Category: குடி அரசு 1926

ஒரு சம்பாஷணை 0

ஒரு சம்பாஷணை

கருப்பண்ணன் :- என்ன சுப்பண்ணா! இந்த பார்ப்பனர் மாத்திரம் சின்ன பையன்களுக்கெல்லாம் கலியாணம் செய்து விடுகிறார்களே. அதென்ன சங்கதி? சுப்பண்ணன் :- ஓ! இது உனக்குத் தெரியாதா? இவர்களுக்கு பிச்சை வாங்கி பிழைப்பதுதானே வேலை. ஆதலால் நம்முடைய பெரிய வர்கள் கலியாண மானவனுக்கு ஒரு அணா, கலியாணமாகாதவனுக்கு காலணா கொடுக்கிற வழக்கம். ஆதலால் சின்னப் பையனுக்கும் சின்னப் பெண்ணுக்கும் ஒரு அணா கிடைக்கட்டுமென்று கலியாணம் செய்து விடுகிறார்கள். கருப்பண்ணன் :- அப்படியா! இதற்காகத்தானா இவ்வளவு பெரிய அனியாயம். பிச்சை கொடுப்பவர்களுக்கு எப்படி கலியாணம் ஆனதும் ஆகாததும் தெரியும். சுப்பண்ணன் :- கலியாணமான சின்னப் பையன்கள் வடக் கயிறு போல பூணூலை மொத்தமாகப் போட்டிருப்பார்கள். கோவணம் வைத்து வேஷ்டி கட்டிக் கொள்ளுவார்கள். அந்தச் சிறு பெண்களும் கோவணம் போட்டு சீலை கட்டிக் கொள்ளுவார்கள். தாலியை நன்றாய் வெளியில் காட்டிக் கொள்ளுவார்கள். கருப்பண்ணன் :- சரி,சரி. இப்பொழுது எனக்கு நன்றாய் விளங்கிற்று. இந்த பிச்சைக்...

பூனா பார்ப்பனரின் கர்மபலன்                           கண்டனக் கூட்டம் 0

பூனா பார்ப்பனரின் கர்மபலன் கண்டனக் கூட்டம்

பூனா பிராமணர்கள் பெரும்பாலும் லோகமானிய திலகர் என்றழைக் கப்படும் கடும் வர்ணாசிரமியான ஸ்ரீமான் திலகர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். மகாத்மா காங்கிரசுக்கு முந்திய காங்கிரசுகள் இப்போதைய காங்கிரசைப் போலவே பார்ப்பனக் காங்கிரசாயிருந்ததாலும் இப்போதைய ‘தலைவர்கள்’ ஸ்ரீமான்கள் பண்டித நேரு, பண்டித சரோஜினி, எஸ்.சீனிவாசய்யங்கார், எ. ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே. ஆச்சாரியார், சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் இந்திய தேசத் தலைவர்களாயிருப்பது போலவே அப்போதும் ஸ்ரீமான்கள் திலகர், மாளவியா முதலிய பார்ப்பனர்களே தலைவர் களாயிருந் தார்கள். இப்போது இவர்கள் பார்ப்பனப் பத்திரிகைகளாலும் பிரசாரத்தாலும் படம் வைத்து கும்பிடத் தகுந்தவர்களாயிருந்த போதிலும், சமுதாய விஷயத் திலும் சமத்துவ விஷயத்திலும் ஸ்ரீமான் திலகர் நமது ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாருக்கு ஒரு படி முன்னால் இருப்பவர். அப்பேர் பட்டவர் பத்திரிகை உலகத்திலும், பிரசார உலகத்திலும், அரசியல் உலகத்தி லும் சிரேஷ்ட்டமாய் விளங்கி செல்வாக்கோடு வாழ்ந்த ஊராகிய பூனா நகரத்தில் பார்ப்பனா திக்கம் எவ்வளவு வளர்ந்திருக்கும், எவ்வளவு குடி கொண்டிருக்கும் என்பது...

தீண்டாமையும் பார்ப்பனரும்  முனிசிபல் சட்டத்தில்                                         ஸ்ரீமான் வீரய்யனின் திருத்த மசோதா 0

தீண்டாமையும் பார்ப்பனரும் முனிசிபல் சட்டத்தில் ஸ்ரீமான் வீரய்யனின் திருத்த மசோதா

இவ்வாரம் நடைபெற்ற சென்னை சட்டசபைக்கு ஸ்ரீமான் வீரய்யன் அவர்கள் முனிசிபல் சட்டத்திற்கு ஒரு திருத்த மசோதா அனுப்பியிருந்தார். அதாவது “பொதுத் தெருவை எவரேனும் உபயோகிக்க முடியாமல் தடுப் பவருக்கு 100 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கலாம்” என்று ஒரு பிரிவை அதில் சேர்க்க வேண்டும் என்று அனுப்பியிருந்தார். அது பிரேரே பணைக்கு வரும்போது சில பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிப் புத்தியின்படி அதைக் கொல்ல சட்ட சம்பந்தமான ஆnக்ஷபணைகளை எழுப்பி விட்டார் கள். தாங்கள் பார்ப்பனர் சந்ததியார்கள் என்று சொல்லிக் கொள்வதால் பெருமைப் படும் சில பார்ப்பனரல்லாதாரும் ரகசிய வருணாசிரம தர்மிகளும் அதற்கு உடந்தையாயிருந்து இந்த சபையில் அதை நிறைவேறாமல் செய்துவிட்டார்கள். பொதுத் தெருவை பொதுமக்கள் உபயோகப்படுத்திக் கொள்வதைத் தடுத்தவர்களுக்கு அபராதம் போடலாம் என்றால் அதை ஆnக்ஷபிப்பதற்கு நமது நாட்டில் ஜனங்கள் இருக்கும் போதும், அப் பேர்ப்பட்டவர்களை சட்டசபைக் குத் தெரிந்தெடுக்கக்கூடிய பைத்தியக்கார ஓட்டர்கள் நமது நாட்டில் மலிந்தி ருக்கும் போதும், வெள்ளைக்காரரைப்...

முளையிலேயே வெருப்பு 0

முளையிலேயே வெருப்பு

பார்ப்பனர் தங்கள் குழந்தைகளை சிறு பிராயம் முதற் கொண்டே நம்மை தாழ்ந்த ஜாதியார் என்று நினைக்கும்படி பழக்கி வருகிறார்கள். அதாவது, தங்கள் குழந்தைகளை “அடீ!அடீ!! அவள் மீது படாதடி; அவள் சூத்திரச்சிடீ; அவள் மீது பட்டு விட்டையே! போய் பாவாடையை நனைத்து குளித்து விட்டுவா என்று பெண் குழந்தைகளுக்கும், அடே சூத்திரன்கள் மேலெல்லாம் பட்டு அவன்களை தொட்டூட்டு வந்துட்டையே! போ! போ! போயி குளிச்சூட்டு வா என்றும், பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குப் போன வுடன் பாவாடையை அவிழ்த்து வை, துண்டை அவிழ்த்து வை என்றும் சொல்லி நம்மிடம் அதுகளுக்கு ஒரு இழிவை சொல்லி கற்பிக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஏதாவது ஏனம்மா பள்ளிக்கூடத்திற்கு போனதற்காக துண்டை அவிழ்த்து வைக்கச் சொல்லுகிறாய் என்று கேட்டால், “என்னடி அங்கு போய் சூத்திரக் குட்டிகளோடு நெருங்கி உட்கார்ந்து அவர்களை எல்லாம் தொட்டுவிட்டு இங்கு வந்து வீட்டிற்குள் புகலாமா?” என்கிறார்கள். இதிலிருந்து அந்தக் குழந்தைகளுக்கு முளையில் இருந்தே பிராமண ரல்லாதாரிடம்...

லாலாஜியும் சுயராஜ்யக்  கட்சியும் 0

லாலாஜியும் சுயராஜ்யக் கட்சியும்

ஒத்துழையாமையையும், மகாத்மா காந்தியையும் ஒழிப்பதற்கென் றும் நமது தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகள் செய்தும் பயன் படாமல் போனது கண்டு, கடைசியாக வங்கத்து வீரரும் ஸ்தோத்திரப் பிரியருமான ஸ்ரீமான் தாஸ் அவர்களைப் பிடித்து அவருக்குப் பட்டா பிஷேகம் செய்வதாய் ஏமாற்றி அவரை விபூஷணராக்கி அவரைக் கொண்டு தங்கள் எண்ணிய எண்ணத்தை முடித்துக் கொண்டார்கள். அது சமயம் தங்களுக்கென்று ஒரு கக்ஷியிருப்பதாயும் அதற்கு பொது ஜனங்கள் ஏமாறத்தக்க வண்ணம் பஞ்சாப், கிலாபத் சுயராஜ்யக் கக்ஷி என்று பெயரு மிட்டு ஒரு பொய் மாயமானை சிருட்டித்தார்கள். பெயர் நீளமாயிருப்பதாக பலர் பரிகாசம் செய்யவே அதை சுயராஜ்யக் கக்ஷி என்று சுருக்கிக் கொண்டார்கள். இக்கட்சியின் உற்பத்தியையும், வளர்ச்சியையும் மனப்பூர்வ மாய் அறிந்தும் தன் காலிலேயே நிற்கக் கூடிய சக்தி இல்லாத சில தலைவர் கள் என்போர்களும் தேசீயப் பத்திரிகை என்பதுகளும், அப்பொய்மானை எதிர்க்க சக்தியில்லாதவர்களாகி, சமயம் வரும்போது நாமும் ஒரு கல்லைத் தூக்கிப் போடலாம் என்கிற...

நமது துணை ஆசிரியர் விலகுகிறார் 0

நமது துணை ஆசிரியர் விலகுகிறார்

“குடி அரசு”க்குத் துணை ஆசிரியராயிருந்து வரும் திருவாளர் மணவை ரெ. திருமலைசாமி செப்டெம்பர் மாதம் 1-ம் தேதி முதல் நமது ஆசிரியர் குழாத்திலிருந்து விலகுகிறார். இனி அவர் ஐப்பசி மாதம் முதல் திருசிரபுரத்திலிருந்து அரசியல், இலக்கியம், சமத்துவம் ஆகிய துறைகளில் நின்று “சிவாஜி” என்ற பெயரை மருவி ஏழை மக்களின் தோழனாய் வெளி வரப் போகும் வாரப் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தை ஏற்றுக் கொள்ளுவார். இற்றைவரை “குடி அரசு” காரியாலயமிட்டு அவருக்குக் கடிதம் முதலியன எழுதி வந்த அன்பர்கள் இனி திரு. மணவை. ரெ. திருமலைசாமி, காஜாப்பேட்டை, திருச்சிராப்பள்ளி என்ற விலாசத்திற்கு எழுதுமாறு தெரி வித்துக் கொள்ளுகிறோம். ( ப.ர் ) குடி அரசு – செய்திக் குறிப்பு – 29.08.1926

ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியாரிடத்தில் பார்ப்பனர்களுக்குள்ள அபிமானம் 0

ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியாரிடத்தில் பார்ப்பனர்களுக்குள்ள அபிமானம்

ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காருக்கு ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியா ரிடம் அனுதாபமிருந்து அவரை முனிசிபல் கவுன்சிலராக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமானால் பார்ப்பனர்கள் ஓட்டு அதிகமாயிருக்கும் திருவல்லிக்கேணி வார்டில் போட்டு கவுன்சிலர் பதவியை ஏன் அவருக்கு செய்து வைத்திருக்கக்கூடாது? பட்டத்தையும் விட்ட “பரிசுத்தமான ஒத்து ழையா தத்துவம் கொண்ட காங்கிரஸ்வாதி” இப்போது ஸ்ரீமான் அய்யங்கார் கூட்டத்தில் நமது ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாரை விட வேறு யார் இருக் கிறார்கள்? அல்லாமலும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் இன்னமும் இதற்கு முன்னும் வக்கீல் உத்தியோகம் செய்து வருகிறார். சர்க்கார் நியமன பதவிகளும் சிலவற்றை வைத்துக்கொண்டிருக்கிறார். இவரை விட ஸ்ரீமான் செட்டியார் எந்த விதத்தில் குறைந்தவர்? அல்லாமலும் இந்த பார்ப்பனர் வார்த்தையைக் கேட்டு நடந்ததின் பலனாக பார்ப்பனரல்லாத சமூகத்தில் செட்டியாருக்கு இதுசமயம் செல்வாக்கும் குறைந்துபோயிருக்கிறது. இந்த விஷயம் சேப்பாக்கம் டிவிஷனில் செட்டியார் தோல்வியுற்றதினாலும் ராயப்பேட்டை டிவிஷனுக்கு பட்டம்விட்ட நமது செட்டியாரைப் போடாமல் பட்டம் தாங்கும் ஸ்ரீமான் ராவ்பகதூர்...

யாரை யார் மோசஞ் செய்தார்கள்? 0

யாரை யார் மோசஞ் செய்தார்கள்?

ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது “பார்ப்பனராகிய நான் யாரையும் ஏமாற்றவில்லை, பார்ப்பனரல்லா தாராகிய ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்னை ஏமாற்றி விட்டார்” என்று சொன்னாராம். நாயக்கர் எந்த விதத்தில் ஸ்ரீமான் அய்யங்காரை ஏமாற் றினார் என்பதையும் கூடவே சொல்லியிருந்தால் கண்ணியமாயிருந்திருக் கும். அப்படிக்கில்லாமல் பொதுப்படையாய்ச் சொல்லுவது விஷமத்திற் காக என்றே தான் சொல்ல வேண்டும். ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் திருச்சியில் கூட்டிய மாகாணக் காங்கிரஸ் கமிட்டி பொதுக்கூட்டத்தில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுகாரவர்கள் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாய் ஒரு தீர்மானம் கொண்டுவந்த சமயத்தில் நாயுடு காரைப் பார்த்து “எப்படியாவது இந்த தீர்மானத்தை இதுசமயம் வாபீசு வாங்கிக் கொள்ளுங்கள்; மூன்று மாதம் பொறுத்தவுடன் இதற்கு நான் வகை செய்கிறேன்” என்று சொல்லி நாயக்கரையும் ஸ்ரீமான் நாயுடுகாரையும் கெஞ்சி நம்பச் செய்து அதைப் பின்வாங்கிக் கொள்ளும்படி செய்தார். காஞ்சீபுரம் மகாநாட்டில் நாயக்கரும், ஸ்ரீமான் இராமநாதனும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானம் கொண்டு வந்த சமயத்திலும்...

தென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஆபத்து 0

தென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஆபத்து

சென்னை சட்டசபைக்கு ஜமீன்தாரர்களின் நன்மையை உத்தேசித்து சில ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஸ்தானங்களுக்கு இதுவரையில் அது எந்த உத்தேசத்தைக் கொண்டு ஒதுக்கி வைக்கப்பட்டனவோ அது போலவே நபர்களும் தெரிந் தெடுக்கப்பட்டு வந்தனர். ஏறக்குறைய  ஜமீன்தார்கள் என்கிற பாகுபாடு பெரும்பாலும் பழைய காலத்தில் அரசர்களாகவோ சிற்றரசர்களாகவோ பெரிய பாளையப் பட்டுகளா கவோ அரசாங்கப் பொறுப்பை வகித்தவர்களாகவோ மிக்க பெருமையோடு வாழ்ந்த குடும்பங்கள் என்பதாகவோ இருந்த சமூகத்தை ஆங்கில அரசாக்ஷி ஏற்பட்ட பிறகும் அவர்களை அந் நிலைமையிலேயோ அல்லது அந்த சமூகத்தின் ஞாபகக் குறிப்பாவது இருக்கும்படியாகவோ கருதி நமது அரசாங் கத்தார் அவர்களை கௌரவிக்கும் முகத்தான் அவர்களுக்கென்று பல சட்ட திட்டங்களும் சலுகைகளும் கொடுத்து கூடியவரை அவைகள் மறைந்து போவதற்கில்லாமலும் அந்தந்த குடும்பங்களுக்கு ஒரு தனி கௌரவம் இருக்கும்படியாகவும் செய்து வருகிறார்கள். இதன் பலனாகவே நமது சென்னை சட்டசபைக்கும் இந்த ஜமீன் தாரர்களின் நன்மையையும் அவர்களது கௌரவத்தையும் தனியே உத்தே சித்து அவர்களுக்கென்று...

பார்ப்பன அகராதி – சித்திரபுத்திரன் 0

பார்ப்பன அகராதி – சித்திரபுத்திரன்

காங்கிரஸ் என்றால் என்ன? வெள்ளைக்கார ஆதிக்கத்தை ஒடுக்கி பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்துவது. வெளியேற்றம் என்றால் என்ன பார்ப்பனரல்லாதார் சமூகத்தையும், அவர்கள் சுயமரியாதையையும் ஒழிக்க மறுபடியும் சில குல துரோகிகளை கூட்டிக்கொண்டு வாக்குத் தத்தத் தை மீறி மனச்சாக்ஷியின் பேரால் கட்டுப்பாடாய் சட்டசபைக்குப் போ வதுதான். தொழிலாளிகள் நன்மை என்றால் என்ன? தொழிலாளிகளை ஏமாற்றி அவர்களுக்குத் தலைவர்களாகி அவர்கள் ஓட்டுப்பெற்று சட்டசபை ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்தானம் பெற்று, தொழி லாளர்களையே விட்டு பார்ப்பனரல்லாதாரையும், தலைவர்களையும் ஈனத் தனமாகவும் இழித் தன்மையாயும் திட்டும் படியும் அடிக்கும்படியும் கலகம் செய்யும்படியும் தூண்டி விடுவது. இந்துமத பரிபாலன சட்டத்தால் இந்துமதம் போய்விடுமே என்று பயப்படுகிறார்கள் என்றால் என்ன? பார்ப்பனருக்கு வரும்படி போய்விடுமே என்று பயப்படுவது. மத விஷயத்தில் சர்க்கார் பிரவேசிக்கிறார்களே என்றால் என்ன? பார்ப்பனரல்லாதார் பிரவேசிக்கிறார்களே என்பது. சட்டசபை கலையும்போது மத பரிபாலன சட்டத்தை நிறை வேற்றுகிறார்களே என்றால் என்ன? பார்ப்பனரல்லாதார் எல்லாம் இம்மசோதாவை ஆட்சேபிப்பவர்க ளுக்கு...

பார்ப்பனரின் வெடிகுண்டு 0

பார்ப்பனரின் வெடிகுண்டு

ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் கும்பகோணத்தில் பேசிய பேச்சைப் பற்றி 18.8.26- ² ‘சுதேசமித்திரன்’ தனது உப தலையங்கத்தில் ‘அபத்தப் பஞ்சாங்கம்’ என்ற தலைப்பின் கீழ் ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் எழுத்தும் பிரசங்கங்களும் வரவர விபரீதமாயிருக்கிறது என்றும், நாயக் கருக்கு சீக்கிரத்தில் கவர்ன்மெண்டு அடிமை முத்திரை போடப்பட்டுவிடும் என்றும், நாயக்கர் பேசுகையில் எவ்வித காரணமில்லாமல் சிறை சென்றதற்கு விசனப்படுகிறேன் என்றும், பிராமண சூழ்ச்சி வலையில் அகப்பட்டுக் கொண்டேன் என்றும் சொன்னதாக எழுதி, இதன் மூலம் நாயக்கருக்கு அசட்டுப் பட்டம் ஏற்பட்டு விட்டதாகவும் நாயக்கரை ஒரு பிராமணனும் ஏமாற்றி சிறைக்கனுப்ப வில்லை என்றும் காங்கிரசினால்தான் பனகால் ராஜா வுக்கு மந்திரியானதென்றும் நாயக்கருக்கு ராஜீய உலகில் ஒரு முக்கிய ஸ்தானம் கிடைத்ததென்றும் அப்படி இருக்க, காங்கிரசை இகழ்வது மாதுரு துரோகமென்றும் எழுதுகிறான். இவற்றை நன்றாய் ஆராய்ந்து நாயக்கர் மாதுரு துரோகியா அல்லது ‘மித்திரன்’ கூட்டத்தார் மாதுரு காமியா என்பதை கவனிப்போம். இப்பார்ப்பன ‘மித்திரன்’ யோக்கியனாயும்...

“விதவா விவாக விளக்கம்” 0

“விதவா விவாக விளக்கம்”

பழுத்த ஞானமும் நீடிய அனுபவமும் கொண்ட அறிஞர் திருசிரபுரம் திருவாளர் சி.பி.இராஜகோபால் நாயுடு அவர்கள் தாம் ஆக்கிய விதவா விவாக விளக்கம் என்னும் புத்தக அச்சுப் பிரதியை அனுப்பி எனது அபிப் பிராயத்தை எழுதுமாறு எழுதியிருந்தார். விதவா விவாகத்தைப் பற்றி நான் தீவிரக் கருத்துக் கொண்டவனேயாகிலும் போதிய அமயமும் அவகாசமும் வாய்த்திலாமையான் அஃதினை ஊன்றிப்படித்து விரைவில் எனது கருத்தினை வெளியிடவியலாது போயிற்று. பிறகு அப் புத்தகம் முடிவு பெற்று புத்தக ரூபமாய்க் கிடைக்கப் பெற்றேன். அஃதினை அமைதியுடன் படித்து எமக்குத் தோன்றிய சில கருத்துக்களை எழுத முற்பட்டேன். இந்திய நாட்டின் ஆளுகை உரிமை இந்தியருக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள் ளிருக்கும் வகுப்புப் பிரிவினையும் ஜாதி வேற்றுமையும் தொலைய வேண்டுமென்பதாக சமூக சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி பெண் மக்களுள் ஒரு பகுதியார் அழிந்து வருவதை பாராமுகமாகவே பார்த்து வருகின்றனர். (இயற்கை தேவியார்) சிருஷ்டிக் கர்த்தா, மக்கட் படைப்பில டங்கிய ஆண்...

திரு. சீனிவாசய்யங்காரின் தைரியம் 0

திரு. சீனிவாசய்யங்காரின் தைரியம்

திருவாளர் எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள் தேவஸ்தான சட்டத் தைப் பற்றி எழுதும்போது ‘பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்கள் தேவஸ்தான சட்டத்தை ஆதரிப்பதாக’ மனப்பூர்த்தியாய் வேண்டுமென்றே இல்லாத காரியத்தைச் சொல்லுகிறார். திரு.சீனிவாசய்யங்காருக்கு பொய் சொல்லு வதிலும் மறுபடியும் அதை மறுத்து இல்லை என்று சொல்லுவதிலும் அனுப வம் அதிகமாகி அதன் பலனாய் எவ்வளவு திருப்பாட்டு கிடைத்தபோதிலும் அதை ஏற்று ஏற்று அவர் மானம் நன்றாய் மரத்துப் போய்விட்டது. திருவாளர் கள் மாளவியா, bஐயக்கர், கெல்கர், நரசிம்மராஜு, இராமலிங்க செட்டியார், ஆந்திர தேசத்து தேசீயப் பத்திரிகைகள் முதலிய பிரபல கனவான்கள் எல்லோரிடமும் திரு.சீனிவாசய்யங்கார் சொல்லியவற்றையெல்லாம் வெகு தைரியமாய் இல்லையென்று ஒரே அடியாய் சொல்லிவிட்டார். பத்திரிக் கைகள் பெரும்பாலும் பார்ப்பன ஆதிக்கம் உடையவைகளாகவே இருந்து விட்டதால் அவைகள் இவற்றைப்பற்றி ஒன்றும் எழுதாமல் திரு. அய்யங்கார் புளுகுக்கு ஆதரவளித்து வருகின்றன. சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் நெஞ்சில் உரம் இல்லாததால் இவற்றைப் பற்றி ஒன்றும் எழுதாமல் தந்திரமாய் இருந்து விட்டன. இதன்...

வரப்போகும் தேர்தல்                         தமிழர்களுக்கு ஓர் தனிப்பெரும் விண்ணப்பம் 0

வரப்போகும் தேர்தல் தமிழர்களுக்கு ஓர் தனிப்பெரும் விண்ணப்பம்

வரப்போகும் தேர்தல்கள் தென்னிந்திய தமிழ் மக்களுக்கு ஏற்பட்டி ருக்கும் மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஏற்படுகிறது. அதன் முக்கிய நோக்கம் நமது நாடு சுயராஜ்யம் பெறுவதற்கென்று சொல்லிக் கொள்ளப் பட்டாலும், சுயராஜ்யம் என்பது சுயமரியாதையும் சுயேச்சையும் உள்ள சமூகத்துக்குத்தான் பயன்படுமே அல்லாது அஃதில்லாதவருக்கு சுயராஜ்ய மென்பதும் பரராஜ்யமென்பதும் வித்தியாசமற்றதேயாகும். தென்னாட்டுத் தமிழ்மக்கள் பெரும்பாலும் சுயமரியாதையற்று, சுயேச்சையற்று மலந் தின்னும் பன்றிகளுக்கும் கழுதைகளுக்கும் புழுக்களுக்குமுள்ள சுதந்திரமும் சுயாதீனமுமின்றி கோடிக்கணக்கான மக்கள் உழல்வதை யாரும் மறுக்க முடியாது. இவர்களின் பொருட்டும், தேச முழுவதிலுள்ள இவர் போன்றோர் பொருட்டும் விடுதலையை உத்தேசித்து மகாத்மா காந்தியடிகளால் ஆறு வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட ஒத்துழையா இயக்கமானது பல்வேறு காரணங்களால் வேருடன் களையப்பட்டு விட்டது. இதன் பலனாய் ஏற் பட்ட நிலைமையானது சுயேச்சையும், சுயமரியாதையும், சுவாதீனமுமற்ற சமூகத்துக்கு, அதிலும் முக்கியமாய் தென்னாட்டுத் தமிழ்மக்களுக்கு முன்னிலும் அதிக கேவலமான நிலையில் கொண்டு வந்து விட்டுவிட்டது. பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் நாட்டு ஜனங்களென்று...

தேவஸ்தானச் சட்டம் 0

தேவஸ்தானச் சட்டம்

பார்ப்பனக் கட்சியின் சூழ்ச்சி பொடி பொடியாய் தகர்க்கப்படுகிறது. பிரபல தேசபக்தர்களின் கருத்து சட்டப்பேரவையில் வரப்போகும் திருத்தத்தை சுயராஜ்யக் கட்சியார் எதிர்ப்பது “ தீண்டாமைக்குத் துணைபோவதாகும்,” கூடாவொழுக்கமாகும்,” “புரட்டான போலிச் செயலாகும்.” “ காங்கிரசுக்கு அழிவுதேடுவதாகும்.” திரு.ஈ.வெ.இராமசாமி நாயக்கர் தந்திமூலம் பத்திரிகைகளுக்கு அறிவித்ததாவது:- “தேச மகாசபையின் பெயரால், இந்துமத பரிபாலன மசோதாவை எதிர்ப்பது போலிச் செயலாகும். மகந்துகளையும் மடாதிபதிகளையும் தொங்கிக் கொண்டு நிற்கும் சுயநலங் கொண்ட பார்ப்பனர்களின் இழிவான தந்திரங்கள் வெளிப்படையாய்ப் புலப்படுகின்றன. தென்னிந்தியப் பார்ப் பனரல்லாதாரின் சார்பாக மசோதாவை நான் முழுமனதுடன் ஆதரிக் கிறேன்.” ( ப.ர் ) குடி அரசு – அறிவிப்பு – 22.08.1926

சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம் 0

சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம்

“சுயராஜ்யத்தைவிட சுயமரியாதையே பிரதானம்’’ “மகாத்மா காந்திக்கு மண்டையில் மூளையில்லை’’ என்று சொன்ன மகான் ( ! ) இப்பொழுது காங்கிரஸ் தலைவராய் விளங்குகிறார் திரு.இராஜகோபாலாச்சாரியாரின் இரகசியம் “சென்னையிலும் வங்காளத்தைப் போல் கலவரம் மூட்ட பார்ப்பனர்கள் முயலுகிறார்களா?’’ பலனடைந்தவர் பார்ப்பனரே காங்கிரசின் ஆரம்பமே பார்ப்பனர்கள் எப்படி உத்தியோகம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைக் கொண்டுதான் ஆரம்பிக்கப்பட்டதே யல்லாமல் வேறல்ல. அது போலவே காங்கிரஸ் ஏற்பட்டதற்குப் பிறகுதான் உத்தியோகங்களெல்லாம் பார்ப்பன மயமாவதற்கு அநுகூலமேற்பட்டது. மகாத்மா காந்தி காங்கிரசை தலைமை வகித்து நடத்திய காலத்தில் பார்ப்பனர் களுக்கு ஆதிக்கமும் செல்வாக்கும் உத்தியோகமும் குறையத் தலைப்பட் டது. அதனால்தான் இந்தப் பார்ப்பனர்கள் மகாத்மாவை காங்கிரசை விட்டு ஓடும்படி செய்துவிட்டார்கள். அதனாலேயேதான் தமிழ்நாட்டில் மகாத்மா காங்கிரசுக்காக உழைத்து வந்த பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் காங்கிரசை விட்டு ஓடும் படி செய்து விட்டார்கள். காங்கிரஸ் ஏற்பட்டதின் பலனாய் பார்ப்பனர்கள் லாபமடைந்தார்களே ஒழிய ஏழைகளுக்கும் தொழி லாளர்களுக்கும் குடியானவர்களுக்கும் அதிக கஷ்டம் தான் ஏற்பட்டது....

சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம் 0

சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம்

“சுயராஜ்யத்தைவிட சுயமரியாதையே பிரதானம்” வகுப்புத் துவேஷத்தைக் கிளப்புகிறவர்கள் யார்? பார்ப்பனர்களே. நால்வகை வகுப்பு நாட்டில் உதித்த வகை பார்ப்பனர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். எப்படி? “மோக்ஷம்” “சுயராஜ்யம்” என்கிற வார்த்தைகளால். நாம் போராடுவது சுயமரியாதைக்காகவே நான் இன்று உங்கள் முன்னிலையில் பேசப்போகும் விஷயமானது கேவலம் தேர்தல்களைப் பற்றியோ, தேர்தல்களில் யாருக்கு ஒட்டுக்கொடுப் பது என்பதைப் பற்றியோ பேச வரவில்லை. இத் தேர்தல்களில் யார் ஜெயித் தாலும் யார் தோற்றாலும் நமக்குப் பெரிய லாபமும் நஷ்டமும் ஒன்றும் ஏற் பட்டு விடாது. ஆதலால் அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. எனக் குள்ள கவலை யெல்லாம், மக்களின் பெரும் பகுதியினராகவும் எல்லா வழி களிலும் இன்னாட்டிற்கு முக்கியமானவர்களாகவும் உள்ள நாம் தாழ்ந்தவர்க ளென்றும் அடிமைகளென்றும் கருதப்பட்டு சுயமரியாதையற்று கிடக்கி றோம். அன்னியர்களால் விலங்குகளைப் போல் நடத்தப்படுகிறோம். ஆத லால் இவ்விதக் குறைகள் ஒழிய வழி தேட வேண்டியது இப்பொழுதுள்ள நமது முக்கியக் கடமை என்பதேயாகும். அவற்றிற்கு...

கோயமுத்தூர் ஜில்லா போர்டு தேர்தல்களும் வேளாளர்களும் 0

கோயமுத்தூர் ஜில்லா போர்டு தேர்தல்களும் வேளாளர்களும்

கோயமுத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட் தேர்ந்தெடுத்தலின் முடிவையும் ³ ஸ்தானத்திற்கு அபேட்சகராக நின்று தோல்வி அடைந்தவரின் வகுப்பைச் சேர்ந்த மெம்பர்களின் ஏராளமான தொகைக ளையும் கவனித்தால் ஒரு விதமான ஆச்சரியமும் , வியப்புமுண்டாகும். ஆனால், இந்த ஜில்லாவிலுள்ள வேளாளர்களைப் பொருத்த மட்டும் இந்த தேர்ந்தெடுத்தலின் முடிவானது அநேக கிளர்ச்சியை உண்டு பண்ணக் கூடியதாய் இருக்கிறது. இந்த ஜில்லாவில் பெரும் பான்மையோர் வேளாள குலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனவந்தர்களாகவும் ஈகை முதலிய குணங்களில் சிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் மற்ற குலங்களெல்லாம் தத்தம் முன்னேற்றத்தைப் பற்றி வேண்டிய முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் போது இவர்கள் மாத்திரம் கட்சிப் பிரதி கட்சிகளிலும், மௌடீகத் தன்மையிலும், கல்வியறிவின்மையிலும் மூழ்கி யிருப்பது மிகவும் வருத்தத்தையுண்டு பண்ணுகிறது. நாகரீகம் அதிகரித்து வரும் இக்காலங்களிலுங் கூட தங்களுடைய அற்ப பொறாமைகளையும், குறுகிய நோக்கங்களையும், வினோதங்களையும் போக்கி ஒத்துழைத்து தங்கள் ஜாதி அபிமானத்தையும் அபிவிருத்தியையும் சிறிதேனும் கவனியா மல் ஆனந்த மௌடீகத்தில் காலங்கழிப்பது...

பிராமணீயத்தை ஒழித்தவர்கள் 0

பிராமணீயத்தை ஒழித்தவர்கள்

பார்ப்பனரல்லாதார் வைதீகச் சடங்குகள் என்று பெயர் வைத்துக் கொண்டு தங்கள் குடும்பங்களில் நடக்கும் சுபா சுப காரியங்களுக்கு திதி, திவசம் என்றோ, சிரார்த்தம் என்றோ, தங்கள் முன்னோர்களின் ஞாபகார்த்த மாகச் செய்யும் காரியத்தை, முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்பச் செய்யப்படும் கிரிகை என்ற மூட நம்பிக்கையால், அக் காரியத்திற்கு ‘பிராமணர்’களை அழைத்து அதை அவர்களைக் கொண்டே செய்ய வேண்டுமென, உடம்போடொட்டிய அழுக்குபோல் தங்கள் மனத்தில் படியப் பெற்று, ஒரு பார்ப்பனனைக் கூட்டி வந்து பலவகைத்தான சன்மா னங்களை அப்பார்ப்பனனுக்கு அளித்து, அவன் சொல்லும் பிரகாரமெல் லாம் சொல்லி, அவன் காலில் விழுந்து விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வருவதும், அதேபோன்று கலியாணம் முதலிய சுப காரியங்க ளுக்கும் பார்ப்பனனை அழைத்து, மண மக்களுக்கு ஆயுள் விருத்தியை யும் புத்திர சம்பத்தையும் அப்பார்ப்பனன் இரக்ஷhபந்தனமளித்து வருவதாகப் பிரேமைக்குள்ளாகி பார்ப்பனனைக் கொண்டு செய்து வருவ தும் – வீண் அர்த்தமற்ற – பொருளற்ற – சுயமரியாதையை...

முளையிலேயே குறும்புத்தனம் 0

முளையிலேயே குறும்புத்தனம்

“சென்ற ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு சென்னை பார்ப்பன ரல்லாத மாணவர், தங்கள் சொந்த பணத்தைக் கொண்டு ராவ்பகதூர் வி. ரெங்க நாதன் செட்டியார் கட்டிய வெங்கடேஸ்வரர் ஹாஸ்டலில், சென்ற கார்ப்ப ரேஷன் தேர்தல்களில் வெற்றி பெற்ற நமது டாக்டர் சி.நடேச முதலியார்,திரு. பி.டி. குமாரசாமி செட்டியார், பி. ரெங்கநாதஞ் செட்டியார் முதலியவர் களுக்கும் பனகால் ராஜா, மதன கோபால் நாயுடு, ஆரியா முதலியவர்களுக் கும், சென்ற தேர்தல்களில் நமது ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்றதற்காக சிற்றுண்டி வழங்கினர். 90 பேர் இருக்கும் ஹாஸ்டலில் 25 பேர்தான் நம்மவர். அந்தோ! பார்ப்பனரல்லாதாரின் தருமம் இப்படியும் வீணாக வேண்டுமா? அப்படியிருந்தும், அன்று பார்ப்பனப் பிள்ளைகள் நமது தலைவர்களை அவமானப்படுத்த எண்ணங்கொண்டு, வார்டனிடமும், செட்டியாரிடமும் சென்று இந்த கொண்டாட்டத்தை தடை செய்யச் சொன்னார்கள். அவர்கள் மறுத்து விடவே, ஹாஸ்டலை விட்டு எல்லாப் பார்ப்பன மாணவர்களும் தலைவர்கள் வரும் சமயத்தில் வெளியேறினர். ஆனால் மாலை...

தேவஸ்தானச் சட்டம் பார்ப்பனர் குட்டு வெளியாய் விட்டது.  அதிகார துஷ்பிரயோகம் செய்வது நாமா? பார்ப்பனர்களா?  டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரும் ஆர்.கே.ஷண்முகம் செட்டியாரும்                             தங்கள் வாக்கை நிறைவேற்றுவார்களா? 0

தேவஸ்தானச் சட்டம் பார்ப்பனர் குட்டு வெளியாய் விட்டது. அதிகார துஷ்பிரயோகம் செய்வது நாமா? பார்ப்பனர்களா? டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரும் ஆர்.கே.ஷண்முகம் செட்டியாரும் தங்கள் வாக்கை நிறைவேற்றுவார்களா?

சென்னை இந்து பரிபாலன மசோதாவானது தற்காலம் நமது நாட்டில் அரசியல் விஷயமாகவோ பொது நன்மை தீமை என்கிற விஷயமாகவோ கருதப்படாமல் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற விஷயமாய்க் கருதப் பட்டு வருகிறது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அல்லாமலும் அம் மசோதாவைப் பற்றிக் கண்டபடி தூற்றி வரும் பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் நாளது வரையில் அதிலுள்ள ஒரு சிறு கெடுதியையாவது பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியவர்கள் அல்ல. சுயராஜ்யம் என்றும் சர்க்காருடன் போராடுவதென்றும் பொய்யும் புளுகும் சொல்லி கேப்பமாரித் தனம் செய்து அரசியல் விஷயத்தில் ஆதிக்கம் பெற்று எப்படி தங்களுக்கும் தங்கள் இனத்தாருக்கும் உத்தியோகமும் ஆதிக்கமும் சம்பாதித்துக் கொள்ளு கிறார்களோ அதுபோலவே இந்த மசோதா விஷயத்திலும் வேண்டு மென்றே மனப்பூர்த்தியாய் ‘மதம் போச்சு’, ‘தெய்வம் போச்சு’, ‘இந்து மதத்தில் அரசாங்கத்தார் புகுந்துவிட்டார்கள்’, ‘அநியாயமாய்ப் புது வரி போடப் போகிறார்கள்’, ‘நமது இந்துமத தர்ம சொத்துக்களை சர்க்காரார் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்’ ‘மகமதியருக்கும் கிறிஸ்துவர்களுக்கும்...

உஷார் !உஷார்!! உஷார்!!!               பார்ப்பனர்களின் புதிய தந்திரம் 0

உஷார் !உஷார்!! உஷார்!!! பார்ப்பனர்களின் புதிய தந்திரம்

இந்தியாவின் நன்மையின் பொருட்டும் மக்களின் சம உரிமையின் பொருட்டும் மகாத்மா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட நிர்மாணத் திட்டமும் பகிஷ்காரத் திட்டமும் கொண்ட ஒத்துழையாமையை காங்கிரசின் மூலம் நடத்தப்பட்டு வந்த காலத்தில் நாட்டில் சுயநலம் படைத்த பார்ப்பனர்களும் ஆங்கிலம் படித்த அடிமைகளும் தவிர மற்றவர்களுக்குள் ஒற்றுமையும் நம்பிக்கையும் கூடிய வரையில் கட்டுப்பாடும் இருந்து வந்தது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதற்கு முன் இருந்து வந்த வகுப்பு உணர்ச்சி களுக்கும், வகுப்புத் தந்திரங்களுக்குங்கூட பலம் குறைந்திருந்தது என்பதை யும் யாரும் மறுக்க மாட்டார்கள். அவ்விதமிருந்த தேசத்தை, அது முன்னேறி நிர்மாணத் திட்டமும் பகிஷ்காரத் திட்டமும் வெற்றி பெற்று மக்கள் சமத்துவமும் சுதந்திரமும் அடைந்து விட்டால் ‘வாழ முடியாத’ வகுப்பார்களாகிய வஞ்சகப் பார்ப் பனர்களும் ஆங்கிலம் படித்த அடிமைகளும் இவற்றை எதிர்த்துப் பலவித சூழ்ச்சிகளால் கூடவே இருந்து குடியைக் கெடுத்து தேசத்தின் மக்களை பழய படி உயர்வு தாழ்வு வித்தியாசத்திலும் அடிமை வாழ்வில் பிழைக்க வேண் டிய...

முறியடிக்கப்பட்டவர்களுக்கு ‘மித்திரனி’ன் நற்சாக்ஷிப் பத்திரம் 0

முறியடிக்கப்பட்டவர்களுக்கு ‘மித்திரனி’ன் நற்சாக்ஷிப் பத்திரம்

சென்னைத் தேர்தல்களில் பார்ப்பனரல்லாத கட்சியாருக்கு வெற்றி ஏற்பட்டதைப் பற்றி ‘மித்திரன்’ தன்னை திருப்தி செய்து கொள்ளுகையில் சென்னை வெற்றி பார்ப்பனரல்லாத கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றி யல்லவென்றும், ஜஸ்டிஸ் அபேட்சகர்களான கனவான்கள் அந்தந்த பேட்டை ஓட்டர்களுக்குச் செய்த சேவையினாலேயே அவர்களுக்கு வெற்றி கிடைத்த தென்றும் சொல்லுகிறான். இதிலிருந்தே பார்ப்பனக் கட்சியான சுய ராஜ்யக் கட்சியாரின் சார்பாய் நிறுத்தப்பட்ட அபேட்சகர்களை ஓட்டர் கள் மதிக்க வில்லை என்றும் இவர்கள் நன்மை செய்வார்கள் என்று ஓட்டர்கள் நினைக்கவில்லை என்றும் ஏற்படுகிறது. இதைப் பார்க்கும் போது, ஐயோ பாவம்! நமது ஸ்ரீமான் ஒத்தக்காசு செட்டியாரை இப்பார்ப்பனர்கள் பழைய குரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு எந்தெந்த விதத்தில் கெடுத்து விட்டார்கள் – கெடுத்து வருகிறார்கள் என்பதை நினைக்கும் போது செட்டி யார் பேரில் அளவு கடந்த பரிதாபமேற்படுகிறது. ஸ்ரீமான் செட்டியாரின் மான நஷ்ட வழக்கில் செட்டியார் மானம் ஒத்தக்காசுதான் பெறும் என்று தீர்ப்பு வாங்கிக் கொடுத்து விட்டார்கள். ஸ்ரீமான்...

டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை 0

டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை

இந்து தேவஸ்தான மசோதாவைப் பற்றி பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதிர்க்கக் கடமைப்பட்டிருந்தாலும் அதைத் தாங்களே எதிர்ப்பதற்குப் போதுமான தைரியமும் யோக்கியதையும் இல்லாததால், குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல், தங்கள் கையில் சிக்கி நசுக் குண்டு கொண்டிருக்கும் காங்கிரசை இதற்காக உபயோகப்படுத்திக் கொண்டு காங்கிரசின் பெயரால் இந்துமத தர்ம பரிபாலன மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் எதிர்க்க வேண்டு மென்று ஒரு பொருளற்ற உத்திரவைப் போட்டுக் கொண்டு வரப்போகும் சட்டசபையில் பல பார்ப்பனரும் அவர்களது சிஷ்ய கோடிகளும் எதிர்க்கப் போகிறார்களாம். இதையறிந்த நமது டாக்டர் வரத ராஜுலு நாயுடுகார் அவர்கள் வீர கர்ச்சனை முழங்கியுள்ளார். அதாவது:- “இப்பொழுது சட்டசபையில் வரப்போகும் சீர்திருத்தம் பெற்ற இந்து மத பரிபாலன மசோதா சம்பந்தமான விவாதம் அரசி யல் கட்சிப் பிரச்சினை அல்ல. ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டி யார் உள்பட காங்கிரஸ்காரர்கள் இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள். மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் சட்ட சபைக்குப் போய் எதிர்ப்பது இம்மாகாணத்தில்...

பிராமணீயக் கொடுமை 0

பிராமணீயக் கொடுமை

இந்தியாவின் ஒற்றுமையைக் குலைப்பது பிராமணீயம் ! இந்தியாவை வேற்றரசர் கையில் கொடுத்தது பிராமணீயம்! இந்து முஸ்லீம் கலகங்களை மூட்டுவது பிராமணீயம்! தமிழரை வறுமைக்குள்ளாக்கியது பிராமணீயம்! இந்தியா சுயராஜ்யம் அடைவதற்குத் தடைக் கல்லாயிருப்பது பிராமணீயம்! உடன்பிறந்த சகோதரர்களான தமிழர்கள் அடித்துக் கொள்ளவும் நீதிமன்ற மேறி வழக்காடவும் காரண பூதமாயிருப்பது பிராமணீயமே! தமிழர்களே! இந்தப் பாழான பிராமணீயத்தை நாட்டை விட்டு ஓட்டுக. குடி அரசு – சிறு குறிப்பு – 15.08.1926

பார்ப்பனரின் பிறப்புரிமை 0

பார்ப்பனரின் பிறப்புரிமை

வங்காள அரசாங்கத்தார் ஒற்றுமையும் சமாதானமும் என்னும் பெயரால் பண்டித மாளவியா அவர்களுக்கும் டாக்டர் மூஞ்சே அவர்க ளுக்கும் வங்காளத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதென்பதாக 144 உத்திரவு போட்டார்கள். அவற்றை ³ இரு கனவான்களும் வீரர்களைப் போல மீறி நடந்தார்கள். அம்மீறுதலானது கேவலம் வகுப்பு பிரச்சினையை உத்தேசித்தே மீறினார்கள் என்று நாம் நினைக்க ஏற்பட்ட போதிலும் இக்கனவான்களுடைய புதிய வீரத்தை நாம் மனதில் பாராட்டினோம். அம்மீறுதலின் பேரில் சர்க்கார் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக் கிறார்கள் என்று தெரிந்தும் இம்மகிழ்ச்சிக்கு அதிக ஆயுள் இருக்காதென்று நாம் சந்தேகப்பட்டதுண்டு. அதுபோலவே இப்பொழுது பண்டிதர் பேரிலும் டாக்டர் மூஞ்சே அவர்கள் பேரிலும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளக் கூடா தென்று ஸ்ரீமான்கள் சர்.சிவசாமி அய்யர், டி. ரங்காச்சாரியார் முதலிய பார்ப்ப னர்கள் அரசப் பிரதிநிதியிடம் போய் பல்லைக் கெஞ்சுவதாய்த் தெரிய வரு கிறது. ஜனங்களை ஏமாற்றுவதற்கு ஒருபுறம் வீரமும் சர்க்காரை ஏமாற்று வதற்கு மற்றொருபுறம் பல்லைக் கெஞ்சுவதும் நமது பார்ப்பனர்களுக்கு...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஸ்ரீமான் ளு.சத்தியமூர்த்தி அய்யர் 0

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஸ்ரீமான் ளு.சத்தியமூர்த்தி அய்யர்

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை சென்னை கோகலே மண்டபத்தில் ஸ்ரீ எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பேசியதில் கடைசியாக “பிராமணர் – பிராமணரல்லாதாரின் நம்பிக்கைக் குப் பாத்திரமாகும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். உத்தியோக விஷயத்தில் பிராமணரல்லாதாருக்கு நியாயமாகவே குறையிருக்கிறது. அக் குறையில்லாதபடி பிராமணர்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்” என்று பேசியிருக்கிறார். இது மிகவும் சரியான வார்த்தை; நாமும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதற்கு இந்தக் குறைகளைத்தான் சொல்லுகி றோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்தால் தான் இக்குறைகள் நீங்கும்; அல்லது சுவாமி சிரத்தானந்தர் சொன்னபடி செய்தாலாவது கொஞ்சம் நீங்கலாம். இரண்டு மில்லாமல் ஸ்ரீமான்களான குழந்தையையும் ஓ.கந்தசாமி செட்டியாரையும், பாவலரையும், ஜயவேலரையும் பிடித்து வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் வேண்டாம் என்று சொல்லச் செய்வதாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களைத் திட்டச் செய்வதினாலும் இக்குறை நீங்கி விடுமா? என்று கேட்கிறோம். குடி அரசு – சிறு குறிப்பு – 15.08.1926

நாகையில் பார்ப்பனரில்லாத திருமணமும் பிரார்த்தனையும் 0

நாகையில் பார்ப்பனரில்லாத திருமணமும் பிரார்த்தனையும்

நாகபட்டணம் தென் இந்தியா ரயில்வேயைச் சேர்ந்த தொழிலாளரும், ஸ்ரீமான் பாலையத் தேவர் குமாரருமான ஸ்ரீமான் பா. காளியப்பத் தேவர் அவர்களுக்கும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த படப்பக்காட்டிலிருக்கும் ஸ்ரீமான் இராசாமித் தேவரவர்கள் குமாரத்தி ஸ்ரீமதி செல்லம்மாளுக்கும் இவ்வாவணி- µ மூன்றாந்தேதி (19-8-26 ) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாகை கோட்டைமேட்டுத் தெருவில் உள்ள மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறும். அத்திருமணத்தில் மணமகனும் மணமகளும் கதரா டையே அணிவதுடன் பார்ப்பனர் சம்மந்தமே இல்லாமல் அத்திருமணச் சடங்கும் நடைபெறும். நம் தென்னாட்டில் இம்மாதிரி கதருடையுடன் இதுவரை பல திருமணங்கள் நிகழ்ந்திருந்தாலும் பார்ப்பனப் புரோகிதரில் லாமல் திருமணங்கள் நடப்பது அதிசயமாகக் கருதப்படுவதுடன் வெகுசில திருமணங்களே இதுவரை நடைபெற்றிருக்கின்றன.அவற்றுள் சென்ற மாதம் வட ஆற்காடு ஜில்லா ஆம்பூர் சாணாங் குப்பத்திலிருக்கும் திருவாளர்கள் வெங்கிடசாமி முதலியாரும் அவரது உறவினர் இருவரும் சேர்ந்து நடத்தி வைத்த மூன்று திருமணங்களும் நாகையில் நடக்கப் போகும் இத் திருமண மும் முக்கியமானதென்றே சொல்லலாம். இனியும்...

“தேசபக்தன்” 0

“தேசபக்தன்”

‘தேசபக்தன்’ பத்திரிகை கொழும்பிலிருந்து வெளிவரும் வார மும்முறைப் பதிப்பாகும். இதன் ஆசிரியராயிருக்கும் திரு. கோ. நடேசய் யரைப் பற்றி நாம் நன்கு அறிவோம். தஞ்சையினின்று வெளி வந்த ‘வர்த்தக மித்திரன்’ பத்திரிகையும் திரு. நடேசய்யரையே தன் ஆசிரியராகக் கொண்டி ருந்தது. அக்காலை ‘வர்த்தகமித்திரனி’ல் ஒழுங்காகவும் தேசநலங்கருதியும் எழுதப்பட்ட கட்டுரைகளே வெளிவந்தன. ஆனால் இப்பொழுது அதே திரு. நடேசய்யரை ஆசிரியராகக் கொண்ட ‘தேசபக்தன்’ தாங்கி வரும் கட்டுரைகள் ஒரே ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மாட்டு அன்போடும் அபிமானத்தோடும் எழுதி வருவது பெரிதும் வருந்தத்தக்கதாகும். வெளிப்படையாகக் கூறப்புகின் ‘தேசபக்தனும்’ பார்ப்பனப் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டான் என்றே கூற வேண்டும். சென்னையில் நடைபெறும் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்துவரும் பார்ப்பனப் பிரசாரம் போதாதென்று வெளிநாடு சென்று பிழைக்கப்போன தமிழரின் குடியைக் கெடுக்க, மலாய் நாட்டில் ‘தமிழ் நேசன்’ என்றும் இலங்கையில் ‘தேசபக்தன்’ என்றும் இரு பார்ப்பனப் பத்திரிகைகள் தோன்றியுள்ளதென்றே கூறவேண்டும். கறுப்பு நிறங்கொண்ட ஆட்டை வெள்ளாடு என்பது...

பிராமணீயத்தை ஒழித்தவர்கள் 0

பிராமணீயத்தை ஒழித்தவர்கள்

சென்னையில் கொஞ்ச நாளைக்கு முன்பு ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார், ஆர்.கே. ஷண்முகஞ் செட்டியார், திரு.வி. கலியாண சுந்தர முதலியார், ந. தண்டபாணி பிள்ளை, ஈ.வெ.இராமசாமி நாயக்கர் முதலி யவர்கள் கூடிப் பேசியதாகவும் அதன் முடிவு என்ன என்பதைப் பற்றியும் முந்திய இதழில் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதாவது, அரசியல் விஷயத்தைப் பற்றி அவரவர்கள் அபிப்பிரா யப்படி நடந்து கொள்வதென்றும், சமூக சமத்துவ விஷயங்களில் எல்லோ ரும் ஒரே அபிப்பிராயமாயிருக்கிறோம் என்றும், அது விஷயத்தில் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது என்றும் எழுதியிருந்தோம். அதன் பலனாக அதே சமயத்தில் சமூக சமத்துவ விஷயமாய் எல்லோரும் ஒத்துப் பிரசாரம் ஆரம்பிக்கப்படும் முன்பு பார்ப்பனரல்லாதார் வைதீக சடங்குகள் என்று பெயர் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பங்களிலும் பார்ப்பனர்களைக் கொண்டு செய்யப்படும் சடங்குகளை நிறுத்துவதற்கு முதல் முதலாகப் பிரசாரம் செய்யவேண்டுமென்றும், அப்படிச் செய்வதில் தங்கள் தங்கள் பெற்றோர்களையும் மற்றோர்களையும், மோக்ஷத்திற்கனுப்புவதற்கென்றும், அவர்கள் சுகமாய் இருப்பதற்கென்றும்...

நீதி நிர்வாகத்தில் வகுப்பு உணர்ச்சி மதுரை முனிசிபல் சேர்மென் தேர்தல் 0

நீதி நிர்வாகத்தில் வகுப்பு உணர்ச்சி மதுரை முனிசிபல் சேர்மென் தேர்தல்

மதுரை முனிசிபாலிட்டிக்குச் சேர்மெனாகப் பொது ஜனங்களாலும் இயற்கை தேவியாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமான் ஆர்.எஸ். நாயுடுவை நமது பார்ப்பன தேவதைகள் ஐந்து, ஆறு மாத காலமாக அந்த ஸ்தானத்தில் உட்காருவதற்கில்லாமல் செய்து விட்டார்கள். அது என்னவென்றால் ஸ்ரீமான் ஆர்.எஸ். நாயுடுவும் மற்றொரு கனவானும் சேர்மென் பதவிக்குப் போட்டி யாக நின்றார்கள். ஸ்ரீமான் நாயுடு பார்ப்பனர்களின் எடுப்பார் கை குழந்தை யாயில்லாமல் சுயமரியாதை உள்ளவராயிருந்துவிட்டபடியினால் அங்குள்ள பார்ப்பனர்கள் நாயுடுவுக்கு விரோதமாக ஒருவரை நிறுத்தி சுயராஜ்யக் கட்சி யின் பெயராலும் காங்கிரஸ் பெயராலும் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்தும் ஸ்ரீமான் நாயுடுவுக்கு சம ஓட்டு கிடைத்ததால் திருவுளச் சீட்டு போட வேண்டிய அவசியமேற்பட்டு, திருவுளச் சீட்டிலேயும் ஸ்ரீமான் நாயுடு வுக்கே ஆகிவிட்டது. இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் ஒரு பார்ப்பனரை நியாயாதிபதியாய் அடைந்திருக்கிறோமென்ற தைரியத்தின் பேரில் கோர்ட் டுக்குப் போய் அத் தேர்தலை ரத்துசெய்து, வேறு தேர்தல் செய்யும்படி தீர்ப்புப் பெற்று விட்டார்கள். நல்ல வேளையாய் பார்ப்பனரல்லாதார் அப்பீல்...

இரு பார்ப்பன சீனிவாசர்களின் பொய்மான் அறிக்கை இதை மண்டையில் அடித்துப் புதைக்க வேண்டும். 0

இரு பார்ப்பன சீனிவாசர்களின் பொய்மான் அறிக்கை இதை மண்டையில் அடித்துப் புதைக்க வேண்டும்.

ஸ்ரீமான்கள் மகாகனம் சீனிவாச சாஸ்திரியும், எஸ்.சீனிவாசய் யங்காரும் சதியாலோசனை செய்து ஒரு பொய்மான் அறிக்கை வெளியிடச் செய்திருக்கிறார்கள். இப்பொய்மான் அறிக்கையைக் கண்டு பொதுஜனங்கள் ஏமாந்து போகக்கூடாது. அவ்வறிக்கையை ஒரே அடியாய் மண்டையில் அடித்துக் கொன்று குழியில் புதைக்க வேண்டும். அது எதுவென்றால் அதுதான் இந்திய தேசீய ஐக்கியச் சங்கம் என்பது. இதை உண்டாக்க நேரு-ஆசாத் அறிக்கை என்பதாக ஒன்றைக் கட்டி விட்டிருக்கிறார்கள். உஷார்! உஷார்!! உஷார்!!! குடி அரசு – கட்டுரை – 08.08.1926

பார்ப்பனர்களுக்கு சரியான இடி பார்ப்பன பார்ப்பனரல்லாதாரின்                             வகுப்பு வித்தியாசத்தைப் பற்றி                             ஸ்ரீமான் எஸ். ஆர். தாசின் அபிப்பிராயம் 0

பார்ப்பனர்களுக்கு சரியான இடி பார்ப்பன பார்ப்பனரல்லாதாரின் வகுப்பு வித்தியாசத்தைப் பற்றி ஸ்ரீமான் எஸ். ஆர். தாசின் அபிப்பிராயம்

“நான் இங்கு வந்ததின் முக்கிய நோக்கமெல்லாம் இங்குள்ள விஷயங்களை நேரில் அறிந்து அரசப் பிரதிநிதிக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற அபிப்பிராயத்தின் பேரிலேயேயாகும். இங்கு வந்து நேரில் விஷயங்களைக் கவனிக்கிறபோது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகிய இரு சமூகத்தாருக்குள்ளும் இருக்கும் வகுப்பு உணர்ச்சி எனக்கு நன்றாகத் தெரிகிறது. நான் எப்பொழுதும் இம் மாகாணத்திலுள்ள தாழ்ந்த நிலையிலி ருக்கும் வகுப்பாரிடமே அபிமானம் கொண்டிருப்பேன். ஏனென்றால் தாழ்ந்த சமூகத்தினர் முன்னுக்கு வரும்வரையில் தேசம் சுயராஜ்யம் பெறமுடியாது. தாழ்ந்த சமூகத்தினர் முன்னுக்கு வரவேண்டுமென்று சொல்வதையும், பிற்பட்ட வகுப்பினர் – தாழ்ந்த வகுப்பினர்களென்றும் பிறத்தியாரால் அழுத்தப்பட்டுக் கிடக்கிறவர்களென்றும் நினைத்துக் கொண் டிருக்கிற ஜனங்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக ஏற்படுத்திக் கொண் டிருக்கும் எந்த இயக்கங்களையும் வகுப்பு இயக்கங்களென்று சொல்லவே கூடாது. அவற்றையெல்லாம் தேசீய இயக்க மென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் தாழ்த்தப்பட்ட- பிற்பட்ட- அழுத்தப் பட்ட சமூகத்தார் முன்ன ணிக்கு வருகிறவரையில் தேசீய இயக்க மென்று சொல்லிக்கொண்டு வேலை செய்வது பிரயோஜனத்தைத்...

பண்டித மாளவியாவின் புது தைரியம் இப்போது சட்டத்தை மீறுவது தேசத்தைக் கருதியா?  வகுப்பைக் கருதியா? 0

பண்டித மாளவியாவின் புது தைரியம் இப்போது சட்டத்தை மீறுவது தேசத்தைக் கருதியா? வகுப்பைக் கருதியா?

ஒத்துழையாமையின்போது சர்க்காரால் போடப்பட்ட எத்துணையோ இலட்சக்கணக்கான அநாகரீகமானதும் அநியாயமானதுமான உத்திரவு களை இந்திய மக்களில் பதினாயிரக்கணக்கான பேர் மீறி ஜெயிலுக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில் இவைகளில் ஒன்றாவது நமது பண்டித மாளவியாவுக்கு அநியாயமான உத்திரவென்றோ அநாகரீகமான உத்திர வென்றோ தோன்றாமல் போய்விட்டது ஏன்? அது தேச நன்மைக்கும், இந்திய மக்களின் சுயமரியாதைக்கும் பஞ்சாப்புக்கும் கிலாபத்துக்கும் ஏற்பட்ட அநீதிக்கும் பரிகாரம் தேட ஏற்பட்ட வழிகளைத் தடைப்படுத்த ஏற்பட்ட உத்திரவானதால் அதைப்பற்றி நமது பண்டிதருக்கு லட்சிய மில்லை. ஆனால் இப்பொழுது கல்கத்தா கலவர சம்பந்தமாய் உண்மையாய் கொலைகளும், கொள்ளைகளும், அடிதடி கலவரங்களும் இரு பக்கமும் நடந்து கொண்டிருக்கிற காலத்தில் வங்காள அரசாங்கத்தார் போட்ட தடை உத்திரவை மீறுவதற்கு நமது பண்டிதருக்கு வெகு அவசரம் ஏற்பட்டு விட்டது. ஏனென்றால் இந்த உத்திரவானது வெறும் வகுப்பு சம்பந்தத்தையே ஆதாரமாகக் கொண்டிருப்பதால்தான். ஆனதால் நமது பண்டிதர் வகுப்பு வாதியா, தேசீயவாதியா என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளலாம். பண்டிதர் பார்ப்பனராயிருப்பதால்...

பம்பாயில் பார்ப்பனர் கொடுமை 0

பம்பாயில் பார்ப்பனர் கொடுமை

“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது ஓர் பழமொழி. அத்தகைத்தே நமது பார்ப்பனர்களின் தன்மையாகும். பல நூறு ஆயிர ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை, தூர்த்தர்களான பார்ப்பனர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பைக் கருதி உண்டாக்கிய சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு அட்டை போல் உறிஞ்சி வந்தனர் – வருகின்றனர். எத்தகைய கேவலத் தொழிலையும் செய்யப் பின் வாங்காத இழிதகைமை படைத்த இப்பார்ப்பனக் கூட்டம் இந்துக்களின், அதாவது பார்ப்பனரல்லாதாரின் மதகுருவென்றும் சுபா சுப காரியங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களென்றும் மக்களை ஏமாற்றி ஆதிக்கஞ் செலுத்தி வந்தனர் – வருகின்றனர். இவர்களின் பஞ்சதந்திரக் கொடுந்தன்மை களை பார்ப்பனரல்லாதார் அறியவே சுபா சுப காரியங்களில் இவர்களை விலக்க வேண்டுமென்ற பரபரப்பும் துடிதுடிப்பும் அதிவேகமாக நாடெங்கும் பரவி வருகிறது. சென்னை மாகாணத்திலே பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றிய சின்னாளுள் இந்து சமூகத்தாருள் எவ்வளவோ பல சமூக சீர்திருத்தங்களும் மாறுதல்களும் நடந்து வருகின்றன. அவற்றுள் பார்ப்பனரல்லாதார்கள் சுபா சுப காரியங்களுக்கு...

தேவஸ்தான மசோதா பார்ப்பனரின் சூழ்ச்சி, ‘மித்திர’னின் அகம்பாவம் 0

தேவஸ்தான மசோதா பார்ப்பனரின் சூழ்ச்சி, ‘மித்திர’னின் அகம்பாவம்

சென்ற புதன் வியாழக் கிழமைகளில் தேவஸ்தான மசோதாவைப் பற்றி பார்ப்பன மித்திரனாய ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் ‘அக்கிரமத் திற்கும் அளவில்லையா?’ என்கிற தலைப்பின் கீழ் சில விஷமத்தனமான வார்த்தைகளை எழுதியிருக்கிறது. அது எதைப்பற்றி என்றால் வரப்போகிற சென்னை சட்டசபைக் கூட்டத்தில் தேவஸ்தான சட்டத்தில் உள்ள சில சட்ட சம்பந்தமான சிறு தவறுதல்களைத் திருத்துவதற்காக ஒரு மசோதா சர்க்காரால் கொண்டு வரப்படப் போகிறது. ஏனெனில் அச் சிறு சட்ட சம்பந்தமான தவறு தல்களை ஆதாரமாக வைத்தே தேவஸ்தான மசோதாவை அடியோடு ஒழிப்பதாகச் சொல்லி நமது பார்ப்பனர்கள் மகந்துகளையும், மடாதிபதி களையும் ஏமாற்றி அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பொருளைக் கவர்ந்து வியவகாரங்களை உண்டாக்கி நியாயஸ்தலங்களில் தற்காலத் தடை உத்திரவும் பெற்று இன்னும் பல மடாதிபதிகளை ஏமாற்றிப் பொருள் பறிக்கப் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள். இப்பொழுது சர்க்காரால் கொண்டு வரப்படப் போகும் மசோதா நிறைவேறிவிடுமானால் இம்மாதிரி நமது பார்ப்பனர்கள் மடாதிபதிகளையும் மகந்துகளையும் ஏமாற்றிப் பொருள் பறிக்கவும் தற்காலத் தடை உத்திரவுகள்...

பார்ப்பனர் சூழ்ச்சிக்குத் தோல்விகள் 0

பார்ப்பனர் சூழ்ச்சிக்குத் தோல்விகள்

சென்னையிலும் மற்றும் பல வெளியிடங்களிலும் சுயராஜ்யக் கட்சி காங்கிரஸ் என்கிற தேசீய வார்த்தைகளின் பெயரால் நமது பார்ப்பனர்கள் செய்து வந்த சூழ்ச்சிகளுக்கு இவ்வாரத்தில் பெருந் தோல்வி யென்றே சொல்ல வேண்டும். சென்னையில் சென்ற 4-ம் தேதி நடந்த தேர்தல்களின் முடிவானது நமது பார்ப்பனர்களுக்கு முற்றும் விரோதமாகவே போனதோடு, அங்குள்ள பாமர ஜனங்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை அறிந்து கொண் டோம், அறிந்து கொண்டோம் என்று ஆரவாரம் செய்து விட்டார்கள். சென்னைத் தேர்தல்களில் முக்கியமாய் டாக்டர் நடேச முதலியாரை ஒழிக்க வேண்டுமென்பதுதான் நமது பார்ப்பனர்களுக்குப் பெரிய ஆத்திரமாயி ருந்தது. அதற்காக வேண்டி ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியார் அவர்களைப் பிடித்து, அவருடைய ராவ்பகதூர் பட்டத்தையும் விடச் செய்து, டாக்டர் நடேச முதலியாருக்கு விரோதமாய் நிறுத்தி, எவ்வளவோ பொய்ப் பிரசாரங் களையும் இழிவுப் பிரசாரங்களையும் செய்து, ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யத் துணிந்தும் கடைசியாய் ஓட்டர்களை ஏமாற்ற முடியாமல் போய்விட்டது. இதுபோலவே ஸ்ரீமான் குமாரசாமி செட்டியார்...

கோயமுத்தூர் ஜில்லா போர்டு தேர்தல் 0

கோயமுத்தூர் ஜில்லா போர்டு தேர்தல்

இம்மாதம் 4-ம் தேதி கோயமுத்தூரில் நடந்த ஜில்லா போர்டு தலைவர் தேர்தலில் ஸ்ரீமான் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் அவர்களும் ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களின் இளைய சகோதிரரான ஸ்ரீமான் பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களும் அபே க்ஷகர்களாக நின்றதில் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட அங்கத்தினர் ஓட்டுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைக் கேட்க வாசகர்கள் மிகுதியும் சந்தோஷமடைவார்களென்றே எண்ணுகிறோம். ஸ்ரீமான் முதலியார் அவர்கள் கோயமுத்தூரில் பல தலைமுறையாய் இருந்துவரும் கௌரவமும் பிரபலமுமுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்து லட்சம் இருபது லட்சம் முதல் வைத்து நடத்தும் பல கூட்டுறவு பாங்கிகளுக்கு பிரசிடெண்டாகவும் டைரக்டராகவும் இருந்து வருபவர். ஏறக்குறைய கோய முத்தூர் ஜில்லாவிலேயே 24-வயதிற்கு மேற்பட்டு 36-வயதிற்கு உட்பட்டி ருக்கிற ஒவ்வொரு வாலிபருக்கும் ஆப்த நண்பனாகவும் உற்ற மந்திரியாக வும் இருந்து வருபவர். அவர் பெரிதும் குடியானவர்களிடத்திலும் ஏழை மக்களி டத்திலும் அன்பு கொண்டவர். உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்கிற...

சென்னையில் திரு.எஸ்.ஆர். தாசும் பார்ப்பனர்களின் தந்திரமும் 0

சென்னையில் திரு.எஸ்.ஆர். தாசும் பார்ப்பனர்களின் தந்திரமும்

ஸ்ரீமான் எஸ். ஆர்.தாஸ் அவர்கள் ஸ்ரீமான் சி. ஆர். தாஸ் அவர்களின் தாயாதி சகோதிரர். வங்காளத்தில் மாதம் நாற்பதினாயிரம் ஐம்பதினாயிரம் சம்பாதித்துக் கொண்டிருந்த பிரபல பாரிஸ்டர். இப்பொழுது டெல்லி இந்திய அரசாங்க நிர்வாக சபை அங்கத்தினராயிருப்பவர். இந்திய அரசாங்கத்திற்கு நமது தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதார்களைப் பற்றி நமது பார்ப்பனர்கள் பத்திரிகைகளின் மூலமாகவும் கோள் சொல்லுவதன் மூலமாகவும் ஏற்படுத்தி வைத்திருக்கும் தப்பபிப்பிராயங்களை அறிந்த நமது பனகால் அரசர் டெல்லிக்குப் போய் அரசப் பிரதிநிதியாரிடம் நமது உண்மையான நிலையை எடுத்துச் சொன்னதன் பலனாய் வைசிராய் ஆச்சரியமடைந்து தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதாரின் உண்மை நிலை மையை நேரில் அறிந்து வரும்படி தனது நிர்வாக சபையில் ஒரு பொறுப் புள்ள அங்கத்தவரான ஸ்ரீமான் எஸ். ஆர். தாஸ் அவர்களை அனுப்பி யதாகத் தெரிந்தோம். ஸ்ரீமான் எஸ்.ஆர். தாஸ் அவர்கள் சென்னைக்கு வந்ததும் சென்னை யிலுள்ள பார்ப்பனத் தலைவர்கள் ஒன்றுகூடி ஸ்ரீமான் ரெங்காச்சாரியார் பெயரால் ஸ்ரீமான்கள் திருப்பதி மகந்து, சர். சதாசிவய்யர்,...

காங்கிரஸ் இருப்பதை விட இறப்பதே மேல். ஏன்? இப்பொழுதுள்ள காங்கிரஸ் பார்ப்பன காங்கிரசே 0

காங்கிரஸ் இருப்பதை விட இறப்பதே மேல். ஏன்? இப்பொழுதுள்ள காங்கிரஸ் பார்ப்பன காங்கிரசே

அக்கிராசனாதிபதி அவர்களே! கனவான்களே! நான் எந்தக் கட்சியின் சார்பாகவும் பேச வரவில்லை. தற்காலம் இந்த தேர்தலில் பெருத்த கலவரமாயிருந்து வருகையில் ஓட்டர்களுடைய கடமை என்ன என்பதை எடுத்துக் கூறவே நான் வந்திருக்கிறேன். அக்கிராசனாதிபதி அவர்கள் என்னைப் பற்றியும் என்னுடைய வேலையைப் பற்றியும் கூறினார். எத்தனையோ தேசபக்தர்கள் நாட்டிற்காக தியாகம் செய்த காலையில் நான் அவர்களுக்குத் தொண்டு புரிந்து என்னால் கூடிய அளவு ஊழியம் செய்திருக்கிறேனே ஒழிய வேறில்லை. ஒத்துழையாமைக் காங்கிரசில் கலந்துள்ள நான் இக்கூட்டத்தில் பேசலாமாவென்ற சந்தேகம் சிலருக்கிருக் கலாம். காங்கிரஸ் எப்படியிருந்தது? இப்போது என்ன ஸ்திதிக்கு வந்தது? என்ற விஷயங்கள் தெரிந்து விட்டால் அந்தக் கவலை உங்களுக்கு இருக் காது. அந்த விஷயங்களை எடுத்துக் கூறவே நான் இங்கு வந்துள்ளேனே யொழிய, தனிப்பட்டவர்களைப் பற்றியாவது கட்சியைப் பற்றியாவது பேச நான் வரவில்லை. நாம் தனிப்பட்டவர்களைப் பற்றி பேசினால் கலகம்தான் நடக்கும். சென்ற வருடத்தில் நான் இங்கு வந்திருந்த போது திரு.வாசு...

கோயில் 0

கோயில்

இந்து மதத்தினரெனக் கூறப்படும் மக்கள் பல பிரிவும் பல வகுப்பும் பல குலமுமாக எண்ணுதற்கரிய சாதி சாதியென்று பிளவுண்டு ஓர் வகுப்பின ருடன் மற்றோர் வகுப்பினர் சேராமலும் ஓர் குலத்தினரிடம் மற்றோர் குலத் தினர் உண்ணல் – தின்னல் கிடையாமலும் இருந்து வருகின்றனர். எவரிட்ட சாபமோ இன்னும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் ஒரே மதத்தினர் என்று கூறிக் கொண்டு இவ்வாறு பல பிரிவினராயிருந்து வருகின்றனர். இத்தகைய பிரிவிற் கெல்லாம் மூலகாரணம் “பனவராம் பெரும் படிறற் உஞயற்றிய கள்ளமாயை”. அதாவது சூழ்ச்சியிலேயே ஊறிப் பிறந்த வஞ்சகர்களான பார்ப்பனர்கள் என்னும் இரு பிறப்பாளர்கள் ஏற்படுத்திய திருட்டு வித்தியாசத் தத்துவமே யாகுமென்னும் பெரியார் வாக்கினின்று பார்ப்பனர்களே என்பதை அறிவாளர் எவரும் மறுக்க மாட்டார்கள். தமிழ்நாட்டிலேயுள்ள கோயில்களெல்லாம் பண்டைத் தமிழ் வேந்தர் களால் சமரசம், ஒற்றுமை, நல்லொழுக்கம், பக்தி முதலிய தூய எண்ணம் துலங்க வேண்டுமெனக் கருதியே கோயில்கள் நிருமாணிக்கப் பெற்றதாகும். இதற்காக மானியங்களும் அவைகளைக் கட்டிய...

சென்னையில் கர்மபலன் 0

சென்னையில் கர்மபலன்

கர்மபலன் என்றால் மனிதர் தங்கள் வாழ்நாளில் செய்யும் காரியங் களுக்கும் பேசும் விஷயங்களுக்கும் நினைக்கும் எண்ணங்களுக்கும் தக்க பலனை அவரவர் இறந்த பிறகு ‘மேல் லோகத்தில்’ கடவுள் முன்னிலையில் அனுபவிப்பதென்றும், அந்த அனுபவம் மோக்ஷம் நரகம் என்கிற இடங்களில் என்றும், சில சமயங்களில் அதற்கு மீறி அடுத்த ஜென்மம் எடுத்து அதில் அனுபவிக்க வேண்டும் என்றும், மனிதன் அதற்குத் தப்பித்துக் கொள்ள வேண்டுமானால் பார்ப்பனர்களுக்குப் பணம் கொடுத்து அவர்கள் சொல்லுகிறபடி கேட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்றும், நமது பார்ப்ப னர்கள் அனேக ஆதாரங்கள் எழுதி வைத்துக்கொண்டு தங்கள் பிழைப்புக்கு அதையும் ஒரு வழியாக உபயோகித்து வருகிறார்கள். ஆனால், நாம் கர்மபலன் என்பதை அவ்விதத்தில் பொருள் கொள்வ தில்லை. கர்மபலன் என்றால் வேலையின் கூலியென்று தான் நினைக்கி றோம். கர்மம் என்றால் வேலை, பலன் என்றால் அதனால் நாமடையும் பிரதிப் பிரயோஜனம்; இதை நாம் கூலியென்று சொல்லுகிறோம். அந்தக் கூலியை மேல் லோகத்தில்...

முனிசிபாலிட்டியில் சுயராஜ்யம் – சித்திரபுத்திரன் 0

முனிசிபாலிட்டியில் சுயராஜ்யம் – சித்திரபுத்திரன்

கொஞ்ச நாளாக எங்கு பார்த்தாலும் முனிசிபல் சேர்மென்கள் வசூல் செய்யத் தவக்கப்பட்ட காரணத்தினால் முனிசிபாலிட்டிக்கு ஏற்பட்ட வரி நஷ் டத்தை அவ்வித சேர்மென்களிடமிருந்து வசூல் செய்யப்பட வேண்டு மென்று கவர்ன்மெண்டார் உத்திரவு போட்டு வருகிறார்கள். ஆனால் சேர்மென்கள் திருடுகிற – திருடிக் கொண்ட பணத்தை வசூல் செய்யவும் அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தவும் அதிகாரிகளும் கவர்ன்மெண் டாரும் கவலைப் படுவதேயில்லை போலிருக்கிறது. அதிகாரிகளைக் கண்டு “சேர்மென்கள் இம் மாதிரி கொள்ளையடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக் கிறீர்களே இது சரியா?”என்று கேட்டால், நாங்கள் என்ன செய்வோம்; நீங்கள் தானே சுயராஜ்யம் கேட்டவர்கள்; நாங்கள் சுயராஜ்யம் கொடுத்து விட்டோம்; அந்த நிர்வாகம் உங்கள் மந்திரிகளிடம் இருக்கிறது; அவர்களைப் போய்க் கேளுங்கள். நீங்கள் கேட்ட சுயராஜ்யத்தை நீங்கள்தானே அநுபவிக்க வேண்டும்? எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?” என்கிறார்களாம். கவர்ன்மெண்டார் என்கிற மந்திரிமார்களை இதைப் பற்றி கவனிக்கும்படி சொன்னால் “நீங்கள் தெரிந்தெடுத்த சேர்மென்தானே, அவரால் ஏற்படும் சுக துக்கத்தை...

தமிழ் சர்வகலாசாலைக் கமிட்டி 0

தமிழ் சர்வகலாசாலைக் கமிட்டி

தமிழ் நாட்டிற்கென ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்துவான் வேண்டி சின்னாட்களாகப் பல தமிழர் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். இக்கிளர்ச் சியை ஒடுக்குவான் வேண்டியும், தமிழ் கலாசாலையே ஏற்படாதிருக்க பார்ப்ப னர்கள் செய்துவரும் சூழ்ச்சி முறைகளையும் அனேகர் அறிந்திருக்கலாம். கடைசியில் இக்கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு வழியில்லாது போய் தமிழ் சர்வகலாசாலை ஏற்படுத்த வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டது. இதற்கென ஒரு கமிட்டியும் நியமிக்கப்படலாயிற்று. இக்கமிட்டியும் பெருங் கபடத்துடனேயே நியமிக்கப்பட்டுள்ளதெனக் கூறவேண்டும். ஏனெனில் தமிழ் மொழியின் ஆணி வேர் Žநுனி வரை Žநுணுகி ஆராய்ந்து தமிழ் மொழியே உயர் தனிச் செம்மொழியெனக்கொண்டு, தமி ழையே உயரினும் பெரிதாய் ஓம்பி வளர்த்து, அதற்கெனவே அருந் தொண் டாற்றி வரும் திருவாளர்கள் சுவாமி வேதாச்சலனார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பா.வே.மாணிக்க நாயக்கர், கா.சுப்பிரமணிய பிள்ளை, மு.சா. பூரணலிங்கம் பிள்ளை முதலியோரை நியமிக்காது, ஆரியத்திற்கும் தமிழுக்கும் உள்ள பதத்தை ஒரு சிறிதும் உணராத பலரையும் தமிழில் பற்றுடைய மிகச் சிலரையும் நியமித்திருக்...

நாயுடு, முதலியார், நாயக்கர். சென்னையில் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் ( தற்கால நிலைமை ) 0

நாயுடு, முதலியார், நாயக்கர். சென்னையில் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் ( தற்கால நிலைமை )

சென்னையில் இம்மாதம் 17-ந் தேதி திருவல்லிக்கேணி கடற்கரையில் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் அக்கிராசனத்தின் கீழ் டாக்டர் நாயுடுகார் ஒரு நீண்ட பிரசங்கம் செய்தார். அவை பல பத்திரிகைகளில் பலவிதமாக வெளிப் பட்டிருந்தாலும் அவரது ‘தமிழ் நாடு’ பத்திரிகையில் சுருக்கமாக வெளி வந்திருக்கிறது. அவற்றில் சில உண்மைகள் விளங்குவதை மாத்திரம் நாம் இதனடியில் குறிப்பிடுகிறோம். அதாவது “பெரிய சந்தேகம்” என்ற தலைப்பின் கீழ் “இந்த சர்க்கா ரை இப்பொழுதே நாம் நிருத்திவிட முடியும். ஆனால் அதற்குப் பிறகு (நிருத்திய பிறகு) இத்தேசத்தை எப்படி நிர்வகிப்பதென்பதுதான் இப்பொ ழுது பெரிய சந்தேகம்” என்று பேசியிருக்கிறார். தற்கால நிலைமையில் யோக்கியமான ராஜீயவாதிகளின் கருத்து இதுவேதான். ஏனெனில், நமது தேசத்தில் ஒருவன் உயர்ந்தவன் என்றும் பிராமணன் என்றும், மற்றவன் தாழ்ந்தவன் என்றும், சண்டாளன், பார்க்கக் கூடாதவன், தெருவில் நடக்கக் கூடாதவன் என்றும், ஒரு மதம் உயர்ந்த மதம், மற்றொரு மதம் தாழ்ந்த மதம், ஒரு வகுப்பார் தான் மூளை...

நமது தனிப்பெரும் விண்ணப்பம் 0

நமது தனிப்பெரும் விண்ணப்பம்

சென்ற “ குடி அரசு” இதழில் திரு. ஈ.வெ.இராமசாமி நாயக்கரவர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு விடுத்த வேண்டுகோளை அன்பர்கள் கண்ணுற் ருக்கலாம். தற்காலம் தமிழ்நாட்டு அரசியல் நிலைமையும் சமுக நிலைமை யும் பெரிதும் குழப்பத்தோடிருக்கிற தென்பதை தமிழ் நாட்டவர்களுக்கு நாம் எடுத்து கூற வேண்டியதவசியமில்லை. இத்தகைய குழப்பமான நிலை மையில் அரசியல் துறையையும் சமுக விஷயத்தையும் சத்தியமான, ஒழுங் கான, உண்மையான அமைப்போடும் திட்டத்தோடும் நிலையிறுத்திச் சீர்பெறச் செய்வான் பொருட்டே திரு. நாயக்கரவர்கள் அவ்வேண்டு கோளை விடுத்தார். திரு. நாயக்கரவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இற்றைவரை சுமார் 500 தமிழர்கள் “ குடி அரசி”ன் கொள்கையை ஏற்றுக்கொள்வதாகவும் திரு. நாயக்கருள்ளிட்ட பலர் வெளியிடப் போகும் அறிக்கையில் தங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறும் தங்கள் கையொப்பம் அளித்துள் ளார்கள். இத்தகைய முறையில் அவ்வமைப்பு ஏற்படுத்தி இத்தகைய திட்டங் கோல வேண்டுமென்பதாகவும் ஒத்துழையாமை காங்கிரசில் முன்னின்று ழைத்த பல அறிஞர்கள் நீண்ட கடிதங்கள் எழுதி வருகிறார்கள். தேர்தல் காலம் மிகவிரைவாக...

ஏமாந்து விடாதீர்கள்!               ஏமாந்து விடாதீர்கள்!                                          சைவ சமயிகளுக்கு ஓர் எச்சரிக்கை 0

ஏமாந்து விடாதீர்கள்! ஏமாந்து விடாதீர்கள்! சைவ சமயிகளுக்கு ஓர் எச்சரிக்கை

சில தினங்களில் சுமார்த்த மத குருவாகிய சங்கராச்சாரியார் வரப் போகிறார். சைவ சமயிகள் அவர் அணிந்திருக்கிற விபூதி உருத்திராக்கத் தைப் பார்த்தும், சுமார்த்தப் பிராமணர்கள் சைவர்கள் பணத்தைத் தங்கள் வகையினர்க்குப் பயன்படுத்தும் பொருட்டு தங்கள் குருவை உலகத்தினர்க் கெல்லாம் குருவென்ற முறையில் “லோக குரு” வென்று கூறும் தந்திர வார்த்தையில் நம்மவர்கள் மயங்கி அவருக்கு வந்தன வழிபாடு, பாத காணிக்கை முதலியன செய்து பாவத்தை ஏற்றுப் பொருளிழந்து வறியவர்களா காமலிருப்பார்களாக. நம்மவர்களுக்கு உண்மை நெறியை உணர்த்த எல்லாம் வல்ல இறைவன் திருவருளை வழுத்துகிறோம். குடி அரசு – வேண்டுகோள் – 01.08.1926

“சர்க்காருக்கு ஜேய்” சர்க்கார் கக்ஷிக்கு சென்னை சட்டசபையில்            இன்னும் 5 மெம்பர்கள் அதிகம் ( தொழிலாளர் நிலை) 0

“சர்க்காருக்கு ஜேய்” சர்க்கார் கக்ஷிக்கு சென்னை சட்டசபையில் இன்னும் 5 மெம்பர்கள் அதிகம் ( தொழிலாளர் நிலை)

தாழ்ந்த வகுப்பார்களுக்கென்றும் தொழிலாளர்களுக்கென்றும் சர்கார் தயவில் இந்தியா பூராவுக்கும் 12 ஸ்தானங்கள் அதிகப்படுத்தப் பட்டிருக் கிறது. ஆனால் இந்த 12 – ஸ்தானங்களும் அந்தந்த வகுப்பார்களால் தெரிந் தெடுக்கப்படாமல் சர்க்காரால் நியமிக்கப்படுவதாய்ப் போய்விட்டது. இதற் காக நாம் தற்கால நிலைமையில் தொழிலாளர்கள் பொருட்டும் தாழ்த்தப் பட்ட வகுப்பார்கள் பொருட்டும் விசனப்படாவிட்டாலும் ஓட்டர்கள் பொருட்டு நாம் மிகுதியும் விசனப்படுகிறோம். தொழிலாளிகளுக்கென்றோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கென்றோ தேர்தலுக்கு அந்தந்தப் பிரிவார் கொண்ட ஓட்டர் தொகுதியில்லாத வரையில் தற்காலத் தேர்தலைவிட நியமனம் அத் தனை மோசமானதல்ல வென்பது நமது அபிப்பிராயம். ஏனெனில் தற்கால நிலைமையில் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கென்று சொல்லிக்கொண்டு ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் போன்ற ஒரு வருணாச்சிரம தர்மி நிற்கக் கூடும். அதற்கு மற்றொரு வருணாச்சிரம தர்மியாகிய ஒரு மகந்து பணம் செலவு செய்யக் கூடும். ஆச்சாரியார் சட்ட சபையில் வந்து உட்கார்ந்து கொண்டு “ஒரு பார்ப்பனக் குழந்தை சாப்பிடு வதை ஒரு பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால்...

பிராமணீயம்! 0

பிராமணீயம்!

இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைத்து வேற்றுமையை அதிகரித்தது எது? சுயநலம் கொண்ட பிராமணீயமே. இந்து முஸ்லீம் கலகங்களை விளைவிப்பதெது? சுயநலக் கூட்டத்தாரின் ஆதிக்கம் கொண்ட பிராமணீயமே. இக்காலத்தில் பார்ப்பன – பார்ப்பனரல்லாதார் கட்சி உண்டாகக் காரண பூதமாய் நிலவுவதெது? பாழான பிராமணீயமே. எனவே என் செய்தல் வேண்டும்? பிராமணீயத்தைச் சுட்டெரித்து சுடுகாட்டுக்கனுப்ப வேண்டும். தமிழர்களே!ஒன்று படுக! ஒருங்கு சேருக! பிராமணீயத்துடன் போர் தொடங்குக! வீரர்கள் நம்மவரே! ஆதலால் வெற்றியும் நம்முடையதே! காகம் உறவு கலந்துண்ணக் காண்கிறீர். ஆதலால் சேரவாரும் ஜெகத்தீரே! குடி அரசு – பெட்டிச் செய்தி – 25.07.1926

ஜனாப் யாகூப் ஹாசன் ( எதிரிகளுக்கு ஒரு நல்ல வேட்டை ) 0

ஜனாப் யாகூப் ஹாசன் ( எதிரிகளுக்கு ஒரு நல்ல வேட்டை )

ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று கஷ்டப்படுகிற அதன் எதிரிகளுக்கும் ஜஸ்டிஸ் கக்ஷியைத் திட்டி கூலி வாங்கிப் பிழைப்பவர் களுக்கும் இந்த மாதம் நடந்த சென்னை சட்டசபைக் கூட்டத்தினால் ஒரு நல்ல வேட்டை கிடைத்ததென்றே சொல்லலாம். மலையாளக் குடிவார மசோதாவைப் பற்றி பார்ப்பனர்கள் பேரில் ஏற்பட்டிருந்த கெட்ட பெயரை மாற்றிக் கொள்ளவும், சர்.கே.வி. ரெட்டி மலையாளக் குடிவார மசோதாவை நிறைவேற்றும் விஷயத்தில் ஆண்மையுடன் எடுத்துக்கொண்ட முயற்சியி னால் ஏற்பட்டிருந்த நல்ல அபிப்பிராயத்தை மாற்றவும், நமது பார்ப்பனர்கள் ஜனாப் யாகூப் ஹாசன் சேட்டு பெயரால் தந்திரம் செய்து வெற்றிபெற்று விட்டார்கள். அதாவது ஜனாப் சேட் அவர்கள் சட்டசபைக்கு அபேக்ஷகரா யிருக்கத் தனது சிறை வாசத்தால் ஏற்பட்டிருக்கும் தடையை நீக்கும்படி சென்னை அரசாங்கத்தாருக்கு மிதவாதிகளைப் பிடித்து ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார். அது பலிக்காமல் போகவே இந்தியா அரசாங்கத்தாருக்கு ஒரு விண்ணப்பம் செய்து மிதவாதிகளைப் பிடித்து சிபார்சு செய்யச் செய்து பார்த்தார். அதுவும் பலனற்றுப்...