‘தேசத் தந்தை’க்கு அவமானம் : காந்தி சிலைக்கு மாலை போட வந்தவர்கள் கைது!
தேசத் தந்தை காந்தி பிறந்த நாள் விழாவில் கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க தடை விதித்திருக்கிறது தமிழக காவல்துறை.
‘கவுரி லங்கேஷ் கொலையும் காந்தி கொலையும் ஒன்றே’ என முழக்கமிட்டது சட்ட விரோதமாம்! கூறுகிறது காவல் துறை.
மாலையிட வந்த திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிய லெனினிய மக்கள் விடுதலை,மாணவர் மன்றம், காஞ்சி மக்கள் மன்றம், பாப்புலர் பிரண்ட் அமைப்பினர், எழுத்தாளர்கள், பேராசிரியர்களை காந்தி சிலைக்கு மாலையிடாமல் தடுத்து கைது செய்துள்ளது காவல்துறை!
‘சுதந்திரத்துக்கு’ப் பிறகு காந்தி பிறந்த நாளில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கத் தடை செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு என்ற கின்னஸ் சாதனையை செய்து முடித்திருக்கிறது எடப்பாடி ஆட்சியும் அதன் காவல்துறையும்.
பெரியார் முழக்கம் 05102017 இதழ்