தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை 26092017
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டத்தின் மயிலை பகுதி சார்பாக 26092017 மாலை 6 மணிக்கு தோழர்.பிரவீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தின் மேடை வடிவமான தந்தை பெரியாரின் இல்லத்தினை மேடை வடிவமாகவும் தோழர்.மாணவி அனிதா அவர்களின் நினைவரங்கமாகவும், எழுத்தாளர் தோழர்.கவுரி லங்கேஷ் அவர்களின் நினைவரங்கமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த பொதுக்கூட்டத்தை தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் ஒருங்கிணைத்தார்.
பொதுக்கூட்டத்தின் தொடக்கமாக #விரட்டு கலைக்குழுவின் பாடல்களுடனும், பறையிசை முழக்கத்தோடு பொதுக்கூட்டமான ஆரம்பமானது.
அதை தொடர்ந்து தோழர்.அன்புதனசேகரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) அவர்கள் பொதுக்கூட்டத்தினை பற்றி சிறப்பாக கருத்துரையாற்றினார்.
அதன் தொடர்ச்சியாக #விரட்டு கலைக் குழுவின் உணர்ச்சிகரமான பாடல்களாலும், நாடகத்தாலும் பொது மக்களிடையே கருத்துகளை கூறினார். இந்த நாடகவடிவிலான கருத்துகளுக்கு பொதுமக்களிடையே உணர்ச்சிவனமான ஒரு நிகழ்வாக மாறியது…
இந்த பொதுக்கூட்டத்தில் தோழர்.பார்த்திபன் (அடக்குமுறை கூட்டமைப்பு) அவர்கள் புரட்சிகரமான பாடல் ஒன்றை பாடினார்.
அதை தொடர்ந்து, கடந்த 24.09.2017 அன்று நடைபெற்ற 5ஆம் ஆண்டு சுயமரியாதை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நீதியரசர் அரிபரந்தமான் மற்றும் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் பாரட்டி பரிசுகளை வழங்கினார்கள்.
அதை தொடர்ந்து கருத்துரையாற்றிய நீதியரசர் அரிபரந்தமான் அவர்கள் நீட் தேர்வை குறித்தும் அதன் சட்டவிதிகளை குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார்.
பின்பு, கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் பெரியாரின் பிறந்தநாள் விழா…சமூகநீதி கொள்கைகளை குறித்தும்…மழை குறுக்கீட்ட போதும் தொடர்ந்து சிறப்பாக பேசி கூட்டத்தை நிறைவு செய்தார்…
இந்த பொதுக்கூட்டத்தில், சமூகநீதி சமத்துவ பரப்புரைப் பயணம் கடந்த 4 நாட்களாக மேற்கொண்ட தோழர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்திற்காக, களப்பணியை மேற்கொண்ட தோழர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்து நல்கிய அனைவருக்கும் நன்றி கூறி தோழர்.சுகுமாறன் (சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் கூட்டத்தை நிறைவு செய்தார்.