Author: admin

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் சட்ட விரோதமாக ஆயுத பூஜை கொண்டாடுவதைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட தி.வி.க. கண்டன ஆர்ப்பாட்டம் 26.09.2017 புதன் மாலை 5 மணியளவில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, தோழர்களை  கைது செய்து சத்திரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில்  15 தோழர்கள் கலந்துகொண்டனர். கைதான தோழர்கள் : ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), சண்முகப்பிரியன் (மாவட்ட செயலாளர்), குமார் (மாவட்ட அமைப்பாளர்), திருமுருகன் (மாநகரத் தலைவர்), சத்தியராஜ் சித்தோடு, கிருஷ்ணன் ரங்கம்பாளையம், எழிலன் சித்தோடு. பெரியார் முழக்கம் 05102017 இதழ்

கோவை, திருப்பூரில் கொடியேற்று விழா, தெருமுனை, பொதுக் கூட்டங்கள்

கோவை, திருப்பூரில் கொடியேற்று விழா, தெருமுனை, பொதுக் கூட்டங்கள்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் படத்திறப்பு- கொடியேற்று விழா, தெருமுனைக் கூட்டங்கள் – பொதுக் கூட்டங்கள்  நடைபெற்றது. இழந்த உரிமைகளை மீட்போம், தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் என்ற திருச்செங்கோடு மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில் செப்-16, சனி காலை 10 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தொடங்கி கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக கோவை வரை இரண்டு நாள் பரப்புரை பயணம் எழுச்சியோடு நடைபெற்றது. செப்-16 காலை 10 மணிக்கு திருப்பூர் மாவட்டம் காரைத் தெழுவில் தொடங்கி கடத்தூர், கடத்தூர்புத்தூர், கணியூர் ஆகிய இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. கணியூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தோழர்கள் கோவை கிருஷ்ணன், சங்கீதா, யாழ் மொழி, யாழ் இசை ஆகியோர் பகுத்தறிவு பாடல்கள் பாடினர். தொடர்ந்து, தோழர் முகில் ராசு உரையாற்றினார். இறுதி யில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். மடத்துக்குளம் பகுதியில் சோழன் மாதேவி, மடத்துக்குளம் பெரியவட்டாரம் ஆகிய இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. ...

தபோல்கரிலிருந்து கவுரி இராவணன் வரை… தொடரும் ‘ராமலீலா’க்கள்

ஆண்டுதோறும் விஜயதசமி யன்று புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் ‘இராவணன்’, ‘மேகநாதன்’, ‘கும்பகர்ணன்’ – என்று இராமாயணத்தில் ‘அசுரர்’களாக சித்தரிக்கப்படும் திராவிடர்களை வடநாட்டுக்காரர்கள் எரித்து ‘ராமலீலா’ கொண்டாடுகிறார்கள். இந்தியாவின் ‘பிரதமர், குடியரசுத் தலைவர்’கள் எல்லாம் இந்த ‘எரிப்பு’ விழாவில் பங்கெடுப்பது வாடிக்கை. பெரியார் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவரான அன்னை மணியம்மையார் இதை எதிர்த்து 1974 டிசம்பர் 25இல் இராமன், சீதை, இலட்சுமணன் உருவப் படங்களை எரிக்கும் ‘இராவண லீலா’வை நடத்தினார். 1995இல் பெரியார் திராவிடர் கழகம் உருவான பிறகு 1996, 1997ஆம் ஆண்டுகளில் இதேபோல் இராவண லீலாவை நடத்தியது. இப்போது உ.பி. மாநிலத்தைச் சார்ந்த ஓம்வீர் சரஸ்வத் என்ற வழக்கறிஞர் ‘இராவணன் உருவ  பொம்மைகளை எரிக்கக் கூடாது’ என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக ‘தினமணி’ நாளேடு (செப்.27) ஒரு செய்தி வெளியிட் டுள்ளது. அதில், “இராவணனை எரிப்பது அவனை தெய்வமாக வணங்கி வரும் சமூகத்தினரை இழிவுப்படுத்துகிறது. மத்திய பிரதேச...

பெண் போராளிகள் – ஒரே மேடையில் ஜாதி ஒழிப்புக்கு போர் முரசு கொட்டுகிறார்கள்

ஜெயராணி – திவ்ய பாரதி – உடுமலை கவுல்யா – வளர்மதி – சிவகாமி – இரோன் சர்மிளா எழுத்துப் பேராளிகள்; களப் போராளிகள்; சுய ஜாதி எதிர்ப்புப் போராளிகள்; இராணுவ ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராளிகள் – இவர்கள் அனைவருமே பெண் போராளிகள். “பெண்கள் வருவதன் மூலமும் அவர்கள் வளர்ச்சி பெருகுவதன் மூலமும் தான் நமது கொள்கைகள் வீறிட்டெழ முடியுமே தவிர, “ஆண்களின் வீர உரைகளால் மாத்திரம்” காரியங்கள் சாத்தியமாகி விடாது”. –  இது 1931இல் ஈரோடு சுயமரியாதை மாநாட்டுக்கு பெரியார் விடுத்த அழைப்பு. பெரியார் அன்று தந்த அழைப்பை ஏற்று, இதோ, களம் நோக்கி வருகிறார்கள், பெண்கள். ஜாதி ஒழிப்புக் களம் கூர்மை பெறுகிறது; இயக்கங்கள், அமைப்புகள், தோழர்கள் அனைவரும் ஓரணியாய் திரளுவோம்! பெண்களை கட்டாயம் அழைத்து வாருங்கள்! அக். 7 – மாலை 5.00 மணிக்கு சென்னை பெரம்பூர் பாரதி திடல் நோக்கி திரளுவீர்! பெரியார் முழக்கம் 05102017...

உச்சநீதிமன்றத்தின் இரட்டை அணுகுமுறை ‘சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி கருத்துரிமையைப் பறிக்க முடியாது’-முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் பேச்சு

பேரறிவாளனை விடுதலை செய்க! பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி அரி பரந்தாமன் தனது உரையில் வலியுறுத்தினார். காந்தி கொலையில் ஆயுள் தண்டனைக்கு உள்ளான கோபால் கோட்சேயை 15 வருடங்களில் விடுதலை செய்யும்போது பேரறிவாளனை 26 வருடங்களுக்குப் பிறகும் விடுதலை செய்ய மறுப்பது என்ன நியாயம்? என்று கேட்டார் நீதிபதி அரி பரந்தாமன். ‘சட்டம் ஒழுங்கும் பொது ஒழுங்கும் வெவ்வேறானது’ என்று கூறிய முன்னாள் நீதிபதி அரி. பரந்தாமன், ‘சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி கருத்துரிமையைப் பறிப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது’ என்றார். மயிலாப்பூரில் செப்.26 அன்று நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, சுயமரியாதை கால்பந்து கழக சார்பில் நடத்திய கால் பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் ஆற்றிய உரை: “நீட் தேர்வு – அனிதாவை எப்படி சாகடித்தது...

தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கம் ! ஈரோடு 18102017

ஆதித்தமிழர் பேரவை சார்பில்…. கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை இயக்கத்தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். தலைமை : தோழர் அதியமான், நிறுவனத்தலைவர்,ஆதித்தமிழர் பேரவை. நாள் : 18.10.2017 புதன்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி. இடம் : மாநகராட்சி மண்டபம், ஈரோடு பேருந்து நிலையம் அருகில்.

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக  தோழர்களை சந்திக்கிறார்கள் !

தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாவட்ட வாரியாக கழகத் தோழர்களை கீழ்க்கண்டபயணத் திட்டப்படி சந்திக்கிறார்கள். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’,‘நிமிர்வோம்’ சந்தா திரட்டுதல், நிமிர்வோம்’ வாசகர் அமைத்தல், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல் குறித்து கழகத் தோழர்களிடம் கலந்து பேசுகிறார்கள். சுற்றுப் பயண விவரம் : 26.10.2017 – காலை 10.00 – ஈரோடு வடக்கு – ஈரோடு மாலை 5.00 – ஈரோடு தெற்கு – கோபி 27.10.2017 – காலை 10.00 – சேலம் மேற்கு – மேட்டூர். மாலை 5.00 – கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி. 28.10.2017 – காலை 10.00 – தருமபுரி – தருமபுரி. மாலை 5.00 – சேலம் கிழக்கு – சேலம். 29.10.2017 – காலை 10.00 -நாமக்கல்-திருச்செங்கோடு. மாலை 5.00 – திருப்பூர்...

தன்னை பற்றி பெரியார்

தந்தைபெரியார் தன்னை யார் என்பதை எப்படி சொல்லியிருக்கிறார் என்பதை படியுங்கள் இவ்வுலகில் உள்ள உயிர் உள்ள பிராணிகளைப் போல நானும் ஒரு பிராணியே! அவைகளை எப்படி நாய் என்றும் ,குதிரை என்றும் ,கழுதை என்றும் பெயரிட்டு இருக்கிறார்களோ ,அதே போல எனக்கு மனிதன் என்று பெயரிட்டு இருக்கிறார்கள் அதனால் தன்னையும் ஒரு உயிருள்ள பிராணியாகவே அறிவித்துக்கொண்டார் ஆனால் அந்த நாய் ,குதிரை ,கழுதை இவைகளுக்கு சாதி கிடையாது ,மதம் கிடையாது ,நாடு கிடையாது எங்கிருந்தாலும் அவைகள் நாய் ,கழுதை , குதிரை தான் ஆனால் மனிதனுக்கு மட்டும் சாதி ,மதம் ,இனம் ,நாடு என்று பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் அதனால்தான் நான் ஒரு நாட்டுக்காரனோ ,ஒரு இனத்துக்காரனோ ,ஒரு மதத்துக்காரனோ ,ஒரு சாதிக்காரனோ, ஒரு மொழிக்காரனோ கிடையாது உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு மனித இனத்தை சார்ந்தவர்களே என்கிற அடிப்படையில் வாழ்ந்து வருகின்றவன் ஆனால் ஒருநாடு இன்னொரு நாட்டின்மீது...

ஏன் துணி விலை உயர்ந்து விட்டது – பெரியார் மீதான அவதூறு

ஏன் துணி விலை உயர்ந்து விட்டது என்று பெரியாரிடம் கேட்டார்களாம்.. அதற்கு பெரியார் பறைச்சி, பள்ளச்சியெல்லாம் ஜாக்கெட் போட ஆரம்பிச்சுட்டாங்க அதான் துணி விலை உயர்ந்து விட்டதுனு சொன்னாராம்.. அந்த செய்தி 12.06.53 அன்று வெளியான விடுதலை நாளிதழில் வெளிவந்த மாதிரி ஒரு போட்டோஷாப் பன்னிவச்சுக்கிட்டு பெரியார் மீது சேற்றை வாரிஇறைப்பவர்களுக்கு 12.06.53 அன்று வெளியான விடுதலை நாளேட்டின் நாலு பக்க செய்தி தாளும் இங்கிருக்கு… நீங்கள் குறிப்பிடுவது போல் விடுதலையில் அந்த செய்தி எங்க இருக்குனு சொல்லுங்க பாக்கலாம்…  

தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழா சித்தோடு 01102017

ஈரோடு தெற்கு மாவட்டம், சித்தோடு கிளை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 01.10.2017 மாலை 6 மணிக்கு சித்தோடு சாணார்பாளையத்தில் தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழா மிக எழுச்சியாடு நடைபெற்றது.    இக்கூட்டம் தோழர் பிரபாகரன் தலைமையில், தோழர் யாழ் எழிலன் முன்னிலையில் நடைபெற்றது. காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே நிகழ்வைத் தொடர்ந்து சித்தோடு முருகேசன் பகுத்தறிவு பாடல்கள் பாடினார். இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் கமலக் கண்ணன் நன்றியுரை கூறினார்.   கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள்;   சித்தோடு தோழர்கள்  பிரபு, கதிர், நடராஜன், சத்தியராஜ், ராஜேஷ், சவுந்தர், ஆசீர்வாதம், ரங்கம்பாளையம் விஜயரத்தினம், கிருஷ்ணன், மணி மேகலை, மகிழன், மதி , காவலாண்டியூர் சந்தோஷ், சதீஸ், ரமேஸ்,  மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியன், கோபி தியாகு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.            ...

விழுப்புரத்தில் ”தமிழர் உரிமை மீட்பு மாநாடு” 05102017

விழுப்புரத்தில் ”தமிழர் உரிமை மீட்பு மாநாடு” விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு.. நாள் : 05.10.2017 வியாழக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : நயனார்பாளையம்,தந்தை பெரியார் பள்ளி முன்பு. சிறப்புரை ; தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றவர்கள் கைது சென்னை 02102017

காந்தி தேசத்தந்தை என்று இந்திய அரசு அறிவித்தாலும் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியின் காவல்துறைக்கு காந்தி ஒரு பயங்கரவாதி ஆகிவிட்டார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு – காந்தியைக் கொன்ற மதவெறி சக்திகளை எதிர்த்து முழக்கமிட்டு, மாலையிட வந்த இளைஞர்களை காவல்துறை தடுத்து கைது செய்து விட்டது. “தேசத்தந்தைக்கு இதை விட வேறு சிறந்த மரியாதையை எப்படி காட்ட முடியும்?” நாட்டின் “சுதந்திர” த்திற்கு பிறகு காந்தி சிலைக்கு அவர் பிறந்தநாளில் மாலை அணிவிக்க தடைவிதித்த ஒரே மாநிலம் “தமிழ்நாடு” என்ற கின்னஸ் சாதனையை தமிழக காவல்துறை உருவாக்கியிருக்கிறது. இப்படி ‘தேசபக்தியுடன்’ முடிவெடுத்த காவல்துறையினருக்கு ‘சுதந்திரதின’ விழாவிலோ, ‘குடியரசு தின’ விழாவிலோ சிறந்த சேவைக்கான வீர விருதை வழங்கி இந்தியாவின் தேசபக்தியை உலகத்துக்குக் காட்டிக் கொள்ளலாம். “காந்திக்கு ஜே” காந்தியை அவமதித்த தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் டபுள் “ஜே”

RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி காவல் ஆனையாளரிடம் புகார் மதுரை 04102017

RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி காவல் ஆனையாளரிடம் புகார் மதுரையில் மதவெறி RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி தமிழ் புலிகள் கட்சி ஆதித்தமிழர் பேரவை ஆதித்தமிழர் கட்சி தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளந்தமிழகம் புரட்சிகர இளைஞர் கழகம் சிபிஎம்எல் உள்ளிட்ட அமைப்பு தோழர்களை திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்து மதுரை மாவட்ட ஆனையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது

நெமிலியில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்.

நெமிலியில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம். நாள் : O8.10.2017 ஞாயிற்றுக்கிழமை நேரம். : மாலை 5.00 மணி. இடம்: மரக்கன்று நடுதல் – கோடம்பாக்கம். பொதுக் கூட்டம் : நேரம் : மாலை 6.00 மணி. இடம்: தோழர் க.முனியாண்டி நினைவு மேடை – நெமிலி பேருந்து நிலையம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். வே.மதிமாறன், எழுத்தாளர் கும்மிடிப்பூண்டி மனோகரனின் அம்பேக்கர் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெறும்.

விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் சங்பரிவாரங்களின் சவாலை முறியடிக்க சூளுரைப்போம்

விருதுநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ‘விருதுநகர் சுயமரியாதை மாநாடு’ 23.9.2017 அன்று மாலை விருதுநகர் விஸ்வேஸ்வரர் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டின் வரலாற்றை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இம்மாநாடு. மாநாட்டையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வரலாற்றுப் பதிவுகள் பேரறிஞர் அண்ணா சிலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்த வரலாற்றுச் சுவடுகள் கண்காட்சியை திறந்து வைத்தார். அங்கிருந்து பறை இசை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு மாநாட்டு அரங்கிற்கு தோழர்கள் வந்து சேர்ந்தனர். டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் நினைவரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் அல்லம்பட்டி நாத்திகபாண்டி முன்னிலை வகித்தார். தோழர்கள் டார்வின்தாசன் (திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), இரா உமாபதி (சென்னை...

சுயமரியாதை வரலாற்றுச் சுவடுகளின் கண்காட்சி

சுயமரியாதை வரலாற்றுச் சுவடுகளின் கண்காட்சி

விருதுநகர் மாவட்டத்தில் பெரியார் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள் தேதி வாரியாக வரலாற்றுச் சுவடுகள் கண்காட்சி யில் வைக்கப்பட்டிருந்தன. விருதுநகர் அண்ணா சிலை சதுக்கத்தில் நிறுவப்பட்டிருந்தது இந்த கண்காட்சி. சுயமரியாதைச் சுடர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்களால் 1974ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது இந்த அண்ணா சிலை. சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். விருதுநகரில் பெரியார் பங்கேற்ற நிகழ்வுகளின் பதிவுகளை மா. பாரத் (தி.மு.க. மாணவரணி), அல்லம்பட்டி நாத்திக பாண்டி (மாவட்ட கழகத் தலைவர்) திறந்து வைத்தனர். சாத்தூரில் பெரியார் பங்கேற்ற நிகழ்வுகளின் வரலாற்றுப் பதிவை செல்வம் (தி.மு.க.), அருப்புக்கோட்டை பதிவுகளை இரத்தினசாமி (கழக அமைப்புச் செயலாளர்), கவிஞர் கண்மணி ராசா (தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றம்), ஃபிரண்ட்ஸ் செராக்ஸ் மோகன் (தி.வி.க. ஆதரவாளர்), சிவகாசி நகரில்பெரியார் நிகழ்வுகளின் பதிவுகளை மா.பா. மணிகண்டன் (மதுரை மாவட்ட கழக செயலாளர்), திருவில்லிபுத்தூர் வரலாற்றில் பதிவுகளை திருப்பூர் கழகத் தோழர்கள் முத்துலட்சுமி, ராஜபாளையம் பதிவுகளை...

‘குடிஅரசு’ வெளியிட்ட செய்திகள் 1931 – விருதுநகர் சுயமரியாதை மாநாடும் தீர்மானங்களும்

ஈரோட்டில் 1931ஆம் ஆண்டு விருதுநகர் 3ஆவது சுயமரியாதை மாநாடு ஜூன் 8, 9 தேதிகளில் நடந்தது. மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக டபிள்யூ.பி.ஏ. சவுந்திரபாண்டியன் மாநாட்டுக்கு முழு பொறுப்பு ஏற்று நடத்தினார். மாநாட்டுக்கு பொருளாதார மேதையும் சுயமரியாதைக்காரருமான ஆர்.கே. சண்முகம் தலைமை தாங்கினார். இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாடும், மூன்றாவது சுயமரியாதை , வாலிபர் மாநாடும் இதே மாநாட்டில் நடந்தன. மாநாடு குறித்து ‘குடிஅரசு’ விரிவாக செய்திகளை பதிவு செய்திருக்கிறது. ஊர்வலத்தில் 15,000 பேர் பங்கேற்றனர். மாநாட்டில் 5000 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பெண்கள் மாநாட்டில் 3000 பெண்களும், வாலிபர் மாநாட்டில் 2000 வாலிபர்களும் பங்கேற்றனர். இரண்டு யானைகள் ஊர்வலத்தில் வந்தன. 6 குதிரைகள் பூட்டிய ரதத்தில் தலைவர்கள் ஊர்வலமாக வந்தனர். பெரிய மைதானத்தில் 5 ஏக்கர் சுற்றளவில் அடைப்பு தட்டிகள் போட்டு மாநாட்டு பந்தல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடைகளும் கட்டப்பட்டிருந்தன. மாநாட்டு பந்தலில் 200 கம்பங்களில் சுயமரியாதை கொள்கைகள், புராண மரியாதைக்...

தடி உயர்த்தித் தட்டிக் கேட்க பெரியார் நிச்சயம் வேண்டும்! பால பாரதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தொலைக்காட்சி பேட்டி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பற்றி கூறும்போது அந்த ‘பொம்பள’ய நான் பார்த்ததே இல்லை என்று கூறினார். இதற்கு பதிலளித்து ‘தமிழ் இந்து’ நாளேட்டின் பெண்கள் மலரில் (செப்.17) பாலபாரதி எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அவரது உயிரைப் பறித்த நீட்டை ரத்து செய்யக்கோரிய மாணவர்களின் போராட்டம் தமிழகமெங்கும் வியாபிக்கத் தொடங்கியது. அதைத் திசை திருப்பும் நோக்கோடு நீட்டை ஆதரித்தும் அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் ஊடகங்கள் வழியாக விவாதங்கள் நிகழ்ந்து கொண் டிருந்தன. அதிலும் குறிப்பாக அனிதா நீட் தேர்வில் தோற்றுவிட்டதால் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தகுதி யில்லையென்றும் நீதிமன்றத்தின் வழியாக அனிதாவின் உரிமையைப் பெற உதவ முன் வந்தவர்கள்தான் அவரது மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று டாக்டர் கிருஷ்ண சாமி போன்ற தலைவர்கள் பிரச்சாரத்தை நடத்தியதும்...

பெரியார் சிலை முன் நடந்த சுயமரியாதை திருமணம்

செப்.17 தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் விழா அன்று கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு அளுக்குளி சேர்ந்த விஜய சாரதிக்கும் கொளப்பலூர் பகுதியைச் சார்ந்த அபிராமிக்கும், சாதி மறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் வாழ்க்கை துணைநல ஒப்பந்தத்தை வாசிக்க மணமக்கள் இருவரும் அவ்வுறுதி மொழியை ஏற்றுக்கொண்ட பின் மாலை மாற்றிக் கொண்டனர். எளிமையாக நடந்த திருமணத்தை அப்பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக வியப்புடன் பார்த்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளை அளுக்குளி கிளைக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். பெரியார் முழக்கம் 28092017 இதழ்

மேட்டூரில் வாகனப் பேரணி, பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா செப்.17 அன்று சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்டம் முழுவதும் கொடியேற்று விழா- இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. காலையில் சமத்துவபுரத்தில் தோழர்கள் ஒன்று கூடினர். பறை முழக்கம் இசைக்கப்பட்டது. அனிதா, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில தலைமைக் குழு உறுப்பினர் அ. சக்திவேல் உரைக்குப் பின், மல்லிகுந்தம், ஜீவா நகரில் சந்திரா கழகக் கொடி யேற்றினார். மல்லிகுந்தம் பேருந்து நிலையத்தில் தேன்மொழி கழகக் கொடி ஏற்றினார். சக்திவேல் உரைக்குப் பின் மேச்சேரி பேருந்து நிலையத்தில் அன்புக்கரசி கழகக் கொடியை ஏற்றினார். மேச்சேரியிலுள்ள அன்னை தெரசா கருணை இல்லத்திற்கு கோ. தமிழ் இளஞ்செழியன் ரூ.2000 நன்கொடை வழங்கினார். குழந்தைகள் அனைவரும் கழகத்திற்கு நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியாக இருந்தது. கே.ஆர்.வி. ஸ்பின்னிங் மில் பகுதியில் யசோதாவும், பனங்காடு பகுதியில் மாதம்மாளும் கழகக் கொடி ஏற்றினர். நங்கவள்ளி இராஜேந்திரன், ‘சுடர் மின்கல பணி மையம்’...

நெல்லையில் தேவேந்திர குல வேளாளர் மாநாடு

நெல்லையில் தேவேந்திர குல வேளாளர் மாநாடு

“இடஒதுக்கீடு எங்கள் உரிமை: அதை இழக்க முடியாது” தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ் மாநிலக் குழுவின் ஏற்பாட்டில் ‘தேவேந்திர குல வேளாளர் சமூக உரிமைப் பாதுகாப்பு மாநாடு” 24.9.2017 ஞாயிறு மாலை 6 மணியளவில் திருநெல்வேலி வானவில் திருமண மண்டபத்தில் எழுச்சியுடன் நடந்தது. ‘தேவேந்திர குல வேளாளர்’ எஸ்.சி. இடஒதுக்கீடு பட்டியலில் இடம் பெற்றிருப்பது இழிவு என்று பேசி வரும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இடஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்று கூறி பட்டியலிலிருந்து வெளியேற வேண்டும் என்று பேசி வருகிறார். இதற்கு எதிராக தேவேந்திரகுல வேளாளர்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டு, மாநாட்டின் வழியாக டாக்டர் கிருஷ்ணசாமிக்கு  கண்டனத்தைத் தெரிவித்ததோடு, இடஒதுக்கீடு போராடிப் பெற்ற உரிமை, அதை இழக்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர். மாநாட்டுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.கிருஷ்ணன்...

முதல்வர் திறந்து வைத்த கட்டிடத்திற்கு ‘கணபதி ஹோமம்’ :  கழகம் நடவடிக்கை

முதல்வர் திறந்து வைத்த கட்டிடத்திற்கு ‘கணபதி ஹோமம்’ : கழகம் நடவடிக்கை

கோபி வட்டம் நம்பியூர் ஒன்றியம் பட்டிமணியக்காரன் பாளையம் பகுதியில் உள்ள மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை, கடந்த மாதம் தமிழக முதல்வர் ஈரோடு வந்த போது, காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். திறப்பு விழா நடந்த பிறகும் அப்பள்ளியைத் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், கணபதி ஹோமம் நடத்திய பிறகுதான் திறக்கப்படும் என்று அப்பள்ளி தலைமையாசிரியை மங்கையர்க்கரசி அறிவித்துள்ளார். எனவே, முதலைமைச்சர் திறந்து வைத்த பிறகும் கூட, கணபதி ஹோமம் நடத்த முயற்சிக்கும் செயலை தடுத்து நிறுத்தக் கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போதே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்த ஆட்சியர் இச்செயலை தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளார். நிகழ்வில், இரத்தினசாமி, இராம. இளங்கோவன், சண்முகப்பிரியன், சிவக்குமார், வேணுகோபால், குமார்,  சத்தியராசு, சி.என்.சி  சிவக்குமார்,  விஜயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் பெரியார் முழக்கம் 28092017 இதழ்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? நிறுத்தக் கோரி மனு

அரசு அலுவலகங் களில் ஆயுத பூஜை கொண்டாடுவது அரசு ஆணைக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டி ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது.  அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல் நிலையங்களிலும் ‘சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்’ கொண்டாடப் படுகின்றன. இத்தகைய விழாக்களை அனுமதிக்கக் கூடாது என்று மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இரத்தினசாமி (மாநில அமைப்புச் செயலாளர்), இராம. இளங்கோவன் (வெளியீட்டுச்செயலாளர்), ஆசிரியர் சிவக்குமார், சண்முகப்பிரியன் (தெற்கு மாவட்டச் செயலாளர்), வேணுகோபால் (வடக்கு மாவட்டச் செயலாளர்), தோழர்கள் சத்தியராசு, கோபி விஜயசங்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர். பெரியார் முழக்கம் 28092017 இதழ்

பெரியார் பெருந்தொண்டர்  சோமசுந்தரம் முடிவெய்தினார்

பெரியார் பெருந்தொண்டர் சோமசுந்தரம் முடிவெய்தினார்

பெரியார் பெருந்தொண்டர் சோமசுந்தரம் (பொள்ளாச்சி) 8.9.2017 முடிவெய்தினார். இவர் நீண்ட காலம் பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் இயக்கத்தில் பணியாற்றியவர். பொள்ளாச்சி தலைமை அஞ்சலகத்தில் உதவி அஞ்சல் அலுவலராகவும் அஞ்சல் பணியாளர் சங்கத்தில் பொருளாளராகவும் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் வாசகராகவும் ஆதரவாளராகவும் இருந்தவர். தோழர் சோமசுந்தரம், அஞ்சல் துறையில் அவருடைய பணிகாலத்தில் பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் பெரியாருக்கு ஒரு பாராட்டு விழாவும் பெரியாரின் உருவப்பட திறப்பு விழாவும் இவருடைய பெரு முயற்சியால் தந்தி அலுவலகத்தில் நடந்தது. நெருக்கடி நிலை பிரகடனத்தின்போதும் அது அமுலில் இருந்த காலத்திலும் அறிஞர் அண்ணாவின் பாணியில் உடை அணிந்து கொள்வதிலும், ‘விடுதலை’ நாளிதழை அலுவலகத்திற்குக் கொண்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது அஞ்சாமையை காட்டியவர். வலுவான திராவிட இயக்கப் பற்றுக் கொண்டவர். பெரியார் முழக்கம் 28092017 இதழ்

அரசு அலுவலகங்களில் மதப் பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்று மனூ – திருச்செங்கோடு 28092017

அரசு அலுவலகங்களில் மதப் பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 28092017  நாமக்கல் மாவட்டம் சார்பாக, திருச்செங்கோடு நகர காவல் நிலையம், ஊரக காவல் நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் மணு அளிக்கப்பட்டது  

தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழக்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை திருச்சி 24092017

24-9-2017, ஞாயிறு, காலை 10-00 மணியளவில் திருச்சி, செய்ண்ட் ஜோசப் கல்லூரி நூலக அரங்கில், சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்துவரும் தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழ்க்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை நடைபெற்றது. இதனை தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளில் முனைப்பாகத் தலையிட்டு உரிய நீதி பெறுவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நிவாரணம், ஈடுசெய்நீதி ஆகியவற்றுக்காகவும் ஈடு இணையற்றப் பணியாற்றிவரும் எவிடன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. எவிடன்ஸ் முத்து வரவேற்புரையைத் தொடர்ந்து, எவிடன்ஸ் செயல் இயக்குநர் கதிர் பொது விசாரணையின் நோக்கம் குறித்தும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 தலித்துகள் கொலையானதையும் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தலித் செயல்பாட்டாளர்கள் 25 பேர் கொலையுண்டுள்ளதையும் குறிப்பிட்டு உரையாற்றினார். மேலும் வன்கொடுமைத் திருத்தச் சட்டம் குறித்தும்,  அவற்றைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணம், மாதாந்திர குடும்ப உதவிநிதி பெற்றுள்ளது குறித்தும், பாதிக்கப் பட்ட தரப்பினர்...

அரசு அலுவலகங்களில் சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு 26092017

அரசு அலுவலகங்களில் சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடுவதை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட திவிக கண்டன ஆர்ப்பாட்டம் 26.09.2017 புதன் மாலை 5 மணியளவில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, தோழர்களை  கைதுசெய்து சத்திரம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில்  15 தோழர்கள் கலந்துகொண்டனர்.. கைதான தோழர்கள் ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) சண்முகப்பிரியன் (மாவட்ட செயலாளர்) குமார் (மாவட்ட அமைப்பாளர்) திருமுருகன் (மாநகரத் தலைவர்) சத்தியராஜ் சித்தோடு கிருஷ்ணன் ரங்கம்பாளையம் எழிலன் சித்தோடு.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட தடை செய்ய வலியுறுத்தி கண்டன் ஆர்ப்பாட்டம் மேட்டூர் 27092017

27.09.2017 அன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் மத்திய மாநில அரசுகளின் நவோதயா பள்ளி திட்டம் அரசு பள்ளிகளில் யோகா வகுப்பு அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை இவைகளை  தடைசெய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தோழர். சூரியகுமார்  தலைமை உரைக்குப் பின் தோழர் சி. கோவிந்தராஜ் தலைமை செயற்குழு உறுப்பின் தோழர் அ.சக்திவேல், தோழர் இரண்யா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் , இந்நிகழ்வில் மேட்டூர் ,ஆர் எஸ் , கேவேரி கிராஸ் , நங்கவள்ளி, கொளத்தூர், தார்க்காடு, காவலாண்டியூர் தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரனி அமைப்பாளர் தோழர் சு.குமரப்பா நன்றி உரை நிகழ்த்தினார்.

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ! கோவை, குமரி, திருப்பூர் மாவட்டங்களில் கழகம் களமிறங்கியது

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ! அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் “சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்” கொண்டாடப் படுகின்றன. சட்டவிரோத இந்த பூஜையை தடுத்து நிறுத்தக்கோரி,  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பல்வேறு மாவட்டங்களிம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படுகிறது கோவை 26092017 காலை மாவட்ட ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் வைக்க கூடாது.சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை போன்ற மதப்பண்டிகைகள் கொண்டாடக்கூடாது என்ற அரசு ஆணைகளை நடைமுறைப்படுத்தகோரி மனு வழங்கப்பட்டது.. குறிப்பு: அரசு ஆணையை மீறும் காவல் நிலையங்கள் மீது வழக்கு போடப்படும் என்ற எச்சரிக்கையோடு...

சுயமரியாதை கால்பந்து கழகத்தின் 5ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி 24092017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலை பகுதி நடத்தும்… #சுயமரியாதை_கால்பந்து_கழகத்தின் 5ஆம் ஆண்டு கால் பந்து போட்டி குருவிளையாட்டுத்திடல் மயிலாப்பூர் பகுதியில் 24.09.2017 காலை 8 மணியளவில் நடைபெற்றது. போட்டி துவக்கி வைக்க வந்த மயிலை த. வேலு (மயிலை கிழக்கு பகுதி செயலாளர், திமுக) அவர்களுக்கு தோழர்.மாணிக்கம் மற்றும் தோழர்.சி.பிரவீன் சால்வை அணிவித்து வரவேற்றனர். கால்பந்து போட்டியை மயிலை த.வேலு அவர்கள் இந்த கால்பந்து போட்டியை ஒருங்கிணைத்த மயிலை பகுதி தோழர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை துவக்கி வைத்தார். இந்த கால்பந்து போட்டியில் பல்வேறு பகுதியிலிருந்து 16 அணிகள் பங்கேற்றனர். இந்த கால்பந்து போட்டியில் AVP பிராட்வே அணி வெற்றி பெற்றது. இரண்டாவது அணியாக MKFC அணி வந்தது. இந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வரும் 26.09.2017 அன்று நடைபெறவுள்ள செரின் மேரீஸ் பாலம், மந்தவெளி இரயில் நிலையம் அருகில் தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும் என்று...

தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை 26092017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டத்தின் மயிலை பகுதி சார்பாக 26092017 மாலை 6 மணிக்கு தோழர்.பிரவீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தின் மேடை வடிவமான தந்தை பெரியாரின் இல்லத்தினை மேடை வடிவமாகவும் தோழர்.மாணவி அனிதா அவர்களின் நினைவரங்கமாகவும், எழுத்தாளர் தோழர்.கவுரி லங்கேஷ் அவர்களின் நினைவரங்கமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தை தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் ஒருங்கிணைத்தார். பொதுக்கூட்டத்தின் தொடக்கமாக #விரட்டு கலைக்குழுவின் பாடல்களுடனும், பறையிசை முழக்கத்தோடு பொதுக்கூட்டமான ஆரம்பமானது. அதை தொடர்ந்து தோழர்.அன்புதனசேகரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) அவர்கள் பொதுக்கூட்டத்தினை பற்றி சிறப்பாக கருத்துரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக #விரட்டு கலைக் குழுவின் உணர்ச்சிகரமான பாடல்களாலும், நாடகத்தாலும் பொது மக்களிடையே கருத்துகளை கூறினார். இந்த நாடகவடிவிலான கருத்துகளுக்கு பொதுமக்களிடையே உணர்ச்சிவனமான ஒரு நிகழ்வாக மாறியது… இந்த பொதுக்கூட்டத்தில் தோழர்.பார்த்திபன் (அடக்குமுறை கூட்டமைப்பு) அவர்கள் புரட்சிகரமான பாடல் ஒன்றை பாடினார். அதை தொடர்ந்து, கடந்த 24.09.2017 அன்று நடைபெற்ற 5ஆம் ஆண்டு சுயமரியாதை...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா இரு சக்கர வாகன ஊர்வலம் / கொடியேற்றம் 02102017 திருப்பூர்

தந்தை பெரியார் 139வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் வாகன பேரணி மற்றும் கொடியேற்று விழா 02102017 காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடியசைத்து பெரியார் சிலை முன்பு துவக்கி வைக்கிறார்.

ஈரோடு தெற்கு – சித்தோடு தெருமுனைக்கூட்டம் 01102017

ஈரோடு தெற்கு – சித்தோடு தெருமுனைக்கூட்டம் 01102017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வருகின்ற 01.10.2017 ஞாயிறு மாலை 7 மணிக்கு சித்தோடு சாணார்பாளையத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தலைமை : கிருஷ்ண மூர்த்தி(ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர்) சிறப்புரை: வீரா கார்த்தி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) கோபி வேலுச்சாமி (தலைமைக் கழக பேச்சாளர்) காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே எனும் மேஜிக் நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது..

தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் வாகன பேரணி / கொடியேற்றம் திருப்பூர் 02102017

தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் வாகன பேரணி / கொடியேற்றம் திருப்பூர் 02102017

திருப்பூர் மாவட்டம் மாநகரம் சார்பாக தந்தை பெரியாரின் பிறந்த நாள் கொடியேற்று விழா மற்றும் இரு சக்கர வாகனப் பேரணி நடத்துவது சம்மந்தமாக 24092017 அன்று வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் கலந்துரையாடல் நடந்தது. அதில் 02.10.2017 அன்று நடத்த முடிவு செய்து விழா ஏற்பாடுகளை கவனிக்க முடிவெடுக்கப் பட்டது.

கழகம் களமிறங்கியது – அரசு பள்ளியில் கணபதி ஹோமம் – ஈரோடு 25092017

முதல்வர் திறந்து வைத்த கட்டிடத்திற்கு “கணபதி ஹோமம்” .. திராவிடர் விடுதலைக் கழகம் கண்டிப்பு.. கோபி வட்டம் நம்பியூர் ஒன்றியம் பட்டிமணியக்காரன் பாளையம் பகுதியில் உள்ள மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை, கடந்த மாதம் தமிழக முதல்வர் ஈரோடு வந்த போது, காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். திறப்பு விழா நடந்த பிறகும் அப்பள்ளியைத் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், கணபதி ஹோமம் நடத்திய பிறகுதான் திறக்கப்படும் என்று அப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.மங்கையர்க்கரசி கணபதி ஹோமம் நடத்துவதாக அறிவித்துள்ளார். எனவே, முதலைமைச்சர் அவர்கள் திறந்து வைத்த பிறகும் கூட, கணபதி ஹோமம் நடத்த முயற்சிக்கும் செயலை தடுத்து நிறுத்தக் கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போதே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்த ஆட்சியர் இச்செயலை தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.. நிகழ்வில், இரத்தினசாமி,ராம.இளங்கோவன்,சண்முகப்பிரியன்,சிவக்குமார்,வேணுகோபால்,குமார், சத்தியராசு, சி.என்.சி சிவக்குமார், விஜயசங்கர் ஆகியோர் கலந்து...

மக்கள் பொது விசாரணை – தமிழகமும் ஜாதிய படுகொலைகளும் – எவிடென்ஸ் 24092017 திருச்சி

நேற்று எவிடென்ஸ் அமைப்பு திருச்சியில் தமிழகமும் சாதிய படுகொலைகளும் குறித்த பொது விசாரணை நடத்தியது.இந்த விசாரணைக்கு என்று 600 பக்கங்கள் கொண்ட சட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது.வழி நடத்திய 8 நடக்குவர்களுக்கும் அந்த ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 30 வழக்குகளில் 20 வழக்குகள் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.அம்பேத்கர் படம் போட்ட கயிறு கட்டி இருந்ததற்காக ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.கபடி போட்டியில் கால் பட்டதனால் ஒரு தலித் மாணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு சிறுமியின் பாலியல் வன்புணர்ச்சி சம்பவத்தை நேரடியாக பார்த்த வெட்டியான் வேலை செய்ய கூடிய ஒரு தொழிலாளி தட்டி கேட்டதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசிவிட்டு அன்று இரவே விமானம் பிடித்து வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடி இருக்கிறான் ஒரு சாதி வெறியன்.நடுவர்களின் ஒருவராக இருந்த அண்ணன் பவா செல்லத்துரை அழுது கொண்டே இருந்தார்.சவிதா...

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஈரோடு 25092017

அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது.. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் “சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்” கொண்டாடப் படுகின்றன.. சட்டவிரோத இந்த பூஜையை தடுத்து நிறுத்தக்கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.. தோழர்.இரத்தினசாமி, மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.ராம. இளங்கோவன், வெளியீட்டுச்செயலாளர் ஆசிரியர்.சிவக்குமார் தோழர்.சண்முகப்பிரியன், தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர்.வேணுகோபால்,வடக்கு மாவட்டச் செயலாளர் தோழர்.சத்தியராசு,தோழர்.கோபி விஜயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்

பெரியார் சிலை முன் நடந்த சுயமரியாதை திருமணம்

செப்டம்பர்-17 தந்தை பெரியாரின் 139 –வது பிறந்தநாள் விழா அன்று கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு அளுக்குளி சேர்ந்த விஜய சாரதிக்கும் கொளப்பலூர் பகுதியை சார்ந்த அபிராமிக்கும், சாதிமறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. மாநில வெளியிட்டு செயலாளர் இராம.இளங்கோவன் வாழ்க்கை துணைநல ஒப்பந்தத்தை வாசிக்க மணமக்கள் இருவரும் அவ்வுறுதி மொழியை ஏற்றுக்கொண்ட பின் மாலை மாற்றிக்கொண்டனர். இவ்வாறு நடந்த எளிமையான நடந்த திருமணத்தை அப்பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக வியப்புடன் பார்த்தனர். திருமணத்திற்காண ஏற்பாடுகளை அளுக்குளி கிளைக்கழக தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

கீழ்வானி இந்திராநகரில் பெரியார் பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அந்தியூர் ஒன்றியம் கீழ்வானி இந்திராநகரில் அமைக்கப்பட்டு இருந்த கழக கொடிகம்பத்தில் கழக கொடியினை மாவட்ட செயலாளர் வேணுகோபால் அவர்கள் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் கழக துண்டறிக்கைகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சுந்தரம் ஆசிரியர் மற்றும் கிளை கழக தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு தடை

கழகத் தோழர்களுக்கு…                                                                                                      அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு எதிரான அரசு ஆணைகள் நீதிமன்றத் தீர்ப்புகளை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து ஆயுத பூஜைகளை நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்துமாறு கழகத் தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூர் மணி  தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்   விண்ணப்பங்கள் தரவிறக்க

இழந்து வரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூக நீதி சமத்துவ தெரு முனைக் கூட்டம் சென்னை பரப்புரை பயணக்குழு

23/09/2017   காலை 10.00 மணி   பூந்தமல்லி காலை 11.30 மணி   போரூர் மாலை 03.00 மணி இராமபுரம் மாலை 05.00 மணி  ஆதம்பாக்கம், அம்பேத்கர் சிலை   24/09/2017    காலை 10.00 மணி மேடவாக்கம் காலை 11.30 மணி   பள்ளிக்கரனை மாலை 03.00 மணி   மடிப்பாக்கம் மாலை 05.00 மணி    வேளச்சேரி   25/09/2017  காலை 10.00 மணி    வெட்டுவாங்கேணி காலை 11.30 மணி   பாலவாக்கம் மாலை 03.00 மணி   திருவான்மியூர் குளம் மாலை 05.00 மணி லெட்சுமிபுரம், திருவான்மியூர் (காந்தி சிலை)   26/09/2017    காலை 10.00 மணி அடையாறு (பி.எஸ்.என்.எல் ) காலை 11.30 மணி        டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு மாலை 03.00 மணி    திருவல்லிக்கேணி     வாகன பதிவு எண் TN 48 R 9999  Swaraj Mastha...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 17092017 கடலூர்

இந்த சமுக விடுதலைக்கான ஒரே போராளி எங்கள் அய்யா பெரியார் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா அய்யா பெரியார் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா கடலூர் மாவட்டம், திராவிடர் விடுதலை கழகம் சார்பாக, மாவட்ட செயலாளர்  தோழர் நட.பாரதிதாசன் தலைமையில், தோழர் நட. பாபு அம்பேத்கார் முன்னிலையிலும், தமிழ்நாடு மாணவர் கழகம் மாவட்ட செயலாளர் தோழர் சே.சுரேந்தர் மாவட்ட அமைப்பாளர் தோழர் பாலமுருகன், மற்றும் சிலம்பு, தினேஷ், மணிகண்டன், ஆகியோருடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், போனா, மற்றும் எழுதுபொருட்கள், மற்றும் இனிப்பு கொடுத்து, கழக கொடியேற்றத்துடன் முடிவுற்றது.!!!!! நட.பாரதி தாசன் கடலூர் மாவட்ட செயலாளர்!

தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாள் விழா & நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் 19092017 இராசிபுரம்

இராசிபுரம் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தந்தைபெரியாரின் 139 வது பிறந்தநாள் விழா & நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் செப்டம்பர்19 ந் தேதி செவ்வாய் மாலை 6 மணிக்கு  இராசிபுரம் லயன்ஸ்கிளப் மீட்டிங்ஹாலில் நடைபெற்றது. தலைமை :  தோழர் இரா.பிடல் சேகுவேரா, நகரஅமைப்பாளர், இராசிபுரம் முன்னிலை:தோழர்.மு.சாமிநாதன் மாவட்டதலைவர், தி.வி.க வரவேற்புரை : தோழர்.மு.சரவணன் மாவட்டசெயலாளர், தி.வி.க வாழ்த்துரை:வி.பாலு, தலைவர், நகரவளர்ச்சிமன்றம், இராசிபுரம். நா.ஜோதிபாசு நகரசெயலாளர் மதிமுக எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பி.எம் கருத்துரையாளர்கள் : பேராசிரியர்.முனைவர் :இராம.சுப்பிரமணியன் பேராசிரியர் முனைவர்.சேதுமணி மணியன் ,மதுரை சிறப்பு அழைப்பாளர்: டாக்டர்.கே.பி.இராமலிங்கம் ,தலைவர், இயற்கை நீர்வளபாதுகாப்பு இயக்கம் ,திமுக ,விவசாய அணி மாநிலசெயலாளர். சிறப்புரை: தோழர் கொளத்தூர்மணி தலைவர் ,திவிக. நன்றியுரை : தோழர் அ.முத்துபாண்டி மாவட்டபொருளாளர், திவிக இராசிபுரம் பெரியார் பிறந்தநாளையொட்டி  புதுப்பாளையம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி  கட்டுரைப்போட்டி ” நடத்தப்பட்டு  மாணவமாணவிகள்  மற்றும் மாணவ மாணவிகள் 29 பேருக்கு பாராட்டுசான்றிதழ்கள்,...

வாசகர்களிடமிருந்து

வாசகர்களிடமிருந்து

டி எம் நாயரின் அற்புதமான பேச்சு நீதிக்கட்சியை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான டாக்டர் டி எம் நாயர், 1917ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் நிகழ்த்திய உரை வரிக்கு வரி அர்த்தம் பொதிந்தது. எல்லாரும் மதிக்கும் என்னை கேரள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பான், “ஏடா, நாயர்’ என்று கேவலமாகவே அழைப்பார்கள் என்ற வரிகளைப் படித்தபோது கண்ணீர் வந்தது. நீதிக்கட்சி தலைவர்களிலேயே நாயர் ஒரு பகுத்தறிவாளராக இருந்திருக்கிறார். நான் படித்த ஒரு வரலாற்றுச் செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1904ஆம் ஆண்டு நாயர் சென்னை நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, “சென்னை பார்த்தசாரதி கோயில் குளத்துக்கு வரி இல்லாமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று தீர்மானத்தை நீதிக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவராக பிறகு உருவாகிய சர். பிட்டி தியாகராயர் கொண்டு வந்தபோது நாயர் அதை எதிர்த்தார். “கோயில் வருமானத்திலிருந்து வரி செலுத்தித் தண்ணீர் பெறுவதுதான் முறை; இல்லை என்றால் மற்ற கோயில் குளத்திற்கும் வரி...

புதிய மனுஸ்மிருதியை எழுதி சமூக சட்டமாக்க ஆர் எஸ் எஸ் திட்டம்!

புதிய மனுஸ்மிருதியை எழுதி சமூக சட்டமாக்க ஆர் எஸ் எஸ் திட்டம்!

மனுஸ்மிருதியில் பல பிரிவுகளை நீக்கி விட்டுஅதை தூய்மைப்படுத்தி மக்களிடம் பரப்புவதற்கான முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரப் பிரவு தீவிரமாக இறங்கியிருக்கிறது. சூத்திரர்கள், பெண்களை இழிவுபடுத்தும் பார்ப்பனர்களுக்கான சட்ட நூல் ‘மனுஸ் மிருதி’ ; மனுஸ்மிருதியை தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் (14.04.2013) திராவிடர் விடுதலைக்கழகம் நடத்தியது. அம்பேத்கர் மகர் குள நீர் எடுக்கும் போராட்டத்தை ஒட்டி மனுஸ்மிருதியை எரித்தார். சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் பெரியார் காலத்தில் ‘மனுஸ்மிருதி’ எரிக்கப் பட்டது. ‘மனுஸ்மிருதியை’ நியாயப்படுத்தி வெளிப்படையாகப் பேசாமல் பார்ப்பனர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். ஆனால் இந்து சமூகம் கட்டமைத்த வாழ்வியலில் மனுஸ்மிருதி உயிர்த் துடிப்போடு இப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. “பிராமணர்”களுக்கு மட்டுமே திருமணம் செய்யும் உரிமை வழங்கப் படுகிறது.“பிராமணர்களுக்கு”மட்டுமே‘யாகம்’- கடவுள் ‘அர்ச்சனை’- ‘கும்பாபிஷேகம்’ கடவுளோடு நேரடித் தொடர்புகொள்ளும் உரிமைகள் இன்றுவரை வழங்கப்பட்டிருப்பது மனு சாஸ்திரத்தின் கட்டளைப்படித்தான்; இந்த உரிமைகள் அனைத்தும் ‘பெண்களுக்கும்’‘சூத்திரர்களுக்கும்’ ஆகமம் – பழக்க வழக்கம் என்ற அடிப்படையில்...

‘வந்தேமாதரம்’-வரலாறு

‘வந்தேமாதரம்’-வரலாறு

ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க. பரிவாரங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இப்போது தேசிய கீதம் பாடப்படுவது இல்லை. அதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுகிறார்கள். ‘வந்தே மாதரம்’ பாடலின் கருத்தும் -வரலாறும் என்ன? பக்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 1880 -ல் ஆனந்த மடம் என்று ஒரு நாவலை வங்காள மொழியில்எழுதினார். அந்தநாவலில் வரும் வங்காள மொழிப் பாடல் தான் ‘வந்தே மாதரம்’ அந்த நாவல் உருவான காலக்கட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம் மன்னர் அநுமன். ஆங்கி லேயக் கிழக்கிந்திய கம்பெனியினர் சில சமாதான ஒப்பந்தங்களை செய்து கொண்டு சென்னை -பம்பாய் -கல்கத்தா போன்ற நகரங்களில் காலூன்ற முயன்று கொண்டிருந்தனர். அப்போது -இந்த‘ஆனந்தமடம்’நாவலில் சொல்லப்பட்ட செய்தி, ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்பது அல்ல; மாறாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி யை- ஆயுதப் போர் நடத்தி ஒழித்துவிட்டு இந்து-ஆங்கிலேயர்களின் கூட்டணிஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே இந்த நாவலின் மய்யக்...