கழகம் களமிறங்கியது – அரசு பள்ளியில் கணபதி ஹோமம் – ஈரோடு 25092017
முதல்வர் திறந்து வைத்த கட்டிடத்திற்கு “கணபதி ஹோமம்” ..
திராவிடர் விடுதலைக் கழகம் கண்டிப்பு..
கோபி வட்டம் நம்பியூர் ஒன்றியம் பட்டிமணியக்காரன் பாளையம் பகுதியில் உள்ள மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை, கடந்த மாதம் தமிழக முதல்வர் ஈரோடு வந்த போது, காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திறப்பு விழா நடந்த பிறகும் அப்பள்ளியைத் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், கணபதி ஹோமம் நடத்திய பிறகுதான் திறக்கப்படும் என்று அப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.மங்கையர்க்கரசி கணபதி ஹோமம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.
எனவே,
முதலைமைச்சர் அவர்கள் திறந்து வைத்த பிறகும் கூட, கணபதி ஹோமம் நடத்த முயற்சிக்கும் செயலை தடுத்து நிறுத்தக் கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அப்போதே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்த ஆட்சியர் இச்செயலை தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளார்..
நிகழ்வில், இரத்தினசாமி,ராம.இளங்கோவன்,சண்முகப்பிரியன்,சிவக்குமார்,வேணுகோபால்,குமார், சத்தியராசு, சி.என்.சி சிவக்குமார், விஜயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்