சுயமரியாதை வரலாற்றுச் சுவடுகளின் கண்காட்சி
விருதுநகர் மாவட்டத்தில் பெரியார் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள் தேதி வாரியாக வரலாற்றுச் சுவடுகள் கண்காட்சி யில் வைக்கப்பட்டிருந்தன. விருதுநகர் அண்ணா சிலை சதுக்கத்தில் நிறுவப்பட்டிருந்தது இந்த கண்காட்சி. சுயமரியாதைச் சுடர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்களால் 1974ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது இந்த அண்ணா சிலை. சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். விருதுநகரில் பெரியார் பங்கேற்ற நிகழ்வுகளின் பதிவுகளை மா. பாரத் (தி.மு.க. மாணவரணி), அல்லம்பட்டி நாத்திக பாண்டி (மாவட்ட கழகத் தலைவர்) திறந்து வைத்தனர். சாத்தூரில் பெரியார் பங்கேற்ற நிகழ்வுகளின் வரலாற்றுப் பதிவை செல்வம் (தி.மு.க.), அருப்புக்கோட்டை பதிவுகளை இரத்தினசாமி (கழக அமைப்புச் செயலாளர்), கவிஞர் கண்மணி ராசா (தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றம்), ஃபிரண்ட்ஸ் செராக்ஸ் மோகன் (தி.வி.க. ஆதரவாளர்), சிவகாசி நகரில்பெரியார் நிகழ்வுகளின் பதிவுகளை மா.பா. மணிகண்டன் (மதுரை மாவட்ட கழக செயலாளர்), திருவில்லிபுத்தூர் வரலாற்றில் பதிவுகளை திருப்பூர் கழகத் தோழர்கள் முத்துலட்சுமி, ராஜபாளையம் பதிவுகளை விசுவை குமார் (ஆதித் தமிழர் கட்சி) ஆகியோர் திறந்து வைத்தனர். பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
பெரியார் முழக்கம் 28092017 இதழ்