திராவிட இயக்கம் கடக்க வேண்டிய பாதை விடுதலை இராசேந்திரன்

‘தமிழ் இந்து’ வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மலருக்கு எழுதிய கட்டுரையின் முழு வடிவம். கட்டுரையின் பல பகுதிகள் மலரில் இடம் பெறவில்லை.

திராவிட இயக்கம் குறித்து ‘இந்து’ குடும்பத்திலிருந்து வெளிவரும் ‘தமிழ் இந்து’ சிறப்பு மலர் வெளியிட முன்வரும் ‘வரலாற்றுச் சூழல்’ நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நல்ல முயற்சிக்கு எனது பாராட்டு களோடு, சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அடையாளங்களை மீட்கும் அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டங்களை உலகம் சந்தித்திருக்கிறது. இனம் – மொழி – பண்பாட்டு அடையாளங்களோடு உருவான திராவிடர் இயக்கத்தின் ‘அடையாள அரசியல்’ அதிலிருந்து மாறுபட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும். சமூகத்தின் ஒடுக்குமுறை வடிவமான ஜாதியமைப்பு வழியாக கட்டமைத்து மக்கள் மீது திணித்த அடக்குமுறை அடையாளங் களிலிருந்து மீட்டெடுத்து அவர்களின் உரிமை களுக்கான அடையாளங்களை முன் வைத்தது தான் திராவிட இயக்கத்தின் தோற்றுவாய். ஒரு இனத்தின் சுயமரியாதைக்கான அடையாளமாக பெரியார் அதை வார்த்தெடுத்தார். பழமை மீட்புக்குள் சிக்கிவிடாமல் நவீனத்துவத்துடன் சமத்துவத்துக்கான முன்னெடுத்தலை நோக்கி பெரியார் இந்த அடையாள அரசியலை நகர்த்தினார்.

இந்தியாவின் அரசியலமைப்புக்குள்ளும் அது உருவாக்கி வைத்திருக்கும் தேர்தல் அரசியல் ஜனநாயகத்துக்குள்ளும் இதை முழுமையாக்கிவிட முடியாது என்ற அழுத்தமான கருத்து பெரியாருக்கு இருந்தது. இதிலிருந்து மாறுபட்டு ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தது. அதிலிருந்து அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க. என்று திராவிட அரசியல் கட்சிகள் பிரிந்து நிற்கின்றன.

இந்தியாவின் அரசியல் –  பொருளாதாரம் – சமூகப் போக்கைத் தலைகீழாக புரட்டிப் போட்டது. 1990களில் கொண்டு வரப்பட்ட உலகமயமாக்கல் கொள்கை; பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் சுரண்டலுக்கு முழுமையாக கதவு திறந்து, பொதுத் துறை நிறுவனங்களை முடக்கி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைத் துறைகளிலிருந்து அரசுகளை விடுவித்து, பொருளியல் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரித்தது மட்டும் அது நிகழ்த்திய விபத்து அல்ல;  ஆட்சிகளையும் கட்சிகளையும் மக்களிடமிருந்து அன்னியப் படுத்தியதோடு கோடி கோடியாய் இலஞ்சப் பணத்தில் புரள வைத்தது இந்தக் கொள்கை. அந்த “வாய்ப்புகளை” திராவிட கட்சிகள் இழக்க விரும்பாமல் ஏனைய அரசியல் கட்சிகளைப் போல் பங்கு போட முன் வந்தன.

1990க்கும் முன்பு திராவிட அரசியல் கட்சிகள் தமிழகத்தின் தனித்துவமான உரிமைகளை மீட்பதற்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்குமான திட்டங்களை முன்னெடுத்தே வந்திருக்கின்றன.  சமூகத்தின் விளிம்பு நிலை மக்களைத் தொண்டர்களாகவும் தலைவர்களாக வும் கொண்ட திராவிட அரசியல் கட்சிகள், அதன் தொடக்கக் காலங்களில் ஊர்தோறும் மன்றங்களை படிப்பகங்களை நிறுவின. அங்கே பத்திரிகைகள் வாங்கப்பட்டன. சந்திப்புகள், விவாதங்கள் நடந்தன. பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்தி, விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. திராவிட இயக்கக் கொள்கைகளைத் தாங்கி ஏராளமான சிற்றிதழ்கள், நூல்கள் வெளி வந்தன. கருத்துக் களங்களும் விவாதங்களும் உயிர்த் துடிப்போடு நிகழ்ந்து கொண்டிருந்தன. இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் நிகழாத பெரியார் மரபில் வந்த கருத்துப் பரப்பல் உலக மயமாக்கலுக்குப் பிறகு விடை பெற்றுக் கொண்டுவிட்டன என்பதுதான் மிகப்பெரும் சோகம்!

1967ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய காலத்திலேயே முப்பெரும் சாதனைகளை நிகழ்த்தினார் அண்ணா.

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. சுயமரியாதைத் திருமணங்களை சட்ட வடிவமாக்கியது. ஆட்சி மொழி என்று சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியை ஏற்க மறுத்து, இரு மொழிக் கொள்கையை தமிழகத்தின் மொழிக் கொள்கையாக அறிவித்தது ஆகியவை மகத்தான சாதனைகள்.

அண்ணாவின் மறைவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி, திராவிட இயக்கத்தின் அடையாளங்களுக்கு அரசியல் வடிவம் தரும் முயற்சியில் இறங்கினார். நீதிபதி இராஜமன்னார் தலைமையில் மாநில சுயாட்சிக்காக குழு அமைத்து அதன் பரிந்துரையை சட்டமன்றத்தில் 5 நாட்கள் விவாதம் நடத்தி 1974 ஏப்.16இல் தீர்மானமாக நிறைவேற்றினார். கோயில்களில் ‘ஆகமம்’ என்ற பெயரில் கர்ப்பகிரகத்தில் நிலைபெற்றிருந்த ‘தீண்டாமை’யை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்கான சட்டத்தைக் கொண்டு வந்தார்; மாநிலங்களுக்கு தனிக் கொடியை முன்மொழிந்தார்; தனியாரிட மிருந்த பேருந்துகள் அரசுடைமையாக்கப் பட்டன; மனிதரை மனிதர் இழுக்கும் கை ரிக்ஷா முறை ஒழிக்கப்பட்டது; குடிசை மாற்று வாரியம் வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. கல்லூரி பட்டப்படிப்பு வரை கல்வி இலவசமாக்கப் பட்டது. இப்படிப் பட்டியலிட முடியும்! உலகமயமாக்கலுக்குப் பிறகு இவைஅனைத்தும் தலைகீழாக மாறின.

1972இல் தி.மு.க.விலிருந்து விலகிய எம்.ஜி.ஆர்., 1977இல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி முதல்வரானார். அவர் கொண்டு வந்த சத்துணவு திட்டம், பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியது போன்ற சாதனைகள் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை. ஆனாலும் திராவிடர் இயக்க பகுத்தறிவுக் கொள்கையில் ஓட்டை விழத் தொடங்கியது. அதற்குப் பிறகு கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா என்று மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், ஜெயலலிதா தலைமை யிலான அ.இ.அ.தி.மு.க. திராவிட இயக்கங் களுக்கான அடையாளங்களிலிருந்து முற்றிலும் விலகி, முழுமையான இந்துத்துவ அடையாளங் களோடு பவனி வந்தது. ஆனால், மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்பதில் உறுதி காட்டி வந்ததை குறிப்பிட வேண்டும்.

கொள்கைக்காக ஆட்சி அதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதாகப் புறப்பட்ட தி.மு.க., பிறகு அதிலிருந்து பிறந்த அ.இ.அ.தி.மு.க.வுக் கிடையே நடந்த அரசியல் அதிகாரத்துக்கான போட்டிகள் காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற தேசிய கட்சிகளிடம் அவைகளை சரணடைய வைத்தன. இவ்வளவு பின்னடைவுகளை சந்தித்த நிலையிலும் தமிழ்நாடு அதன் தனித்துவத்தை முற்றிலும் இழந்துவிடாமலே இருப்பதை மறுத்துவிட முடியாது. பிற மாநிலங்களோடு ஒப்பிடும் நிலையில் இது எட்டியிருக்க வேண்டிய உயரத்தை அடையவில்லை என்றாலும் ஒப்பீட்டளவில் முன்னேறி நிற்கிறது என்பதை மறுக்க முடியாது.

கல்வி, வேலை, அரசியல், பண்பாட்டு தளங்களில் சமத்துவமும் சமூகநீதியும் வழங்குவதே உண்மையான ‘ஜனநாயகம்’, ‘சுதந்திரம்’ என்று காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே போராடிய பெரியார், பிறகு அதிலிருந்து வெளியேறி, ஜாதியற்ற – சமத்துவ சமுதாயத்துக்காகவும் அதைத் தடைப்படுத்தும் வைதீக பார்ப்பனிய கோட்பாடுகளுக்கும் எதிராக இறுதி வரை களத்தில் நின்றார்.

பெரியாரின் இடஒதுக்கீடு என்ற சமூக நீதி கோட்பாட்டில் தமிழகம் தான் முன்னணியில் நிற்கிறது. காமராசர் ஆட்சியில் தொடங்கி ஒவ்வொரு ஆட்சியிலும் இடஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டே வந்திருக்கின்றன. பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு சமூக நீதிப் பார்வையுடன் பகிர்ந்தளிக்கப்பட்டன. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், அருந்ததி யினருக்காக உள் இடஒதுக்கீடுகளை தி.மு.க. ஆட்சி கொண்டு வந்தது. இது தவிர கிராமப்புற மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு; முதல் தலைமுறையாக படிக்க வரும் மாணவர்களுக்கு மருத்துவ – பொறியியல் சேர்க்கையில் முன்னுரிமை போன்ற சிறப்பான சமூக நீதித் திட்டங்களை நீதிமன்றங்கள் முடக்கி

விட்டன.

மதக் கலவரங்களுக்கு இடமில்லாமல் சமூக நல்லிணக்கத்தைப் பேணும் பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. மண்டல் பரிந்துரை அமுல்படுத்தப்பட்ட பிறகு பல மாநிலங்களில் அதை எதிர்த்து கலவரங்கள் மூண்டன. தமிழகம் அதை ஆதரித்து இயக்கம் நடத்தியது. மண்டல் பரிந்துரையை அமுல்படுத்திய வி.பி.சிங்குக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தந்தது தமிழகம். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கலவரம் நடக்காத மாநிலம் தமிழ்நாடு. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சமூக செயல்பாட்டாளர்களை உருவாக்கியிருப்பதும் தமிழ்நாடுதான். சுற்றுச் சூழல், மனித உரிமை, பெண்ணுரிமை, ஜாதி எதிர்ப்பு, என்று பல்வேறு தளங்களில் இயங்கும் குழுக்களும் இலட்சியங் களோடு தட்டுத்தடுமாறி வெளிவரும் சிற்றிதழ் களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டைப் போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. புதிய சமூகத்தை உருவாக்கும் முற்போக்கு போராட்ட சக்திகளின் விளைநிலமாக தமிழகம் மாறியிருப்பதற்குப் பின்னால் இந்த மண்ணில் நடந்த சமூக நீதிப் போராட்டங்கள் என்ற விதைகள் புதைந்து கிடப்பதை மறுத்துவிட முடியாது.

பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு பின் தங்கி நிற்கவில்லை என்பதற்கான சில புள்ளி விவரங்களோடு இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

உயர் கல்வி

பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு – 38.2ரூ. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 17.6ரூ; மபி – 17.4ரூ; உபி – 16.8ரூ; ராஜஸ்தான் – 18.0ரூ; இந்திய சராசரி : 20.4ரூ.

கல்வி நிலையங்களின் தரம்

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (ழசுனு) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,

முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்.. பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரி களில், தமிழ் நாடு-22; குஜராத் – 5; மபி – 3 ; உபி – 6; பீகார் – 1; ராஜஸ்தான்- 3.

முதல் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ் நாடு – 24 ; குஜராத் – 2 ; மபி – 0 ; உபி – 7 ; பீகார் – 0 ; ராஜஸ்தான் – 4

பொருளாதார மொத்த உற்பத்தி (ழுனுஞ)

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு.

தமிழ் நாடு – 18.80 டயமா உசடிசந (2னே ஞடயஉந); பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 10.94 டயமா உசடிசந (5வா); மபி – 7.35 டயமா உசடிசந (10வா);

உபி – 12.37 டயமா உசடிசந (4வா); ராஜஸ்தான் – 7.67 டயமா உசடிசந (7வா); சத்தீஸ்கர் – 2.77 டயமா உசடிசந (17வா).

சாப்ட்வேர் ஏற்றுமதி (ஆயிரம் கோடியில்)

தமிழ் நாடு – 75,000 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 1917 ; மபி – 343 ; உபி – 13,740 ; ராஜஸ்தான் – 712; சத்தீஸ்கர் – 18

சிசு மரண விகிதம் 1000 பிறப்புக்கு

தமிழ் நாடு – 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 36 ; மபி – 54 ; உபி – 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் – 46 ; இந்திய சராசரி: 40

ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்

தமிழ் நாடு – 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 112 ; மபி – 221 ; உபி – 285; ராஜஸ்தான் – 244 ; சத்தீஸ்கர் – 221 ; இந்திய சராசரி : 167

தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம்

தமிழ் நாடு – 86.7ரூ ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 55.2ரூ ; மபி – 48.9ரூ ; உபி – 29.9ரூ; ராஜஸ்தான் – 31.9ரூ ; சத்தீஸ்கர் – 54ரூ; இந்திய சராசரி : 51.2ரூ.

கல்வி விகிதாசாரம்

தமிழ் நாடு – 80.33ரூ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 79ரூ ; மபி – 70ரூ ; உபி – 69ரூ ; ராஜஸ்தான் – 67ரூ ; சத்தீஸ்கர் – 71ரூ ; இந்திய சராசரி : 74ரூ.

ஆண் – பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு – 943; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 890 ; மபி – 918 ; உபி – 902; ராஜஸ்தான் – 888 ; இந்திய சராசரி : 919

தனி நபர் வருமானம் – ரூபாயில்

தமிழ் நாடு – 1,28,366; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 1,06,831; மபி – 59,770 ; உபி – 40,373; ராஜஸ்தான் – 65,974 ; சத்தீஸ்கர் – 64,442; இந்திய சராசரி: 93,293

வீடுகளுக்கு மின்சாரம்

தமிழ் நாடு – 98.3ரூ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 96ரூ ; மபி – 89.9ரூ ; உபி – 70.9ரூ ; ராஜஸ்தான் – 91ரூ ; சத்தீஸ்கர் – 95.6ரூ.

மனித வள குறியீடு

தமிழ் நாடு – 0.6663; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 0.6164 ; மபி – 0.5567 ; உபி – 0.5415; ராஜஸ்தான் – 0.5768 ; சத்தீஸ்கர் – 0.358 ; இந்திய சராசரி : 0.6087

ஏழ்மை சதவீதம்

தமிழ் நாடு – 11.28ரூ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 16.63ரூ ; மபி – 31.65ரூ; உபி – 29.43ரூ; ராஜஸ்தான் – 14.71ரூ ; சத்தீஸ்கர் – 39.93ரூ; இந்திய சராசரி : 21.92ரூ.

ஊட்டசத்து குறைபாடு குழந்தைகள்

தமிழ் நாடு – 18ரூ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 33.5ரூ ; மபி – 40ரூ ; உபி – 45ரூ ; ராஜஸ்தான் – 32ரூ ; சத்தீஸ்கர் – 35ரூ ; இந்திய சராசரி : 28ரூ

மருத்துவர்களின் எண்ணிக்கை

(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு – 149; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 87; மபி – 41 ; உபி – 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி: 36

நிமிர்வோம் நவம்பர் 2017 இதழ்

You may also like...