பார்ப்பனிய அதிகாரப் பிடியில் மத்திய அரசு
ஒரு சதவீதம்கூட வங்கிகளில் பிற்படுத்தப்பட்ட அதிகாரிகள் இல்லை
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உயர் அதிகாரிகளாக ஒரு சதவீதம்கூட பிற்படுத்தப்பட்டோர் இல்லை. 1.10.2015ஆம் ஆண்டு நிலவரப்படி பொதுத் துறை வங்கிகளில் பொது மேலாளர் துணை பொது மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை:
அலகாபாத் வங்கி: மொத்த பொது மேலாளர் பதவி 19. பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) ஒருவர்கூட இல்லை. துணை மேலாளர் பதவி 63; பிற்படுத்தப் பட்டோர் (பி.சி.) ஒருவர்கூட இல்லை.
ஆந்திரா வங்கி: மொத்த மேலாளர் பதவி 16இல், பி.சி. ஒருவர்கூட இல்லை. 48 துணை மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூடஇல்லை.
பேங்க் ஆப் பரோடா : 44 மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் ஒருவர் மட்டுமே. 122 துணை மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட் டோர் ஒருவர்.
பேங்க் ஆப் இந்தியா : 37 மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூட இல்லை. 126 துணை மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர் மட்டுமே.
பேங்க் ஆப் மகாராஷ்டிரா : 11 மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூட இல்லை. 36 துணை மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர் கூட இல்லை.
கனரா வங்கி : 42 மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூட இல்லை. 97 துணை மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர் மட்டுமே.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா : 27 மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூட இல்லை. 71 துணை மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர் மட்டுமே.
கார்ப்பரேஷன் பாங்க் : 20 மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூட இல்லை. 61 துணை மேலாளர் பதவிகளில் ஒருவர்கூட பி.சி.இல்லை.
தேனா பேங்க் : 13 மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூட இல்லை. 39 துணை மேலாளர் பதவிகளில் ஒருவர்கூட பி.சி.இல்லை.
இந்தியன் வங்கி : 18 மேலாளர் பதவிகளில் 3 பேர் பி.சி. 56 துணை மேலாளர் பதவிகளில் 8 பேர் பி.சி.
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் : 26 மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூட இல்லை. 71 துணை மேலாளர் பதவிகளில் பி.சி. எவரும் இல்லை.
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் : 21 மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூட இல்லை. 63 துணை மேலாளர் பதவிகளிலும் இதே நிலைதான்.
பஞ்சாப் அன்ட் சிந்து வங்கி : 12 மேலாளர் பதவிகளிலும், 11 துணை மேலாளர் பதவிகளிலும் ஒருவர்கூட பி.சி. இல்லை.
சிண்டிகேட் வங்கி : 25 மேலாளர் பதவிகளிலும், 48 துணை மேலாளர் பதவிகளிலும் ஒருவர் கூட பி.சி. இல்லை.
யூக்கோ வங்கி:21 மேலாளர் பதவிகளிலும், 48 துணை மேலாளர் பதவிகளிலும் ஒருவர்கூட பி.சி. இல்லை.
யூனியன் வங்கி : 29 மேலாளர் பதவிகளில் ஒருவர் பி.சி. 84 துணை மேலாளர் பதவிகளிலும் இரண்டு பேர் மட்டுமே பி.சி.
யுனைட்டெட் வங்கி : 13 மேலாளர் பதவி களிலும், 41 துணை மேலாளர் பதவிகளிலும் ஒருவர்கூட பி.சி. இல்லை.
விஜயா வங்கி : 14 மேலாளர் பதவிகளில் ஒரு பி.சி.யும் இல்லை. 39 துணை மேலாளர் பதவிகளில் 2 பேர் மட்டுமே பி.சி.
மொத்தமுள்ள 450மேலாளர் பதவிகளில் பி.சி. 5 பேர் மட்டுமே. 1255 துணைமேலாளர் பதவிகளில் பி.சி. 16 பேர் மட்டுமே. மேலாளராக 1 புள்ளி 1 சதவீதம். துணைமேலாளர்களாக 1 புள்ளி 2 சதவீதம். இதுவே தேசியமய வங்கிகளின் நிலை.
ஆயுள் காப்பீட்டுக் கழகம் : நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அசூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனங் களில் 43 மேலாளர் பதவிகளில், நேஷனல் இன்சூரன்சில் மட்டும் மேலாளராக ஒரே ஒரு பி.சி. 275 துணை மேலாளர்கள் பதவிகளில் ஓரியன்டல் இன்சூரன்சில் ஒருவரும், யுனைடெட் இன்சூரன்சில் 3 பேர் மட்டும் பி.சி.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் இவை. 27 சதவீத இடஒதுக்கீடு, 24 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் கணக்கைத் தொடங்கக்கூட இல்லை. அத்தனை நிறுவனங்களிலும் பார்ப்பன ஆதிக்கமே கொடி கட்டிப் பறக்கிறது. -ஜி. கருணாநிதி (செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம்), இத் தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜனவரி 1, 2017 வரை இதுதான் நிலை.
24 மத்திய அமைச்சகங்களில் குரூப் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் 17 சதவீதம் பேரும் ‘பி’ பிரிவில் 14 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ‘சி’ பிரிவு ஊழியர்களில் 11 சதவீதம் பேரும், ‘டி’ பிரிவில் 10 சதவீதம் பேரும் பணி யாற்றுகிறார்கள். 24 அமைச்சகங்கள், மொத்தமுள்ள 37 அரசுத்துறைகளில் 24 துறைகள், சட்ட அங்கீகாரம் பெற்ற 8 அமைப்புகள் (பிரதமர் அலுவலகம், குடியரசுத் தவைர் செயலகம், பொருளாதாரம் தொடர்பான அமைப்புகள்) உள்ளிட்ட 54 நிறுவனங்கள், துறைகள் பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றில் குரூப் ‘ஏ’ பிரிவில் 14 சதவீதம். ‘பி’, ‘சி’, ‘டி’ பிரிவுகளில் முறையே 15, 17, 18 சதவீதமும் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
மத்திய அமைச்சரவைக்கான செயலகத்தில் (ஊயbiநேவ ளுநஉசநவயசயைவ) 64 ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில், ஒருவர் கூட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் இல்லை. 60 பேர் திறந்த போட்டியில் வந்தவர்கள் (இவர்கள்பார்ப்பனர், உயர் ஜாதியினர்) பட்டியல் இனப்பிரிவைச் சார்ந்தவர்கள் 4 பேர் மட்டுமே. தகவல் மற்றும் ஒலி/ ஒளி பரப்பு அமைச்சகத்தில் மொத்தமுள்ள 503 ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில் 25 பேர் மட்டுமே பிற்படுத்தப் பட்டவர்கள்.
2015ஆம் ஆண்டில் இதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 12 அமைச்சகங்கள் 10அரசுத் துறைகள், மற்றும் சட்ட அங்கீகாரமுள்ள நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்களின் எண்ணிக்கை ‘ஏ’ பிரிவில் 10.71 சதவீதம், ‘பி’ பிரிவில் 7-18 சதவீதம்.
2013ஆம் ஆண்டு பெறப்பட்ட தகவலின்படி 55 மத்திய அரசின் கீழ் உள்ள அமைப்புகளில் பிற்படுத் தப்பட்டோர் எண்ணிக்கை 9.43 சதவீதம் மட்டுமே.
சென்னையைச் சார்ந்த சமூக செயல்பாட்டாளர் முனைவர் ஈ. முரளிதரன், இந்த தகவல்களைப் பெற்றுள்ளார்.
மத்திய அரசுப் பணிகளில் 31 இலட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், இப்போது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நாம் பெற்றிருக்கும் தகவல் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 735 ஊழியர்களைப் பற்றி மட்டுமே.
ஜாதி சங்கம் வைத்துக் கொண்டு ஜாதிப் பெருமை பேசும் தலைவர்கள் இதற்கெல்லாம் போராட மாட்டார்களா? ட
நிமிர்வோம் டிசம்பர் 2017 இதழ்