வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஸ்ரீமான் ளு.சத்தியமூர்த்தி அய்யர்

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை சென்னை கோகலே மண்டபத்தில் ஸ்ரீ எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பேசியதில் கடைசியாக “பிராமணர் – பிராமணரல்லாதாரின் நம்பிக்கைக் குப் பாத்திரமாகும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். உத்தியோக விஷயத்தில் பிராமணரல்லாதாருக்கு நியாயமாகவே குறையிருக்கிறது. அக் குறையில்லாதபடி பிராமணர்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்” என்று பேசியிருக்கிறார். இது மிகவும் சரியான வார்த்தை; நாமும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதற்கு இந்தக் குறைகளைத்தான் சொல்லுகி றோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்தால் தான் இக்குறைகள் நீங்கும்; அல்லது சுவாமி சிரத்தானந்தர் சொன்னபடி செய்தாலாவது கொஞ்சம் நீங்கலாம். இரண்டு மில்லாமல் ஸ்ரீமான்களான குழந்தையையும் ஓ.கந்தசாமி செட்டியாரையும், பாவலரையும், ஜயவேலரையும் பிடித்து வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் வேண்டாம் என்று சொல்லச் செய்வதாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களைத் திட்டச் செய்வதினாலும் இக்குறை நீங்கி விடுமா? என்று கேட்கிறோம்.

குடி அரசு – சிறு குறிப்பு – 15.08.1926

You may also like...

Leave a Reply