ஈரோடு வடக்கு மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் எழுச்சி

தந்தை பெரியார் 139-வது பிறந்த நாளையொட்டி ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக 17.09.2017 ஞாயிறு காலை 9.00 மணிக்கு பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர் மணிமொழி மாலை அணிவித் தார். தோழர்கள் அனைவரும் பெரியாரியியல் உறுதிமொழியை ஏற்றனர். பெரியார் படம் அலங்கரிங்கப்பட்ட வண்டி முன்செல்ல இரு சக்கர வாகனத்தில் அனைவரும் காசி பாளையம் சென்றனர். அங்கு கழகக் கொடி கம்பத்தில் பெரியார் பிஞ்சு யாழ் பிரபாகரன் கொடியேற்றியபின் பொதுமக்கள் அனை வருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அடுத்து அக்கரைக்கொடிவேரி பகுதியில் செல்வி மா.ஈஸ்வரி கழக கொடியினை ஏற்றினார்.

சத்தியமங்கலத்தில் அனைத்து அமைப்பினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பெரியார் பிறந்தநாள் விழா ஊர்வலத்தில் தோழர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் மற்றும் சமூக ஆர்வலர் கருப்புசாமி துவக்கி வைத்தனர். ஊர்வலம் சத்தி பேருந்து நிலையம் வந்தடைந்து அங்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த பெரியார் படத்திற்கு தலித் விடுதலைக் கட்சி நிறுவனர் மருத்துவர் செங்கோட்டையன் மற்றும் ஆதித் தமிழர் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் கோவை இரவிக்குமார், கழகத்தின் வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் ஆகியோர் மாலை அணிவித்து உரையாற்றினர்.

அங்கு அமைக்கப்பட்டு இருந்த கழகக் கொடிகம்பத்தில் தலித் விடுதலைக் கட்சி நிறுவனர் செங்கோட்டையன் கழக கொடி யினை ஏற்றினார். தொடர்ந்து ஊர்வலம் வடவள்ளி சமத்துவபுரம் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். ஊர்வலமாக சத்தி மு.பாளையம் பகுதிக்குச் சென்றனர். கோம்பு பள்ளம் பகுதியில் குமார் அனைவருக்கும் தேனீர் ஏற்பாடு செய்து இருந்தார். பூங்கொடி கழகக் கொடியினை ஏற்றினார். அங்கிருந்து தாசிரிபாளையம் பகுதிக்கு சென்றனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த பெரியார் படத்திற்கு செல்வக்குமார் மாலை அணிவித்தார். அங்கு அனைவருக்கும் மதிய உணவினை காசிபாளையம் தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். மதிய உணவிற்குப் பின் தோழர்கள் ஊர்வலமாக கூடக்கரை பகுதிக்கு சென்றனர். முருகேசு கழக கொடியினை ஏற்றினார்.

அடுத்து சமத்துவபுரம் பகுதிக்கு தோழர்கள் சென்று பெரியார் சிலைக்கு இரமேசு மாலை அணிவித்தார். ஊர்வலம் நம்பியூர் பேருந்து நிலையம் அடைந்தது. அங்கு கழகக் கொடியினை கோட்டுபுள்ளாம்பாளையம் சூர்யா ஏற்றினார். நம்பியூர் பெரியார் சிலைக்கு இராம. இளங்கோவன் மற்றும் தமிழ்நாடு அறிவியில் மன்றம் சுந்தரம் ஆசிரியர் ஆகியோர் மாலை அணிவித்தனர். ஊர்வலம் அளுக்குளி பகுதிக்கு வந்து அங்கு இருந்த கழக கம்பத்தில் அளுக்குளி தங்கம் கழக கொடியினை ஏற்றினார். ஊர்வலம்  கோட்டு புள்ளாம் பாளையம் பகுதிக்கு சென்றது. அங்கு கழக கொடியினை நதியா ஏற்றி வைத்த பின் ஊர்வலம் நிறைவடைந்தது. இங்கு அனைவருக்கும் கிளை கழகத் தோழர்கள் தேனீர் ஏற்பாடு செய்து இருந்தனர். ஊர்வலத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்த போதும் பெரியார் பிஞ்சுகள் அறிவுக்கனல், யாழ்திலீபன், யாழினி ஆகியோர் தொடர்ந்து ஊர்வலத்தில் பங்கெடுத்தனர்.  ஊர்வலத் திற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

பெரியார் முழக்கம் 05102017 இதழ்

You may also like...