தேவஸ்தானச் சட்டம்
பார்ப்பனக் கட்சியின் சூழ்ச்சி பொடி பொடியாய் தகர்க்கப்படுகிறது.
பிரபல தேசபக்தர்களின் கருத்து
சட்டப்பேரவையில் வரப்போகும் திருத்தத்தை சுயராஜ்யக் கட்சியார் எதிர்ப்பது “ தீண்டாமைக்குத் துணைபோவதாகும்,” கூடாவொழுக்கமாகும்,” “புரட்டான போலிச் செயலாகும்.” “ காங்கிரசுக்கு அழிவுதேடுவதாகும்.”
திரு.ஈ.வெ.இராமசாமி நாயக்கர் தந்திமூலம் பத்திரிகைகளுக்கு அறிவித்ததாவது:-
“தேச மகாசபையின் பெயரால், இந்துமத பரிபாலன மசோதாவை எதிர்ப்பது போலிச் செயலாகும். மகந்துகளையும் மடாதிபதிகளையும் தொங்கிக் கொண்டு நிற்கும் சுயநலங் கொண்ட பார்ப்பனர்களின் இழிவான தந்திரங்கள் வெளிப்படையாய்ப் புலப்படுகின்றன. தென்னிந்தியப் பார்ப் பனரல்லாதாரின் சார்பாக மசோதாவை நான் முழுமனதுடன் ஆதரிக் கிறேன்.”
( ப.ர் )
குடி அரசு – அறிவிப்பு – 22.08.1926