கோவை, திருப்பூரில் கொடியேற்று விழா, தெருமுனை, பொதுக் கூட்டங்கள்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் படத்திறப்பு- கொடியேற்று விழா, தெருமுனைக் கூட்டங்கள் – பொதுக் கூட்டங்கள்  நடைபெற்றது.

இழந்த உரிமைகளை மீட்போம், தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் என்ற திருச்செங்கோடு மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில் செப்-16, சனி காலை 10 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தொடங்கி கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக கோவை வரை இரண்டு நாள் பரப்புரை பயணம் எழுச்சியோடு நடைபெற்றது.

செப்-16 காலை 10 மணிக்கு திருப்பூர் மாவட்டம் காரைத் தெழுவில் தொடங்கி கடத்தூர், கடத்தூர்புத்தூர், கணியூர் ஆகிய இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. கணியூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தோழர்கள் கோவை கிருஷ்ணன், சங்கீதா, யாழ் மொழி, யாழ் இசை ஆகியோர் பகுத்தறிவு பாடல்கள் பாடினர். தொடர்ந்து, தோழர் முகில் ராசு உரையாற்றினார். இறுதி யில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார்.

மடத்துக்குளம் பகுதியில் சோழன் மாதேவி, மடத்துக்குளம் பெரியவட்டாரம் ஆகிய இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.  இரா.மோகன் மற்றும் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றி யாழ் இசை, யாழ் மொழி, இசை மதி, சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற பொருப்பாளர்) மற்றும் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

மதியம் உடுமலை குட்டை திடல், உடுமலை பேருந்து நிலையம் பகுதிகளில் பெரியார் படத்திறப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தோழர்கள் யாழ் மொழி, யாழ் இசை, கிருஷ்ணன், இசை மதி ஆகியோர் பகுத்தறிவு பாடல்கள் பாடினர். பொள்ளாச்சி வெள்ளிங்கிரி, தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து மலையாண்டிபட்டணம் கிராமத்தில் பெரியார் பேசிய இடத்தில் பெரியார் படத்தை தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்து, உரையாற்றினார். அருட்செல்வனின் தந்தை அருணாச்சலம் கருப்பு சிவப்பு நெசவு நூலில் மாலை தயாரித்து பெரியார் படத்திற்கு அணிவித்தார், அனைத்து தோழர்களுக்கும் மடத்துக்குளம் மோகன், உடுமலை இயல், மற்றும் அருட்செல்வன் ஆகியோர் மாட்டுகறி பிரியாணி வழங்கினர். இந்த பிரச்சார பயணத்தில் பொருளாளர் திருப்பூர் துரை சாமி, சூலூர் பன்னீர் செல்வம், முகில் ராசு, சிவகாமி, கோமதி, இசை மதி, சங்கீதா, திருப்பூர் சாரதி சக்தி, வைத்தீஸ்வரி, கோவை கிருஷ்ணன், நிர்மல், ஈரோடு சுகுணா, பல்லடம் தேன்மொழி, சரஸ்வதி, மடத்துகுளம் ஜோதி மற்றும் கடத்தூர் அய்யப்பன், சரவணன், கண்ணன், கணியூர் திலீபன், சோழமாதேவி திராவிட ஜின்னா, மடத்துகுளம் பால் பாண்டியன், மற்றும் ஆனைமலை பொள்ளாச்சி தோழர்கள் கலந்து கொண்டனர், மற்றும் விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை முன்ணனி அமைப்புகளின் தோழர்களும் பங்கேற்றனர். செப்-16 மாலை

7 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கடும் மழைக்கு நடுவே தொடங்கிய கூட்டத்தில் பல்லடம் நறுந்தேன் குழுவினரின் பறை இசையைத் தொடர்ந்து ஆனைமலை வினோதினி தலைமையில் மணி மொழி தொடக்க உரையாற்றினார். சபரிகிரி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து தென்னை தொழிலாளர் பேரவை கருப்புசாமி, மக்கள் விடுதலை முன்ணனி கா.மாரிமுத்து, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் வே.பாரதி, கா.சு.நாகராசன், வே.வெள்ளிங்கிரி ஆகியோர் உரைக்கு பின் இறுதியில் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆனைமலை அரிதாசு, அப்பாதுரை, ஆனந்த், கணேஷ், மணி, பொள்ளாச்சி இராசேந்திரன், மணி, சீனிவாசன் மற்றும் ஆனைமலை பொள்ளாச்சி காளியப்பன் கவுண்டன்புதூர் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விவேக் சமரன் நன்றி கூற முதல் நாள் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

செப்-17 காலை 10 மணிக்கு இரண்டாம் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. கொட்டும் மழையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் படத்தை, தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்து உரையாற்றினார். இதில் திராவிடர் கழகம் பொறியாளர் பரமசிவம், பெரியார் தி.க. (சுயமரியாதை சமதர்ம இயக்கம்) கா.சு. நாகராசன், வே.வெள்ளிங்கிரி, திராவிடர் விடுதலை கழகத் தோழர்கள், தென்னை தொழிலாளர் கருப்புசாமி, தி.மு.க. நகர செயலாளர் தென்றல் செல்வராஜ். மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகல் 11 மணிக்கு தென்சங்கம்பாளையம், சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து உரையாற்றினார். 12 மணிக்கு ஆனைமலை முக்கோணம் பகுதியில் தலைவர் கொளத்தூர் மணி கொடியேற்றி உரையாற்றினார். தொடர்ந்து 12.30 மணிக்கு கா.க.புதூர் கிராமத்தில் பெரியார் படதிறப்பு விழா நடைபெற்றது. தென்னை தொழிலாளர் கருப்பு சாமி, தமிழ்நாடு மாணவர் மன்றம் தினேஷ், சபரிகிரி, பிரபு, வினோதினி, மாணிக்க சேதுபதி, கார்த்திக், வே.வெள்ளிங்கிரி, இரா.மோகன், கா.சு.நாகராசன், இசைமதி ஆகியோர் உரைக்கு பின், இறுதியில் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். வழக்குரைஞர் வெ.பிரபாகரன் நன்றிகூறினார். இந் நிகழ்வில் திராவிடர் விடுதலை கழக தோழர்கள் அரிதாசு, அப்பா துரை, ஆனந்த், சிவா, கணேஷ் குமார், பொள்ளாச்சி ஆனைமலை தோழர்கள் பெரியார் தி.க. தோழர்கள். மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கா.க.புதூர் தோழர்கள் சார்பாக மாட்டுகறி பிரியாணி வழங்கப்பட்டது.

பயணத்தின் இறுதியில் கோவையில் 17-09-2017 மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் நேருதாஸ் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் ஜெயந்த் வரவேற்புரை நிகழ்த்த தோழர்கள் மருத்துவர் அனிதா  மதவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் ஆகியோர் படத்திறப்பும் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தோழர்கள் கருத்துரை நிகழ்த்தினர்.  மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், தமிழ்நாடு அறிவியல் மன்றம் ஆசிரியர் சிவகாமி, பி.யூ.சி.எல். வழக் குரைஞர் ச.பாலமுருகன் ஆகியோரது உரைக்குபின், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர் மழையிலும் புதியவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

 

 

You may also like...