அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? நிறுத்தக் கோரி மனு

அரசு அலுவலகங் களில் ஆயுத பூஜை கொண்டாடுவது அரசு ஆணைக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டி ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது.  அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல் நிலையங்களிலும் ‘சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்’ கொண்டாடப் படுகின்றன. இத்தகைய விழாக்களை அனுமதிக்கக் கூடாது என்று மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இரத்தினசாமி (மாநில அமைப்புச் செயலாளர்), இராம. இளங்கோவன் (வெளியீட்டுச்செயலாளர்), ஆசிரியர் சிவக்குமார், சண்முகப்பிரியன் (தெற்கு மாவட்டச் செயலாளர்), வேணுகோபால் (வடக்கு மாவட்டச் செயலாளர்), தோழர்கள் சத்தியராசு, கோபி விஜயசங்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.

பெரியார் முழக்கம் 28092017 இதழ்

You may also like...