‘இராஜாஜி’யே கூறுகிறார் ‘ஆண்டாள்’ ஒரு கற்பனை
‘ஆண்டாள் என்பதே ஒரு கற்பனை; அது பெரியாழ்வாரால் உருவாக்கப்பட்டது’ என்று தீவிர வைணவரும் பார்ப்பனர்களின் தலைவராகக் கொண்டாடப்பட்டவருமான இராஜாஜி எனும் இராஜகோபாலாச்சாரியாரே கூறியிருக்கிறார். வைணவத்தைப் பரப்புவதற்காக பல்லாண்டுகாலமாக நடத்தப் பெறும் ‘திருவேணி’ எனும் ஆங்கிலப் பத்திரிகையில் 1946 செப்டம்பர் இதழில் இராஜகோபாலாச் சாரியின் இந்தக் கட்டுரை ‘ஆண்டாள் என்பவர் யார்?’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டாளின் பக்தியை சிலாகித்து, ஜெ.பார்த்தசாரதி என்பவர் ‘திரிவேணி’ ஜூன் இதழில், ‘ஆண்டாளின் காதல் கதை’ (கூhந சுடிஅயnஉந டிக யனேயட) என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரைக்கு மறுப்பாக, இராஜ கோபாலாச்சாரியார் அதே பத்திரிகைக்கு இந்த மறுப்பை எழுதியிருக் கிறார். இராஜகோபாலாச்சாரியார் அனுமதியோடு இது வெளியிடப்படு கிறது என்கின்ற முன்னுரையுடன் ‘திருவேணி’ இதழ் அந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இராஜ கோபாலாச்சாரியின் ஆங்கிலக் கட்டுரையையும் அதன் தமிழாக்கத்தையும் ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது.
“Who is Andal? – BY C. R.
(After reading the “Romance of Andal” by Sri J. Parthasarathy in the June issue of the ‘Triveni’, C. R. wrote the following to us in the course of a letter. As the interpretation offered by C. R. is not widely known, we are publishing it with his kind permission. C. R., however claims no originality–and wishes it to be known that an “esteemed friend” brought this possible interpretation to his notice–Associate Editor, Triveni.) Andal was not any real girl or foster-daughter of Perialwar. It was a creation of his poetic mind and he wrote verses as if they were spoken by this child of his imagination. Perialwar modified the usual mode of Bhakta poetry in which religious experiences are cast in the figure of a love-sick girl’s anguish. We are all familiar with this rather common trick in which the saint speaks the language of a love-lorn maid. Perialwar varied this by creating a ‘daughter’ who was drawn to the great Sweet-heart and was absorbed by Him. The enlightened self of the man on whom falls Divine Grace is the ‘daughter’ whom he finds and brings up with care and affection. She is at first shy and secretive (as people generally are with their first religious experiences). That is the legend of the wearing of the garland in private. The world never approves of desertion from social work. Marrying the Eternal Bridegroom is desertion of the world. All Bhaktas enjoy the ecstacy of the love-passion so thoroughly that they would fain continue in that state rather than reach realisation and be absorbed. This is the ‘bereavement’ when Andal joins her Lord. The person loses his individual dynamic joy when samadhi is reached. The critical faculty struggles against the intuition grace that takes one to God. Perialwar made Andal for the latter and reserved himself as ‘father’ to symbolise the doubts and the griefs of the former.
The literature attributed to Andal is thus probably just Perialwar’s–a chapter corresponding to the Lover’s episodes in the other saints’ compositions. But so effective and popular was this Andal chapter that she became in tradition a real person and an additional saint. A figure of poetry was vitalised into a separate legend–so effectively that perhaps now this sort of interpretation would be put down as heresy. As if it were more pious to keep an additional saint going than to make Perialwar both himself and his daughter!”
“ஆண்டாள் உண்மையான பெண் அல்ல; அவள், பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளும் அல்ல. அது பெரியாழ்வாரின் கவித்துவ சிந்தனையில் உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரம். தனது கற்பனையில் உருவான கவிதைகளை ஆண்டாளே பேசுகிறாள் என்று கற்பனையில் எழுதியிருக்கிறார். வழக்கமான பக்தி இலக்கியங்களிலிருந்து மாறுபட்ட ஒன்றை எழுத வேண்டும் என்று கருதிய பெரியாழ்வார் காதல் ஏக்கம் நிறைந்த ஒரு பெண்ணின் உணர்வுகளோடு பக்தியின் அனுபவங்களை இணைத்து எழுத முற்பட்டார். காதலுக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு துறவியால் எப்படி எழுத முடியும் என்ற கேள்வி எழக் கூடும் என்பதால், அவர் தந்திரமாக ஒரு ஏற்பாட்டைச் செய்தார். ஒரு பெண்ணின் காதல் உணர்வைத் தாம் எழுதவில்லை என்பதைக் காட்டுவதற்காக ஆண்டாளை தனது மகளாகவே வரித்துக் கொண்டார். தனது மகள் தனது காதலையும் இதயத்iயும் ஆண்டவனுக் காகவே அர்ப்பணித்து கடைசியில் ஆண்ட வனால் அவள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக எழுதினார்.
அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்த மகள் காதலில் மூழ்கியிருப்பது, வேறு யாரிடமோ அல்ல; ஆண்டவனிடத்தில்தான் என்பதை அறிந்தபோது, தந்தையான பெரி யாழ்வார், மகளின் அந்த உணர்வுகளை மதித்தார். ஆண்டாள் தனது காதலை வெளிப் படுத்தாமல், இரகசியமாகவே தொடக்கத்தில் வைத்திருந்தார். ஆண்டவனுக்கு சூடப்பட்ட மாலையை எவருக்கும் தெரியாமல், தனது கழுத்தில் சூட்டி மகிழ்ந்தாள். ஒரு பெண் ஆண்டவனையே தனது கணவனாக்கிக் கொள்ள வேண்டும்; திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதை பொதுவாக எவருமே ஏற்க மாட்டார்கள். சமூகம் விதித்த கடமைகளை உதாசீனப்படுத்துவதாகவே கருதுவார்கள். பக்தர்கள் அனைவருமே ஆண்டவனைத் தரிசிப்பதால் தங்களுக்குக் கிடைக்கும் பரவசமான நிலையையே விரும்பி, அந்த ‘பரவச நிலை’ நீடிக்க வேண்டும் என்றே விரும்புவார்களே தவிர, முக்தி நிலை பெற்று ஆண்டவனால் அழைத்துக் கொள்ளும் எல்லைக்குப் போக மாட்டார்கள். ஆண்டாள் ஆண்டவனிடம் போய்ச் சேர்ந்து விட்டாள் என்பது, துயரத்தின் வெளிப்பாடு. வாழ்க்கையின் முடிவைத் தேடிக் கொண்டு சமாதி நிலைக்குப் போகிற ஒருவன், தனது மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் வாழ்க்கையில் இழக்கிறான். உள்ளார்ந்த உணர்வுகளின் ஆசை, அன்பு, மகிழ்ச்சிகளுக்கு எதிராகப் போராடி அதில் வென்ற பிறகே, ஒருவன் கடவுளை அடைகிறான். அப்படிப்பட்ட பாத்திரமாக பெரியாழ்வார் ‘ஆண்டாளை’ப் படைக்கிறார். மகள் அவளது உலக வாழ்வின் மகிழ்ச்சி, ஆனந்தத்தை இழந்து, கடவுளை அடைகிறாளே என்ற இயல்பான ஒரு தந்தையின் துயரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார்.
எனவே ஆண்டாள் (எழுதியதாகக் கூறப்படும்) பக்தி இலக்கியம், ஒரு துறவியின் பார்வையில் காதலைப் பேசுகிறது. ஒரு வழமையான காதல் உணர்வு கொண்ட பெண் ணாகவும் கூடுதலாக அவள் ஆண்டவனை மணம் முடிக்கும் துறவு மனப்பான்மைக் கொண்டவளாகவும் ஆண்டாள் படைக்கப்பட் டாள் என்பதால் தான் இந்த பக்தி இலக்கியம் மக்களிடையே புகழ் பெற்றுத் திகழ்ந்தது.
எனவே ஆண்டாளைப் பெருமைப் படுத்தும் இந்த அத்தியாயம், பெரியாழ்வார் எழுதியதாகவே இருக்கலாம். ஒரு துறவி, காதல் உணர்வுகளை விவரித்திருக்கிறார். ஆண்டா ளோடு, பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாடல்களின் சிறப்பும் முக்கியத்துவமும் பெற்று நிற்பதால், இது ஆண்டாள் பாடியதுதான் என்று நம்புகிறார்கள். அது உண்மையல்ல; வேறு யாரோ ஆண்டாள் பெயரில் எழுதியது என்ற மாறுபட்ட கருத்தை ஏற்க ஒப்புவதில்லை. ஒரு துறவி தனக்கான எல்லைகளை மீறி தனது காதல் கதையை பக்தியோடு இணைத்தார்; அதனால் ஆண்டாளின் பாடல் மேலும் புனிதம் பெற்று விட்டது. ட
ஆண்டாள் பாடியது பக்தி இலக்கியமா?
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை ‘தினமணி’யில் (8.1.2018) வெளிவந்தது. ஆண்டாள் யார் – அவர் எத்தகையவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கொடுத்து எழுதியிருந்தார்.
Andal was herself a Devadasi who lived and died in srirangam temple – ஆண்டாள் என்பவர் தேவதாசியாக சிறீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள் என்பது இதன் பொருள்.
இதனைச் சொல்லுவது கவிஞர் வைரமுத்தல்ல – அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழகம் சுபாஷ் சந்திரமாலிக் என்பவர் தொகுத்து வெளியிட்ட Indian Movement some aspects of dissent, protest and reform நூலில் இது காணப்படுகிறது என்று கவிப்பேரரசு ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டிய பிறகு, அவர்மீது விழுந்து பிராண்டுவது ஏன்?
1978 இல் இந்த நூல் வெளியாகி உலகம் பூராவும் பரவிவிட்டதே! 40 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்?
ஆண்டாள் தேவதாசி என்றால், இவர்களுக்கு ஏன் கோபம் குபீர் என்று கொப்பளிக்க வேண்டும்?
இந்து மதத்தில் தேவதாசி என்பது கெட்ட பொருள் கொண்டது அல்லவே! அந்த சொல்லிலேயே பொருள் இருக்கிறதே – தேவர்களுக்குத் தாசி என்று.
தேவதாசியாக இருப்பது இந்து மத சம்பிரதாயப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட புனிதமான அம்சம்தானே!
சென்னை மாநில சட்டப்பேரவையில் நீதிக்கட்சி ஆட்சியின்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் கொண்டு வரப்பட்ட தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்கு எதிராக வாயாடி சத்தியமூர்த்தி அய்யர்வாள் ஆகாயத்துக்கும், பூமிக்கும் பூணூலை முறுக்கிக் கொண்டு தாவிடவில்லையா? இந்து மத சம்பிரதாயத்தில் தலையிடு வதா? தேவர்களுக்குத் தாசி யாக இருப்பது புனித செயலே என்று ஆர்ப்பரித்தாரா இல்லையா?
அன்று சட்டசபையில் நடந்தது என்ன?
திரு.சத்தியமூர்த்தி அவர்கள் விபச்சார ஒழிப்பு மசோதாவைப்பற்றிப் பேசுகையில், ‘‘பெண்கள் எவ்வளவுதான் விபச்சாரம் செய்தாலும், அதனால் யாருக்கு எவ்வளவு துன்பம் நேரிட்டு வந்தாலும் விபச்சார ஸ்திரீகளும் நம்மவர்களே யானதால் அவர்கள் விஷயத் தில் அனுகூலமாயிருக்க வேண்டுமென்று சிபாரிசு பேசினதும், ‘தேவதாசித் தொழில் போனால் மதம் போய்விடும்’ என்றதும், ‘இன்று தேவதாசித் தொழிலை நிறுத்தினால், திரு.ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகத் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்து விடுவாரே என்று ஆத்திரப் பட்டதும் ‘மித்திரன்’ தேவ தாசி மசோதாவால் தேவ தாசித் தொழிலுக்குக் குந்தகம் ஏற்பட்டுவிட வில்லை என்று தேவதாசிகளுக்கு வியாக்கி யானம் செய்து மறுபடியும் அதே தொழிலில் இருக்க உற்சாகத்தையும், தைரியத்தை யும், ஆசையையும் ஊட்டு வதையும் பார்ப்பவர்களுக்கு நாட்டின் ஒழுக்கத்திற்கோ, சுயமரியாதைக்கோ, விடுதலைக்கோ இத் தேசியப் பத்திரிகைகளும், ‘தேசிய வீரர்’களும் அனுகூலமாயிருப் பார்களா என்பது இவர் களுடன் யோக்கியர்கள் வந்து வேலை செய்ய முடியுமா என் பதும் தானாகவே விளங்கும்.
(‘குடிஅரசு’, 10.2.1929)
தேவதாசிக்கு வக் காலத்து வாங்கிய சத்திய மூர்த்தி அய்யர் இந்து இல்லையா? இதற்கு மன்னார் குடி ஜீயர்தான் பதில் சொல்லவேண்டும்.
“தேவதாசியாக இருப் பது ஆண்டவனுக்குச் செய்யும் சேவையென்றும், அப்படி தாசியாக இருந்து சேவை செய்தால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்றும் திரு வாளர் சத்தியமூர்த்தி அய்யர் வாள் இங்கு பேசினார். அப்படியானால், எங்கள் சமூகத்தவர்களே இதுவரை தாசியாக இருந்து புண்ணி யத்தை அனுபவித்தது போதும் – போதும்! இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர் வாளைச் சேர்ந்தவர்கள் தேவ தாசியாக இருந்து அந்தப் புண்ணியத்தை அனுபவிக் கட்டும் – எங்களுக்கொன்றும் ஆட்சேபணை இல்லை” என்று சத்தியமூர்த்தியிடம் முகத்துக்கு முகம் மொத் தினாரே டாக்டர் முத்து லட்சுமி! வாயாடி சத்திய மூர்த்தி அய்யர் ஆயாடி என்று அடங்கிப் போய்விட வில்லையா?
சத்தியமூர்த்தி அய்யர் வாளின் இந்தக் கதையெல் லாம் காரைக்குடி அம்பி களுக்குத் தெரியாதோ!
ஆண்டாள் தேவதாசி என்று சொல்லுவது இழிவு படுத்தக் கூடியது என்றால், இந்து மத சம்பிரதாயம் இழிவு என்பதை அவாளை அறியாமலேயே ஒத்துக் கொண்டதாக அர்த்தம்.
பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த நாட்டிய நடிகை ஸ்வர்ணமால்யா என்ற பார்ப்பனப் பெண் மகளிர் கல்லூரி விழா ஒன்றில் (30.7.2017) கடவுளின் மனைவி மார்கள், தேவதாசிகள் புனிதர்கள் என்று பேசினாரே!
இப்பொழுது கேள்வி எல்லாம் ஆண்டாளைக் காப்பாற்றப் போகிறாளா? அல்லது இந்து மதத்தைக் காப்பாற்றப் போகிறாளா? என்பதுதான்.
ஆண்டாளைக் காப்பாற்ற நினைத்தால், இந்து மதத்தில் தேவதாசி முறையை ஏற்படுத்திய இந்து மதத்தின் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்த தயாராகி விட்டார்கள் என்று பொருள்.
மன்னார்குடி செண்ட லங்கார ஜீயர் சுவாமி மறுப்பு என்று ‘தினமலரில்’ இன்று ஒரு செய்தி வெளி வந்துள்ளது. தேவதாசி என்று ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டி கவிப்பேரரசு எழுதி யது கண்டு இவர் எரிச்சல் அடைந்து நிதானமின்றி எழுதியுள்ளார். ஜீயர் கருத்துப் படி தேவதாசி என்பது இழிவானதாகும். ஆனால், மன்னார்குடி ஜீயருக்கு அவர் சார்ந்த மதத்தைப்பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பது நிதர்சன மாகத் தெரிகிறது.
மன்னார்குடி செண்ட லங்கார ஜீயர் சுவாமிகளுக்கு அதே வைணவ மடத்தைச் சேர்ந்த மற்றொரு மடாதிபதி யோகி சிறீராமானந்த குரு (மஹா சிறீநாராயண மிஷன் கடனூர் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், தொலைப்பேசி எண்: 9442464341) தேவ தாசிகள்பற்றி சிலாகித்து எழுதி யதை எடுத்துக் காட்டி னால், அவாளுக்குக் ‘குளிர்ச்சி யாக’ இருக்கும் அல்லவா!
இதோ மடாதிபதி யோகி சிறீராமானந்த குரு பேசுகிறார்:
“ஆகமங்கள் அனைத் துமே தேவதாசி பெண்களை ருத்திர கன்னிகை என்றே பெயரிட்டு அழைக்கிறது.
தேவதாசி பரம்பரையில் இரண்டு வகை உண்டு. முதலாவது வகை பதியிலார் என்பதாகும். இந்த வகையைச் சார்ந்த பெண்கள் மனிதர்கள் யாரையும் கணவனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார் கள். இறைவனான மகா தேவனையே தனது பதியாக அதாவது கணவனாக ஏற்று வாழ்க்கையை நடத்து வார்கள். இதனால் இவர் களுக்கு நித்திய சுமங்கலிகள் என்ற பட்டமும் உண்டு.
ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தணர்களைப் போலவே தேவதாசிகளும் ஆலய கரு வறைக்குள் சென்று வந்தனர். இதற்கான ஆதாரங்கள் திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயத்திலும், திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திலும் உள்ளன.
ஓர் ஆலயத்தில் பணி புரியும் தேவதாசி இறந்து விட்டால், அவள் உடலை சாதாரண துணியால் மூட மாட்டார்கள். ஆலய மூல மூர்த்திக்குப் போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து அவள் உடல்மீது போர்த்தப்படும். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப் படும். இறுதி ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அவளது உடல், கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னால் சிறிதுநேரம் நின்றே மயானத் திற்குக் கொண்டு செல்லப் படும். சாதாரண மனிதர் களுக்குக் கிடைக்காத பெரும் பேறாகிய ஆலய நெருப்பு எடுத்துச் செல்லப்பட்டே அவள் சிதை எரியூட்டப் படும்!”
இவ்வளவுப் பிரமாத மாக இந்து மதக் கண்ணோட் டத்தில் ஒரு வைணவ மடாதிபதி சிலாகித்து தேவ தாசிகள்பற்றிக் கூறும்போது, மன்னார்குடி ஜீயராகட்டும், இந்துத்துவா பேர்வழி களாகட்டும் ஏன் குதியாட்டம் போடுகிறார்கள்?
கிறித்துவ மதத்தை எடுத்துக்கொள்ளலாம். உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோ தண்டிக் கப்பட்டதுண்டு. கடவுள் உயிர்களைப் படைக்க வில்லை என்று கூறி பரிணாமத் தத்துவத்தைச் சொன்ன (Evolution) டார்வி னுக்கு எவ்வளவு எதிர்ப்புகள்!
ஆனால், போப் ஜான்பால் ஃபோன்டிகால், அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற அமைப்புக்கு அனுப்பிய செய்தி ஒன்றில், ‘டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத் தினை அங்கீகரிக்கச் செய்கி றோம். டார்வின் கொள் கையைப் பள்ளிகளில் போதிக்கவேண்டும் என்று சொன்னாரே (‘‘The Hindu’, 20.10.1996).
கலிலியோ சொன்ன உலகம் உருண்டை என்பதை யும் ஒப்புக்கொண்டவரும் (1992) இதேபோல் ஜான் பால்தான்.
ஒரு காலகட்டத்தில் செய்த தவறுக்காக வருத்தம் தெரிவித்து உண்மையை ஒப்புக்கொள்ளும் பக்குவமும், பெருந்தன்மையும் கிறித்துவ மதத்திற்கு இருப்பதுபோல, எண்ணாயிரம் சமணர்களை சைவம் கழுவேற்றிக் கொடூரமாகக் கொன்றதே – அதற்காக சங்கராச்சாரியாரை வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
புராணங்கள் என்றாலே புழுதி மேடுகள்தான். பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் விழுந்தான் இரண் யாட்சதன் என்றும், மகா விஷ்ணு வராக (பன்றி) அவ தாரமெடுத்துக் கடலுக்குள் குதித்துப் பூமியை மீட்டான் என்றும், அந்தப் பூமிக்கும், பன்றிக்கும் காதல் ஏற்பட்டு, கலவியும் நடந்து நரகாசுரன் பிறந்தான் என்றெல்லாம் அறிவுக்குக் காயடிக்கும் கேவலமான மட்டமான மூடத்தனத்தை மய்யமாகக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடச் சொல்பவர் களும் அந்த நாளில் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கூறும் சங்கராச்சாரியார் களும் உழலும் ஒரு நாட்டில், ஒழுக்கத்தையும் அறிவை யும்பற்றி உசாவலாமா? அப்படி உசாவினால், ‘அக்கிரமம், அக்கிரமம், நாத்திகம் பேசறாள்’ என்று அம்பிகள் அலறுவார்கள் – அய்யோ பரிதாபம்!
ஆண்டாளை தேவதாசி என்று ஆதாரப்படி சொன்னதற்காக ஆவேசப்படு வோரே! காலம் காலமாக இந்து வேதங்கள், மனுதர்மம், கீதைப்படி பெரும்பாலான பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்றும், வேசி மக்கள் என்றும் (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 415) என்று எழுதி வைத் துள்ளீர்களே!
அதன் அடிப்படையில் சூத்திரர்கள் அர்ச்சகராகக் கூடாது என்று உச்சநீதி மன்றம்வரை சென்று முட்டுக்கட்டைப் போடு கிறீர்களே – நியாயமாக 97 சதவிகித மக்கள் விழித்துக் கொண்டால், உங்கள் நிலை என்னாகும் என்று சிந்தித்ததுண்டா?
கொக்கோகம் தோற்றோடும் பாடலுக்குச் சொந்தக்காரர் ஆண்டாள்! ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழியில் உள்ளபடி….
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என்தட முலைகள்
உன்னித் தெழுந்த என்தட முலைகள்
சாயுடை வயிறும் என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே! ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கே! என்று உருகித் தவிப்பாராம்!
ஏக்கத்தின் உருக்கத்தால் பாடும்போது:
முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்!
புணர்வதோராசையினால் என்
கொங்கை கிளர்ந்து
குமைத்துக்
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே!
கண்ணீர்கள்
முலைக்கு வட்டில் துளி
சோரச்சோர் வேனை காமத்தீயுள் புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய்
நானிருப்பேனே!
என்னாகாத்திளங் கொங்கை
விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு
எனப் புரிவுடைமை
செப்புமினே!
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து
ஓர் நந்நாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்று உரையீரே!
கொங்கைத் தலமிவை
நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கல்லால்
வாயில் போகா!
(கொங்கைக்கும் செவ்வாயிற்கும் உறவு பற்றியது இது!)
காமப் பாதையில் கண்ணன் நாமம்
குற்றமற்ற முலைதன்னைக் குமரன்
கோலப்பணைத் தாளோடு
அற்றகுற்றமவைதீர அணைய
அமுக்கிக் கட்டீரே!
விரகதாபம் எடுத்த ஒரு பெண்ணின் காமப் பீறிடல்கள்தானே இவை?
கடவுளை தந்தை இடத்தில் வைத்துப் பூசிப்பவரை அறிவோம். கடவுளைத் தன் கணவனாக வரித்து அவனைப் புணர ஆசைப்படும் பக்தையைத் தூக்கிப் பிடிக்க ஜீயர்களே வருகிறார்களே!
நன்றி : ‘விடுதலை’ நாளேடு
நிமிர்வோம் பிப் 2018 இதழ்