பெண் போராளிகள் – ஒரே மேடையில் ஜாதி ஒழிப்புக்கு போர் முரசு கொட்டுகிறார்கள்

ஜெயராணி – திவ்ய பாரதி – உடுமலை கவுல்யா – வளர்மதி – சிவகாமி – இரோன் சர்மிளா

எழுத்துப் பேராளிகள்; களப் போராளிகள்; சுய ஜாதி எதிர்ப்புப் போராளிகள்; இராணுவ ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராளிகள்

– இவர்கள் அனைவருமே பெண் போராளிகள்.

“பெண்கள் வருவதன் மூலமும் அவர்கள் வளர்ச்சி பெருகுவதன் மூலமும் தான் நமது கொள்கைகள் வீறிட்டெழ முடியுமே தவிர, “ஆண்களின் வீர உரைகளால் மாத்திரம்” காரியங்கள் சாத்தியமாகி விடாது”.

–  இது 1931இல் ஈரோடு சுயமரியாதை மாநாட்டுக்கு பெரியார் விடுத்த அழைப்பு.

பெரியார் அன்று தந்த அழைப்பை ஏற்று,

இதோ, களம் நோக்கி வருகிறார்கள், பெண்கள்.

ஜாதி ஒழிப்புக் களம் கூர்மை பெறுகிறது; இயக்கங்கள், அமைப்புகள், தோழர்கள் அனைவரும் ஓரணியாய் திரளுவோம்!

பெண்களை கட்டாயம் அழைத்து வாருங்கள்!

அக். 7 – மாலை 5.00 மணிக்கு

சென்னை பெரம்பூர் பாரதி திடல் நோக்கி திரளுவீர்!

பெரியார் முழக்கம் 05102017 இதழ்

You may also like...