ஏமாந்து விடாதீர்கள்! ஏமாந்து விடாதீர்கள்! சைவ சமயிகளுக்கு ஓர் எச்சரிக்கை

சில தினங்களில் சுமார்த்த மத குருவாகிய சங்கராச்சாரியார் வரப் போகிறார். சைவ சமயிகள் அவர் அணிந்திருக்கிற விபூதி உருத்திராக்கத் தைப் பார்த்தும், சுமார்த்தப் பிராமணர்கள் சைவர்கள் பணத்தைத் தங்கள் வகையினர்க்குப் பயன்படுத்தும் பொருட்டு தங்கள் குருவை உலகத்தினர்க் கெல்லாம் குருவென்ற முறையில் “லோக குரு” வென்று கூறும் தந்திர வார்த்தையில் நம்மவர்கள் மயங்கி அவருக்கு வந்தன வழிபாடு, பாத காணிக்கை முதலியன செய்து பாவத்தை ஏற்றுப் பொருளிழந்து வறியவர்களா காமலிருப்பார்களாக. நம்மவர்களுக்கு உண்மை நெறியை உணர்த்த எல்லாம் வல்ல இறைவன் திருவருளை வழுத்துகிறோம்.

குடி அரசு – வேண்டுகோள் – 01.08.1926

You may also like...

Leave a Reply