சுயமரியாதை கால்பந்து கழகத்தின் 5ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி 24092017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலை பகுதி நடத்தும்…

#சுயமரியாதை_கால்பந்து_கழகத்தின் 5ஆம் ஆண்டு கால் பந்து போட்டி குருவிளையாட்டுத்திடல் மயிலாப்பூர் பகுதியில் 24.09.2017 காலை 8 மணியளவில் நடைபெற்றது.

போட்டி துவக்கி வைக்க வந்த மயிலை த. வேலு (மயிலை கிழக்கு பகுதி செயலாளர், திமுக) அவர்களுக்கு தோழர்.மாணிக்கம் மற்றும் தோழர்.சி.பிரவீன் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

கால்பந்து போட்டியை மயிலை த.வேலு அவர்கள் இந்த கால்பந்து போட்டியை ஒருங்கிணைத்த மயிலை பகுதி தோழர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை துவக்கி வைத்தார்.

இந்த கால்பந்து போட்டியில் பல்வேறு பகுதியிலிருந்து 16 அணிகள் பங்கேற்றனர்.

இந்த கால்பந்து போட்டியில் AVP பிராட்வே அணி வெற்றி பெற்றது. இரண்டாவது அணியாக MKFC அணி வந்தது.

இந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வரும் 26.09.2017 அன்று நடைபெறவுள்ள செரின் மேரீஸ் பாலம், மந்தவெளி இரயில் நிலையம் அருகில் தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

இந்த கால்பந்து போட்டியை சிறப்பாக ஒருங்கிணைத்த இளம் தோழர்கள் பார்த்திபன், சஞ்சய், விஜயகாந்த், மாணிக்கம், பிரவீன், அருண் மற்றும் மயிலை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள்.

foot

You may also like...