நமது தலைமுறையில் முடித்து வைப்போம்!

பெரம்பூர் கூட்ட மேடையில் பெண் போராளிகள் கீழ்க்கண்ட உறுதி மொழியை எடுத் தனர். கூட்டத் தினரும் எழுந்து நின்று உறுதி எடுத்தனர்.

“மனிதர்கள் – மனிதர்களாகவே பிறக்கிறார்கள்.

ஜாதி – அடை யாளம் பின்னர் திணிக்கப்படுகிறது.

ஆணுக்குப் பெண் அடிமை என்பதும், சூழ்ச்சியால் கட்டமைக்கப்பட்டது.

பெண்களாகிய நாங்கள், இளைய தலைமைக்கு விடுக்கும் அறைகூவல் இதுதான்.

ஜாதி – பெண்ணடிமை ஒழிப்பை நமது தலைமுறையில் முடித்து வைப்போம்.

இளைஞர்களே! ஜாதி சங்கங்களைப் புறக்கணியுங்கள்!

சுய ஜாதி மறுப்பாளர்களாக சுய பாலின உணர்வை விட்டவர்களாக மாறுங்கள்!

ஜாதி ஒழிப்பு களம் நோக்கி வாருங்கள்!

வெற்றி நமதே!”

பெரியார் முழக்கம் 12102017 இதழ்

You may also like...