Author: admin

இணைய வழி தொடர் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணைய வழி தொடர் கருத்தரங்கம் நேரம் : மாலை 6:30 மணிக்கு தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களின் அறிமுக உரையோடு பல்வேறு இயக்க தலைவர்களின் கருத்துரைகள் திராவிடர் விடுதலைக் கழக முகநூல் பக்கத்திலும் facebook.com/dvk12 யூ ட்யூப் பக்கத்திலும் youtube.com/dvkperiyar நேரலையில் காணலாம் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளவும். திவிக இணைய தள பிரிவு

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் 3 – கொளத்தூர் மணி

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் 3 – கொளத்தூர் மணி

திமுக பங்கு முந்தைய கட்டுரை படிக்க தி.மு.கவின் பங்கும் குறைந்ததல்ல. 22.9.1981 அன்று நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இலங்கைத் தூதரக முற்றுகைப் போரில் ஏராளமானோர் சிறைப்பட்டனர். திராவிடர் கழகம் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, சிறைப்படுத்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு மிகப்பெரிய பொதுக் கூட்டத்தினை சில நாட்களில் நடத்தியது. ஈழப் போராளித் தலைவர்கள் குட்டிமணி, செகன், தங்கதுரை ஆகியோர் சிங்கள அரசால் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, 28.8.1982ஆம் நாளை ஈழத்தமிழர் பாதுகாப்பு நாளாக அறிவித்து, அனைவரையும் கருப்புப் பட்டை அணிய வலியுறுத்தியதோடு தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டங்களை தி.மு.க நடத்தியது. திராவிடர் கழகத்தினரும் இணைந்து அக்கூட்டங்களை நடத்தினர். பாண்டியனார் சந்தை (பசார்) வழக்கு போன்ற அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும், இலங்கை அரசு கேட்டிருந்தவாறு போராளித் தலைவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது போன்ற முடிவுகள் திராவிடர் கழகத்தால் 18.6.83 அன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டு, 2.7.1983...

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் 2 – கொளத்தூர் மணி

உள்நுழையும் முன் முன்னுரை படிக்க தமிழ்நாட்டில் இருந்து பிழைப்பு தேடி, இலங்கை மலையக இரப்பர் தோட்டங்களுக்கு வேலைக்குப் போய், கொத்தடிமைகளாய் உழன்று வந்தனர், ‘இந்திய வம்சாவழித் தமிழர்கள்’. அம்மலையகத் தமிழர்களின் வாக்கு உரிமை பறிப்பு, குடியுரிமை நீக்கம் 1940களின் இறுதியில் நிகழ்ந்தது. அப்போது அம்மக்களுக்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் எழுந்தன. அம் மக்களின் நிலை குறித்து விரிவான கட்டுரைகளும் செய்தித் தாள்களின் முதன்மைச் செய்திகளும் நூல்களும் வெளிவந்தன. அரசியல் அமைப்புகள் மாநாட்டுத் தீர்மானங்களாகவும், செயற்குழு தீர்மானங்களாகவும் அம் மக்களுக்கான ஆதரவைத் தெரிவித்தன. தமிழக, இந்திய ஒன்றிய அரசுகளை அம்மக்களுக்கு ஆதரவாக செயலாற்றத் தூண்டின. அவற்றை செய்தவை திராவிடர் கழகமும், அப்போது புதிதாய் தோன்றியிருந்த திராவிடர் முன்னேற்றக் கழகமுமே ஆகும். ஈழக் கோரிக்கையை ஆதரித்து அதைத் தொடர்ந்து 1970களின் பிற்பகுதியில் எழுந்த தனித்தமிழ் ஈழக் கோரிக்கையை ஆதரித்து குரல் கொடுத்தவையும் இவ்விரு கழகங்களேயாகும். ஈழத்தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் எல்லாம் அரசுப் படைகளால் அடித்துத்...

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது! – திவிக அறிக்கை

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது! – திவிக அறிக்கை

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது! ஜாதி ஆணவப்படுகொலை செய்பவர்களுக்கு இத்தீர்ப்பு துணிச்சலைக் கொடுத்துவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது! திராவிடர் விடுதலைக் கழக அறிக்கை : 2016 மார்ச் 13 அன்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்தார் என்கின்ற ஒரே காரணத்திற்காக உடுமலையில் பட்டப்பகலில் நடுவீதியில் சங்கர் மிகக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். அவர் காதலித்து திருமணம் செய்த கௌசல்யா பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர். அதனால் பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சங்கரைப் படுகொலை செய்தனர் என்பது தான் இந்த படுகொலைக்கும் கௌசல்யா மீதான கொடூர கொலை முயற்சி தாக்குதலுக்கும் அடிப்படையான காரணம். இது கொலை வழக்கு மட்டுமல்ல கொலை செய்யும் நோக்கில் கொடுங்காயம் ஏற்படுத்திய கொலை முயற்சி வழக்கும் கூட. இதற்கு ஜாதிய ஏற்றதாழ்வுகள் மட்டுமே காரணம். சங்கரைப் படுகொலை செய்யும்...

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் – கொளத்தூர் மணி

முன்னுரை தமிழ்நாட்டில் ஏறத்தாழ எல்லோருடைய உணர்வுகளும் ஈழத்துக்கும், ஈழ விடுதலைக்கும் ஆதரவானவைகளாக உள்ளன. ஆனால் செயல்தளத்தில், ஈழ ஆதரவு செயல்பாடுகளில் அவ்வாறு கூறிவிட முடியாது. மற்றொரு பக்கம், ஈழ ஆதரவு என்பதை, சொற்களால் பெரும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் செயல்பாட்டுத் தளத்துக்கு வந்ததில்லை. ஈழத்தில் 2009 மே திங்களில் நடந்து முடிந்த கடைசிக் கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ஈழத்தின் அப்பாவித் தமிழ் மக்களை அழித்தொழித்தும் வெறியாட்டம் ஆடிய இலங்கை அரசுக்கு, இந்திய காங்கிரசு அரசு ஆயுதம், ஆளணி, உளவு, தொழில்நுட்ப உதவிகள் என முழுமையாய்த் துணை நின்றது. அவ்வரசின் கூட்டாளியாக இருந்த தி.மு.க. தன்னல நோக்கில் அமைதி காத்தும், தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாய் நடந்த ஈழ ஆதரவுப் போராட்டங்களைத் தந்திரமான பட்டினிப் போர், பகட்டுப் பேச்சுக்களாலும் – கூர்மழுங்கவும் செய்தது. உள்ளுக்குள் உறைந்து கிடந்த விடுதலைப் புலிகள் மீதான பகையுணர்வு அவ்வாறு வெளிப்பட்டது. அது அந்தக் கட்சியில் பெரும்பான்மையாக...

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் ! மக்கள் பணியில் உயிர்நீத்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் அளித்துள்ள இரங்கல் செய்தி : திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவருமான ஜெ.அன்பழகன் இன்று மரணமடைந்துவிட்டார்.கொரானோ தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். கடந்த சில வாரங்களாக கட்சியின் தலைமை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உணவுப் பொருள்களை வழங்குகிற உதவிகளை செய்துவந்தது. “ஒன்றிணைவோம் வா” என்ற பெயரில் செயல்பட்ட அத்திட்டத்தில் தீவிரமாக பங்கேற்று செயலாற்றி வந்தார் ஜெ.அன்பழகன். 1995ம் ஆண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அவர். மருத்துவர்கள் ஆலோசனையை மீறி பொது தொண்டாற்ற வந்தார் அவர். பொதுத்தொண்டின் வழியாக கிடைக்கின்ற மரணம் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய மரணம்தான். இந்த மரணம் அவருக்கும்...

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம் – கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கடும் கண்டனம்

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம் – கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கடும் கண்டனம்

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம், திராவிடர்விடுதலைக் கழகம் கடும் கண்டனம். இந்த சட்டவிரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களுக்கு திவிக முழு ஆதரவு ! இது குறித்து திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை : விகடன் பத்திரிக்கை குழுமம் 170 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. கொரோனா காலத்தில் வாழ்க்கை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு இப்படி ஒரு பேரதிர்ச்சியை விகடன் குழு கொடுப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. 1947ம் ஆண்டு தொழில் தகராறு சட்டப்படி இது சட்ட விரோத நடவடிக்கையாகும். கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு ஒரு தாக்கீதை பிறப்பித்திருந்தது இந்த ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு நிறுவனமும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கக் கூடாது என்பதோடு அவர்களை...

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!

“புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!” – கூட்டறிக்கை – 16.05.2020 புலம்பெயர்தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தக் கூடாது! சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்! தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலத்தை ஏற்படுத்தக் கூடாது! சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள்,கட்சிகளின் கூட்டறிக்கை! பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொணா துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.கடந்த 50 நாட்களாக அவர்கள் கைக்குழந்தைகளுடன் வெறுங்கால்களிலும் சொந்த ஊர் நோக்கி நடந்தே செல்லும் காட்சிகளைப் பார்த்து வருகிறோம். கொரோனா பேரிடரின் போதும் பெருமுதலாளிகளுக்கு 68,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்யும் நடுவண் அரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்வதற்கு போக்குவரத்தைக்கூட ஏற்பாடு செய்யாமல் மிக மோசமாக புறக்கணித்தது. முதல்சுற்று ஊரடங்கு அறிவிப்பின்போதே தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே செல்லும் தொழிலாளர்களைக் காப்பாற்ற நடவடிக்கை...

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க! – கூட்டறிக்கை – 16-5-2020

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க! – கூட்டறிக்கை – 16-5-2020

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க! – கூட்டறிக்கை – 16-5-2020 புலம்பெயர்தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தக் கூடாது! சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்! தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலத்தை ஏற்படுத்தக் கூடாது! சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள், கட்சிகளின் கூட்டறிக்கை பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொணா துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 50 நாட்களாக அவர்கள் கைக்குழந்தைகளுடன் வெறுங் கால்களிலும் சொந்த ஊர் நோக்கி நடந்தே செல்லும் காட்சிகளைப் பார்த்துவருகிறோம். கொரோனா பேரிடரின் போதும் பெருமுதலாளிகளுக்கு 68,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்யும் நடுவண் அரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்வதற்கு போக்குவரத்தைக்கூட ஏற்பாடு செய்யாமல் மிக மோசமாக புறக்கணித்தது. முதல்சுற்று ஊரடங்கு அறிவிப்பின்போதே தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே செல்லும் தொழிலாளர்களைக்...

திருப்பூர் அவினாசி பழங்கரை – ஆர் எஸ் எஸ் மாவட்ட தலைவர் வன்கொடுமை – திவிக உள்ளிட்ட அமைப்புகள் புகார்

திருப்பூர் அவினாசி பழங்கரை – ஆர் எஸ் எஸ் மாவட்ட தலைவர் வன்கொடுமை – திவிக உள்ளிட்ட அமைப்புகள் புகார்

திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு அமைப்புகள் இனைந்து ஜாதி ஒழிப்பு கூட்டியக்கம் தொடங்கி அதன் வாயிலாக போராடி அவினாசி ஒன்றியம் பழங்கரை கிராமம் தேவம்பாளையம் அருந்ததிய பகுதியில் வசித்து வரும் ஜாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான லோகநாதன், த/பெ.முருகன் மாலதி ,த | பெ. முருகன் (இருவரும் அண்ணன் தங்கை) ஆகியோர் மீது ஜாதிய வன்மத்தை நடத்திய ஆதிக்க ஜாதியினர் மீது முதல் தகவல் அறிக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது ~~~~~~~~~~~~~~~~~ 16.5.2020 ~~~~~~~~ திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா பழங்கரை கிராமம் தேவம்பாளையம் அருந்ததியர் பகுதியில் வசித்துவரும் முருகன் என்பவர் மகன் லோகநாதன், மகள் மாலதி, அவர்களது வீட்டில் இருந்து அருகில் உள்ள கல்லாங்காடு தோட்டத்தில் லோகநாதன் ஆட்டுக்குட்டி சென்று விட்டது, என்று சொல்லி கல்லாங்காடு தோட்டத்தின் உரிமையாளர் மூர்த்தியின் மகன் பிரவீன் என்பவர், ஆட்டுக்குட்டியை பிடித்துச் சென்று விட்டு ,கொடுக்க மறுத்திருக்கிறார் லோகநாதன் மாலதியும்...

காவி நிறக் குட்டிக்கு பாலும்  கருஞ் சாந்துநிறக் குட்டிக்கு காலும்.!  உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி

காவி நிறக் குட்டிக்கு பாலும் கருஞ் சாந்துநிறக் குட்டிக்கு காலும்.! உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி

காவி நிறக் குட்டிக்கு பாலும் கருஞ் சாந்துநிறக் குட்டிக்கு காலும்.! உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி உச்சநீதிமன்றம் இந்திய அரசியல் சட்டத்தில் மிக முக்கிய அங்கம்.அரசியலமைப்புச் சட்டம் அதன் பாதையில் பயணிக்கின்றதா எனக் கண்காணிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் காவல் நாயாக விளங்கும் மக்களாட்சியின் மூன்று பெரிய தூண்களில் ஒன்று. ஆனால் இன்று அந்த  தூண் கறையான் அரித்து உளுத்துப் போனதற்கு சமூக நீதி என்ற பாதுகாப்பு இல்லாததே முக்கிய காரணம். உச்ச நீதிமன்றம் ஏழைகளுக்கு எட்டாத எட்டிக்காயாகவும் அங்கு கட்சிக்காரர்களைப் பொறுத்தும் வழக்கறிஞர்களுக்கு ஏற்பவும்  தீர்ப்புகளும் வழங்கப்படுகின்றன என பொதுமக்கள் நம்பிக்கை இழந்ததற்கும் அதுவே காரணம். மெட்றாஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக விசாரணை நீதிபதி பதவியில் இருந்து உயர்வு பெற்ற  தமிழகத்தைச் சேர்ந்த  திருமிகு ஏ. வரதராஜன் பின்னர் 10.12.1980 அன்று திருமதி இந்திரா காந்தி அமைச்சரவையில்  ஆந்திராவைச் சேர்ந்த துணிச்சலான திருமிகு பி.சிவசங்கர் அவர்கள்  சட்ட அமைச்சராக இருந்தபோது உச்ச நீதிமன்ற...

அய்யா பெ.மணியரசன் அவர்களுக்கு, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பதில்

அய்யா பெ.மணியரசன் அவர்களுக்கு, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பதில்

*அய்யா பெ.மணியரசன் அவர்களுக்கு, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பதில் !* கடந்த மே மூன்றாம் நாள், புலிகள் – திராவிட முன்னேற்ற கழகம் என்ற எதிரெதிர் விவாதங்கள் குறித்து, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இப்படிப்பட்ட தேவையற்ற தரம் தாழ்ந்த விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று கூறி விடுக்கப்பட்ட அறிக்கையின் சில வரிகள் மீதான கேள்விகளை எழுப்பி, தோழர் – மன்னியுங்கள் – அய்யா மணியரசன் அவர்கள், “கொளத்தூர் மணியும், சுப.வீ.யும் பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா?” என்ற தலைப்பில் நீண்டதொரு அறிக்கையை எழுதியுள்ளார். இறுதிப்பகுதியில் சில கேள்விகளையும் நம்மை நோக்கி வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை எதிர்க்கின்ற அளவுக்காவது மோடி ஆட்சியை, இதுவரை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆவேசத்தோடு எதிர்த்ததுண்டா? அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது. இதுதான் பாஜக எதிர்ப்பு கூட்டணியா? தோழர் கொளத்தூர் மணி கட்சி, பாஜக மதவாத எதிர்ப்பு வேலைத்...

பெரியார் நினைவு நாள் – சென்னை – 24-12-2010 கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

பெரியார் நினைவு நாள் – சென்னை – 24-12-2010 கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

ரஷ்யாவில் தைத்துவிட்ட செருப்பை எடுத்துகொண்டு இங்குள்ள காலை வெட்டியவர் அல்ல பெரியார். இங்குள்ள காலை அளந்து பார்த்து செருப்பு தைத்தார் அதுதான் தனி தமிழ்நாடு போராட்டம். [24-12-2010 – சென்னை – தா.செ.மணி] இன்று பெரியாரின் நினைவு நாளில் நாம் கூடியிருக்கிறோம். வழக்கமாக பெரிய அளவில் எடுக்கப்படும் பிறந்தநாள் விழாக்களை விட, நினைவு நாள் விழாக்கள்தான் மிகவும் தேவையானதும், பொருத்தமானதும் என்று நாம் கருதுகிறோம். பிறந்த நாள் விழாக்ககளை அந்தந்த தலைவர்கள் வாழுகின்ற காலம் வரை எடுப்பார்கள், அவர்களிடம் இருந்து ஏதாவது பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு. இப்பொழுதெல்லாம் பார்க்கிறோம், அவர்களுக்கெல்லாம் கூச்சமாக இருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு கொடுக்கும் அடைமொழிகளை பார்த்து நமக்கு கூச்சமாக இருக்கிற அளவிற்கு, பல்வேறு அடைமொழிகளை கொடுத்து சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் மறைந்துவிட்ட தலைவர்களுக்கு நினைவு நாள் எடுப்பது என்பதுதான், அவர்களுடைய கொள்கைகளை, அவர்கள் ஆற்றிய தொண்டினை, அவற்றை நாம் தொடர்ந்து எடுத்து செல்லவேண்டிய தேவையை,...

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களின் அறிக்கையை முழுதுமாக நானும் ஏற்றுக் கொள்கிறேன் தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு எனது ஒப்புதலை அளிக்கிறேன். வன்கொடுமைப் புகார்களை அளிப்பதற்கு வாய்ப்பாக ஓர் புகார் எண்ணை அறிவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் 11-5-2020   தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களுடைய அறிக்கையோடு நானும் கீழ்க்கண்ட செய்தியினை அரசின் கவனத்திற்கும், காவல்துறைத் தலைமையின் கவனத்திற்கும், பொதுமக்களின் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன். பவானியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளமதி என்ற பெண்ணும் கவுந்தப்பாடி யைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த செல்வன் என்பவரும் அவர்கள் இருவரின் முழு சம்மதத்தோடு கொளத்தூரை அடுத்த காவலாண்டியூரைச் சேர்ந்த திரு ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் 9-3-2020 அன்று திருமணம் செய்து கொண்டார்கள். செய்தியறிந்த பெண்ணின் குடும்பத்தினரும் அவர்களுக்குத் துணையாக ஏறத்தாழ நாற்பது ஐம்பது அடியாட்களும் வந்து திருமணத்தை...

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – எவிடென்ஸ் கதிர்

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – எவிடென்ஸ் கதிர்

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக புகார் உதவி எண்கள் உருவாக்க வேண்டும் பத்திரிக்கை செய்தி இந்த கொரானா காலத்திலும் சாதிய கொலைகள், ஆணவ கொலைகள், காவல் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், குடியிருப்புகள் தாக்கப்படுதல், சாதி ரீதியாக இழிவுபடுத்தி அவமானபடுத்துதல் போன்ற வன்முறைகள் தலித்துகள் மீது அதிகரித்து உள்ளன. அதுமட்டுமல்ல நாற்காலியில் உட்கார அனுமதி மறுக்கின்றனர். சாதி ரீதியாக இழிவாக பேசுகின்றனர். பணி செய்யவிடாமல் சித்திரவதை செய்கின்றனர் என்று மூன்று பஞ்சாயத்து தலைவர்கள் புகார் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த நான்கு நாட்களில் 4 தலித்துகள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தலித்துகள் மீது சாதிய கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழக முதல்வர் இக்கொடுமைகளுக்கு எதிராக உரிய அளவிற்கு நடவடிக்கை எடுக்க வில்லை. குழந்தைகள் மீதும் பெண்கள் மீதும் வன்முறை தடுப்புக்கு என்று உதவி எண்களை அரசு வெளியிட்டு இருக்கிறது. அவற்றின்...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இணையவழியில் ஆர்ப்பரித்து முழக்கமிடத் திட்டம்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இணையவழியில் ஆர்ப்பரித்து முழக்கமிடத் திட்டம்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – 2 – 5 – 2020 -அன்று இணையவழி நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் நடுவக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: கொரானா நோய்த்தொற்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற நெருக்கடிச் சூழலில், எரிகிற வீட்டில் பறிப்பது ஊதியம் எனக் கொள்ளை அடிக்கிற கொடூரனைப் போல இந்திய அரசு மொழித் தேச மாநில உரிமைகளையெல்லாம் பறித்துக் கொண்டு போவதைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வகையில் எல்லாம் இந்திய அரசின் மாநில உரிமைகளைப் பறிக்கும் போக்கைக் கண்டித்து எதிர்வரும் 9-5-2020 -ஆம் நாள் `பறிக்காதே! பறிக்காதே! மாநில உரிமைகளைப் பறிக்காதே!! கொரானா தாக்கிடும்...

புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர்  எதிர்விவாதங்கள் குறித்து…….

புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர் எதிர்விவாதங்கள் குறித்து…….

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அறிக்கை……. புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர்  எதிர்விவாதங்கள் குறித்து……. அன்பார்ந்த தோழர்களே, வணக்கம். கடந்த சில நாட்களாக புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர் எதிர் விவாதங்கள் சமூக வலைதளங்களில் மிகுந்து காணப்படுகின்றன. ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் இறுதிப்போரின் போது ஈழத் தமிழர்களை வஞ்சித்து விட்டது என்பதான புலிகள் ஆதரவு வாதங்களும்,இன்னொரு பக்கம் புலிகள் தான் அநியாயமாக ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்பதாக ஒரு பக்கமும் செயற்கையான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விவாதங்களில் சில கடுஞ் சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.இரு தரப்பாரும் தங்கள் நிலையை அல்லது தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்காக வரம்பு கடந்து சில வாதங்களை வலிந்து முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசே நினைத்திருந்தாலும் போரினை நிறுத்தியிருக்க முடியாது.மேற்கத்திய வல்லரசுகள் நடத்திய போர்...

ஈழச்சொந்தங்களுக்கு உதவுங்கள்.

ஈழச்சொந்தங்களுக்கு உதவுங்கள்.

அன்புடையீர் வணக்கம். ஈழச்சொந்தங்களுக்கு உதவுங்கள். “இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள” கும்மிடிபூண்டி, புழல் ஆகிய இடங்களில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் வாடி வரும் சொந்தங்களின் பசியாற்றுவதற்கான வேண்டுகோளை முன்வைக்கிறோம். தங்களின் நாட்டிற்கும் செல்ல இயலாமல், முகாமில் வாழும் மக்கள் இந்திய, தமிழக அரசினால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் சூழலில் பேரிடியாக வந்த கொரோனா தொற்றால் மேலும் நிலைகுலைந்துள்ளனர். 80 சதத்திற்கு மேலானவர்கள் தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்களாக இருப்பதாலும், கடந்த 36 நாட்களுக்கு மேலாக வருமானமில்லாத தாலும் அவர்களின் மிகவும் இக்கட்டான சூழலை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர். கும்மிடிப்பூண்டி முகாமில் பதிவு செய்யப்பட்ட 900 குடும்பங்களும், பதிவு செய்யப்படாமல் 170 குடும்பங்களும், புழல் முகாமில் பதிவு செய்யப்பட்ட 215 குடும்பங்களும், பதிவு செய்யப்படாமல் 125 குடும்பங்களும் இருக்கின்றன. பதிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டைக்கு உள்ள பொருட்களை அரசு கொடுத்தாலும் அது முழுமையாக பற்றாததும், காய்கறிகள் வாங்குவதற்கு பணம்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 11

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 11

காட்சி – 11 இடம் : இலங்கை இராவணன் அவை. பாத்திரங்கள் : இராவணன், மேகநாதன், கும்பகர்ணன், விபீடணன், அமைச்சர்கள், அவைப் பிரதிநிதிகள், சேனாவீரர்கள், மற்றும் பலர். இராவ : சிங்கத்தின் பீடத்திலே சிறு நாயை ஏற்றி விட்டார்கள்! துரோகம் வீரத்தை விழுங்கிவிட்டது! வாலியை மறைந்து நின்று கொன்றுவிட்டு, சுக்ரீவனை மன்னனாக்கி விட்டார்களாம் அந்த ஆரியச் சிறுவர்கள். மேக : சதிக்குச் சாய்ந்துவிட்டதே அப்பா; சமருக்கு அஞ்சாத தென்னாடு. இராவ : வஞ்சகர்கள் பெருகிவிட்டார்கள் குழந்தாய்! மேக : மாற்றானின் கால்பிடித்து மன்னன் ஆவதைவிட, மானத்தை விட்ட செயல் வேறு உண்டா? இராவ : பதவிப் பித்து மானத்தை மறக்கடித்துவிட்டது ஒன்றுபட்ட தமிழகத்திலே தமிழன் வாழ்க்கையிலே பிளவு, ஆரியத்தின் ஊடுருவல்…. மேக : அந்த பேதத்தை நீக்க வேண்டியது தங்கள் கடமை அப்பா. இராவ : அதற்காகத் தமிழனும் தமிழனும் மோதிக் கொள்ள வேண்டியதுதான்; வந்திருக்கும் ஆரியர்களுக்காக வாளேந்தி நிற்பவர்கள் யார்?...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 10

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 10

காட்சி – 10 இடம் : கிட்கிந்தையில் ஒரு மலை அடிவாரம் பாத்திரங்கள் : அனுமன், அங்கதன், சாம்பவந்தன், மற்றும் பலர் அனு : நீங்கள் எல்லோரும் இங்கேயே இருங்கள். நான் மட்டும் சம்பாதி முனிவன் சொன்ன விவரப்படி இலங்கை சென்று சீதாபிராட்டியாரைக் கண்டு திரும்புகிறேன். நான் வருகிறவரையில் வேறு எங்கும் போகாதீர்கள். அங்க : *ஆமாம்! (* கி.கா. 53-ம் சருக்கம் 1-2 55-ம் சருக்கம் 1-16) சீதையைக் காணாமல் நாம் சுக்ரீவனையோ ராமனையோ பார்ப்பதற்கில்லை. அந்தக் கொடியவர்கள் குணம்தான் நாம் அறிந்ததாயிற்றே. அனு : நான் எப்படியும் சீதையைக் கண்டே திரும்புகிறேன். அங்க : அனும! நீ எப்படி இலங்கைக்குப் போவாய்? அனு : இலங்கைக்குப் போவது முடியாத காரியமென்று நினைத்துவிட்டாயா அங்கதா? அங்க : இடையிலே பெருங்கடல் இருக்கிறதாமே! அனு : இல்லை! அனுபவமில்லாதவர்கள் – ஆய்ந்து பார்க்கத் திறனில்லாதவர்கள் கட்டிய கதையப்பா அது எனது. –...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 9

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 9

காட்சி – 9 இடம் : சுக்ரீவன் கொலுமண்டபம். பாத்திரங்கள் : அங்கதன், அனுமான், ராமன், லட்சுமணன், மற்றும் பலர். [கிட்கிந்தையில் சுக்ரீவனுக்கு முடிசூட்டப்பட்ட சில காலத்திற்குப் பிறகு ஒரு நாள் சுக்ரீவன் கொலுவிருக்கிறான். அங்கதனும் அனுமானும் அருகில் இருக்கின்றனர்; ராமனும் லட்சுமணனும் உட்கார்ந்திருக்கின்றனர்.) ராமன் : சுக்ரீவ! உன் ஆசை, நிறைவேறிவிட்டது. என் கடமையும் முடிந்து விட்டது; இனி நீ எனக்கு சீதையை மீட்டுத் தரவேண்டும். லட்சு : சீதையை ராவணன் எங்கு சிறையிட்டிருக்கிறான் என்பதை முதலில் கண்டறிந்தாக வேண்டும். அனு : பிரபு, நேற்று இந்த நகை மூட்டையைத் தெற்கே உள்ள குன்றின் அடிவாரத்தில் நமது வீரர்கள் கண்டெடுத்து வந்தனர். இவைகள் ஒரு வேளை பிராட்டியாருடைய நகைகளாக இருந்தாலும் இருக்கலாம். [ராமனும் லட்சுமணனும் ஆவலோடு அந்த நகை மூட்டையை வாங்கிப் பிரிக்கின்றனர்.) ராமன் : *சீதா! அய்யோ ! இவைகள் உன் நகைகள் போலவே இருக்கின்றதே. தம்பி லட்சுமணா!...

பட்டியலின மக்களுக்கு மட்டுமான தலைவரா #அம்பேத்கர்? – தோழர் கொளத்தூர் மணி

பட்டியலின மக்களுக்கு மட்டுமான தலைவரா #அம்பேத்கர்? – தோழர் கொளத்தூர் மணி

#அவசியம்படியுங்கள்.. பட்டியலின மக்களுக்கு மட்டுமான தலைவரா #அம்பேத்கர்? – #தோழர்_கொளத்தூர்மணி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசே அறிவித்தப்பின்னாலும், இன்று தமிழ் புத்தாண்டு என்று அனைத்து தொலைக் காட்சிகளிலும் அறிமுகபடுத்திக் கொண்டிருக்கிற இந்த ஏப்ரல் 14 இல், அம்பேத்கரை நினைவு படுத்தி பேசுவதற்காக அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கூடியிருக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறாந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளார் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஓர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிற வாய்ப்பினை பெற்றார். அங்குபோய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங்களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத்துறையில் பட்டங்களை பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக அல்ல. இந்த இந்திய சமுதாதாயத்தை திருத்த...

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் !  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து …..

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் ! கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து …..

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி* அவர்கள் *தமிழக முதலமைச்சருக்கு கடிதம் !* *கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ………..* *10.04.2020* மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக சில செய்திகளை உங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறோம். கொடூரமான கொரோனோ தொற்றுக்காக மக்களுக்கு சிகிச்சை அளிக்க, நோய்ப் பரவலைத் தடுக்க, பாதுகாக்க அரசு முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு எமது பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம். நோய்த் தொற்றுப் பரவாமல் இருக்க, உள்ளடங்கி இருப்பதுவும் பாதுகாப்பு இடைவெளியோடு இருப்பதுவும் தேவை என்பதைப் பரவலாக பரப்பி அதற்காக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது முடியும் நிலையில் நாம் இருக்கிறோம். ஒருவேளை நடப்பு நிலை கருதி மேலும் ஒருமுறையோ, சிலமுறையோ இந்த ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்ற நிலையில்தான் அதுகுறித்த சில முன்மொழிவுகளை உங்கள் முன் வைப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறோம். ஊரடங்கு காலத்தில் உணவுப்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 8

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 8

காட்சி – 8 இடம் : கிட்கிந்தையில் மலையும், காடும் அடர்ந்த ருஷ்யமுக பர்வதத்தின் ஒரு பகுதி. பாத்திரங்கள் : சுக்ரீவனும், அனுமானும். சுக்ரீவன் : இனிமேலும் நான் அரசனாக முடியும் என்று நீ நினைக்கிறாயா? அனும! அனு : ஏன் முடியாது சுக்ரீவா? சாதுர்யமும் சமயோசிதமும் நிறைந்த இந்த அனுமான் உன் அருகில் இருக்கும் போது, நீயேன் சாம்ராஜ்ய அதிபதியாக முடியாது? சுக் : *என்ன இருந்தாலும் என் அண்ணனுக்கு நான் அவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கக் கூடாது. அவனைக் குகைக்குள்ளே விட்டு, பாறையால் மூடி விட்டு, இறந்து விட்டதாக ஊரை ஏமாற்றி அவன் மனைவியைக் கைது செய்து அரசையும் கைப்பற்றிக் கொண்டேனே அது பெரிய துரோகமல்லவா? (* *கி.கா. 10-ம் சருக்கம் 11-28 ) அனு : துரோகம், பழி, பாவம் – இவைகளையெல்லாம் பார்த்தால், பலரும் புகழ பேரரசன் ஆக முடியுமா? சுக் : அதற்காக….? அனு...

தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண்

தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண்

பெருமதிப்பிற்குரியீர், வணக்கம்! தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண். இன்றைய நிலையில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கவும், அவசர நிலை என்ற காலகட்டத்தை கடந்து,  நிரந்தரமான தீர்வுக்கு  ஒரு தொலைநோக்கு பார்வையை முன்வைக்கவும் வேண்டிய கட்டாயத்தில் இந்தியா மற்றும் முக்கியமாக தமிழகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதுநாள்வரையில் இந்த இயக்கம் அரசின் சட்ட திட்டம் மற்றும் போலீஸ் நிர்வாகத்தின் கெடுபிடி கட்டாயங்களுடன் நடந்தேறுகிறது. நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும், தூய்மை பணியாளர்கள் மற்றும்  மருத்துவ பணியாளர்களின் தன்னலமற்ற முழு நேர உழைப்பின்  மூலமாகவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் பாராட்டுக்குரிய முனைப்பும், அரசு ஊழியர்களின் கடமையும், தூய்மை மற்றும் மருத்துவ பணியாளர்களின் சீரிய பணியும் சிறப்பாக இருப்பினும், நாம் எதிர் கொண்டிருக்கும்  கொரானா தொற்று நோய்  சவாலுக்கு நீண்டகால,  நிரந்தர தீர்வாக இவை அமையாது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன: முதலாவதாக, பெருமளவிற்கு மக்கள்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 7

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 7

காட்சி -7 இடம் : மதங்கவனத்திலே ஒரு பகுதி பாத்திரங்கள் : ராமன், லட்சுமணன். [ராமன் உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கிறான்; லட்சுமணன் ஒரு மான் குட்டியைக் கொன்று தூக்கி வருகிறான்.) ராமன் : சீதா; சிங்காரப் பெட்டகமே! சிந்தை நிறை அமுதே! என் உயிர் பறிக்கும் ஓவியமே! உன்னை எங்கேயடீ கண்டு தேடுவேன்… சீதா! லட்சு : (தலையில் அடித்துக்கொண்டு) அண்ணா! கொஞ்ச நேரம் சும்மா இருக்கமாட்டே நீ? ராமன் : லட்சுமணா! என் சீதையை இராவணன் இந்நேரம் என்ன பண்றானோ தெரியலையேடா! சீதா! உன் ராமன் காட்டிலே இப்படிக் கதறுகிறேனே, இது உன் காதிலே விழலையா? சீதா, சீதா…. (குதிக்கிறான்] லட்சு : சீதா! சீதா!! சீதா!! அவள் எக்கேடு கெட்டால் என்ன? எவன் தூக்கிக்கிட்டுப் போனால்தான் என்ன? அவள் செத்தால்கூட என்ன அண்ணா ! அப்படி மோசம் வந்துவிடும் உனக்கு? அவள் போனால் அயோத்தியிலே பேரழகி *பிரபாவதி இருக்கா;...

தமிழக அரசே, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்,  நீண்ட நாட்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய். – சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டறிக்கை

தமிழக அரசே, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய், நீண்ட நாட்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய். – சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டறிக்கை

சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டறிக்கை =================================== தமிழக அரசே, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய், நீண்ட நாட்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய். =================================== தமிழக அரசே ! கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகள் கடுமையான பொருளாதார, சுகாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிக விரைவாக கொரோனா பாதிப்பு பரவிக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிநபரும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி கொண்டிருக்கிறது இல்லையென்றால் கொரோனா தொற்று எளிதில் பரவும் என அறிவித்துள்ளது. மேலும் உடல் பலவீனமாக உள்ளவர்களை இந்த வைரஸ் விரைவாக தொற்றி உயிரிழப்பில் கொண்டுபோய் விட்டு விடும் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது இட நெருக்கடியில் வாடும் சிறையாளர்களைக்...

இணையக் கருத்தரங்கம்

இணையக் கருத்தரங்கம்

திவிக இணையதள பிரிவு இணையக் கருத்தரங்கம் இரண்டாம் கட்ட பட்டியல் https://m.teamlink.co/8111478740 இணைப்பு 8111478740 தினமும் காலை 11.30 மணிக்கு 31-3 அறிமுகம் – 1-4 தோழர் பெரியாரின் சமதர்மம் தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி 2-4 இடஒதுக்கீட்டு சிக்கல்கள் திவிக தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகர் 3-4 நாத்திகமும் அறிவியல் மனப்பான்மையும் பெரியாரிய சிந்தனையாளர் தோழர் எட்வின் பிரபாகரன் 4-4 மருத்துவ துறையில் திராவிட இயக்கத்தின் சாதனை தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர்  பிரசாந்த் 5-4 கொளுத்துவோம் மனுதர்மத்தை திவிக தஞ்சை மாவட்ட தலைவர் தோழர் சாக்கோட்டை இளங்கோவன் 6-4 மணியம்மையார் போர்க்குணம் தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் தேன்மொழி 7-4 பெரியாரியலாளர்களின் இயக்க பணிகள் திவிக தலைமைக்குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன் 8-4 தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர் வீரா கார்த்திக் 9-4 புத்தமும் பெரியாரியமும்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 6

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 6

காட்சி – 6 இடம் : இராவணன் அரண்மனையில் ஒரு பகுதி. பாத்திரங்கள் : இராவணன், சீதை, மேகநாதன், இரண்டொரு வீரர்கள். [சீதை தலைவிரி கோலமாக நிற்கிறாள்.) இராவ : ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இனி நீ வருந்திப் பயன் இல்லை. அந்த மூடர்கள் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் உன்னை அவர்களோடு அனுப்பிவிடுகிறேன், வருந்தாதே. மேக : தந்தையே! ஆரியச் சிறுக்கிக்கா இரக்கம்! அநீதி இழைத்தவன் மனைவிக்கா மரியாதை! இராவ : எதிரிக்கும் இரங்க வேண்டியது இலங்கையின் பண்பல்லவா மகனே? மேக : இரக்கத்தைக் கோழைத்தனமென்று கருதிவிடுவார்கள் இழிந்தவர்கள். இந்தச் சிறுக்கியைச் சித்திரவதை செய்ய வேண்டும். இவள் அங்கங்களைச் சிதைத்து அனுப்பினால்தான் ஆரியர்களுக்குப் புத்தி வரும். இனியேனும் யாருக்கும் தீங்கு இழைக்க மாட்டார்கள். இராவ : இந்திரசித்தா! ஆத்திரப்படாதே… அறிவிலா மூடர்கள் செய்த வேலையை நாமும் செய்யலாமா? நமக்குத் தீங்கு செய்தவர்கள் வெட்கப்படும் அளவுக்கு மரியாதை செய்ய வேண்டாமா? அதுதானே...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 5

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 5

காட்சி – 5 இடம் : பஞ்சவடி குடிசை பாத்திரங்கள் – ராமன், லட்சுமணன், சீதை. [வழக்கம்போல் குடித்துக் குலவிக் கொண்டிருக்கிறார்கள்.) ராமன் ; லட்சுமணா! நேற்ற நடந்த அஜமேத யாகத்துலே ஏண்டா நமக்கு சரியா பங்கு வரல்லே? இந்த ரிஷிப் பசங்களுக்கு யாகம் யாகம்னு ஊர்லே உள்ள ஆடுமாடுகளை எல்லாம் ஒழிச்சுக் கட்ட, நாம் உதவுறோம். நமக்கு என்னடான்னா ஒன்னும் சரியான பங்கே வரமாட்டேங்குதே! உம்…. லட்சும : அண்ணா ! நம்ம பசிக்கு இனிமே யாகத்துக்கு அஜம் போதாது கஜம் தான் வேணும். ராமன் : அதுக்கென்னடா நடத்தினா போச்சு (சீதையிடம்) பிரிய நாயகி! என்ன அவனையே பார்த்துகிட்டு இருக்கே! போய் நேற்று குதிரைக்கால் ரசம் வச்சேல்லே, அதிலே பாக்கியிருந்தா கொண்டா. [சீதை உள்ளே போனதும்.] லட்சும : ஏன் அண்ணா ! நானோ இளைஞன், வயிறு சரிந்து வாலிபம் குலைந்து நிற்கும் அண்ணியைப் பற்றி நீ ஏன்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 4

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 4

காட்சி – 4 இடம் – இராவணன் அந்தப்புரம். பாத்திரங்கள் : இராவணன், வண்டார்குழலி, மாரீசன், தண்டகாரண்யத்திலிருந்து வந்த அகம்பனன் என்ற ஒற்றன். அகம்பனன் : மன்னர் மன்ன! இராவணன் : யார், அகம்பனனா! என்ன? அகம் : மறத்தமிழ் பரம்பரைக்கு மாறா அவமானம். இராவ : என்ன! அகம் : ஆரியர்கள் அநீதி, அளவை மீறிவிட்டது அரசே! மாரீசன் : விவரமாகச் சொல். அகம் : ஆரிய ராம லட்சுமணர்கள், அன்னை காமவல்லியை உருக்குலைந்து விட்டனர். இராவ : என்ன! (மீசை படபடவெனத் துடிக்கிறது. கண்களில் பொறி பறக்கிறது) தகர்க்கப்பட்டதா தமிழனின் தன்மானம் ! மாறாத அவமானம் ! மாரீசன் : பதறாதே இராவணா! அகம்பனா! சொல்…. பிறகு? அகம் : அவமானம் தாங்காத அம்மையார், தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள், இராவ : (மிகுந்த சோகம்) என் குலக்கொடி மறைந்து விட்டாளா! தங்கையே, உனக்கு இந்த முடிவா கிட்ட...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 3

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 3

காட்சி – 3 இடம் : தண்டகாரண்யம் பாத்திரங்கள் : ராமன் சீதை, லட்சுமணன் (சீதை, நடுவிலிருக்க, ராமனும், லட்சுமணனும் இருபக்கங்களிலும் இருந்து கொண்டு கொஞ்சி குலவிக் கொண்டு; மூங்கில் குழாய்களில் மதுவை ஊற்றி மூவரும் அருந்திக் கொண்டிருக்கின்றனர்.) ராமன் : (போதையுடன்) லட்சுமணா! மது (சீதையைக் காட்டி) மாது மனுஷனுக்கு வேறு என்னடா வேணும்…? லட்சுமணன் : எனக்குத் தெரியாது அண்ணா ? ராமன் : என்னடா உளர்றே! லட்சுமணன் : (குடித்துக் கொண்டே எனக்குப் பாதி சுகம்தானே அண்ணா தெரியுது. (சீதையைப் பார்த்துக்கொண்டே ஒன்னு இல்லையே. (சீதை முறைக்கிறாள்.) ராமன் : (உடனே) சீதா – உம் நீ ஒன்னு போட்டுப் பாரேன்.. இல்லேன்னா நீயும் அசுர வம்சத்தைச் சேர்ந்தவளாயிடுவே சுராபானத்தின் சுகம் வேறு எதிலே இருக்கு? சாப்பிடு சீதே…. சும்மா சாப்பிடு. [சீதையிடம் கொடுக்க அவள் வாங்கிக் குடிக்கிறாள்.) லட்சுமணன் : என்ன அண்ணா ! சீதைக்கு...

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2 இடம் : இலங்கையில் இராவணன் கொலு மண்டபம். பாத்திரங்கள் : இராவணன், மேகநாதன், கும்பகர்ணன், விபீடணன், மற்றும் அமைச்சர்கள், சேனா வீரர்கள், மந்திரி சபையினர். [நாட்டின் ஆட்சி விவகாரங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.] மேகநாதன் : தந்தையே! அந்தத் தருக்கர்களின் கொட்டத்தை அடக்காவிட்டால், நாடு நாசகாரர்களின் வேட்டைக்காடாக மாறிவிடும் – விரைவிலே அந்த வீணர்களை ஒழிக்கத் திட்டம் தேவை! சேனாதிபதி : மன்னர் மன்ன! தமிழரசி, தங்கள் மூதாட்டி தடாதகை அம்மையார் தாக்கப்பட்ட போதே இதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். கும்பகர்ணன் : கொலையும் வேள்வியும் மட்டுமே அவர்கள் குறிக்கோளாக இருக்க முடியாது. கொடி போட்டு ஆளவும் திட்டம் இருக்கும் என்று நம்புகிறேன் அண்ணா ! இராவணன் : உம்: ஆச்சர்யம்! சிங்கக் கூட்டத்திலே சிறு நரிகள்; செந்தாமரை ஓடையிலே முதலைகள் ; தமிழகத்திலே ஆரியர்கள் ! வேட்டைக்கு வேறு இடம் கிடைக்கவில்லை...

இராமாயண நாடகம் – பால காண்டமும், அயோத்தியா காண்டமும்

இராமாயண நாடகம் – பால காண்டமும், அயோத்தியா காண்டமும்

பால காண்டமும், அயோத்தியா காண்டமும் காட்சி – 1 இடம் : காட்டில் வால்மீகி ஆசிரமம். பாத்திரங்கள் : வால்மீகி, சீதை, லவன், குசன். [மெளனமாக அமர்ந்திருந்த வால்மீகி தனக்குள்ளாகவே கூறிக்கொள்கிறார்.) “உண்மையை, உலகம் ஒரு நாள் அறிந்தே தீரப் போகிறது. ஏன் நாமே அதைக் கூறிவிடக் கூடாது.” [இப்பொழுது சீதையும் லவகுசர்களும் அங்கு வருகிறார்கள்.] வால்மீகி : காலம் வந்து விட்டது சீதா! காவியத்தைத் தொடங்கப் போகிறேன்; உன் கண்மணிகளின் இதயங்களிலே புதிய கருத்துக்களைத் தூவப் போகிறேன். சீதை : எல்லாம் உங்கள் கிருபை மகரிஷே! வால் : குழந்தைகாள்! ஏடுகளை எடுத்து வந்து என்னருகில் அமருங்கள். (குசனும் லவனும் ஏடு எழுத்தாணிகளுடன் வந்து வால்மீகியின் முன்னர் அமர்கின்றனர்.) வால் : கண்மணிகாள்! காலத்தைக் கடந்து நிற்கப் போகும் ஒரு மாகாவியத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்; உலகு கண்டு வியக்க இருக்கும் அம் மா ஓவியத்தைக் கவனமாகத் தீட்டி வாருங்கள்....

பாத்திரங்கள் – இராமாயண நாடகம்

பாத்திரங்கள் – இராமாயண நாடகம்

பாத்திரங்கள் திராவிடர்கள் இராவணன் – இலங்கை வேந்தன் மேகநாதன் (இந்திரசித் – இராவணன் மைந்தன் கும்பகர்ணன் – இராவணன் தம்பி வண்டார்குழலி (மண்டோதரி) – இராவணன் மனைவி அதிகாயன் – இராவணன் சேனாபதி மாரீசன் – இராவணன் மாமன் சபரி – தமிழ் மறையவரின் பெண் வாலி – கிட்கிந்தை, மன்னன் காமவல்லி (சூர்ப்பகை) – இராவணன் தங்கை கரன் – திராவிட மன்னன் தூஷணன் – கரனது சேனாதிபதி சம்பூகன் – திராவிடத் தவசி அகம்பணன் – ஒற்றன்     ஆரியர்கள் ராமன் – ஆரியர் தலைவன் லட்சுமணன் – ராமனின் தம்பி பரதன் – அயோத்தி அரசன் சத்துருக்கண் – ராமனின் தம்பி தசரதன் – ராமனின் தகப்பனாகக் கருதப்படுபவன்.

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள்

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள்

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள் தந்தை பெரியார் எழுதிய ராமாயணப் பாத்திரங்கள். கடலங்குடி பண்டித நடேச சாஸ்திரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு. C.R. ஸ்ரீனிவாச அய்யங்கார் B.A., எழுதிய வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு. A.V. நரசிம்ம ஆச்சாரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு கோவிந்த ஆச்சாரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு. பண்டித மன்மதநாத்தத்தர் எழுதிய வங்களா & ஆங்கில ராமாயண ஆராய்ச்சி ஆகியவையாகும். “சுமித்திரை, கோசலை, கைகேயி என்ற தசரதன் மனைவியர்கள் முறையே ஹோதா, அத்வர்யூ. உத்காதர என்ற ரிஷிகளுக்குப் பெற்ற பிள்ளைகளே ராம. பரத லஷ்மண சத்துருக்கணர்கள்.” – மன்மதநாத்தத்தர் ராமன் சீதையை பட்டமகிஷியாக மணம் புரிந்து கொண்டிருந்தாலும் போகத்துக்கா ஸ்ரீதாமா, சுதாமா, ரதினிபா, பிரபாவதி போன்ற பல பெண்களை வைத்துக் கொண்டிருந்தான். வால்மீகி ராமாயணம் அயோத்தியாகாண்டம் 3-ம் சருக்கம்; By C.R. சீனிவாச அய்யங்கார் B.A.   திரு ஸ்ரீனிவாச அய்யங்கார் தனது...

இராமாயண நாடகம் – தந்தை பெரியார் அவர்களின் மதிப்புரை

முதற் பதிப்புக்கு தந்தை பெரியார் அவர்களின் மதிப்புரை தோழர் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய இராமாயண நாடகம் என்னும் இப் புத்தகத்திற்கு என்னை ஒரு மதிப்புரை எழுதித் தரும்படி கேட்டார். எனக்குள்ள பல நெருக்கடியும் அவசரமுமான வேலைகளுக்கிடையில் இப் புத்தகம் முழுவதையும் தொடர்ச்சியாகப் படித்துப் பார்க்க நேரம் இல்லாததால் மேற்போக்காகவும், அங்குமிங்குமாகவும் பல பக்கங்களைப் படித்தேன்; அதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், இப்போது நாட்டில் பார்ப்பனர்களும் புலவர்களும் இராமாயணத்தைப் பற்றிச் செய்து வரும் இராமாயணப் பிரச்சாரம், எவ்வித பொறுப்பும் கவலையும் இல்லாமல் மக்களுக்கு இராமாயணம் பற்றி இருந்து வரும் பக்தியையும் மூட நம்பிக்கையையும் அவர்கள் தங்களுக்கு ஆதரவாகக் கொண்டு, தங்கள் இஷ்டப்படி இராம பக்தி பெருகவும் மூட நம்பிக்கை வளரவும் பார்ப்பன உயர்வுக்கு ஏற்பவும் தக்கவண்ணம் பிரச்சாரம் செய்து வருவதைக் கண்டு வேதனைப்பட்டு, பாமர மக்கள் இடையில் இருக்கும் மூட பக்தியையும் இராமாயண சம்பந்தமான மூடநம்பிக்கையையும் எப்படியாவது ஒழிக்கவேண்டும் என்கிற...

சங்க தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழா

சங்க தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழா

கோவை மாவட்ட கலைக்கூடத்தில் நடந்த கட்டிட தொழிலாளர் சங்கம் நடத்திய சங்க தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழாவில், கழகத்தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு நலவாரிய அட்டைகள் வழங்கியதுடன் சிறப்புரையாற்றினார். மேலும், பாவேந்தர் பாரதிதாசன் பேரவை. புலவர் செந்தலை கவுதமன் மற்றும் சூலூர் பன்னீர்செல்வம், சூலூர் பாபு, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பெரியார் முழக்கம் 12032020 இதழ்

பேராசிரியர் அறிவரசன் முடிவெய்தினார்

பேராசிரியர் அறிவரசன் முடிவெய்தினார்

தென்காசி – கடையம் நகர் இல்லத்தில் பேராசிரியர் அறிவரசன் 4.3.2020 அன்று இரவு 7.00 மணியளவில் முடிவெய்தினார். ஆழ்வார் குறிச்சிக் கலை அறிவியல்  கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி 1996இல் ஓய்வு பெற்றவர். இயற்பெயர் குமாரசாமி. அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கிய தமிழ்க்காப்புப் போர்வாள்களில் ஒருவர். அங்குத் தமிழ்ப் பேராசிரியராகத்  திகழ்ந்த மு. அருணாசலம், இவரின் பெரியப்பா. ஈழத்தில் வாழ்ந்த நினைவுகளை ‘ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்’ எனும் நூலாக எழுதியுள்ளார். நூலைச் சென்னை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மீனாட்சிபுரம் மதமாற்றத்தை ‘விடுதலைபுரம்’ என்னும் காப்பியமாகப் பாடியுள்ளார். மதமா? மனிதமா?,  யார் இந்த இராமன்?,  திராவிடர் இயக்க வரலாறு, சோதிடப் புரட்டு – முதலிய நூல்களின் ஆசிரியரான இவர் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளில் உறுதி காட்டியவர். ‘விடுதலை’, ‘உண்மை’ இதழ்களின் துணையாசிரியராக முன்பு பணியாற்றியவர்.  ‘மக்கள் தாயகம்’ எனும் மாத இதழைக் கடையத்திலிருந்து தொடர்ந்து நடத்தி வந்தார். கடையம் திருவள்ளுவர் கழகத்தை  நிறுவிச்  செயல்பட்டு...

பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன் படத்திறப்பு

பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன் படத்திறப்பு

பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன் நினைவேந்தல் தலைமை கழக அலுவலகத்தில்  04.03.2020 அன்று மாலை 6:30 மணியளவில் தொடங்கியது.  தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் வரவேற்புரையாற்றினார். தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தலைமையில் நிகழ்வு நடந்தது. வட சென்னை மாவட்டத் தலைவர் யேசுகுமார் முன்னிலை வகித்தார்.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி படத்தைத் திறந்து வைத்தார்.  கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். நிகழ்வை தென் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தொகுத்து வழங்கினார். சூலூரில் : 01.03.2020 அன்று சூலூர் அறிவியல் பூங்காவில் (எஸ். ஆர். எஸ்.மண்டபம்) ஆசிட் தியாகராசன் படத்திறப்பு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மறைந்த தோழர் ஆசிட் தியாகராசன் படத்தை திறந்து வைத்து அவரின் களப்பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். தொடர்ந்து கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்...

கழக ஏடுகளுக்கு சந்தா : கழகப் பொறுப்பாளர்கள் நேரில் வருகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா : கழகப் பொறுப்பாளர்கள் நேரில் வருகிறார்கள்

பெரியார் முழக்கம் மற்றும் நிமிர்வோம் சந்தாக்களைப் பெறுவதற்காக தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தோழர்களைச் சந்திக்க நேரில் வருகிறார்கள். 20.03.2020 – வெள்ளிக்கிழமை காலை. 10 மணிக்கு – திருச்சி, பெரம்பலூர் மாவட்டம். மாலை 5 மணிக்கு தஞ்சை மாவட்டம். 21.03.2020 – சனிக்கிழமை காலை 10மணிக்கு – நாகை மாவட்டம், மயிலாடுதுறை. மாலை 5 மணிக்கு கடலூர் மாவட்டம். 22.03.2020 – ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு – விழுப்புரம், கள்ளக்குறிச்சி. மாலை 5 மணிக்கு ஆத்தூர். மேற்குறிப்பிட்ட மாவட்ட கழகத் தோழர்கள் இதற்கான ஏற்பாடுகள் செய்து சந்தாக்களை விரைந்து முடித்து கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெரியார் முழக்கம் 12032020 இதழ்

சென்னை கருத்தரங்கில் வாலாஜா வல்லவன் பேச்சு ‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது

சென்னை கருத்தரங்கில் வாலாஜா வல்லவன் பேச்சு ‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது

திருச்சி பெரியார் சரவணன் எழுதிய ‘திராவிடர் விவசாய சங்கம்’ நூலின் திறனாய்வு கருத்தரங்கம் 01.03.2020 அன்று சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி சென்னை மாவட்டப் பொறுப்பாளரும் பெரியாரிய ஆய்வாளருமான வாலாசா வல்லவன் நிகழ்த்திய உரை: திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தை பெரியார் 1952இல் தொடங்கி இருக்கிறார்கள். அது குறித்த இந்த புத்தகம் திராவிடர் விவசாய தொழிலாளர் கழகத்தின் அமைப்பினுடைய நோக்கங்கள் பற்றி 1952இல் வெளிவந்தது. தற்போது 2016ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் ஏன் சங்கம் வைத்திருக்கின்றனர், நாம் ஏன் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றி பெரியார் சொல்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி அப்போது ஒன்று தான். இந்திய பொதுவுடமைக் கட்சி. சோவியத்தி லிருந்து கட்டளை வந்தால் டெல்லி அதை ஏற்கும். இங்கிருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு பார்ப்பனிய சூழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் இந்த மண்ணிற்கு உண்டான ஒரு...

அரசுப் பள்ளிகளில் பட்டியல் பிரிவு குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய பணிப்பதா? சட்ட நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர் கழகம் புகார்

அரசுப் பள்ளிகளில் பட்டியல் பிரிவு குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய பணிப்பதா? சட்ட நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர் கழகம் புகார்

கோவை மாநகர கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 காலை 11 மணியளவில் வ.உ.சி. பூங்கா அருகிலுள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.  அதில்கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தோழர் ஃபாரூக் நினைவு நாளை ஒட்டி 17.03.2020 அன்று  அண்ணாமலை அரங்கில் கருத்தரங்கம் மற்றும் மறைந்த  தோழர்கள் பேராசிரியர் அன்பழகன்,  ஆசிட் தியாகராஜன், இராவணன் ஆகியோரது படத்திறப்பு நடத்துவது. 09.03.2020 திங்கள் கிழமை அன்று அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளை  கழிவறைகளை அகற்ற வற்புறுத்தும் ஜாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு துறை ரீதியாக மட்டுமே நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து ஆசிரியர்கள் ஜெயந்தி, குமரேஷ்வரி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் காலை 10 மணிக்கு மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது . இதில் தோழர்கள் செ. வெங்கடேசன்,  ச. மாதவன், ஆ.சுரேஷ்,  நா.வே. நிர்மல்குமார் ப.கிருட்டிணன்   மா.நேருதாசு ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் முடிவின்படி 9.3.2020 திங்கள் அன்று  கோவை  மாவட்டத்தில்...

குனிந்து கிடந்தவனை நிமிர வைத்தது திராவிடர் இயக்கம்

குனிந்து கிடந்தவனை நிமிர வைத்தது திராவிடர் இயக்கம்

அரை நூற்றாண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி சாதனையாக எதைச் சொல்வீர்கள்? நான் வசித்த மயிலாடுதுறையில் மகாதேவ தெரு, பட்டமங்கலம் தெரு என்று இரண்டு தெருக்கள் உண்டு. பிராமணர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெரு. அவர்கள்தான் வழக்கறிஞர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவர்களாக இருப்பார்கள். சாமானிய மக்கள் அன்றைக்கு அந்தத் தெருக்களில் நுழைந்தாலே, ‘சாமி வீட்டுக்குப் போகிறேன்’ என்று சொல்வார்கள். அய்யர் வீடு என்றுகூட சொல்ல மாட்டார்கள். ‘எந்தச் சாமி வீட்டுக்குப் போகிறாய்?’ என்று கேட்டால், ‘டாக்டர் சாமி வீட்டுக்குப் போகிறேன்; வக்கீல் சாமி வீட்டுக்குப் போகிறேன்’ என்று பதில் வரும். அவ்வளவு பய பக்தி! பிள்ளைவாள் வரச் சொன்னார், முதலியார் வீடு வரை போய் வருகிறேன் இப்படி எல்லோருமே சாதியால்தான் குறிப்பிடப் பட்டார்கள். மேல்சாதி என்று சொல்லிக் கொள் பவர்களுக்கு இதில் உள்ள பேதம் புரியாது. ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை எப்படி அழைத்திருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். எனக்கு விவரம் தெரிந்து முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வீடுகளில்...

பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் கார்ப்பரேட் கொள்ளைக்கு மற்றொரு சான்று ‘எஸ்’ வங்கி ‘திவால்’

பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் கார்ப்பரேட் கொள்ளைக்கு மற்றொரு சான்று ‘எஸ்’ வங்கி ‘திவால்’

பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் பிடியில் உள்ள வங்கிகள் கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்கும், தொழிலதிபர்களிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு கடன் வழங்குவதற்குமே பெரிதும் பயன்பட்டு வருகின்றன. பார்ப்பன ஆதிக்கத்திலுள்ள ‘அய்சி.அய்.சி.அய்.’ வங்கியின் நிர்வாக இயக்குனராக இருந்த ஒருவர் ஊழலில் சிக்கி இப்போது சி.பி.அய். விசாரணையில் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார். இப்போது ‘எஸ்’ என்ற தனியார் வங்கி திவாலாகியிருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு ரிசர்வ வங்கி கண்காணிப்பின் கீழ் உள்ள இந்தத் தனியார் வங்கி, கடனாக வழங்கிய தொகை ரூ.55,633 கோடி. இது மார்ச் 2019இல் ரூ.2,44,999 கோடியாக சுமார் 8 மடங்கு உயர்ந்தது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மக்கள் சேமிப்பிலிருந்து இந்தத் தொகை கடனாக ‘தானம்’ செய்யப்பட்டு, பிறகு திருப்பித் தராமல் ‘பட்டை நாமம்’ சாத்தப்பட் டுள்ளது. 2014லிருந்து 2019ஆம் ஆண்டு வரை நடந்த பா.ஜ.க. ஆட்சியில் மேலிட செல்வாக்குடன் கடன் பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் மோசடி...

சென்னையில், டெல்லி கலவரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னையில், டெல்லி கலவரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் இதுவரை 53 பேர் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடப்பட்டன. இஸ்லாமியர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. 02.03.2020 அன்று மாலை 4:30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உரிமைக்காகப் போராடிய மக்களைத் தாக்கியதைக் கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், கலவரக்காரர் களைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, சிபிஐ(எம்.எல்) ரெட் ஸ்டார், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், எஸ்டி.பி.அய், தமிழ்த் தேசியப் பேரியக்கம், பி.எஃப்.அய், மக்கள் அரசுக் கட்சி, மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி, தமிழர் விடியல் கட்சி, தமிழ்த் தேச மக்கள் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் கலந்து கொண்டன. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு டெல்லி கலவரத்தின்...

கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

இனமானப் பேராசிரியர் அன்பழகன், தனது 98ஆவது அகவையில் மார்ச் 7, 2020இல் முடிவெய்தினார். திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவர். தமிழையும் சுயமரியாதைக் கொள்கைகளையும் தனது இரு கண்களாகப் போற்றியவர். மிகச் சிறந்த பேச்சாளர். மாணவப் பருவத்திலிருந்தே அவரது திராவிடர் இயக்கப் பயணம் தொடங்கி விட்டது. தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகாலம் இருந்து கலைஞரின் உற்ற துணைவராக செயல்பட்டவர். மிக மிக எளிமையானது அவரது வாழ்க்கை. 7 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். பெரியார் குறித்து ஆழமான அவரது உரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கடவுள் – ஜாதி – மதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர். ஒரு கடவுள் மறுப்பாளர் 98 வயது வரை வாழ முடியும் என்ற செய்தியையும் அவரது மரணம் உணர்த்தி நிற்கிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். மதச் சடங்குகள் ஏதும் இன்றி திராவிடர் இயக்க அடையாளங்களோடு அவரது இறுதி நிகழ்வுகள் நடந்தன. திராவிடர்...

மாநிலங்களவையில் அதிர்ச்சித் தகவல்  ‘அய்.அய்.டி’களில் ‘இடஒதுக்கீடு’ மறுப்பு

மாநிலங்களவையில் அதிர்ச்சித் தகவல் ‘அய்.அய்.டி’களில் ‘இடஒதுக்கீடு’ மறுப்பு

பார்ப்பனப் பிடியில் உள்ள அய்.அய்.டி. உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியல் இனப் பிரி வினருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடுகள் முழுமையாக நிரப்பப்படுவது இல்லை என்ற புள்ளி விவரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை முனைவர் பட்டத்துக்கான தேர்வுத் திட்டங்களில் பட்டியலின பழங்குடிப் பிரிவு மாணவர்கள் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் கடந்த வெள்ளிக் கிழமை (மார்ச் 6, 2020)அரசு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விவரங்கள் அடங்கியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமுள்ள 23 அய்.அய்.டி. நிறுவனங்களில் 25007 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டனர். இதில் பட்டியல் இனப் பிரிவு மாணவர் 9.1 சதவீதம் மட்டுமே. பழங்குடிப் பிரிவினர் 2.1 சதவீதம் மட்டுமே. இரு பிரிவினருக்கும் சேர்த்து 22.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாதியளவுகூட நிரப்பப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டிருப்பதோ 23.2 சதவீதம்தான்...

சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் மேட்டூரில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் தொடக்கம்

சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் மேட்டூரில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் தொடக்கம்

சேலம் மேற்கு மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழகத்தின் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் சார்பாக முதல் கலந்துரையாடல் கூட்டம் 26.01.2020 கொளத்தூர் பெரியார் படிப்பகத்தில் பகல் 12.00 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈசுவரன் முன்னிலையிலும்  நடைபெற்றது. அதற்கு முன்பாக கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குருதிக் கொடை முகாமில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தோழர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் முதல் கூட்டத்தில் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளராக மே.கா. கிட்டு அறிவிக்கப் பட்டார். தலைமை செயற்குழு உறுப்பினர் அ.சக்திவேல்  அறிமுக உரைக்கு பின்னர்  வாசகர் வட்டத்தில் நவம்பர்,  டிசம்பர் 2019 மாத ‘நிமிர்வோம்’ இதழில் வெளிவந்த கட்டுரைகளை பற்றிய விவாதத்தினை வாசகர் வட்ட பொறுப்பாளர் மே.கா. கிட்டு விளக்கினார். மேலும் இனி ஒவ்வொரு மாத இறுதியிலும் நிமிர்வோம் வாசகர்...

ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

23.02.2020 அன்று மாலை 4 மணிக்கு சூஞசு சூசுஊ ஊஹஹ குடியுரிமைச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி ஈரோட்டில் செல்ல பாட்ஷா வீதியில் (ஈரோடு தினசரி மார்கெட் பின்புறம்) இஸ்லாமிய பெண்கள் பெரும் திரளாக நடத்தும் உரிமை மீட்பு தொடர் முழக்க 3ஆம் நாள் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் கூறினார். தனது உரையில் இது அனைத்து மக்களுக்குமான பாதிப்பு என்று உணராமல் பல்வேறு மக்கள் இன்னும் அமைதி காப்பதாகவும் தோழர்கள், குறிப்பாக பெண்கள் முன்னெடுத்து போராடுவது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியது என்றும் தன் நீண்ட உரையில் குறிப்பிட்டார். திராவிட முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்த சட்டங்களுக்கு எதிராக எப்போதும் போல் திமுக அரணாக நின்று காக்கும் என்று தன் உரையில் குறிப்பிட்டார். 500 பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த சட்டங்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி...