காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றவர்கள் கைது சென்னை 02102017

காந்தி தேசத்தந்தை என்று இந்திய அரசு அறிவித்தாலும் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியின் காவல்துறைக்கு காந்தி ஒரு பயங்கரவாதி ஆகிவிட்டார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு – காந்தியைக் கொன்ற மதவெறி சக்திகளை எதிர்த்து முழக்கமிட்டு, மாலையிட வந்த இளைஞர்களை காவல்துறை தடுத்து கைது செய்து விட்டது.

“தேசத்தந்தைக்கு இதை விட வேறு சிறந்த மரியாதையை எப்படி காட்ட முடியும்?”
நாட்டின் “சுதந்திர” த்திற்கு பிறகு காந்தி சிலைக்கு அவர் பிறந்தநாளில் மாலை அணிவிக்க தடைவிதித்த ஒரே மாநிலம் “தமிழ்நாடு” என்ற கின்னஸ் சாதனையை தமிழக காவல்துறை உருவாக்கியிருக்கிறது.

இப்படி ‘தேசபக்தியுடன்’ முடிவெடுத்த காவல்துறையினருக்கு ‘சுதந்திரதின’ விழாவிலோ, ‘குடியரசு தின’ விழாவிலோ சிறந்த சேவைக்கான வீர விருதை வழங்கி இந்தியாவின் தேசபக்தியை உலகத்துக்குக் காட்டிக் கொள்ளலாம்.

“காந்திக்கு ஜே”
காந்தியை அவமதித்த தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் டபுள் “ஜே”

chennai

You may also like...