பெரியார் பெருந்தொண்டர் சோமசுந்தரம் முடிவெய்தினார்

பெரியார் பெருந்தொண்டர் சோமசுந்தரம் (பொள்ளாச்சி) 8.9.2017 முடிவெய்தினார். இவர் நீண்ட காலம் பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் இயக்கத்தில் பணியாற்றியவர். பொள்ளாச்சி தலைமை அஞ்சலகத்தில் உதவி அஞ்சல் அலுவலராகவும் அஞ்சல் பணியாளர் சங்கத்தில் பொருளாளராகவும் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் வாசகராகவும் ஆதரவாளராகவும் இருந்தவர்.

தோழர் சோமசுந்தரம், அஞ்சல் துறையில் அவருடைய பணிகாலத்தில் பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் பெரியாருக்கு ஒரு பாராட்டு விழாவும் பெரியாரின் உருவப்பட திறப்பு விழாவும் இவருடைய பெரு முயற்சியால் தந்தி அலுவலகத்தில் நடந்தது.

நெருக்கடி நிலை பிரகடனத்தின்போதும் அது அமுலில் இருந்த காலத்திலும் அறிஞர் அண்ணாவின் பாணியில் உடை அணிந்து கொள்வதிலும், ‘விடுதலை’ நாளிதழை அலுவலகத்திற்குக் கொண்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது அஞ்சாமையை காட்டியவர். வலுவான திராவிட இயக்கப் பற்றுக் கொண்டவர்.

பெரியார் முழக்கம் 28092017 இதழ்

You may also like...