப்பனர்கள், இராணுவத்தில் சேராதது ஏன்?’ என்று கேட்கிறார் இந்தியாவின் தலைசிறந்த சமூகநீதி அறிஞர்களில் ஒருவரான காஞ்சா அய்லய்யா, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர். தலித் மக்களின் விடுதலைக்காகவும் ஜாதி ஒழிப்பு, பார்ப்பன-இந்துத்துவ எதிர்ப்புகளை முன் வைத்து சிறந்த ஆங்கில நூல்களை எழுதியவர். அய்தராபாத்தில் மவுலானா ஆசாத் தேசிய பல்கலைக்கழகத்தில் சமூகநீதித் துறைக்கான ஆய்வு மய்யத்தின் இயக்குனராக பணியாற்றிவரும் அவர், இந்துத்துவ சக்திகளின் கொலைப்பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். கொலை முயற்சிகளிலிருந்து பல முறை உயிர் தப்பியுள்ளார். 2009ஆம் ஆண்டு அவர் ஆங்கிலத்தில் எழுதி ‘இந்து இந்தியாவின் இன்றைய நிலை’ (ஞடிளவ ழiனேர ஐனேயை) என்ற நூல் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டதிலிருந்து ‘ஆரிய வைசியர் சங்கம்’ அவரது தலைக்கு விலை வைத்திருப்பதோடு, கொலை முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அவரது நூலை திரும்பப் பெற வேண்டும் என்று தெலுங்கு தேசம் மாநிலங்களவை உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் என்பவர் கெடு நிர்ணயத்துள்ளார். பொது மக்கள் முன்...

திராவிட இயக்கம் கடக்க வேண்டிய பாதை  விடுதலை இராசேந்திரன்

திராவிட இயக்கம் கடக்க வேண்டிய பாதை விடுதலை இராசேந்திரன்

‘தமிழ் இந்து’ வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மலருக்கு எழுதிய கட்டுரையின் முழு வடிவம். கட்டுரையின் பல பகுதிகள் மலரில் இடம் பெறவில்லை. திராவிட இயக்கம் குறித்து ‘இந்து’ குடும்பத்திலிருந்து வெளிவரும் ‘தமிழ் இந்து’ சிறப்பு மலர் வெளியிட முன்வரும் ‘வரலாற்றுச் சூழல்’ நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நல்ல முயற்சிக்கு எனது பாராட்டு களோடு, சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அடையாளங்களை மீட்கும் அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டங்களை உலகம் சந்தித்திருக்கிறது. இனம் – மொழி – பண்பாட்டு அடையாளங்களோடு உருவான திராவிடர் இயக்கத்தின் ‘அடையாள அரசியல்’ அதிலிருந்து மாறுபட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும். சமூகத்தின் ஒடுக்குமுறை வடிவமான ஜாதியமைப்பு வழியாக கட்டமைத்து மக்கள் மீது திணித்த அடக்குமுறை அடையாளங் களிலிருந்து மீட்டெடுத்து அவர்களின் உரிமை களுக்கான அடையாளங்களை முன் வைத்தது தான் திராவிட இயக்கத்தின் தோற்றுவாய். ஒரு இனத்தின் சுயமரியாதைக்கான அடையாளமாக பெரியார் அதை வார்த்தெடுத்தார். பழமை மீட்புக்குள்...

இடஒதுக்கீடு சட்டங்களை குப்பைக் கூடையில்  வீசும் அய்.அய்.எம்.எஸ். நிறுவனங்கள்

இடஒதுக்கீடு சட்டங்களை குப்பைக் கூடையில் வீசும் அய்.அய்.எம்.எஸ். நிறுவனங்கள்

உயர்கல்வித் துறையில் சமூக நீதி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு அவை பார்ப்பன கோட்டையாகவே இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கின்றன. அய்.அய்.டி. என்ற உயர் கல்வி நிறுவனம், இதற்கு சரியான உதாரணம். இந்த நிறுவனங்களில் தட்டுத்தடுமாறி இடம் பிடித்த வெகு சில தலித் மாணவர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தொடங்கினால் தடை விதிக்கப்படுகிறது. மற்றொரு உயர் கல்வி நிறுவனம் இந்திய மேலாண்மை நிறுவனமான ‘அய்.அய்.எம்.எஸ்.’ என்பதாகும். சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் போதுதான் பல்வேறு நிறுவனங்களில் உயர்மட்டப் பொறுப்புகளில் பல்வேறு சமூகப் பிரிவினருக்கான வாய்ப்புகள் (ளுடிஉயைட னiஎநசளவைல) உருவாகும். முடிவெடுக்கக்கூடிய உயர் பதவிகளில் பார்ப்பனர் அல்லது விரல்விட்டு எண்ணக் கூடிய சில உயர் ஜாதி வகுப்பினர் மட்டுமே இப்போதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அய்.அய்.எம்.எஸ். என்ற தன்னாட்சி பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள், இந்தூர் (1996), கோழிக்கோடு (1996), ரோதக் (2009),...

அக்டோபர் புரட்சிக் குறித்து பெரியார்

அக்டோபர் புரட்சிக் குறித்து பெரியார்

1917இல் நிகழ்ந்த சோவியத் அக்டோபர் புரட்சிக் குறித்து 1933இல் பெரியார் எழுதிய கட்டுரை ருஷியாவில் 1917ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர்அந்நாடு உலக மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக் கொண்டது.  சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படும் ஏழை மக்களும் ரஷ்ய சமதர்மத் திட்டத்தின் நுண்பொருளை நன்குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப் புகுத்தி மிகுந்த தீவிரமாய் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவாதுண்டு வாழும் சோம்பேறிச்செல்வவான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர்களும், அவர் தம் பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்கப் பற்பலசூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான பயங்கர ஆட்சிமுறையையும் கையாண்டு வருவதும் ருஷியாவைப் பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலமெங்கும் பரப்பிஅந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ் சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந்திருக்கின்றன வென்று கூறியும் வேறு பல தீய முறைகளைக் கையாடி வருகின்றனர்.  ருஷியாவின் சமதர்மக் கொள்கை ஒரு பொழுதும் நடைமுறையில் சாத்தியமாகாது...

காந்தி ஜாதி ஆதரவாளரா? எதிர்ப்பாளரா?  வெளிச்சத்துக்கு  வராத  வரலாற்றுத்  தகவல்கள்

காந்தி ஜாதி ஆதரவாளரா? எதிர்ப்பாளரா? வெளிச்சத்துக்கு வராத வரலாற்றுத் தகவல்கள்

வர்ணாஸ்ரமத்தையும் ஜாதியமைப்பையும் நியாயப்படுத்தி எழுதிவர்தான் காந்தி. அவர் தீண்டாமையை மட்டும் எதிர்த்தார் என்பது உண்மைதான். ஆனால் ஜாதி அமைப்புக் குறித்து காந்தியின் கருத்துகளை அவரது எழுத்துகளின்அடிப்படையில் மட்டுமே தீர்மானித்து விட முடியுமா? மூன்று கண்ணோட்டங்களில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்கிறது இக்கட்டுரை. ஜாதி தொடர்பாக காந்தி பின்பற்றிய வாழ்க்கை நடைமுறை; காந்தியின் ஆசிரமங்களில் சமூக வாழ்க்கை எப்படி ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது? காந்தியின் செயல்பாடுகள், எழுத்துகளுக்கிடையே நிலவிய முரண்பாடுகள், இந்த மூன்று காரணிகளையும் முன் வைத்து காந்தியின் ஜாதியக் கொள்கைகளை அலசுகிறார் இக்கட்டுரையாளர் நிஷிகாந்த் கோல்கே. ஜாதி அமைப்பு இயற்கையானது. மதத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, சமூகத்தில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் பேணுவதற்காகவே உருவாக்கப் பட்டது என்று தனது எழுத்துகளில் பதிவு செய்துள்ள காந்தி, தனது எழுத்துக்களைப் பற்றி கூறும்போது, “என்னுடைய செயல்பாடுகளில் காண முடியாத எதையும் என் எழுத்துக்களில் தேட முடியாது” என்று கூறியதோடு, “நான் எதைக் கூற வருகிறேன் என்று புரிந்து...

மதவெறி மிரட்டலுக்கு பலியான படைப்பாளியின்  ‘உயிரோவியங்கள்’!

மதவெறி மிரட்டலுக்கு பலியான படைப்பாளியின் ‘உயிரோவியங்கள்’!

சென்னை எழும்பூரிலுள்ள கவின் கலைக் கல்லூரியில் சிராமிக் துறையில் (பீங்கான்) இறுதியாண்டு படித்து வந்த ‘தலித்’ மாணவர் பிரகாஷ். கடந்த 25.10.2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலுக்குள்ளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை தனது முகநூல் பதிவில், “இனி கல்லூரிக்கு என்னால் வர முடியாது; என்னை மிகவும் இழிவுபடுத்து கிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விட மாட்டார்கள். நான் சாகப் போகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரண வாக்குமூலத்தை வீடியோவாக தனது அலைப்பேசியில் பதிவிட்டிருக்கிறார். தற்கொலை செய்துகொணட அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ், சுயமாக வரைந்த ஓவியங்களைத்தான் ‘நிமிர்வோம்’ அட்டை இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த இளைஞனின் ஓவியங்கள் அவரது அற்புதமான ஆற்றலுக்கு சான்று! வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், தாமரை தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். பார்த்திபன் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிகிறார். அவரது மூத்த மகன் பிரதாப். பெங்களூருவில்...

சிறைகளை நிரப்பி, உயிர் துறந்த பெரியார் தொண்டர்களின்  ஜாதி ஒழிப்புப் போராட்டக் களத்தின் உணர்ச்சிப் பதிவுகள்

சிறைகளை நிரப்பி, உயிர் துறந்த பெரியார் தொண்டர்களின் ஜாதி ஒழிப்புப் போராட்டக் களத்தின் உணர்ச்சிப் பதிவுகள்

1957ஆம் ஆண்டு நவம்பர் 26, பெரியார் இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற நாள். இந்திய அரசியல் சட்டத்தின் உட்பிரிவுகள் 13, 25, 368, 372 ஆகிய பிரிவுகள் ஜாதி ஒழிப்புக்கு முழுதும் தடையாய் இருப்பதால், அப் பிரிவுகளை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை பெரியார், அறிவார்ந்த போராட்டம் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு 3.11.1959 அன்று தஞ்சையில் சிறப்பு மாநாட்டைக் கூட்டி அறிவிக்கப்பட்ட போராட்டம் அது. பெரியாரின் எடைக்கு எடை வெள்ளி நாணயங்களை அம்மாநாட்டில் வழங்கி மகிழ்ந்தனர் பெரியார் தொண்டர்கள். சட்டத்தை எரித்தோம் என்று ஒப்புக்கொண்டு எதிராக வழக்கை நடத்தாமல் 6 மாதத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை – பெரியார் தொண்டர்கள் சிறைத் தண்டனையை ஏற்றார்கள். பெண்கள், கைக் குழந்தைகளோடு கைதானவர்களும் உண்டு. கிரிமினல் கைதிகளாகவே அனைவரும் நடத்தப்பட்டு சிறையில் வேலை வாங்கப்பட்டனர். அடிப்படை வசதிகள், சுகாதாரமே இல்லாத அன்றைய சிறை, பல தோழர்களின் உடல்நலத்தை கடுமையாக பாதிக்கச் செய்தது. சிறைக்குள்ளேயே பட்டுக்கோட்டை...

ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளா?  – பேரா. அ. மார்க்ஸ்

ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளா? – பேரா. அ. மார்க்ஸ்

“ஆகஸ்ட் 25லிருந்து தினசரி 15,000 முஸ்லிம்கள் மியான்மரிலிருந்து தப்பி ஓடி வரு கின்றனர்” என ஐ.நா. அவையின் மனித உரிமை கவுன்சில்; (UNHRC ) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதல் பத்து நாள்களில் சுமார் 1,50,000 பேர் தப்பி ஓடி வந்துள்ளனர். சென்ற ஆகஸ்ட் 24 அன்று “அராக்கன் ரோஹிங்யா மீட்புப் படை” (Arakan Rohingya Salva- tion Army – ARSA ) என்னும் தீவிரவாத அமைப்பு மியான்மரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ராகைன் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் முப்பது காவல் நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கியதைச் சாக்காகக் கொண்டு அம்மக்கள் மீதான இன்றைய இராணுவத் தாக்குதல் தொடங்கியது. அராக்கன் படையின் தாக்குதல் மற்றும் எதிர்தாக்குதலில் சுமார் 12 காவலர்களும் 59 தீவிரவாதப் படையினரும்  கொல்லப் பட்டதாகச் சொல்லப்பட்டது. அதை ஒட்டி இராணுவம் ரோஹிங்யா மக்களின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியது. பெரியளவில் முஸ்லிம் கிராமங்கள் தரை மட்டமாக்கப்பட்டன. இராணுவத்தின் தாக்குதலின் விளைவாக...

ஜி.எஸ்.டி. சீரழிவின் துவக்கம் –  பேராசிரியர் ஜெயரஞ்சன்

ஜி.எஸ்.டி. சீரழிவின் துவக்கம் – பேராசிரியர் ஜெயரஞ்சன்

ஒரு பொருளாதார சிக்கலை நோக்கி இந்தியா  இப்போது வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதற்கு ஜி.எஸ்.டியின்  பல தவறான விதிமுறைகள் காரணம் என்பதை பலரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். சமீபத்தில் அதில் ஒரு காரணியை பற்றி மிக விரிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை உங்களுக்கும் சொல்லலைன்னா எனக்கு தலையே வெடிச்சிரும் என்பதால்…. கடந்த ஜூலை மாத ஜி.எஸ்.டி ரிடர்ன் படி கிட்டத்தட்ட 94000 கோடி ரூபாய் வரியாக வசூலித்திருப்பதாக மார்தட்டிக் கொண்ட நிதி அமைச்சகத்துக்கு அடுத்த சில நாட்களிலேயே அதில் கிட்டத்தட்ட 65000 கோடி ரூபாய் ரீஃபண்ட் ஆக திரும்ப கொடுக்க வேண்டிய தொகை எனவும் அதை எப்போ தருவீர்கள் என வணிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்ததும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. அதனால் அந்த 65000 கோடி ரூபாய்க்கான கணக்குகளை விரிவாக தணிக்கை செய்ய சொல்லி துறை ரீதியான உத்தரவுகள் பறந்து அதன் அடிப்படையில் எல்லா வணிகர் களிடமும் ஆவண பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது....

நாட்டார்  இலக்கியங்களையும் திரிக்கிறது  ஜாதி வெறி பழனி  கோ. முத்துமாணிக்கம்

நாட்டார் இலக்கியங்களையும் திரிக்கிறது ஜாதி வெறி பழனி கோ. முத்துமாணிக்கம்

சாதிமத வெறியைத் தூண்டிவிடும் அரசுகளையும், பதவிக்காக மனிதநேயத்தைப் பலிகொடுப்போரையும் மீறி இனியாவது புதியதோர் உலகம் செய்யப் புறப்பட வேண்டும். சாதியின் பெயரால் மக்களைத் துண்டாடும் சதிகளை முறியடிக்கும் மகத்தான பணி, முற்போக்காளர்களின் முன் நிற்கிறது. “தொழிலாளிகள்லாம் வாங்கப்பா” …இடுகாட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்தது அந்த முதியவரின் குரல். இறந்தவர் ஒருவருடைய உடலைப் புதைத்தபின், வந்த கூட்டம் அந்தக் கிராமத்துச் சலவையாளர் விரித்திருந்த ‘மாத்து’ மேல் (தன்னிடம் சலவைக்கு வந்த சேலைகளைத் திருமணம், பூப்பு நீராட்டு விழா, இறுதிச் சடங்குகளுக்கு வரும் மக்கள் அமர்வதற்காகப் பயன்படுத்தும்போது அவை மாத்தாக மாற்றம் பெறும்) உட்கார்ந்தது. “வேலை செஞ்ச தொழிலாளிகள்லாம் வரிசையா வாங்கப்பா. மயானக் காசை வாங்கிக்குங்க.” ஊருக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் எல்லோருக்கும் காசு வாங்கிக் கொடுப்பதற்காக பெரியவர் முன் நின்று கொண்டிருந்தார். “பாடை காட்டியவங்க வாங்க. இந்தா ஆளுக்கு ஒன்னேகால் ரூபா.  குழி தோண்டனவங்க வாங்க.. இந்தா நாலு பேருக்கு...

பெரியார் காந்தி நேரடி விவாதம் இந்து மதத்தை மாற்ற முயற்சித்தால் பார்ப்பனர்கள்  உங்களை விட்டு வைக்க மாட்டார்கள் என்று  பெரியார் காந்தியிடம் எச்சரித்தார்.

பெரியார் காந்தி நேரடி விவாதம் இந்து மதத்தை மாற்ற முயற்சித்தால் பார்ப்பனர்கள் உங்களை விட்டு வைக்க மாட்டார்கள் என்று பெரியார் காந்தியிடம் எச்சரித்தார்.

சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்த நேரத்திலும் பெரியாருக்கு காந்தி மீதிருந்த மரியாதையும், கதர் பிரச்சாரத்திலிருந்த நம்பிக்கையும் குறைய வில்லை. அவரைப் பொறுத்தவரை மனதளவில் காங்கிரஸ்காரராகவே இருந்தார். ஆனால் 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியான காந்தியின் உரை ஒன்று, பெரியாரை அதிர்ச்சியடையச் செய்து விட்டது. மைசூரில் காந்தி நிகழ்த்திய அந்த உரையானது பின்வருமாறு இருந்தது: “ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வர்ணத்தார் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்.” “பிராமணனுக்குச் சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறைவேற்றும்போது அவன் உயர்ந்தவனாகிறான். ஜனசேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம்.” “எளியவர்களைப் பாதுகாப்பது சத்திரியனுடைய முக்கிய தர்மம். அந்த தர்மத்தை அவன் செய்யும்போது அவன் மற்றெல் லோரிலும் மேம்பட்டவனாகிறான்.” “இம்மாதிரியே இதர வர்ணத்தார்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களைக் கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்.” “இப்படியிருக்கையில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வருகிறது?...

கடும் சரிவில் இந்திய பொருளாதாரம்: முதலீட்டாளர்கள் ஓட்டம்

கடும் சரிவில் இந்திய பொருளாதாரம்: முதலீட்டாளர்கள் ஓட்டம்

இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்றாண்டு களில் இல்லாத அளவிற்கு, 5.7 சதவிகிதம் என்று வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து  6ஆவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது. இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் நெருக்கடிகளைத் தொடர்ந்து, பங்குச் சந்தை முதலீட்டா ளர்களின் டாலர் முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டு ஓடுவதும், இறக்குமதி அதிகரிப்பு காரணமாக இந்திய சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் டாலர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதும் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் வெறும் 5.7 சதவிகிதம் என்ற அளவிற்கு, 3 ஆண்டுகளில் இல்லாத மோசமான இடத்திற்கு சென்றது. இது இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய பதற்றமே, அவர்கள் தங்களின் முதலீடுகளை அவசர அவசரமாக திரும்பப் பெறுவதற்கான காரணமாக அமைந்துள்ளது. புதிய முதலீடுகள் வராத நிலையில், ஏற்கெனவே வந்த...

பெரியார் இயக்கத்தின் மீதான அவதூறுகளைத் தகர்க்கும்  ஆய்வு

பெரியார் இயக்கத்தின் மீதான அவதூறுகளைத் தகர்க்கும் ஆய்வு

“நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்” என்ற பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் எழுதியுள்ள வரலாற்று ஆய்வு நூல், திராவிட இயக்கம் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது. 28.12.1937 அன்று அன்றைய தஞ்சை மாவட்ட நீடாமங்கலம் கிராமத்தில், “தென் தஞ்சை ஜில்லா காங்கிரசின் மூன்றாவது அரசியல் மாநாடு” ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் தலைமையில் நடந்த போது, ‘ஜாதி மதபேதமின்றி’ அனைவரும் விருந்துண்ண வரலாம் என்ற ‘சமபந்தி’ உணவுக்கான அழைப்பை ஏற்று மாநாட்டை வேடிக்கைப் பார்க்க வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த கூலித் தொழிலாளர்கள் பந்தியில் சாப்பிட அமர்ந்தனர். மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் தூண்டுதலின்பேரில் அவர்கள் உணவருந்திக் கொண்டு இருந்தபோதே கடுமையாகத் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். அடுத்த நாள் அவர்கள் வேலை பார்க்கும் பண்ணைகளுக்கும் தகவல் தரப்பட்டு அங்கும் அவர்கள் தாக்கப்பட்டனர். மரத்தில் கட்டி வைத்து அடித்து சாணிப் பாலை வாயில் ஊற்றி, மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலமாக அழைத்துப் போய் அவமானப்படுத்தப்பட்டனர்....

நீட் மருத்துவக்  கல்வி  தரத்தை உயர்த்துமா? மருத்துவர் இரா. செந்தில்

நீட் மருத்துவக் கல்வி தரத்தை உயர்த்துமா? மருத்துவர் இரா. செந்தில்

நீட்  தேர்வை நியாயப்படுத்தும் வாதங்களை அழுத்தமாக மறுக்கிறது  இக்கட்டுரை   அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை நியாயப்படுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சி கூறுகின்ற நான்கு அடிப்படைக் காரணங்கள்:- இது தரமான மருத்துவக் கல்விக்கு வழி வகுக்கும். இது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வணிக மயத்தைத் தடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும். இது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான, தரமான கல்வியை உருவாக்கும் என்பது தான். மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு சம நிலையை ஏற்படுத்தும் இந்த நான்குமே அபத்தமான, உண்மை யில்லாத பொய்ப் பிரச்சாரங்கள். இந்திய மருத்துவக் கல்வியின் தரம் குறைந்ததாக இருக்கிறது என்பதிலும், இந்தியா வில் மருத்துவக் கல்வி இந்தியா முழுமையும் ஒரே சீரானதாக இல்லை என்பதிலும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். உலகம் முழுவதும் மருத்துவக் கல்வி என்பது ‘’மருத்துவப் பயிற்சி’’ என்று அழைக்கப்படு...

பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்தும் பார்ப்பனியம்! – கார்த்திக் ராம் மனோகர்-எஸ். ஆனந்தி

பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்தும் பார்ப்பனியம்! – கார்த்திக் ராம் மனோகர்-எஸ். ஆனந்தி

‘தி ஒயர்’ ஆங்கில இணையதளத்தில் பெரியாரைக் கடுமையாக விமர்சித்து பி.ஏ. கிருஷ்ணன் என்பவர் (இவர் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரால் பெரியார் பார்ப்பனர்களை எதிர்த்த இனவாதி; பொருளாதாரக் கொள்கையில் அவருக்கு தெளிவான பார்வை கிடையாது; அம்பேத்கர் ஆழமான சிந்தனையாளர்; பெரியார் தெருச் சண்டைக்காரர் என்று பெரியாருக்கு எதிராக நஞ்சு கக்கியது அக்கட்டுரை. இதற்கு விரிவான பதிலளித்து ‘தி ஒயர்’ ஏட்டுக்கு பேராசிரியர்கள் ராம் கார்த்திக் மனோகர், பேரா. ஆனந்தி ஆகியோர் எழுதிய கட்டுரை இது. தமிழில் ‘இரா’.   இந்தியாவின் ‘சுதந்திரப்’ போராட் டத்தில் பெரியார் முழுமையான உடன்பாடு  கொள்ள வில்லை என்பதற்கான காரணம் இந்த சுதந்திரத்தால் பயனடையப் போவது யார்? சுதந்திரத்தின் பயன் கிடைக்காமல் விலக்கி வைக்கப்படுவோர் யார்? என்பதுதான். அந்த நிலைப்பாட்டை பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று முத்திரை குத்திவிட முடியாது. இந்து வலதுசாரி சிந்தனையாளர்கள் பெரியார் மீது வெறுப்பைக்...

நடிகவேளின் நாடகப் புரட்சி சரோன்

நடிகவேளின் நாடகப் புரட்சி சரோன்

ஒரு ஒத்த மாட்டு கூண்டு வண்டி சலங்கை ஒலி கலகலக்க தெருக்களெங்கும் ஊர்ந்தது. பம்பை முடி வளர்த்த மீசை மழித்த நாடகக் கலைஞர்கள் வண்ண துண்டறிக்கைகளை மக்களின் கைகளிலும் வீடுகளிலும் கொடுத்து அன்று மாலையில் நடைபெற இருந்த எம்.ஆர்.ராதாவின் நாடகத்திற்கு அழைத்தபடி சுற்றி திரிந்துவிட்டு நாடகக் கொட்டகைக்கு திரும்பினார்கள். இது நடந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம்… “பொதுமக்களுக்கு காவல் துறையின் ஒரு முக்கிய அறிவிப்பு.. இன்று மாலையில் நடைபெறவிருந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகம் நடைப்பெறாது. ஆகவே யாரும் நாடகம் பார்க்க செல்ல வேண்டாம் என்று காவல்துறையின் சார்பில் தெரிவிக்கிறோம். காவல்துறை வாகனங்கள் கும்பகோணம் ஊரின் தெருக்களிலும் சுற்று வட்டார கிராமங்களிலும் புழுதியைக் கிளப்பி குறுக்கும் நெடுக்குமாக ஓடி கிராமபோன் ஒலிப் பெருக்கியில் அறிவித்தபடி இருந்தது. அதே நேரத்தில் மூப்பனார் தோட்டம் எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நாடகக் கொட்டகையில் வழக்கத்திற்கு மாறாக முற்பகல் முதலே பாடல்கள் ஒலித்தன. இரண்டு மூன்று பாடல்களுக்கு ஒருமுறை இடைஇடையே...

நீதிமன்றத்திலும் தமிழ்’ வேண்டும் –  பெரியார்

நீதிமன்றத்திலும் தமிழ்’ வேண்டும் – பெரியார்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடக்கும் சூழலில் இந்த கருத்தை ஆதரித்து பெரியார் 1956இல் எழுதிய தலையங்கம். முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள் நேற்று மாலை சட்டக் கல்லூரித் தமிழ் இலக்கிய சங்கத்தை திறந்து வைத்துப் பேசுகையில், தமிழ்நாட்டின் நீதி மன்றங்களிலும் தமிழிலேயே நடவடிக்கை நடக்கப் போகிறது, இக்கல்லூரி மாணவர்கள் இப்போதே தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார். மகிழ்ச்சிக்குரிய செய்தி இது. வைத்தியம், எஞ்சினியரிங் போன்ற விஞ்ஞானத் துறைகளில் தமிழ் உடனடியாக நுழைய முடியாவிட்டாலும் சட்டத்துறையிலாவது நுழைவது எளிதும், அவசரமும் ஆகும். ஏனெனில், சட்டமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடக்குமானால், ஏழை எளியவர்களில் பலர் இன்றைய பட்டதாரி வக்கீல்களைக் காட்டிலும் பல மடங்கு திறமையாக சட்ட நுணுக்கங்களை எடுத்துக்காட்டி வாதிடுவர் என்பதில் அய்யமில்லை. இன்றைய வக்கீல் உலகம் கொழுத்த பணம் சம்பாதிப்பதற்குக் காரணம், சட்டப் புத்தகங்கள் இங்கிலீஷில் இருக்கின்ற ஒரே காரணம் தவிர வேறல்ல. இவைகளைத் தமிழில்...

‘பராசக்தி’க்கு எதிராக வந்த ‘அவ்வையார்’ கலைஞரின் ‘பராசக்தி’ உருவாக்கிய புயல்-3 எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழில் : சுப. குணராஜன்

‘பராசக்தி’க்கு எதிராக வந்த ‘அவ்வையார்’ கலைஞரின் ‘பராசக்தி’ உருவாக்கிய புயல்-3 எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழில் : சுப. குணராஜன்

பராசக்தி திரைப்படம் வெளியாகிப் பத்து நாள்களுக்குள், சென்னை மாகாண அரசின் உள்துறை, இத்திரைபடத்தைச் சிக்கலுக்கு உள்ளாக்கும் வழிமுறையைத் தேடத் தொடங்கியது. இதனைக் கட்டுப்பாட்டுடன் தொடர்ந்த மனிதர் உள்துறைச் செயலாளராகிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஓ. புல்லாரெட்டி ஆவார். அக்டோபர் 27ஆம் தேதியன்று. சென்னைக் காவல்துறை ஆணையர் ஜெ.தேவசகாயம் அவர்களிடம், ஒரு உள்துறை அதிகாரியைத் திரைப்படத்தைப் பார்க்கும்படி செய்து, அதன் உள்ளடக்கத்தையும், அதில் ஏதேனும் ஆட்சேபகரமானதாக உள்ளதா என்று அறிந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்கச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பராசக்தி திரைப்படத்தைப் பார்த்த சென்னை காவல்துறை உளவுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரியின் விரிவான அறிக்கை, அப்படத்திற்கு ஆதரவாக இருந்தது. அவரது அரசியல் நிலைப்பாடு தி.மு.க. சார்பானதாக இருந்திருந்தால்கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. திரைப்படம் குறித்த தன்னுடைய கருத்துகளை மறைக்காது பதிவு செய்திருந்தார். அவரது அறிக்கையில், ‘திரைப்படத்திற்கான வசனங்கள், திராவிட முன்னேற்றக்கழகத்தின் பிரபல தலைவர்களில் ஒருவராக மு.கருணாநிதி அவர்களால், வலிமையாக எழுதப்பட்டுள்ளது. இப்படம் கையில் குழந்தையுடன் இருக்கும் ஒரு இளம்விதவை...

தமிழ்நாடு பெயர்  சூட்டிய வரலாறு

தமிழ்நாடு பெயர் சூட்டிய வரலாறு

சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ் நாடு’ என்று பெயர் சூட்டப்பட்ட சுருக்கமான வரலாற்றுப் பதிவு இது. அண்ணாவின் பிறந்த நாளையொட்டி (செப்.15) அவரது வரலாற்றுச் சாதனையை ‘நிமிர்வோம்’ பதிவு  செய்கிறது. ‘திராவிட கட்சிகள்’ தமிழருக்கு துரோகம் இழைத்து விட்டதாகப் பேசுவோரும் இந்த வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.   அண்ணா தலைமையில் 15 பேர் தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் களாக மக்களால் தேர்வு செய்யப்பட்டு, முதன் முறையாக 1957 இல் தி.மு.க. சட்டமன்றம் சென்றது. சட்டமன்ற திமுக தலைவராக அண்ணா அவர்களும், துணைத் தலைவராக க.அன்பழகன், கொறாடாவாக கலைஞர் மு.கருணாநிதி நியமிக்கப்பட்டனர். பேரவையின் முதல் கூட்டத்திலேயே ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு க.அன்பழகன்அவர்கள் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அத்திருத்தத்தில் “இம்மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’என்ற பெயர் மாற்றம் செய்யப் படாதது வருத்தத்திற்குரியது” என மொழிந்தார். விவாதத்தில் பல உறுப்பினர்கள் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயரிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அண்ணா அவர்கள் பேசும்போது, “திராவிட...

கருநாடகம் -தென்னகத்தின் குஜராத் கவுரி லங்கேஷ்

கருநாடகம் -தென்னகத்தின் குஜராத் கவுரி லங்கேஷ்

மதவெறியின் துப்பாக்கிக் குண்டுக்கு பெங்களூருவில் பலியான கவுரி லங்கேஷ் (இராவணன்) இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக 2008இல் எழுதிய கட்டுரை: சமீபத்தில் ஹூப்ளி, ஹொன்னள்ளி ஆகிய இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டதாக மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் இஸ்லாமியர்களாக இருந்ததால், அடுத்த நாளே, காவல்துறை வட்டாரங்கள் அவர்களைப் பற்றிய செய்தியைக் கசியவிட்டது. அதாவது அவர்கள் மூவரும் நாட்டின் வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறை சந்தேகிப்பதாக அந்த செய்தி சொன்னது. இந்த ஒரு துணுக்கு போதுமானதாக இருந்தது, ஊடகங்கள் தங்களுடைய சந்தேகக் கதைகளை புனைய. அனைத்து அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் விதிவிலக்கு இல்லாமல் தாங்கள்தான் முதல்முதலாக இந்த அதிர்ச்சிக்குரிய செய்தியை வெளியிடுவதாக பறைசாற்றிக்கொண்டன. அனைத்து செய்தியாளர்களும் தங்களுடைய கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் விதமாக, பெயர் சொல்ல விரும்பாத நபர் சொன்னதாகவோ, காவல்துறையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்னதாகவோ, காவல்துறையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் சொன்னதாகவோ, கர்நாடகத்தின் அரசு செயலகம்...

இந்தியாவில் ஒரே ஒருவர் தான் பெரியார்  பேராசிரியர் ந. முத்துமோகன்

இந்தியாவில் ஒரே ஒருவர் தான் பெரியார் பேராசிரியர் ந. முத்துமோகன்

“இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் நாம் இத்தனை காலம் காத்துக் கொண் டிருந்தோம் என்று தோன்றுகிறது. இந்தப் போரில் நாம் அழிக்கப்படுவோம் அல்லது விடுதலை பெறுவோம். இரண்டுக்கும் தயாராகுவோம். வேறு குறுக்கு வழி இருப்பதாகத் தெரியவில்லை.” மீண்டும் பெரியார் குறித்து பேசத் தொடங்கியுள்ளோம், யோசிக்கத் தொடங்கி யுள்ளோம். இந்துத்துவத்தின் மீள் வருகை பெரியாரின் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. இடதுசாரி, சனநாயக மற்றும் சமயச் சார்பற்ற சக்திகள் பலவீனமடைந்தால் இந்தியாவில் மீண்டும் ‘பிராமணிய’ ஒழுங்கு முன்னுக்கு வந்துவிடும் என்று பெரியார் திரும்ப திரும்ப எச்சரித்து வந்தார். அவர் சொல்லி வந்ததைவிட இன்னும் அதிகளவு அபாயத்துடன் இந்துத்துவம் இப்போது மீண்டு வந்துள்ளது. இந்துத்துவ சக்திகள் சர்வதேச அரசியலில் கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கும் வேலைத் திட்டத்துடன் இப்போது தொழில்பட்டு வருகிறது. இந்துத்துவம் அதற்கே உரிய முறையில் உலகமயமாகி வருகிறது. முன்பு ஒருமுறை அது உலகமயமாகிய போது பாசிசத்தைப் பிறப்பித்தது. இது இரண்டாவது முறை. பெரியார் இந்தியாவில் ஒரே ஒருவர்தான். நமது...

புதிய மனுஸ்மிருதியை எழுதி சமூக சட்டமாக்க ஆர் எஸ் எஸ் திட்டம்!

புதிய மனுஸ்மிருதியை எழுதி சமூக சட்டமாக்க ஆர் எஸ் எஸ் திட்டம்!

மனுஸ்மிருதியில் பல பிரிவுகளை நீக்கி விட்டுஅதை தூய்மைப்படுத்தி மக்களிடம் பரப்புவதற்கான முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரப் பிரவு தீவிரமாக இறங்கியிருக்கிறது. சூத்திரர்கள், பெண்களை இழிவுபடுத்தும் பார்ப்பனர்களுக்கான சட்ட நூல் ‘மனுஸ் மிருதி’ ; மனுஸ்மிருதியை தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் (14.04.2013) திராவிடர் விடுதலைக்கழகம் நடத்தியது. அம்பேத்கர் மகர் குள நீர் எடுக்கும் போராட்டத்தை ஒட்டி மனுஸ்மிருதியை எரித்தார். சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் பெரியார் காலத்தில் ‘மனுஸ்மிருதி’ எரிக்கப் பட்டது. ‘மனுஸ்மிருதியை’ நியாயப்படுத்தி வெளிப்படையாகப் பேசாமல் பார்ப்பனர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். ஆனால் இந்து சமூகம் கட்டமைத்த வாழ்வியலில் மனுஸ்மிருதி உயிர்த் துடிப்போடு இப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. “பிராமணர்”களுக்கு மட்டுமே திருமணம் செய்யும் உரிமை வழங்கப் படுகிறது.“பிராமணர்களுக்கு”மட்டுமே‘யாகம்’- கடவுள் ‘அர்ச்சனை’- ‘கும்பாபிஷேகம்’ கடவுளோடு நேரடித் தொடர்புகொள்ளும் உரிமைகள் இன்றுவரை வழங்கப்பட்டிருப்பது மனு சாஸ்திரத்தின் கட்டளைப்படித்தான்; இந்த உரிமைகள் அனைத்தும் ‘பெண்களுக்கும்’‘சூத்திரர்களுக்கும்’ ஆகமம் – பழக்க வழக்கம் என்ற அடிப்படையில்...

‘வந்தேமாதரம்’-வரலாறு

‘வந்தேமாதரம்’-வரலாறு

ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க. பரிவாரங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இப்போது தேசிய கீதம் பாடப்படுவது இல்லை. அதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுகிறார்கள். ‘வந்தே மாதரம்’ பாடலின் கருத்தும் -வரலாறும் என்ன? பக்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 1880 -ல் ஆனந்த மடம் என்று ஒரு நாவலை வங்காள மொழியில்எழுதினார். அந்தநாவலில் வரும் வங்காள மொழிப் பாடல் தான் ‘வந்தே மாதரம்’ அந்த நாவல் உருவான காலக்கட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம் மன்னர் அநுமன். ஆங்கி லேயக் கிழக்கிந்திய கம்பெனியினர் சில சமாதான ஒப்பந்தங்களை செய்து கொண்டு சென்னை -பம்பாய் -கல்கத்தா போன்ற நகரங்களில் காலூன்ற முயன்று கொண்டிருந்தனர். அப்போது -இந்த‘ஆனந்தமடம்’நாவலில் சொல்லப்பட்ட செய்தி, ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்பது அல்ல; மாறாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி யை- ஆயுதப் போர் நடத்தி ஒழித்துவிட்டு இந்து-ஆங்கிலேயர்களின் கூட்டணிஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே இந்த நாவலின் மய்யக்...

ஆழ் மனதுடன் ஓர் உரையாடல்- பழநிவேல் கோமதிநாயகம்

ஆழ் மனதுடன் ஓர் உரையாடல்- பழநிவேல் கோமதிநாயகம்

‘மஞ்சள்’ நாடகம் மற்றும் அதனுடன் இணைந்த பிரச்சாரத்தை அறிந்த சில நாட்களில் பெசவடா வில்சன் பற்றியும், கையால் மலம் அள்ளுதல் பற்றியும் விரிவாகத் தேடி அறிய ஆரம்பித்தேன். இதன் ஒரு கட்டமாக பாஷா சிங் இந்தியில் எழுதி ரீனுதல்வார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘unseen’ புத்தகத்தை வந்தடைந்தேன். பாஷா சிங் ஓர் ஊடகவியலாளர். சமூக செயற்பாட்டாளர்.. ஓர் ஊடகவியலாளரின் முதன்மைப் பணி என்பது தரவுகளின் அடிப் படையில் சார்பற்ற தகவல்களை அளிப்பது. இந்தப் புத்தகத்தில் முக்கியத் தரவுகளையும் தகவல்களையும் பாஷா சிங் கட்டமைத்துள்ள விதமே இந்த நூலை ஒரு முக்கிய ஆவணமாக என்னை கருத வைக்கிறது. இங்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. பலரால் சொல்லப்படுகிறது. மீண்டும் மீண்டும் சொல்லப் படுகிறது. கற்பனையிலும் நான் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு வாழ்க்கை அவலத்தை பற்றி லக்ஷ்மானியஹாரியும், பல்லவியும், இந்திராவும், ரபீக்காவும், நாராயணம்மாவும் மற்றும் இன்னும் பல பெண்களும் என்னிடம் என்ஆழ் மனதிடம் மிக அந்தரங்கமாக பேசுகிறார்கள்....

கண்களைக் குளமாக்கிய ‘மஞ்சள்’ – பூங்குழலி

கண்களைக் குளமாக்கிய ‘மஞ்சள்’ – பூங்குழலி

‘எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும்அல்லன். ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்கவேண்டும். இந்தநிலை ஏற்படச் சாதி ஒழிய வேண்டும்.’  –பெரியார்   கையால் மலம் அள்ளும் இழிவு என்பது இந்த நாடெங்கும் நம் கண் முன்னால் நடைபெறக் கூடிய ஒரு வன்கொடுமை. ஆனால் சமூகத்தின் அகக் கண்களில் என்றும் படாத ஓர் இழிவாகவே அது இன்று வரைத் தொடர்கிறது. அன்றாடம் கடந்து போகும் ஒரு சாதாரண நிகழ்வைப் போலவே, ரயில்வே பாதைகளில் மலத்தை அள்ளும் ஒரு பெண்ணையோ, மலக் குழிகளில் இறங்கும் ஓர் ஆணையோ இச்சமூகம் துளி அளவும் சலனமின்றி கடந்துப் போகிறது. ஒரு நாய்க்குட்டிக்கு அடிபட்டால் பொங்கி எழும் இச் சமூகம், சக மனிதனின் மாண்புக்கும் உயிருக்கும் கேடாய் இருக்கும் ஓர் இழிவு கண் முன் நடந்தாலும் அப்படி ஒன்று நடக்கவே நடக்காததுபோல கடந்து செல்வதற்கு காரணமாக இருப்பது இச்சமூகத்தின் ஆகப் பெரிய...

‘காலச்சுவடு’ கட்டுரைக்கு மறுப்பு நீதிக்கட்சி தலித் மக்களுக்கு எதிரானதா? வாலாஜா வல்லவன்

‘காலச்சுவடு’ கட்டுரைக்கு மறுப்பு நீதிக்கட்சி தலித் மக்களுக்கு எதிரானதா? வாலாஜா வல்லவன்

காலச்சுவடு இதழ் 11 சூலை 2017 இதழில் திராவிட இயக்க நூற்றாண்டு‘அம்பு எய்யாத வில்’என்ற தலைப்பில் க.திருநாவுக்கரசு என்பவர் (இவர் திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அல்ல) நீதிக்கட்சியின் மீதும், பெரியாரின் மீதும் அபத்தமான உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். பார்ப்பனர்களுக்கே உரிய வழக்கமான, தலித்துகளை பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது மோதவிடும் போக்கிலேயே இக்கட்டுரை அமைந்துள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் ஒரு பெரிய தலைவராக இருந்தார் என்கிறார். அதுவே உண்மையல்ல. 1916 நவம்பரில் நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதை இக்கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். 1917 இல் எம்.சி.ராஜா ஆதி திராவிட மகா சபையை புதுப்பித்தவர் என்ற வரலாற்றை மறைத்துள்ளார். எம்.சி.ராஜா நீதிக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தால் ஆதிதிராவிட மகாசபையை ஏன் தொடங்கவேண்டும். இரட்டைமலை சீனிவாசன், மதுரைப்பிள்ளை, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, தர்மலிங்கம் பிள்ளை போன்றவர்கள் நீதிக்கட்சி ஆதரவாளர்கள். எம்.சி.ராஜா, ஜெ.சிவசண்முகம் பிள்ளை, முனுசாமி பிள்ளை போன்றவர்கள் நீதிக்கட்சி எதிர்ப்பாளர்கள். 1920 முதலே இரண்டு குழுக்...

கடவுள்-மதம் குறித்து காமராசர்

தலைவர் காமராஜ் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அந்தக் கோவில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. ஆங்காங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோவில் கோபுரத்திலெல்லாம் மரம்,செடி,கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோவில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து கொண்டிருப்பார். சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோவிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோவில் வாசலில் இருந்த கல்வெட்டுகளையெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்து விட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோவிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப் போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர். ஆனால், எனக்கு...

கலைஞரின்‘பராசக்தி’உருவாக்கிய புயல்2 தணிக்கைக் குழுவினர் மீது சீறிப் பாய்ந்த பார்ப்பனர்கள்!

பராசக்தி திரைப்படம் வெளிவந்தவுடன், கடும் எதிர்ப்பையும், தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்கொண்டது. அத்திரைப்படத்திற்கு எதிரான கண்டனக் கடிதங்கள், சென்னைக் காங்கிரஸ் அரசாங்கத்திடம் குவிந்தன. பார்ப்பனர்களின் கட்டுப் பாட்டில் இருந்த பத்திரிகைகள், பராசக்தியைக் கடுமையாக விமர்சித்தன. பராசக்தி படத்தைத் திரையிட அனுமதித்த திரைப்பட தணிக்கைக் குழுவும், தாக்கு தலுக்கு இலக்கானது. கடித முகப்பில் (letter Head) ) ‘கொச்சி உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி, கொச்சி மாகாணத்தின் முன்னாள் அமைச்சர், கோயம்புத்தூர் இந்தியக் கத்தோலிக்கர் சங்கத்தின் தலைவர், சென்னை மற்றும் கொச்சி மாகாண உயர்நீதிமன்றங்களின் வழக்கறிஞர்” எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட பரம்பிலோனப்பன், பராசக்தி திரைப்படம் வெளியானதும், சென்னை மாகாண முதல்வர் ராஜகோபாலாச்சாரிக்கு ‘முற்றிலும் ரகசியம்” என்ற குறிப்பிட்ட கடிதமொன்றை அனுப்பினார்: ‘எனது தட்டச்சு எழுத்தருக்குக்கூடத் தகவல்கள் கசிந்து விடுவதைத் தவிர்ப்பதற்காக நான் என் கைப்படவே எழுதுகிறேன். கடந்த சில நாட்களாகக் கோயம்புத்தூர் ‘டைமண்ட்” திரையரங்கில் பராசக்தி திரைப்படம்...

ஜி எஸ் டி பெரும் பேரமா? சரணாகதியா? – பேராசிரியர் ஜெ ஜெயரஞ்சன்

ஜி.எஸ்.டி. 1.7.2017 தேதி முதல் இந்தியாவில் ஜி.எஸ்.டி. (GST) எனும் வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. goods and service tax  என்பதன் சுருக்கமே GST (ஜி.எஸ்.டி) என்பது நாம் அறிந்ததே. வரிகளில் நேர்முக வரி, மறைமுக வரி என இரண்டு வகைகள் உள்ளன. நேர்முக வரி என்பவை நாட்டின் குடிமக்களின் வருவாய்மீது விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரி வகையைச் சார்ந்தவை. ஒரு நபரின் வரி செலுத்தும் திறனைக் கணக்கில்கொண்டு வசூலிக்கப்படும் வரிகள் நேர்முக வரிகள் ஆகும். மறைமுக வரிகள் என்பவை தராதரம் பார்ப்பதில்லை. ஒருவன் ஏழையா, பரம ஏழையா, நடுத்தர வர்க்கத் தினனா, பணக்காரனா, பெரும் பொருள் படைத்தவனா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எவராயிருந்தாலும் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து பெற்றால் அரசுக்கு (மாநில/ஒன்றிய) வரி செலுத்த வேண்டும். இத்தகைய வரிகள் மறைமுக வரிகள் ஆகும். ஒருவரின் வரி செலுத்தும் திறனைக் கணக்கில் கொள்ளாமல் விதிக்கப்படும் வரிகள்...