பிராமணீயம்!

இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைத்து வேற்றுமையை அதிகரித்தது
எது?
சுயநலம் கொண்ட பிராமணீயமே.


இந்து முஸ்லீம் கலகங்களை விளைவிப்பதெது?
சுயநலக் கூட்டத்தாரின் ஆதிக்கம் கொண்ட பிராமணீயமே.

இக்காலத்தில் பார்ப்பன – பார்ப்பனரல்லாதார் கட்சி உண்டாகக் காரண
பூதமாய் நிலவுவதெது?
பாழான பிராமணீயமே.


எனவே என் செய்தல் வேண்டும்?

பிராமணீயத்தைச் சுட்டெரித்து சுடுகாட்டுக்கனுப்ப வேண்டும்.


தமிழர்களே!ஒன்று படுக! ஒருங்கு சேருக!


பிராமணீயத்துடன் போர் தொடங்குக!

வீரர்கள் நம்மவரே!

ஆதலால் வெற்றியும் நம்முடையதே!

காகம் உறவு கலந்துண்ணக் காண்கிறீர்.


ஆதலால் சேரவாரும் ஜெகத்தீரே!

குடி அரசு – பெட்டிச் செய்தி – 25.07.1926

You may also like...

Leave a Reply