மேட்டூரில் வாகனப் பேரணி, பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா செப்.17 அன்று சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்டம் முழுவதும் கொடியேற்று விழா-

இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

காலையில் சமத்துவபுரத்தில் தோழர்கள் ஒன்று கூடினர். பறை முழக்கம் இசைக்கப்பட்டது. அனிதா, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில தலைமைக் குழு உறுப்பினர் அ. சக்திவேல் உரைக்குப் பின், மல்லிகுந்தம், ஜீவா நகரில் சந்திரா கழகக் கொடி யேற்றினார். மல்லிகுந்தம் பேருந்து நிலையத்தில் தேன்மொழி கழகக் கொடி ஏற்றினார். சக்திவேல் உரைக்குப் பின் மேச்சேரி பேருந்து நிலையத்தில் அன்புக்கரசி கழகக் கொடியை ஏற்றினார்.

மேச்சேரியிலுள்ள அன்னை தெரசா கருணை இல்லத்திற்கு கோ. தமிழ் இளஞ்செழியன் ரூ.2000 நன்கொடை வழங்கினார். குழந்தைகள் அனைவரும் கழகத்திற்கு நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

கே.ஆர்.வி. ஸ்பின்னிங் மில் பகுதியில் யசோதாவும், பனங்காடு பகுதியில் மாதம்மாளும் கழகக் கொடி ஏற்றினர். நங்கவள்ளி இராஜேந்திரன், ‘சுடர் மின்கல பணி மையம்’ கடையை மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் திறந்து வைத்தார்.

நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் யசோதா, வீரக்கல்லில் மாதம்மாள், ஆர்.சி. பிளாண்டில் நாகராசன், இராமன் நகரில் அனிதா, சாம் பள்ளியில் கிருத்திகா, ஆர்.எஸ். பகுதியில் சந்தானலட்சுமி, என்.எஸ்.கே. நகரில் இலாவண்யா, டி.கே.ஆர். படிப்பகத்தில் அனிதா, தங்கமாபுரி பட்டணத்தில் அறிவுமதி, காந்தி நகரில் இலாவண்யா, காவேரி கிராஸில் மாதம்மாள், நாட்டாமங்கலத்தில் இலாவண்யா, மாதையன் குட்டையில் கிருத்திகா, ஐ.சி.எச். பகுதியில் சுதா, தூக்கணாம்பட்டியில் காவ்யா, சின்ன பார்க்கில் பிரீத்தி, பெரியார் நகரில் மகேசுவரி, கட்டபொம்மன் நகரில் இரணியா, பாரதி நகரில் இனியா, திலீபன் நகரில் த. குமரப்பா, குமரன் நகரில் அன்பழகன், மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் உக்கம்பருத்திக்காடு செல்வம், பேருந்து நிலையத்தில் தார்காடு விஜயகுமார், அரசு மருத்துவமனை அருகில் அருள், ஒர்க்ஷாப் கார்னரில் குமரேசன், கொளத்தூர் பேருந்து நிலையத்தில் கிருஷ்ணன், மைதானம் பகுதியில் அ. சுரேஷ் குமார், திருவள்ளுவர் நகரில் சீமா, கொளத்தூர் பெரியார் படிப்பகத்தில் உக்கம்பருத்திக்காடு கோவிந்தராஜ், மூலக்கடையில் சதீஷ், காந்தி நகரில் பச்சியப்பன், செட்டியூரில் சுந்தரம், காவலாண்டியூரில் சரஸ்வதி, செ.செ.காட்டுவளவில் சின்ராஜ், கண்ணாமூச்சியில் விஜயகுமார் ஆகியோர் கொடியேற்றினர். மேட்டூரில் தோழர்கள் அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி மதிய உணவாக வழங்கப்பட்டது.

நகரின் மையப் பகுதியில் பதாகைகள் வைக்கப் பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 3000 துண்டறிக்கைகள் மக்களிடம் விநியோகிக்கப்பட்டது.

காவலாண்டியூரில் : காவலாண்டியூர் கழகத்தின் சார்பில் 17.9.2017 அன்று மாலை 6 மணியளவில் பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழாவும், கல்வி வள்ளல் காமராசர் 115ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் கண்ணாமூச்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் க. ஈசுவரன் தலைமையேற்றார். க. சித்துசாமி, லோ. சந்தோஷ் (தமிழ்நாடு மாணவர் கழகம்) முன்னிலை வகித்தனர். மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி மற்றும் பறை நிகழ்ச்சியும் ‘மாற்றம்’ கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். அபிமன்யூ நன்றியுரை கூற கூட்டம் முடிவுற்றது.

மேட்டூர் ஆர்.எஸ். பகுதி, காவேரி கிராஸ், கொளத்தூர், கொசகாட்டுவளவு, செட்டியூர், காவலாண்டியூர், குருவரெட்டியூர் தோழர்கள் கலந்து கொண்டனர். கண்ணாமூச்சி காமராசர் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த அ. முருகேசன் இரவு உணவு ஏற்பாடு செய்தார்.

மேட்டூர் ஆர்.எஸ். பகுதி : 18.9.2017 அன்று மேட்டூர் அணை ஆர்.எஸ்.  பகுதிக்குட்பட்ட தேங்கல்வாரை பகுதியிலுள்ள நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு ஆர்.எஸ். பகுதி தோழர்கள் சுகுமார், சுந்தரமூர்த்தி, பிரகாஷ், நோட்டுகள் பேனாக்கள், இனிப்புகள் வழங்கினர். சுகுமார் பெரியார் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார். பள்ளித் தலைமையாசிரியர் பெரியாரின் பணி குறித்தும், பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தது பற்றியும் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.

காவேரி கிராஸ் பகுதியில் : பெரியாரின் 139ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 21.9.2017 அன்று மேட்டூர் அணை காவேரி கிராஸ் பகுதியிலுள்ள அண்ணா நகரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

ஐ. காளியப்பன் தலைமை வகித்தார். கா. சுந்தரம்,

க. இரத்தினசாமி முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மின்வாரியத் தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் ப. பகுத்தறிவன் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி. வேலுச்சாமி உரைக்குப் பின் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். க. இரத்தினசாமி நன்றியுரை யாற்றினார்.

மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறை முழக்கம், பகுத்தறிவு இசை நிகழ்ச்சி மற்றும் ‘மாற்றம்’ கலைக் குழுவினரின் வீதி நாடகம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேட்டூர், கொளத்தூர், ஆர்.எஸ்., செட்டியூர், நங்கவள்ளி தோழர்கள் கலந்து கொண்டனர்.  தோழர்கள் அனைவருக்கும் மருத்துவர் வீரமணி மாட்டுக்கறி பிரியாணி வழங்கினார்.

கோவையில் :  17-09-2017 மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் நேருதாஸ் தலைமையில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் ஜெயந்த் வரவேற்புரை நிகழ்த்தினார். அனிதா, கவுரி லங்கேஷ்  படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  கே.எஸ்.கனகராஜ் (ஜனநாயக இளைஞர் மன்றம்), சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), ச. பால முருகன் (பி. யூ. சி. எல்.), பிரின்ஸ் கஜேந்திர பாபு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். தொடர் மழையிலும் புதிய தோழர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

சங்கீதாவின் குழந்தைகள் மற்றும் இசைமதி கிருஷ்ணன் சங்கீதா ஆகியோர் பாடல்கள் பாடினர்.  கழக பொருளாளர் திருப்பூர் துரைசாமி, முகில்ராசு, இணையதள பொறுப்பாளர் விஜய், கனல்மதி, சூலூர் பன்னீர்செல்வம், விக்னேஷ், லோகு, கணேஷ் கோவை மாநகர தோழர்கள் கலந்து கொண்டனர். நிர்மல் நன்றி கூறினார்.

‘நடிகவேள்’ நினைவு நாள் : இராசிபுரம் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் விழா – நடிகவேள்  எம்.ஆர்.ராதாவின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு இராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள கழக அலுவலகத்தின் முன் நடைபெற்றது. நிகழ்வில், பெரியார் – எம்.ஆர்.ராதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இராசிபுரம் கழக நகர அமைப்பாளர் இரா. பிடல் சேகுவேரா தலைமை தாங்கினார். கழகத் தோழர்கள் சுமதி, மலர், பாலாஜி, இராசிபுரம் நகர வளர்ச்சி மன்றத் தலைவர் வி.பாலு,  ம.தி.மு.க நகர செயலாளர் நா.ஜோதிபாசு, தமிழக மக்கள் கட்சி நிறுவனர் நல்வினை. செல்வன், கோல்டன் நற்பணி மன்ற செயலாளர் ஆர்.இளங்கோ, சேகுவேரா நற்பணி இயக்க நிர்வாகிகள் பிரபு, மகேந்திரன், விஜி, கிஷோர் மற்றும்  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயலாளர் நாணற்காடன்,  பூபதி, அன்பழகன், கமல்நாத், திலீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்தியூர் ஒன்றியத்தில்: ஈரோடு வடக்கு மாவட்ட கழகம் அந்தியூர் ஒன்றியம் சார்பாக செப்டம்பர் 17ஆம் தேதி காலை கீழ்வானி இந்திரா நகர் பகுதியில் கழகக் கொடியினை மாவட்ட செயலாளர்  வேணுகோபால் ஏற்றி வைத்தார். அறிவியல் மன்ற பொறுப்பாளர் சுந்தரம் மற்றும் கிளை கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

பள்ளி மாணவிக்கு நிதி உதவி: ஈரோடு வடக்கு மாவட்டம்  டி.என். பாளையம் ஒன்றிய கழகத்தின் சார்பில் அப்பகுதி பள்ளி மாணவி ஈஸ்வரிக்கு கல்வி உதவித் தொகை ரூ. 10,000/-த்தை மாநில வெளியீட்டு செயலாளர் இராம.இளங்கோவன் தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர் செயக்குமார் மற்றும் தோழர்கள் வழங்கினார்கள்.

கடலூரில் : கடலூர் மாவட்ட கழகம் சார்பாக, மாவட்ட செயலாளர்  நட. பாரதிதாசன் தலைமை யில், நட. பாபு அம்பேத்கர் முன்னிலையிலும், தமிழ்நாடு மாணவர் கழகம் மாவட்ட செயலாளர் சே.சுரேந்தர், மாவட்ட அமைப்பாளர் பாலமுருகன், மற்றும் சிலம்பு, தினேஷ், மணிகண்டன் ஆகியோரு டன் மிகச் சிறப்பாக பெரியார் பிறந்த நாள் கொண் டாடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா மற்றும் எழுதுபொருட்கள் மற்றும் இனிப்பு கொடுத்து, கழக கொடியேற்றத்துடன் முடிவுற்றது.

விழுப்புரத்தில் : பெரியார் 139ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  விழுப்புரம் மாவட்டம் நயனார் பாளையம் – சங்கராபுரம் பகுதியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நயனார்பாளையத்தில் க. மதியழகன், ஆ. நாகராசன் ஆகிய இருவரும் மாலை அணிவித்து பெரியார் பற்றிய சிறப்புகளை மக்களிடம் பேசினர். சங்கராபுரத்தில் க.இராமர், சி.சாமிதுரை, மு.நாகராசன், பெரியார் வெங்கட், வீ.வினோத், குமார், கார்மேகம் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு பேரணி நடத்தி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியாரின் சிறப்பு பற்றி உரையாற்றினர்.

பெரியார் முழக்கம் 28092017 இதழ்

You may also like...