Category: குடி அரசு 1926

ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் 0

ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார்

ஸ்ரீமான். இராஜகோபாலாச்சாரியார் வெளியிட்ட அறிக்கைகளில், முதலில் காங்கிரஸ் தற்காலம் பொது ஜனங்களுக்குச் சேவை செய்ய எவ்விதத் திட்டத்தையும் உடைத்தாயிருக்கவில்லை என்றும், காங்கிரசிற்கு இப்போ திருக்கும் மதிப்பெல்லாம், அது சென்ற நான்கு, ஐந்து வருடங்களாக தேசத் துக்கு அநுகூலமான திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு அதற்காகப் பல தலைவர்களும், தொண்டர்களும் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் ஏற்றுக்கொண்டு பெரிய தியாகங்களையும் செய்து திட்டங்களை நிறைவேற் றப் பிரயத்தனப்பட்டதன் பலனாய் காங்கிரசுக்கு ஏற்பட்ட மதிப்பை வைத்துக் கொண்டு, காங்கிரசின் மூலமாய் பொது ஜனங்களுக்கு நன்மை உண்டாகும் படியான எவ்விதத் திட்டமும் அதில் இல்லாமல், பழைய நிலையின் வாசனை யையே ஆதாரமாக வைத்துக் கொண்டு, காங்கிரஸ், காங்கிரசென்று சிலர் சொல்லி வருகிறார்கள். இப்படியே காங்கிரஸ் இருக்குமேயானால், இனிக் கொஞ்சக் காலத்தில் காங்கிரஸ் மதிப்பே போய்விடும் என்றும் எழுதிவிட்டு, காங்கிரஸிற்கு பூரண மது விலக்கையாவது திட்டமாய் வைத்து அதை ஓட்டர்களுக்கு எடுத்துச் சொல்லி ஓட்டுப் பெற்று சட்டசபைக்குப் போய் ஒரே வருடத்தில்...

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் 0

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல்

நமது ஜில்லா சட்டசபைத் தேர்தல் விஷயமாக சென்ற இதழில் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் வாசித்திருக்கக் கூடும். அவ்வியாசத்தின் வேண்டுகோட்படியே குடியான வகுப்பைச் சேர்ந்த அபேக்ஷகர்களான இரண்டு கவுண்டர் கனவான்களில் ஒரு கனவானான ஸ்ரீமான் வி.சி.வெள்ளியங்கிரிக் கவுண்டர் பின்வாங்கிக் கொண்டதாக கேள்விப்படுகிறோம். தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து தங்கள் சமூகத் தாரில் யாராவது ஒரு கனவான் சட்டசபைக்கு வரவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தின் பேரில் மற்றொரு கவுண்டர் கனவானுக்காக விட்டுக் கொடுத்த ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களின் பெருந் தன்மை யையும் குலாபிமானத்தையும் நாம் மனமாரப் போற்றுகிறோம். நாம் முந்திய வார இதழில் எழுதியது போலவே ஒருவர் பின்வாங்கிக் கொண்டதினாலே மற்ற கனவானுக்கு யாதொரு பிரயத்தனமுமில்லாமல் சட்டசபை ஸ்தானம் கிடைத்து விடும் என்று நம்பி அஸ்வாரஸ்யமாய் இருந்துவிடக் கூடாது என்றும் தக்க முயற்சி எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாய் வேளாள சமூக பிரசாரகர்களைக் கொண்டு பிரசாரம் செய்து கிராமத்து குடியான மக்களு...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அசார்சமாய் – பொருட்படுத்தாமல் அசூயை – அவதூறு, பொறாமை அஞ்ஞானம் – அறியாமை அபகீர்த்தி – இகழ்ச்சி அபயம் – அடைக்கலம் அமயம் – பொழுது, உரிய காலம் அருமைக்காரர் – கொங்குவேளாளர் சமூகத்தில் மண விழாவை நிறைவேற்றும் அதே சமூகத்தைச் சார்ந்த ஒருவர் ஆக்குப்புரை – சமையற்கூடம் ஆஸ்தபம் – இடம், பற்றுக்கோடு இச்சகம் – நேரில் புகழ்தல் இடை – எடை இத்துணை – இவ்வளவு இரங்குதல் – ஈடுபடுதல் இரக்ஷhபந்தனம் – மந்திராட்சர யந்திரக் காப்பு ஈனஸ்திதி – இழிநிலை, கீழ்நிலை உபசரணை – வரவேற்பு உளைமாந்தை – கடுமையான நோய், உட்புண் கர்ணகடூரம் – செவிக்கு கடுமையாக காமியர் – காமவேட்கையுள்ளவர் காயலா – காய்ச்சல், உடல்நலக்குறைவு காலகதி – காலப்போக்கு, விதி குச்சு புகுந்து – சேலையின் முன் மடியை இழுத்து குலாம் – அடிமை கும்பகோணம் வேலை – சூழ்ச்சி செய்தல், மோசடி...

மைசூரில் வகுப்பு வாதம் 0

மைசூரில் வகுப்பு வாதம்

மைசூர் அரசாங்கத்தில் பார்ப்பனரல்லாதார் விஷயம் கொஞ்சம் கவனிக்கப்பட்டு அரசாங்க உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கவனிக்கப்பட்டு வருகிறது. இதை ஒழிக்க அங்கும் பல பார்ப்பனர்கள் பிரயத்தனப்பட்டு சட்ட மூலமாய் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைத் தடுக்க தீர்மானங்கள் கொண்டு வந்தவண்ணமாயிருக்கிறார்கள். வகுப்புவாரி பிரதி நிதித்துவம் வேண்டாம் என்பதற்கு அங்குள்ள பார்ப்பனர்கள் சொல்லும் காரணம் எல்லாம் திறமையைப் பார்த்து உத்தியோகம் கொடுக்க வேண் டுமே அல்லாமல் வகுப்புக் கணக்குப் பார்த்துக் கொடுக்கக் கூடாது என் கிறார்கள். அப்படியானால் உலகத்தில் பார்ப்பனர்களைத் தவிர திறமை சாலிகள் வேறு வகுப்பில் இல்லை என்பதே இவர்களுடைய அபிப்பிராய மாய் இருக்கிறது. இந்த அகம்பாவம் என்றைக்குப் பார்ப்பனர்களிடமிருந்து ஒழிகிறதோ அன்று தான் இந்தியாவில் பார்ப்பனர்களும் வாழலாம் என்று சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். அதில்லாமல் இருவரும் ஒத்து வாழ்வதென்பது முடியாத காரணம் என்றே சொல்லுவோம். நிற்க, எந்த உத்தியோகத்தில் பார்ப்பனரல்லாதாரைவிட பார்ப்பனர் கள் திறமைசாலிகள் என்று சொல்லிக் கொள்ள முடியும்? இதுசமயம் சென்னை மாகாணத்தில்...

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் 0

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் நமது பார்ப்பனர்கள் ஒரே கூச்சலாக ‘தேசம் போச்சுது’, ‘ஒற்றுமை குலைந்தது’, ‘வகுப்பு வாதம் மிகக் கெட்டது’ என்று ஒரே கூச்சலாக எல்லாப் பார்ப்பனர்களும் ஒன்றாய்க் கூப்பாடு போடுவதுடன் கூலி கொடுத்தும் நம்மவர்களைப் பிடித்தும் அப்படியே கத்தச் சொல்வதும் நாம் எல்லோரும் அறிந்த விஷயமே. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஏன் பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு காரணம் ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் கொஞ்ச நாளைக்கு முன்பு “பொய் மான் வேட்டை” என்று நவசக்திக்கு எழுதிய ஒரு வியாசத் தில் தன்னை அறியாமலே காட்டிவிட்டார். அதாவது, “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது பார்ப்பனர்களை இனி நீங்கள் நாட்டுக்குத் தொண்டு செய்ய வேண்டியதில்லையென்று ஒதுக்கி வைப்பதாகும். பல்லாயிர வருஷங்களாக நாட்டுக்குத் தொண்டு செய்து வந்த ஒரு ஜாதியினரை இவ்வளவு சுலபத்தில் (வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் மூலம் ) ஒதுக்கி விட முடியாது. அறிவும் பயிற்சியும் திறமையும் கொண்டவர்கள் நாட்டிற்கு வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். இதில் உள்ள மற்ற அம்சங்களைப்...

பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம் 0

பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம்

சென்னை மாகாணத்தில் சிறப்பாக தமிழ் நாட்டில் சுமார் 10 வருஷங் களுக்கு முன்பாக பார்ப்பனரல்லாதார் சங்கம் ஏற்பட்டதும் அதை ஏற்படுத்த ஸ்ரீமான் டாக்டர் நாயர் அவர்கள் முதன்மையாகவும், சர்.தியாகராய செட்டி யார் உதவியாகவும் இருந்து அதை உலகினர் ஒப்புக் கொள்ளும்படி செய்து, தங்களது கொள்கைகளையும் நிலை நிறுத்தியது உலகமறிந்த விஷயம். ஆனால் இன்றைய தினம் நம்மில் பெரும்பான்மையான மக்கள் அக்கட்சியின் பெயரைச் சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறார்கள். காரணமென்ன? தமிழ்நாட்டில் இக்கட்சியின் கொள்கைகளைப் பிரசாரம் செய்ய பணமில்லாதிருந்ததா? பத்திரிகை இல்லாதிருந்ததா? உத்தியோக மும், அதிகாரமும் இல்லாமலிருந்ததா? எல்லாமிருந்தும் இக்கதி ஆவா னேன்? எதிரிகளின் சூழ்ச்சியும் தந்திரமும் என்று சொல்லலாம். ஸ்ரீமான்கள் நாயரும் செட்டியாரும் உள்ள காலத்திலும் இவ்வெதிரிகள் இருந்தவர்கள் தானே? இப்பொழுது மாத்திரம் இவர்கள் சூழ்ச்சி பலிப்பானேன்? ஒருசமயம் நமக்குள் ளாகவே எதிரிகள் ஏற்பட்டுவிட்டார்கள் என்று சொல்லலாம். அப்படியானால் இனிமேலாவது நமக்குள்ளாக எதிரிகள் ஏற்படா மலிருக்க இப்போது என்ன செய்யப் போகிறோம்? இனிமேலாவது...

சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனரின்                பதிவிரதா தன்மை 0

சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனரின் பதிவிரதா தன்மை

சென்னையின் யோக்கியதையை அறிந்து போக வெளியிடங் களிலிருந்து யார் வந்தாலும் அவர்களை நமது பார்ப்பனர்கள் எப்படியாவது மயக்கி குல்லாய் போட்டு தங்கள் சுவாதீனம் செய்து கொள்ளும் தந்திரமும் சௌகரியமும் நம்மவர்களிடத்தில் இல்லை என்பதை எல்லோரும் அறிந்த விஷயம். தேவஸ்தான சட்ட சம்மந்தமாய் இந்தியா நிர்வாக சபை மெம்பர் ஸ்ரீமான் எஸ். ஆர். தாஸ் இங்கு வந்த பொழுது அவருக்குப் பார்ப்பனர்கள் செய்த விருந்தும், பெண்களைக் கொண்டு ஆடல் பாடல் கச்சேரிகள் செய்ததும், மடாதிபதி மகந்துகளையும் கூட்டி அறிமுகம் செய்து வைத்த தும், அந்த விருந்துக்கு ஒத்துழையாத பார்ப்பனர் என்பவர்கள் முட்டுக் கட்டை பார்ப்பனர் என்பவர்கள், பூரண சுயேச்சை பார்ப்பனர் என்பவர்க ளும், அரசாங்க உத்தியோகஸ்தர் வெள்ளைக்காரர்கள் ஆகியவர்களின் அரசாங்க சம்மந்தமான களியாட்டு காரியங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்ற பார்ப்பனர்களும், காந்தி குல்லாயும் தேசீயக் கொடியும் பிடித்து இரும்புச் சட்டத்தைத் துலைக்க வேண்டும் என்று சொல்லித் திரியும் பார்ப் பனரும், “அரசாங்கத்திற்கு...

“தமிழ்நாடு கான்பரன்ஸின்’’ யோக்கியதை 0

“தமிழ்நாடு கான்பரன்ஸின்’’ யோக்கியதை

நமது பார்ப்பனர்கள் தமிழ்நாடு கான்பரன்ஸ் என்பதாக பெயர் வைத்து தமிழ்நாட்டுப் பொது மக்களின் பேரால் ஒரு மகாநாடு என்று ஒரு சிறு கூட்டம் கூட்டி அதன் மூலம் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள எவ்வளவோ தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்தும் கடைசியாக மகாநாட்டின் உண்மை வேஷம் வெளியாகி விட்டது. மகாநாட்டுக்கு உபசரணைக் கமிட்டித் தலைவர் ஸ்ரீமான் கோவிந்தராஜுலு முதலியார் அவர்கள் அவசரத்தில் பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல் கொண்டு வந்து வைக்கப்பட்ட வராவார். அவர் கிளிப்பிள்ளையைப் போல் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லும் நல்ல சுபாவமுள்ளவர் என்பதும் பெஸன்டம் மையார் காலம் முதல் கொண்டும் ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மாகாணச் சங்கமென்னும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மருவிய காங்கிரஸ் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதார் சங்கம் ஏற்பட்டது முதல் கொண்டும் பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாய் நடந்து பார்ப்பனர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அன்னவரைப் பிடித்து உபசரணை அக்கிராசனர் வேஷம் போட்டு பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை நன்றாய் வையும்படி...

மகாத்மா காந்தி காங்கிரஸிற்கு போகும் ரகசியமும் காங்கிரசின் பிரதிநிதித்துவ தன்மையும் 0

மகாத்மா காந்தி காங்கிரஸிற்கு போகும் ரகசியமும் காங்கிரசின் பிரதிநிதித்துவ தன்மையும்

சென்ற – ´ கான்பூர் காங்கிரசின் போது மகாத்மா காந்தி காங்கிரஸ் காரியங்களில் இருந்து விலகிக் கொண்டது முதல் இது வரையில் எவ்வித காரியங்களிலாவது நிர்வாகத்திலாவது கொஞ்சமும் கலந்து கொள்ளாமல் இருப்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இவ்வருஷம் பரிசுத்தமாய் பார்ப்பனர்களினுடையவும் படித்தவர்களுடையவும் காங்கிரசாய்ப் போய் விட்டதால் பொது ஜனங் களும் மகாத்மாவைப் போலவே காங்கிரஸ் காரியங்களிலிருந்து பெரும் பான்மையாய் விலகி வருகிறார்கள் என்பதை நமது பார்ப்பனர்கள் உணர்ந்து பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக பண்டித மோதிலால் நேரு என்கிற பார்ப்ப னரை விட்டு மகாத்மா காந்தியை காங்கிரசில் கொண்டுவந்து காட்டி ஏமாற்று வதற்கு சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள். ஆனால் மகாத்மா இந்த தந்திரத்தை அறிந்தே “நான் காங்கிரஸுகு வேடிக்கைப் பார்க்கப் போகிறேனே அல்லாமல் காங்கிரஸ் காரியத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை” என்று பொது ஜனங்களுக்கு அறிவித்து விட்டார். ஏனென் றால் மகாத்மா பெயரையும் மற்றும் ஜெயிலுக்குப் போன தேச பக்தர்கள்...

புது ஆண்டு பரிசு 0

புது ஆண்டு பரிசு

1927 – ´ ஜனவரி-µ த்தில் ‘குடி அரசு’ப் பிரதியின் எண்ணிக்கை 5000 த்தையாவது தாண்டிவிட வேண்டாமா? அப்படியானால் ஒவ்வொருவரும் மும்மூன்று புது சந்தாதாரர்களைச் சேர்த்துக்கொடுங்கள்:- அப்படிக்கில்லாமல் குடிஅரசே! குணக்குன்றே! அஞ்சா வீரமே! உண்மை அவதாரமே! சுயமரியாதைச் சூரியனே! ………………என்று கவி பாடுவதில் ஒரு பலனுமில்லை. காரியத்தில் காட்டுங்கள். குடி அரசு – வேண்டுகோள் – 19.12.1926

மதுரையில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

மதுரையில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு

நாளது டிசம்பர் µ 25, 26 – ந் தேதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதுரை மாநகரில் பார்ப்பனரல்லாத மக்களின் மகாநாடு கூட்டப்போகும் விபரம் சென்ற வாரத்திதழிலேயே தெரிவித்திருக்கிறோம். இம்மகாநாடு பார்ப்பனரல்லாதார் களுக்கு மிகவும் முக்கிய மகாநாடாகும். பெரும்பாலும் நமது மக்களின் பிற்கால நிலைமை இதன் மூலமாகவே இச்சமயம் நிர்ணய மாக வேண்டியிருக்கிறது. பார்ப்பனரல்லாதாரிடம் கவலை உள்ளவர்கள் என்றும் பார்ப்பனரல்லாதாருக்கு உழைப்பவர்கள் என்றும் பறையடித்துக் கொள்ளுபவர்கள் அவசியம் தவறாமல் இம்மகாநாட்டிற்கு வந்து கலந்து தங்களது அபிப்பிராயத்தையும் சொல்லி ஒப்பச் செய்து மேலால் நடந்து கொள்ள வேண்டிய விபரத்திற்கு ஒரு திட்டம் ஏற்பாடு செய்ய உதவி புரிய வேண்டும். மகாநாடு எவ்வித அபிப்பிராய பேதமுள்ள பார்ப்பனரல்லா தாருக்கும் பொதுவானதென்றே சொல்லுவோம். பொறாமையாலோ துவேஷ புத்தியினாலோ மகாநாட்டிற்கு வராமலிருந்துவிட்டு பின்னால் “அது தப்பு இது தப்பு; இது யாரோ சிலர் கூடிக் கொண்டு நடத்திய மகாநாடு; ஆதலால் என்னைக் கட்டுப்படுத்தாது; இதில் சேராதவர்கள் அனேகர்...

பார்ப்பனீய சம்பாஷணை – சித்திரபுத்திரன் 0

பார்ப்பனீய சம்பாஷணை – சித்திரபுத்திரன்

மணி: ஏன்டா சேஷா ! நம்ம தலைவர்களான ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி , ரெங்கசாமி அய்யங்கார் , சீனிவாச சாஸ்திரி, சிவசாமி அய்யர், ஊ.ஞ. அய்யர் மற்றுமுள்ள பிராமணோத்தமர்கள் எல்லாம் இந்த எலக்ஷனில் எவ்வளவோ பாடுபட்டு மடாதிபதிகள் மகந்துகள் பணத்தை லட்சக்கணக்காக செலவு செய்து ஜெயித்து விட்டோம், ஜெயித்து விட்டோம் என்று தப்பட்டை அடித்தார்களே, கடைசியில் பார்க்கிறபோது பழையபடி மூன்று சூத்திரர்கள் தானே மந்திரிகளாய் விட்டார்கள். இதில் என்ன நமக்கு லாபம். ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார். ஆ.மு ஆச்சாரியார், வெங்கிட்ட ரமணய்யங்கார் இவர்களெல்லாம் மந்திரிகளாய் வருவார்கள் என்றல்லவா நாம் எல்லோரும் எவ்வளவோ பாடுபட்டோம். கணக்கு, மணியக்காரர், காப்பிக் கடை, பஞ்சாங்கம், புரோகிதம், வக்கீல் குமாஸ்தா, வக்கீல், முனிசீப், ஜட்ஜ், நிர்வாக சபை எல்லாம் பாடுபட்டும் பழையபடி சூத்திர ராஜாங்கம்தானே ஆகிவிட்டது. சேஷன்: மணி! நீ என்ன பெரிய முட்டாளாயிருக்கிறாயே. நமக்கு எவ்வளவு பெரிய வெற்றி தெரியுமா? இந்தப் பணகால் ராஜாவை...

சுயமரியாதைச் சங்க ஸ்தாபனம் 0

சுயமரியாதைச் சங்க ஸ்தாபனம்

சகோதரர்களே! இந்த எனது சுற்றுப் பிரயாணத்தின் நோக்கம் இன்னது என்பதை ‘குடி அரசு’ பத்திரிகையின் மூலம் ஏறக்குறைய ஒரு வருஷ காலமாக தெரியப் படுத்திக்கொண்டு வந்திருக்கிறேன். சென்ற வருஷம் காஞ்சீபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசியல் மகாநாட்டிலிருந்தே நமது சுயமரியாதையைக் காப்பாற்ற நமக்கு ஒரு தனி இயக்கம் வேண்டும் என்பதாக பலமுறை பேசி யும் எழுதியும் வந்திருக்கிறேன். அவற்றை நீங்கள் எல்லோரும் ஏகமன தாய் ஒப்புக் கொண்டதாலும் வரவேற்பதாய் தெரிவித்துக் கொண்டதாலும் என்னுடைய அபிப்பிராயம் முன்னிலும் அதிகமாகப் பலப்பட்டது. அதை உத்தேசித்தே தான் உங்கள் விருப்பத்திற்கிணங்கி வந்திருக்கிறேன். இச் சங்கத்தின் நோக்கங்களையும், கொள்கைகளையும் இதற்கு முன் இரண் டொரு சமயங்களில் இவ்விடம் வந்தக்காலத்திலும் சுருக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கின்றேன். இந்த தேசத்தில் 22 கோடி மக்களுக்கு மேலாக இருக்கும் நாம் வெகு சொற்பமான எண்ணிக்கையுள்ளவர்களால் நாம் எவ்வித பொறுப்பாளிகளல்லாத பிறவி காரணமாய் எவ்வளவு இழிவாயும், தாழ்மையாயும் கருதப்பட்டு விலங்கு, பூச்சி, புழுக்களிலும் கேவலமாய்...

தென்காசியில் பார்ப்பனர்கள் ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் கதவடைப்பும் 0

தென்காசியில் பார்ப்பனர்கள் ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் கதவடைப்பும்

தென்காசி சிவன் கோவிலில் பார்ப்பனர்களின் வேத பாராயணத் தைப் போலவே தமிழ் மக்களின் தேவாரப் பாராயணமும் செய்யப்பட வேண்டும் என்பதாகக் கருதி தேவாரப் பாராயணம் ஆன பிறகு பிரசாதம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேவஸ்தான போர்டாரும் கமிட்டியாரும் தர்மகர்த்தாக் களும் உத்திரவு போட்டதினால் அப்பேர்ப்பட்ட சுவாமி தெரிசனமும் பிரசாதமும் தங்களுக்கு வேண்டியதில்லை என்று சொல்லி அதோடு ஒத்துழையாமையும் பஹிஷ்காரமும் செய்து அவ்வூர் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி பார்ப்பன ஸ்ரீகள், புருஷர்கள், குழந்தை குட்டிகள் சகிதம் யாரும் அக் கோவிலுக்குப் போகக் கூடாது என்றும், சுவாமியை தரிசிக்கக் கூடாதென்றும் பரிசாரகம் முதலிய வேலையைச் செய்யக் கூடாது என்றும், சுவாமி தங்கள் வீதிக்கு எழுந்தருளி வந்தாலும் ஒவ்வொரு பார்ப்பனரும் வீதி தெருக் கதவை அடைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் செய்து கொண்டு அந்தப்படி அமுலிலும் நடத்தி வருகிறார்கள் என்கின்ற விபரம் அறிய மிகவும் சந்தோஷமடைகிறோம். ஏனெனில் பார்ப்பனர்கள் பஹிஷ் காரம் செய்த...

பார்ப்பனர்களின் தலைக் கொழுப்பு 0

பார்ப்பனர்களின் தலைக் கொழுப்பு

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், தற்காலம் ஐகோர்ட், நிர்வாக சபை முதலிய ஆதிக்கம் உள்ள பதவிகளிலும் மற்றும் அதிகாரம் உள்ள பதவிகளிலும் வக்கீல் முதலிய செல்வாக்குள்ள பதவிகளிலும் ஏகபோக மாய் அமர்ந்திருப்பதின் மமதையினாலும், பார்ப்பனரல்லாதாரில் சில பதர்கள், வயிற்றுக் கொடுமையாலும் பேராசையினாலும் சுயமரியாதையற்று பார்ப்பனர்கள் பாதம் வருடித் திரிவதினாலும், வேறு பல வழிகளிலும் பார்ப்பன மாய்கையில் பல உணர்ச்சியற்ற ஜமீன்தார் மிராஸ்தார் முதலிய செல்வந்த வாலிபர்கள் அவர்களுக்கு சர்வ சுவாதீனப்பட்டு கிடப்பதாலும், பொதுவாகப் பார்ப்பனரல்லாதார் அறிவீனத்தால் கட்சி, பிரதி கட்சி விவகார வில்லங்கங்கள் முதலியவைகளினால் பார்ப்பனர் களுக்கு அடிமைப் பட்டு கிடப்பதினாலும், பாமர மக்கள் உண்மை நிலையை அறியாதபடி பார்ப்பனர் கள் செய்யும் சூழ்ச்சிப் பிரசாரங்களாலும் சமீப தேர்தல்களில் பார்ப்பனர்கள் தங்களுக்கு வெற்றி கிடைத்ததாய்ச் சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டு விட்டது என்பதை யாவரும் ஒப்புக் கொள்ளுவார்கள். இவ்வெற்றி நிலையைத் தாங்க முடியாமல் நமது பார்ப்பனர்கள் தலைக்கு கொழுப்பேறி தலை கால் தெரியாமல்...

பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

பார்ப்பனரல்லாதார் மகாநாடு

சென்ற வாரம் “குடி அரசு” தலையங்கத்தில் இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எழுதி இருந்தோம். அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் இம்மாத கடைசி வாரத்தில் மதுரையில் ஒரு பார்ப்பன ரல்லாதார் மகாநாடு கூட்டப் போவதாக அறிந்து சந்தோஷமடைகிறோம். கூட்டுவதில் காங்கிரஸ் மகாநாடுகள் என்ற பெயரால் பார்ப்பனர்கள் கூட்டம் கூடி பொது மக்களை ஏமாற்றி தங்கள் வகுப்பார் ஸ்தல ஸ்தாபனங்களிலும் சட்டசபைகளிலும் ஸ்தானம் பெற சூழ்ச்சிகள் செய்வது போலவும் , சர்க்கார் உத்தியோகம் பெற தந்திரங்கள் செய்வது போலவும் இல்லாமல் நாட்டிற்கும், சிறப்பாக பார்ப்பனரல்லாதாருக்கும் உண்மையான நன்மைகள் ஏற்படும் படியாகவும், பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை காப்பாற்றப்படும் படியாக வும், ஏற்ற கொள்கைகளை வைத்து அதற்கான திட்டங்களை வகுத்து காரியத்தில் நடத்த முயலவேண்டுமென்பதையும் தெரிவித்துக் கொள்ளு கிறோம். தலைவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களாவன:- மகாநாட்டுக்கு பலவித ராஜிய அபிப்பிராயமுள்ள பார்ப்பனரல் லாதார்களை எல்லாம் அழைக்க வேண்டும். யார் யாருடைய உண்மை யான கூட்டுறவும்...

அது பார்ப்பனரிடம் இருக்கிறதா?                        அல்லது பார்ப்பனரல்லாதாரிடம் இருக்கிறதா? 0

அது பார்ப்பனரிடம் இருக்கிறதா? அல்லது பார்ப்பனரல்லாதாரிடம் இருக்கிறதா?

இவ்வாண்டு நடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே கண்ணை மூடிக் கொள்ளும் என்று நினைத்து பேசுவது போல் நமது பார்ப்பனர்கள் வகுப்பு வாதம் ஒழிந்தது என்று கத்திக் கொண்டு வேஷப்பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் தேர்தல் வகுப்பு வாதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டே நேரிடையாகவும், மறைமுக மாகவும், சூழ்ச்சியாகவும் நடைபெற்று வந்திருக்கிறது என்பதை பொது ஜனங் கள் அறியமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . அதாவது, இந்தியா சட்டசபைக்கு சென்னை நகரத் தொகுதிக்கு ஒரு ஸ்தானம் உண்டு. அந்த ஒரு ஸ்தானத்திற்கு மூன்று தடவையும் பார்ப்பனர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள். மற்ற 23 ஜில்லாக்களுக்கு 9 ஸ்தானங்கள் உண்டு. இந்த 10 ஸ்தானங்களுக்கு 8 பார்ப்பனர்; அதில் 6 அய்யங்கார். அதாவது ஸ்ரீமான்கள் 1.சீநிவாசய்யங்கார், 2. எம்.கே. ஆச் சாரியார், 3. துரைசாமி அய்யங்கார், 4. எ.ரங்கசாமி அய்யங்கார், 5. சேஷய் யங்கார், 6. கே.வி. ரங்கசாமி அய்யங்கார்,...

சந்தா நேயர்களுக்கு 0

சந்தா நேயர்களுக்கு

நமது ‘குடி அரசு’ பத்திரிகை சரிவரக் கிடைப்பதில்லை யென்று -நூற்றுக்கணக்கான சந்தாதாரர்கள் குறை கூறி அடிக்கடி எழுதிக் கொண்டே வருகிறார்கள். நாங்கள் யாதொரு தடையும் தாமதமுமின்றி கிரமமாய் பத்திரி கைகளை அனுப்பிக் கொண்டுதான் வருகிறோம். நேயர்கள் கூறும் குறை களுக்கு உற்ற காரணங்கள் நமக்கு விளங்கவில்லை. தயை கூர்ந்து அந்தந்தத் தபாலாபீசுகளின் போஸ்ட் மாஸ்டர்களுக்கு குறை கூறும் நேயர்கள் எழுதிக் கேட்டு எமக்கும் அறிவித்தால் மேலதி காரிகளுக்குத் தெரிவித்து தக்க ஏற்பாடுகள் செய்ய இயலும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். – பத்திராதிபர் – குடி அரசு – அறிவிப்பு – 05.12.1926

“மத விஷயத்தில் சர்க்காரைப் பிரவேசிக்கச் செய்யாத பார்ப்பனர்கள்” தேவார பாராயணத்திற்கு தடை உத்திரவு                        ( இஞ்சங்ஷன் ) 0

“மத விஷயத்தில் சர்க்காரைப் பிரவேசிக்கச் செய்யாத பார்ப்பனர்கள்” தேவார பாராயணத்திற்கு தடை உத்திரவு ( இஞ்சங்ஷன் )

நமது பார்ப்பனர்கள் தென்காசி கோவிலில் சுவாமியுடனும், தேவாரத் துடனும் ஒத்துழையாமையும் பஹிஷ்காரமும் செய்ய நேர்ந்தது போலவே சங்கரன் கோவிலிலும் செய்ய நேரிட்டுவிட்டால், தங்கள் வரும்படிக்கு ஆபத்து வந்துவிடுமே எனப் பயந்து சங்கரன் கோவில் டிஸ்டிரிக்ட் முனிசீப்பு கோர்ட்டில் வியாஜ்ஜியம் தொடுத்து தங்களுக்கு பிரசாதம் கொடுக்காததற்கு முந்தி தேவாரம் படிக்கக்கூடாது என்று (இஞ்சங்ஷன்) தடை உத்திரவு வாங்கி விட்டார்களாம். கோவில் அதிகாரிகள் அதை அப்பீல் செய்ய பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். “இந்துமத சம்பந்தமான விஷயத்தில் சர்க்காரார் மூலமாய் நமது இந்துக்கள் பணங் காசுக்கு வரவு செலவு கேட்பதுகூட இந்து மதத்தில் சர்க்காரை பிரவேசிக்க விட்டுவிட்டார்கள்” என்று மாய்மாலக் கண்ணீர் விடும் நமது பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்வதை நிறுத்த சர்க்காரிடம் போயிருப்பதும், இந்துக்கள் அல்லாதவர்கள் கூட ஒரு சமயம் இதற்கு தீர்ப்பு எழுதும்படியாகச் செய்வதும், இந்துமதத்தில் சர்க்காரை நுழைய விட்டதல்ல போலும்! ஏன்? பார்ப்பனர் கோர்ட்டுக்கு போனால் மதபக்தி; பார்ப்பனரல்லாதார் கணக்கு கேட்டால்...

கோவை ஜில்லா சட்டசபைத்                                         தேர்தல் முடிவு 0

கோவை ஜில்லா சட்டசபைத் தேர்தல் முடிவு

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் முடிவு இச்சில்லா வாசி களில் பெரும்பான்மையான பேர்கள் மாத்திரமில்லாமல் வெளி ஜில்லா மக்களும் மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையுமே அடைந்தார்கள் என்பதாகவே அறிகிறோம். என்னவெனில் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய் யங்கார் அவர்கள் 100 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதும் ஸ்ரீமான் ராமலிங்கஞ் செட்டியார் அவர்கள் 100 ஓட்டு வித்தியாசத்தில் தோல்விய டைந்ததும் கேட்போருக்கு கர்ண கடூரமாயிருந்திருக்குமென்பதில் அதிசய மில்லை. ஆனால் அத்தேர்தலுக்காக ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் செய்த பணச் செலவும் முயற்சியும் ஸ்ரீமான் அய்யங்கார் அவர்கள் செலவு செய்த தில் 10-ல் ஒரு பாகம்கூட இருக்காது. அதாவது ஸ்ரீமான் அய்யங்கார் அவர் களுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகி இருந்தால் ஸ்ரீமான் செட்டியாருக்கு ரூபாய் ஐயாயிரத்துக்குள்ளாகத்தான் இருக்குமென்பார்கள். ஆனபோதிலும் பொது மக்களுக்கு செட்டியாரவர்கள் இடத்தில் ஒருவித மதிப்பு உண்டு. அதாவது சட்டசபை விஷயத்திலும் வரவு செலவு சிக்கன விஷயத்திலும் அநுபோகம் உள்ளவர் என்றும் அவர் மந்திரியாக வரவேண்டும் என்றும் நினைத்து...

சங்கரநாராயணர் கோவிலுக்குள்                         கக்கூசும் மிதியடியும் 0

சங்கரநாராயணர் கோவிலுக்குள் கக்கூசும் மிதியடியும்

திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரன்கோவிலென்னும் சங்கர நாராயணன் கோவிலானது அச்சில்லாவில் உள்ள முக்கிய கோவில்களுள் ஒன்று. அக்கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் வரும்படி உண்டு. லோககுரு என்றும் சங்கராச்சாரியார் சுவாமிகள் என்றும் சொல்லப்பட்ட ஸ்மார்த்தர்களின் குருவானவர் இம்மாதம் அவ்வூருக்கு வந்து அக் கோவி லை தனக்கும் தனது பரிவாரத்திற்கும் ஜாகையாக வைத்துக் கொண்டார். அதோடல்லாமல் “சுவாமிகளின்” திருக் கக்கூசும் அக் கோவிலுக்குள் ளாகவே கட்டப்பட்டு “சுவாமி களின்” திரு மலமும் கோவிலிலேயே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அக்கோவில் டிரஸ்டி கனவான்களில் பார்ப்பன ரல்லாதார் அதிகமாய் (மெஜாரிட்டியாய்) இருந்தும் இதை ஆnக்ஷபிக்கத் தைரியமில்லை. ஏனென்றால் அவ்வூர் அதிகாரிகள் எல்லாம் குட்டி சுவாமிகள் குழாங்களாகவே இருக்கின்றன. அதோடு மாத்திரமில்லாமல் “சுவாமிகள்” சங்கரநாராயண சுவாமியை திருக்கண் பார்ப்பதாயிருந்தாலும், திரு மிதியடியை தாங்கிய திரு பாதத்துடனேதான் மூலஸ்தானத்திற்குப் போய்த் திருக்கண் பார்த்தருளினாராம். அதோடு மாத்திரமல்லாமல் “சுவாமிகள்” கோவிலுக்குள் Žநுழையும் போது திரு மேனாவில் திருப் பள்ளிக்கொண்ட கோலத்துடனேயே சென்றாராம். மாமிக்கோர் மாமியுண்...

“பொய் பொய் முற்றும் பொய்”                      ஆனால்                                                         மெய் மெய் முற்றும் மெய் எங்கே? 0

“பொய் பொய் முற்றும் பொய்” ஆனால் மெய் மெய் முற்றும் மெய் எங்கே?

ஸ்ரீமான் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் தேர்தல்கள் விஷயத் தில் பார்ப்பனரல்லாதார்களுக்கு விரோதமாகவும் பார்ப்பனர்களுக்கு அநுகூலமாகவும் தேசபக்தியைச் சாக்காட்டிக் கொண்டு பிரசாரம் செய்து வந்ததை பல தடவைகளில் நாம் பலமாய்க் கண்டித்திருப்பது நேயர்களுக் குத் தெரிந்திருக்கும். கடைசியாக ஸ்ரீமான் ஹ. ராமசாமி முதலியாருக்கு விரோதமாக செங்கல்பட்டு ஜில்லாவில் பாமர மக்களிடையில் போய் சீமை யிலுள்ள மனிதர்களுக்கு சராசரி வயது 50 என்றும், நமது நாட்டிலுள்ள மக்களுக்கு சராசரி வயது 25 என்றும், அதற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியும் ஹ. ராமசாமி முதலியார்தான் என்றும், ஆதலால் அவருக்கு ஓட்டுச் செய்ய வேண்டாம் என்றும் இன்னமும் இதுபோல் பல விஷயங்கள் பேசியதாக பத்திரிகைகளில் பார்த்து கண்டித் தெழுதி இருந்தோம். அதுசமயம் நான் அப்படிப் பேசவில்லை என்றும், பார்ப்பனர்கள் தங்கள் பத்திரிகையில் அப்படி எழுதிக் கொண்டார்கள் என்றும் அவர் சொன்னார். அதற்குப் பிறகு கூட ஸ்ரீமான் சக்கரை செட்டியாருக்கு விரோதமாய்த் தொழிலாளர் சங்கங்க ளுக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரை...

இனி என்ன செய்யவேண்டும்? 0

இனி என்ன செய்யவேண்டும்?

சென்னை மாகாண நிர்வாகத்திற்கு புதிய மந்திரிகள் நியமன மாய்விட்டது. அதாவது, ஸ்ரீமான்கள் டாக்டர் ஞ. சுப்பராயன், ஹ. ரங்கநாத முதலியார், சு.சூ. ஆரோக்கியசாமி முதலியார் ஆகிய மூன்று கனவான்கள் நியமனம் பெற்றுவிட்டார்கள். இவர்களுள் முறையே ஒருவர் ஜமீன்தார். ஒருவர் பிரம்மஞான சங்கத்தார். ஒருவர் சர்க்கார் பென்ஷன் உத்தியோ கஸ்தர். ஆனபோதிலும் இவர்கள் தங்களுக்கு என்று யாதொரு தனி கொள்கையும், இயக்கமும் இல்லாதவர்களாகையால் தனித்தனியாக சமயம் போல் அவர்களுக்குத் தோன்றியபடி நிர்வாகத்தை நடத்திக் கொண்டு போவார்கள் என்றேதான் நாம் நினைக்க வேண்டும். அதோடு மந்திரிகள் மூவரும் பார்ப்பனரல்லாதார்கள்தான் என்று சொல்வதாயிருந்தாலும் தங்கள் தங்கள் காலிலேயே நிற்கத்தகுந்த பொதுஜன ஆதரவோ, கட்சி பலமோ, கொள்கை பலமோ இல்லாதவர்கள். ஆதலால் நமது முன்னேற்றத்தின் எதிரிகளான பார்ப்பனர்களின் தயவில்லாமல் அரை நிமிஷமும் உயிர்வாழ முடியாதவர்கள். ஆனதால் இம்மந்திரி நியமனம் பார்ப்பனர்களுக்கு அனு கூலமே தவிர பார்ப்பனரல்லாதார்களுக்கு ஒன்றும் அனுகூலம் இல்லை யென்றே சொல்லவேண்டும். தேசத்திற்கு மந்திரிகளால் நன்மையோ...

டாக்டர் வரதராஜுலு நாயுடு 0

டாக்டர் வரதராஜுலு நாயுடு

டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் ‘மந்திரிசபை’ என்னும் தலைப்பிட்டு தமிழ்நாடு பத்திரிகையில் எழுதி இருக்கும் வியாசம் பாமர மக்களை குழப்பமடையச் செய்யக் கூடியதாயிருப்பதால் நிலைமையைத் தெளிவு படுத்த வேண்டி அவ்வியாசத்தின் போக்கைப் பற்றிச் சிறிது ஆராய வேண்டியிருக்கிறது. டாக்டர் நாயுடுகாரு வியாசத்தில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கிய விஷயங்களை இதில் குறிப்பிடுகிறோம். “ஸ்ரீ வில்லிபுத்தூர் மகாநாட்டில் நான் வேண்டிக் கொண்டபடியும், தேசீய சங்கத்தின் அறிக் கைப் படியும் சுயராஜ்யக் கட்சிக்கோ ஜஸ்டிஸ் கட்சிக்கோ பெரும்பான்மை யான ஸ்தானங்கள் கிடைக்கமுடியாமல் செய்து விட்டதைக் கண்டு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்று எழுதியிருக்கிறார். இதில் கடுகளவு உண்மை யாவதிருக்கிறதா? டாக்டர் நாயுடுகாரு கணக்குப் படிக்கே சுயராஜ் யக் கட்சிக்கு 46 ஸ்தானங்கள் என்று போட்டிருக்கிறார். ஒட்டு மொத்தம் தொண்ணூற்றாறு என்றும் போட்டிருக்கிறார். இவர்களில் கட்சி இல்லாத ஐரோப்பியர்களை நீக்கிவிட்டால், டாக்டர் கணக்குப்படியே சுயராஜ்யக் கட்சிக்காரர் மெஜாரிட்டி யாகி இருக்கிறார்கள் என்பதை நாயுடுகாரு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்....

பிள்ளை வரத்திற்குப் போய்ப் புருஷனைப் பறி கொடுப்பதா? கொள்கைக்காக மந்திரி பதவியா?                              மந்திரி பதவிக்காக கொள்கையா? 0

பிள்ளை வரத்திற்குப் போய்ப் புருஷனைப் பறி கொடுப்பதா? கொள்கைக்காக மந்திரி பதவியா? மந்திரி பதவிக்காக கொள்கையா?

பணகால் ராஜா அவர்கள் மந்திரி பதவிகளை பங்கிட்டுக் கொள்ளும் விஷயத்தில் சட்டசபை சம்பந்தப்பட்ட வரையில் ‘ஜஸ்டிஸ் கட்சி’ அல்லது பிராமணரல்லாதார் என்கிற கட்சிப் பெயரைக் கூட விட்டுவிட்டு அதற்கு வேறு பெயர் வைத்துக் கொள்ள சம்மதித்ததாக ‘மித்திரன்’ முதலிய பத்திரிகைகளில் காணப்படுகிறது. ‘‘செருப்புக்காகக் காலா? காலுக்காகச் செருப்பா?” என்னும் பழமொழி போல் கட்சிக்காக மந்திரியா, மந்திரிக்காக கட்சியா? மந்திரி உத்தியோ கத்திற்காக கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ள சம்மதித்த பணகால் ராஜாவின் நிலைமையை யாரும் கண்டிக்காமலிருக்க முடியாது. சட்டசபையில் பணகால் அரசர், தானும் தனது கட்சியாரும் பார்ப் பனரல்லாதார் கட்சிப் பிரதிநிதி என்பதை மாற்றிக் கொள்வார்களேயானால் சட்டசபையைப் பொறுத்த வரையில் வேறு யாருடைய பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ள அருகதையுடையவர்கள் ஆவார்கள். டாக்டர் நாயரவர் களும் சர். தியாகராய செட்டியாரவர்களும் எந்த சமயத்திலும் தங்களுடைய கட்சிப் பெயரையோ கொள்கையையோ ஒரு கடுகளவு மாற்றிக் கொள்வ தற்கும் எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் சிறிதும் சம்மதித்த...

பார்ப்பனீயத்தை ஒழித்த கல்யாணங்கள் 0

பார்ப்பனீயத்தை ஒழித்த கல்யாணங்கள்

சேலம் அடுத்த தாதம்பட்டி என்னும் கிராமத்தில் பல்ஜிய நாயுடு வகுப்பைச் சேர்ந்த வீடுகளில் மூன்று கல்யாணங்கள் வெகு விமரிசையாய் நடந்தன. அம்மூன்று கல்யாணங்களுக்கும் பார்ப்பன புரோகிதர்கள் இல்லாமல் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே முகூர்த்தம் செய்விக்கப் பட்டது. இவைகளில் ஒரு கல்யாண வீட்டுக்காரருக்கு மாத்திரம் ஆரம்பத் தில் நாம் ஏன் இதை முதன் முதலாகச் செய்ய வேண்டும், மற்றும் யாராவது செய்த பிறகு நாம் செய்யலாம் என்கிற எண்ணம் மனதுக்குள்ளாக இருந் திருக்கிறது. அதற்கேற்றாப் போல் அவர் ஒரு பார்ப்பனப் புரோகிதரையும் தருவித்து விட்டார். ஆனால் மற்ற இரண்டு கல்யாண வீட்டுக்காரரும் தைரியமாய்ச் செய்ய ஆரம்பித்த பிறகும் ஈரோட்டிலிருந்து கல்யாணத்திற்கு வந்திருந்த ஸ்ரீமான்களான அ.கோவிந்த நாயக்கர், வெ. முத்து நாயக்கர், ரா. துரைசாமி நாயக்கர், வெ. எல்ல நாயக்கர், எ.எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலிய இன்னும் பல கனவான்கள் சொன்ன பிறகும் தான் தருவித்த பார்ப்பனப் புரோகிதருக்கு...

‘வெற்றிக் கொண்டாட்ட’ விளம்பரம் 0

‘வெற்றிக் கொண்டாட்ட’ விளம்பரம்

வெற்றிக் கொண்டாட்டம் என்னும் பேரால் நமது பார்ப்பனர்கள் தங்களது பார்ப்பனப் பிரசாரங்களை மறுதேர்தல்களுக்கும் கூட சேர்த்து இப்பொழுதிலிருந்தே நடத்த ஆரம்பித்து விட்டார்கள். யாரோ வெகு பேர் கள் இவர்களை உத்தியோகம் ஏற்றுக்கொள்ளும்படியும் மந்திரி சபை களை அமைக்கும்படியும் கேட்டுக்கொண்டது போலவும் வாக்காளர்களுக்குத் தாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டி மந்திரி பதவிகளை மறுப்பது போலவும் வேஷம் போடுகிறார்கள். இதைப் பாமர ஜனங்களும் நம்பி “ஆ! ஆ!! நமது பார்ப்பனர்கள் என்ன, சுயராஜ்யக் கட்சிக்காரர்கள் என்ன, காங்கிரசுக்காரர்கள் என்ன! ஆகிய ஸ்ரீமான்கள் ஸ்ரீநிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ஏ.ரங்கசாமி அய்யங்கார் முதலியவர்கள் எவ்வளவு நாண யக் காரர்கள் மந்திரி உத்தியோகத்தைக் கூட வேண்டாமென்று சொல்லி விட்டார்கள்” என்று இவர்களைப் பாராட்டுவதில் ஏமாந்து போனாலும் போவார்கள். இப்பொழுது ஜயித்தவர்கள் யார்? பார்ப்பனர்களா? சுயராஜ்யக் கட்சியாரா? காங்கிரசுக்காரர்களா? யார் என்று தக்க ஆதாரத்துடன் பதில் சொல்ல யார் தயாராயிருக்கிறார்கள்? கட்சி என்பதற்கு என்ன பொருள்? சுதேசமித்திரனும் இந்துவுமான பார்ப்பனப்...

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் 0

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது இந்திய மக்களில் பார்ப்பனர் தவிர மற்றெல்லா வகுப்பார்களாலும் வெகு காலமாக அதாவது இந்திய பிரதி நிதித்துவம் என்கிற வார்த்தை என்றைக்கு ஏற்பட்டதோ அது முதல் அரசாங் கத்தாரைக் கேட்டு வரப்படும் ஒரு கோரிக்கை. இக்கோரிக்கை ஏற்பட்ட காலமுதல் இந்நாட்டுப் பார்ப்பனர்கள் – குறிப்பாய் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பல வழிகளிலும் தந்திரங்களிலும் சூழ்ச்சிகளிலும் அது ஈடேறாமல் இருப்பதற்காக வெகு பாடுபட்டு வந்திருக் கிறார்கள். என்ன பாடுபட்டும் அரசியல் இயக்கங்களான காங்கிரசும் அரசாங் கமும் அதை ஒப்புக்கொண்டு அது ஒரு அளவு அமுலில் வரவும் ஏற்பாடு செய்தாய் விட்டது. உதாரணமாக, இந்தியாவிலுள்ள இந்திய மக்களில் மகம்மதியர்களுக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், சீக்கியர்களுக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், கிறிஸ்தவர்களுக்கு இத்தனை ஸ்தானங்க ளென்றும், மகம்மதியரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், மகம்மதியரல்லாதாரில் பார்ப்பனரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானங்களென் றும், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகியவர்களுக்கு பொதுவில் இத்தனை ஸ்தானங்களென்றும் பிரிக்கப்பட்டு 6, 7 வருஷ காலமாய் அதாவது மூன்று தேர்தலாய்...

இதுகூட வகுப்பு துவேஷமா? 0

இதுகூட வகுப்பு துவேஷமா?

திருநெல்வேலி ஜில்லா தென்காசியிலுள்ள ஒரு சிவன் கோவிலில் சமஸ்கிருதத்தில் வேத பாராயணம் செய்த பிறகு தமிழில் தேவார பாராய ணமும் செய்த பிறகு எல்லோருக்கும் விபூதி பிரசாதம் கொடுக்க வேண்டும் என்பதாக கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்களாம். அங்கு வேத பாராய ணம் செய்து வந்த பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்த பிறகு விபூதி பிரசாதம் வாங்குவது தங்கள் உயர்வுக்குக் குறைவு தேடினதாக ஆகுமென்று நினைத்து கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறதை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம். கோவிலில் தேவா ரம் படிக்க வேண்டுமென்று சொன்னால்கூட அது நமது பார்ப்பனர்களுக்கு வகுப்புத் துவேஷமாய்ப் படுகிறதாயிருந்தால் பிறகு எங்கு போய்த்தான் பிழைக்கிறது. தேவாரம் படிக்காததினால் மோக்ஷம் கெட்டுப்போய் விட்டது என்ப தாக நாம் பயப்படவில்லை. மக்களிடம் அன்பு செய்வதைத்தான் கடவுள் பக்தி என்று நினைக்கிறோமே அல்லாமல் வேத பாராயணமும் தேவார பாராய ணமும்தான் கடவுள் பக்தி என்று நாம் நினைப்பதில்லை. ஆனாலும்...

நாகைத் தொழிலாளர் சங்கம் 0

நாகைத் தொழிலாளர் சங்கம்

நாகை தென்இந்திய ரயில்வே தொழிலாளருக்கும் ³ ரயில்வே அதிகாரிகளுக்கும் நாகையை விட்டு பொன்மலைக்கு தொழிலாளர் குடிபோக வேண்டிய விஷயமாய் ஏற்பட்ட சிறு தகராறு தீர்ந்து விட்டதாகத் தெரிந்து சந்தோஷமடைகிறோம். ஆனாலும் மத்தியஸ்த தீர்ப்பினால் தொழிலாளருக்கு எவ்வித லாபமும் சவுகரியமும் ஏற்பட்டிருப்பதாய்ச் சொல்ல கொஞ்சமும் இடமில்லை. தொழிலாளர்களுக்கு வெகு காலமாக இருக்கும் சுதந்திரங்களை ரயில்வே அதிகாரிகள் பிடுங்கிக் கொள்வதாய்ச் சொன்னதில் மத்தியஸ்தர் வந்து பிடுங்கிக் கொள்வது சரியல்லவென்று சொல்லி விட்டதினால் தொழிலாளருக்கு லாபம் என்ன? இத்தகராறு ரயில்வேக்காரர்கள் முன் யோசனையின்மேல் செய்த கெட்டிக்காரத்தனமான தந்திரமே அல்லாமல் வேறல்ல. ஏனெனில் வெகு காலமாய் வீடு வாசல் களுடன் வாழ்ந்து வந்த தொழிலாளர்களை ஊரைவிட்டு வேறு ஊருக்கு வாருங்கள் என்று கூப்பிட்டால் யாருக்கும் வர இஷ்டமிருக்காது என்பதை உணர்ந்தும் இதற்காக ஏதாவது அதிகப்படியான சுதந்திரங்கள் கேட்பார்கள் என்று எண்ணியே முன் ஜாக்கிரதையுடன் ஏற்கனவே இருக்கிற சுதந்திரத்தை யும் பிடுங்கிக் கொள்வோம் என்று சொன்னால் மத்தியஸ்தத்திற்கு வருகிற...

ஜஸ்டிஸ் கக்ஷிக்கு ஓர்  எச்சரிக்கை சமய சஞ்சீவிக் கூட்டம் 0

ஜஸ்டிஸ் கக்ஷிக்கு ஓர் எச்சரிக்கை சமய சஞ்சீவிக் கூட்டம்

சட்டசபைத் தேர்தலின் முடிவுகளைக் கண்டு பலர் பலவிதமாக அக்கட்சியை தாக்கிப் பேசவும் எழுதவும் ஆரம்பித்து விட்டார்கள். உலக வாசனை இன்னதென்றே அறியாது சமயத்துக்கு தக்கபடி மனிதர்களுக்குத் தக்கபடி இச்சகம் பேசி வயிறு வளர்ப்பவர்கள் இந்த சமயத்தில் பெரிய மேதாவிகளைப்போல் அக்கட்சிக்கு ஞானோபதேசம் செய்ய வந்து விட்டார் கள். இக்கூட்டத்தார் காங்கிரசுக்கென்று தங்கள் சுயநலம் கருதாமல் ஒரு காதொடிந்த ஊசியளவு உதவியும் செய்திருக்க மாட்டார்கள்;; அல்லது ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் எவ்விதமான நன்மையுமாவது அடை யாமலும் இருந்திருக்க மாட்டார்கள். அல்லாமலும் நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் சுவற்றுமேல் பூனையாகவும், சமயத்திற்கு தகுந்தபடியும், தங்களது சுயநலத்திற்கு ஆதாரமாகவும் அவ்வப்போது நடந்தும், பேசியும், எழுதியும் காலங்கழித்து வந்த இவர்கள் இப்போது “வகுப்பு வாதத்தால் ஜஸ்டிஸ் கட்சிக்கு தோல்வி என்றும் தேசீய வாதத்தால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி ஏற்பட்டது என்றும் ஆதலால் வகுப்பு வாதத்தை விட்டு விட்டு தேசீய வாதத்தில் சேருங்கள்” என்றும் பார்ப்பனர் மகிழும்படி பேசுகிறார்கள். ஜஸ்டிஸ்...

தக்க சமயம் சட்டசபைத் தேர்தல் முடிவு                                       ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை 0

தக்க சமயம் சட்டசபைத் தேர்தல் முடிவு ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை

சட்டசபைத் தேர்தல்களின் முடிவானது தமிழ்நாட்டில் நாம் எதிர்பார்த்ததற்குச் சிறிது மாறாய் ஏற்பட்டு இருக்கிறது. ஆனபோதிலும் இதில் ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதில்லை. பாமர மக்களுக்கு போதுமான அறிவு உண்டாகும்படி செய்வதற்கு முந்தி அவர்கள் வசம் ஓட்டு என்னும் ஆயுதத்தைக் கொடுத்த பிறகு அது அவர்களையே கெடுத்துக் கொள்ள உபயோகப் படுத்தப்பட்டால் அதற்காக யாரும் ஓட்டர்களைக் குற்றம் சொல்ல முடியாது. எனினும் இதுவரை வெளிவந்திருக்கும் தேர்தல் முடிவு களின்படி பார்ப்பனரல்லாதார் பயப்படத்தக்க மாதிரி ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை. பொதுவாக நாம் சட்டசபை மூலம் அரசியல் சம்பந்தமான ஒரு காரியத்தையும் செய்து கொள்ள முடியாது என்று அநேக தடவைகளில் எழுதியும் பேசியும் வந்திருப்பது வாசகர்களுக்கு நன்றாய்த் தெரியும். பார்ப்பனரல்லாதார் சமூக சம்பந்தமாக பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு பார்ப்பனரல்லாதார் செய்யும் முயற்சிக்கு பார்ப்பனர்கள் சட்டசபையின் மூலம் இடையூறு உண்டாக்காமல் இருக்கச் செய்யலாம் என்கிற ஒரே எண்ணத்துடன் மாத்திரம் சட்டசபையில் நம்பிக்கை உள்ளவர்களை இன்ன கொள்கைக்காரர்களுக்கு ஓட்டுச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்...

கக்ஷிப் புரட்டு                                     பார்ப்பனப் பத்திரிகைகளின்                                  கண்கட்டு ஜால வித்தை 0

கக்ஷிப் புரட்டு பார்ப்பனப் பத்திரிகைகளின் கண்கட்டு ஜால வித்தை

சென்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அங்கத் தினர்களைப் பற்றி கக்ஷி பிரித்தெழுதுவதன் மூலம் பார்ப்பனக் கக்ஷிக்கு அதிகமான ஆள்கள் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பதாய் பொது ஜனங்களை யும், சர்க்காரையும் ஏமாற்றுவதற்காக ‘சுதேசமித்திரன்’, ‘இந்து’, ‘சுயராஜ்யா’ முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் செய்துவரும் கண் கட்டு ஜால வித்தை கள் கணக்கு வழக்கு இல்லை. இதுகளை நம்பி ஏதோ சில பாமர ஜனங்கள் ஏமாந்து போகக்கூடுமே தவிர யாரை ஏமாற்றுவதற்காக இப்பார்ப்பனப் பத்திரிகைகள் இஜ்ஜால வித்தைகள் செய்கின்றனவோ அவர்கள், அதாவது சர்க்காரும் பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களும் ஒருக்காலமும் ஏமாறப் போவதில்லை என்பது உறுதி. முதலாவதாக ஒரு விஷயத்தை சந்தோஷத்தோடு தெரிவித்துக் கொள்ளுகிறோம். அதாவது, நமது நாட்டுப் பார்ப்பனர் தங்களைத் தவிரவும் தங்களது அடிமைகளைத் தவிரவும் வேறு ஒருவரையும் கிட்டத்தில் அணுகவொட்டாத மாதிரியில் சுயராஜ்யக் கட்சி என்பதாக ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அநேக பார்ப்பனரல்லாத அரசியல் பாஷாண்டிகளின் ஆதரவையும் விலை கொடுத்து வாங்கி அதனா லேயே பார்ப்பன ஆதிக்கத்தை நிலை...

பனகால் அரசர் வெற்றி 0

பனகால் அரசர் வெற்றி

கனவான்களே! பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவரான கனம் பனகால் அரசரின் வெற்றிக்காக இக்கூட்டம் கூட்டி நாம் கொண்டாட வேண்டுமென்பது அவ்வ ளவு அவசியமானதல்ல என்பது எனது அபிப்பிராயம். ஆனால் நமது முன்னேற்றத்திற்கு எதிரிகளாயுள்ளவர்கள் நமது பனகால் அரசர் வெற்றிக்குத் தடையாக செய்த சூழ்ச்சிகளும், முயற்சிகளும், அக்கிரமமான செய்கை களும் பொதுமக்களின் உணர்ச்சியைப் பலமாகக் கிளப்பி விட்டுவிட்டது. அதுமாத்திரம் அல்லாமல் “பனகால் வீழ்ந்தார், பார்ப்பனரல் லாதார் கட்சிக்கு சாவு மணி” என்பதாகவும், மற்றும் மேடைகளில் பேசும் சோமாறிகள் “பனகாலை வெட்டிப் புதைத்தாகிவிட்டதென்றும் கொள்ளி வைத்தாகி விட்டதென்றும் பலமாதிரி லுச்சத்தனமாகப் பேசி வந்ததாலும் சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள் என்று சொல்லுபவர்களில் சிலரும் அவரைப் பற்றி மிகுதியும் ஈனத்தனமாய் பேசி வந்ததாலும் பார்ப்பனரல்லாத பெருவாரி மக்களுக்கு பனகால் அரசரிடம் ஒருவித அன்பு ஏற்பட இடம் கொடுத்தது. அதற்காக கொண்டாட வேண்டியதாயிற்று. உதாரணமாக, நானும் ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் அவர்களும் மதுரை பிளாட்பாரத்தில் ரயில் வண்டியிலி ருந்தபடியே சில கனவான்களோடு...

சுயராஜ்யக் கட்சிக்கு தேசத்திலுள்ள செல்வாக்கு                             ‘‘சென்றவிடமெல்லாம் சிறுமை’’ 0

சுயராஜ்யக் கட்சிக்கு தேசத்திலுள்ள செல்வாக்கு ‘‘சென்றவிடமெல்லாம் சிறுமை’’

சுயராஜ்யக் கட்சியார் இதுவரை தங்களுக்குத் தேசத்தில் பிரமாத மான செல்வாக்கு இருப்பதாகவும் செல்லுமிடங்களிலெல்லாம் தங்கள் கட்சிக்குப் பெரிய ஆதரவு இருக்கிறதென்றும் பறையடித்துக் கொண்டு வந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இதனுடைய உண்மை கடந்த ஒருமாத காலமாக ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ஏ.ரெங்கசாமி அய்யங்கார், பண்டித நேரு முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத்திற்கென்று எங்கெங்கு செல்லுகிறார்களோ அங்கெல்லாம் இவர்களது இரகசியம் வெளியாகி பொது ஜனங்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடின வண்ணமாகவே இருக்கிறார்கள். உதாரணமாக, கும்பகோணத்தில் ஸ்ரீமான் ரெங்கசாமி அய்யங்கார் அவர்கள் பொது ஸ்தலங்களில் கூட்டம் போட முடியாமல் ஒரு கட்டிடத்திற்குள் கூட்டம் போட்டும் அங்கும் பொது ஜனங்கள் ஒரு அக்கிரா சனரைப் பிரேரேபிக்க பார்ப்பனர்கள் வேறு ஒருவரைப் பிரேரேபிக்க கடைசியாய் அய்யங்கார் போலீசார் தயவு தேட வேண்டியதாயிற்று. மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரவர்கள் சென்ற காலத்திலும் கூட்டங்களிலும் பொது ஜனங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்...

பார்ப்பனர்களால் வந்த வினை 0

பார்ப்பனர்களால் வந்த வினை

மலையாளக் குடிவார மசோதாவை ஒழித்து விட்டார்கள். இனி தேவஸ்தான மசோதாவை ஒழிப்பதுதான் பாக்கி. இனியும் பார்ப்பனர்களுக் காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர்களானால் நமது கதி அதோ கதி தான். மலையாளக் குடிவார மசோதா சட்டசபையில் நிறைவேற்றக் கொண்டு வந்த காலத்தில் பார்ப்பன சட்ட மெம்பரான சர். சி.பி. ராமசாமி ஐயரவர்கள் ஆணவத்தோடு மிரட்டி இச்சட்டத்தை கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து அமுலுக்கு வராமல் செய்து விடுவேன் என்று வீரம் கூறியது வாசகர்கள் அறிந்திருக்கலாம். இப்போது அவர் சொன்னது போலவே சட்டசபையில் பெரும்பான்மையோரால் நிறைவேறின இச் சட்டத்தை ஏதோ சில நொண்டிச் சாக்குகளுடன் கவர்னர் பிரபு நிராகரித்து விட்டார் . நமது நாட்டில் வெள்ளைக்கார அதிகார வர்க்க ஆட்சி, பார்ப்பன ஆதிக்க வர்க்க ஆட்சி என இரண்டு கொடுமையான ஆட்சிகளின் கீழ் நாம் பாசாணத்தில் புழு இருப்பது போல் காலந்தள்ள வேண்டியவர்களாயிருக் கிறோம். நம்முடைய மேன்மைகளும் முன்னேற்றங்களும் வெள்ளைக்...

காங்கிரஸ் தலைவியாகிய                                       ஸ்ரீமதி சரோஜினி தேவியின் வாக்கு                     “ஜஸ்டிஸ் கட்சியை நான் வரவேற்கிறேன்” 0

காங்கிரஸ் தலைவியாகிய ஸ்ரீமதி சரோஜினி தேவியின் வாக்கு “ஜஸ்டிஸ் கட்சியை நான் வரவேற்கிறேன்”

“நான் தென்னிந்திய பார்ப்பனர்களின் யோக்கியதையை நன்றா யறிவேன். அப்பொல்லாப் பார்ப்பனர்களின் கொடுமையினால்தான் பார்ப்பன ரல்லாதாரியக்கம் உண்டாக வேண்டியதாயிற்று. அவர்கள் தங்களை உயர் வாய்க் கருதிக்கொள்ளும் அகம்பாவத்தை நான் பலமாய் வெறுக்கிறேன். பார்ப்பனரல்லாதாரியக்கம்தான் எல்லா வகுப்பாரும் சமமாய் முன்னேற் றமடைவதற்கு உதவியாயிருக்கிறது. எல்லா வகுப்பாருக்கும் சமமான உரிமை பங்கு கிடைக்குமட்டும் இந்த பார்ப்பனரல்லாதாரியக்கம் (ஜஸ்டிஸ் கட்சி) உயிருடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆதலால் இந்த பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை (ஜஸ்டிஸ் கட்சியை) நான் மனப்பூர்வமாய் வரவேற்கிறேன். பார்ப்பனரல்லாதார் தங்களுடைய நிலை மையை அறிந்து நியாயமான உரிமை பெறுவதற்கு இது சமயம் விழித்துக் கொண்டதைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என பெல் காமில் 1924-´ கூடிய அகில இந்திய பிராமணரல்லாதார் காங்கிரஸ் மஹா நாட்டில் தேசீய காங்கிரஸ் தலைவியான ஸ்ரீமதி சரோஜினி தேவியே பேசி யிருக்கிறார் களென்றால் மற்றபடி அதன் பெருமையைச் சொல்ல வேண்டுமா? ஆதலால் இத் தேர்தலில் சமத்துவத்திலும் சுயமரியாதையிலும்...

சுயராஜ்யக் கட்சி பார்ப்பனர் கட்சி              என்பதற்கு உதாரணம் 0

சுயராஜ்யக் கட்சி பார்ப்பனர் கட்சி என்பதற்கு உதாரணம்

சுயராஜ்யக் கட்சிக்கு விரோதமாக வடநாட்டில் லாலா லஜபதிராயவர் களும் பண்டித மாளவியா அவர்களும் வேலை செய்து வருவது உண்மை. ஆனால் சுயராஜ்யக் கட்சியார் தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு ஆட்களை நிறுத்தியதில் லாலா லஜபதிராயவர்களுக்கு விரோதமாய் மாத்திரம் நிறுத்தி யிருக்கிறார்களே யொழிய பண்டித மாளவியாவுக்கு எதிரியாய் யாரையும் நிறுத்தவேயில்லை. இதன் காரணம் என்னவென்றால் லாலாஜி வருணாசிரம தர்மத்தில் நம்பிக்கையும் கவலையும் இல்லாதவர்; பண்டிதரோ வருணாசிரம தர்மத்தை நிலை நிறுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிரந்தரப்படுத்தவே ஒவ் வொரு நிமிடமும் உயிர் வாழ்பவர். ஆதலால் பண்டிதருக்கு எதிரியில்லா மல் செய்துவிட்டு லாலாஜிக்கு மாத்திரம் எதிரியை நியமித்திருக்கிறார்கள். சுயராஜ்யக் கட்சி பார்ப்பனர் கட்சி என்பதற்கு புத்திசாலிகளுக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும். குடி அரசு – செய்திக் குறிப்பு – 07.11.1926

சட்டசபைத் தேர்தல் 0

சட்டசபைத் தேர்தல்

அடுத்து வரப்போகும் சட்டசபைத் தேர்தல் பிரசாரங்களைப் பற்றி இதுவே கடைசித் தடவையாக இருக்கும். ஏனெனில் அடுத்த திங்கட் கிழமை தேர்தல் நடக்கப் போகிறது. தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங் களானபடியால் இவ்வளவு நாள் எழுதாத விஷயங்கள் ஒன்றும் இன்று புதிதாக எழுதப் போவதில்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டு மானால் தேர்தல்கள் என்பது ஒரு பெரிய சூதாட்டத்திற்குச் சமானமானதாகி விட்டது. தேர்தலில் இறங்குகிறவர்களோ எவ்வெவ் வழிகளில் பாமர மக்களை ஏமாற்றி வெற்றி பெறலாம் என்பதில் கருத்தாயிருக்கிறார்களே ஒழிய தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் பொது ஜனங்களுக்கு எப்படி உழைக்கலாம் என்பதைப் பற்றிக் கவலையே இல்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டியவர்களுக்குப் பொய்யும், ஏமாற்றலும், தந்திரங்களும், சூழ்ச்சி களும், பணச்செலவும்தான் யோக்கியாதாம்சங்களாய்ப் போய்விட்டதே தவிர பரோபகாரம், சத்தியம், நீதி இவைகள் கொஞ்சமும் யோக்கியதை அற்றதாய்ப் போய்விட்டன. ஓட்டர்களும் ஆடம்பரத்தையும் விளம்பரத் தையும் தங்களது சுயநலத்தையுமே விரும்புகிறார்களே ஒழிய யோக்கியத் தன்மை யையோ நாட்டின் nக்ஷமத்தையோ...

வரப்போகும் சென்னை சட்டசபைத் தேர்தலும் பார்ப்பனரல்லாதார் கடமையும் 0

வரப்போகும் சென்னை சட்டசபைத் தேர்தலும் பார்ப்பனரல்லாதார் கடமையும்

சகோதரர்களே! சட்டசபை பார்ப்பனரல்லாதார் இன்றைய விஷயம், வரும் சட்டசபைத் தேர்தலும் பார்ப்பனரல் லாதார் கடமையும் என்பதைத் தாங்கள் துண்டு விளம்பரம் மூலம் அறிந் திருப்பீர்கள். ஒத்துழையாமையில் நான் தொண்டு செய்து கொண்டிருந்த காலத்தில், இந்தத் தேர்தல், பார்ப்பனரல்லாதார் என்கிற இரண்டு வார்த்தை களையும் நான் பெரிதும் அநாவசியமாய்க் கருதி வந்ததோடு பொது மக்க ளிடையிலும் இவ்விரண்டிலும் கவலை செலுத்தாதீர்கள் என்றும் பிரசாரம் செய்து வந்தவன். ஆனால் மகாத்மாவின் ஒத்துழையாமைக் காங்கிரஸ் மறைந்து விடவே, இவை இரண்டும் இப்போது லக்ஷியம் பெறத்தக்கவை யாகிவிட்டன. மகாத்மாவின் காங்கிரசில் இருந்த கொள்கைகள் சட்ட சபையை பஹிஷ்காரம் செய்ய வேண்டியதா யிருந்ததாலும், பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்கிற வித்தியாசமில்லாமல் மக்கள் ஒன்று சேர்ந்து தொண்டு செய்யவும், அதனால் ஏற்படும் பலன் எல்லா சமூகத்தாருக்கும் சமத்துவமும், சம உரிமையும் கிடைக் கத்தக்கதாகவும் இருந்ததாலும் அவற் றில் இவ்விரு வார்த்தைகளுக்கும் இடமில்லாதிருந்தது. பார்ப்பனர்கள் தேச மக்கள் சமத்துவத்தையும் சம உரிமையையும்...

என். தண்டபாணி கம்பெனி 0

என். தண்டபாணி கம்பெனி

தண்டபாணி கம்பெனியின் வியாபார ஸ்தலத்தைப் பற்றி ஒரு விளம்பரம் அடுத்த பத்தியில் பிரசுரித்திருக்கிறோம். பொது ஜனங்கள் வெளி யிலிருந்து சாமான் தருவிப்பதில் பல பேருக்கு ஆர்டர் அனுப்பி ஏமாந்து விடுகிறார்கள். இக் கஷ்டம் நிவர்த்தியாவதற்காகவே தேசபக்தர் ஸ்ரீமான் என். தண்டபாணி பிள்ளை அவர்கள் சென்னையில் ஒரு வியா பாரக் கம்பெனி ஏற்படுத்தி நடத்தி வருகிறார். இக்கம்பெனிக்கு யாரும் நம்பிக்கையாய் எவ்வளவு பணத்திற்கு வேண்டுமானாலும் ஆர்டர் அனுப்பலாம். அத்துடன் எவ்வளவு தொகையும் முன்பணமாக அனுப்ப லாம் என்று தைரியமாய் சிபார்சு செய்கிறோம். குடி அரசு – செய்தி அறிவிப்பு – 07.11.1926

காலித்தனத்தை அடக்க                               சர்க்கார் உத்திரவு 0

காலித்தனத்தை அடக்க சர்க்கார் உத்திரவு

சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்கள் தேர்தல் பிரசாரத்திற்கென்று ஏற்பாடு செய்யும் கூட்டங்களிளெல்லாம் மயிலைப் பார்ப்பனர்கள் கூலி கொடுத்து காலிகளை விட்டு குழப்பமும் கலகமும் செய்து வந்ததையும், போலீசாரர்கள் இதைப் பற்றி சரியான நடவடிக்கை எடுத்துக் கொள்ளாமல் கவலை ஈனமாயிருந்ததையும் அறிந்த ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் கவர்னர் பிரபுவைக் கண்டு இக்காலித்தனத்தை “நீங்கள் அடக்க வழி செய்கிறீர்களா? அல்லது நாங்களே அடக்க ஏற்பாடு செய்வதா?” என்று இறுதி பிரேரே பணை செய்தார்கள். அதற்கு கவர்னர் பிரபு தானே தக்கது செய்வதாய் ஒப்புக் கொண்டு தேர்தல் கூட்டங்களைப் பற்றிய அரசாங்க உத்திரவு என்பதாக ஒரு உத்திரவு பிறப்பித்திருக்கிறார். அவ்வுத்திரவின் சாரமாவது: காலிகள் கூட்டத்தில் வந்து கூட்டத்தை கலைப்பார்கள் என்று யாருக் காவது தோன்றி அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டால், அவர்களுக்காக அக்கூட்டத்தை ஒழுங்காய் நடத்திக் கொடுக்க வேண்டிய ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டியது என்றும், கூட்டத்தின் அமைதிக்கு கெடுதி இல்லாமல் யாராவது கேள்வி கேட்டால் அனுமதிக்க வேண்டுமென்றும்...

கலியாண சந்தடியில்                                    தாலி கட்டுவதை மறந்து விடாதீர்கள் 0

கலியாண சந்தடியில் தாலி கட்டுவதை மறந்து விடாதீர்கள்

சட்டசபைத் தேர்தல்களில் மக்கள் அபரிமிதமான ஊக்கத்தில் இருப்பதால் தீபாவளிக்குக் கதரை மறந்து விடுவார்களோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்களைப் பொறுத்தவரை பார்ப்பன ரல்லாதார் கட்சியினால் ஏற்படும் நன்மைகளைவிட, பதின் மடங்கு நிரந்தர மான நன்மைகள், கதரினால் பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத சமூக மாகிய ஏழைச் சகோதரி சகோதரர்களுக்கு ஏற்படும் என்பதை மறவாதீர்கள். ஏழைகளுக்கு கஞ்சி வார்க்காமல் என்ன சுதந்திரமோ, சுயராஜ்யமோ பெற்றா லும் அது உண்மையான சுயராஜ்யமாகாது. பார்ப்பனரல்லாத சகோதரர்கள் ஒவ்வொருவரும் சுயநலத்தை உத்தேசித்து அல்லாமல் உண்மையாய்ப் பார்ப்பனரல்லாதாருக்கு உழைப்பவர்களாயிருந்தால், கதரின் மூலமாகத்தான் வெளியாகும். கதரை மதிக்காத பார்ப்பனரல்லாதார் கட்சி ஜெயிப்பதும், பார்ப்பனரல்லாதாரை அழுத்தப் புறப்பட்ட காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி ஜெயிப்பதும் ஒன்றுதான். ஆதலால் கலியாண சந்தடியில் தாலி கட்டுவதை மறந்தது போல் தேர்தல் தடபுடலில் கதரை மறந்து விடாதீர்கள். குடி அரசு – சிறு குறிப்பு – 31.10.1926

கல்பாத்தி 0

கல்பாத்தி

மலையாளத்தைச் சேர்ந்த பாலக்காட்டு கல்பாத்தி ரோடுகளில் ஈழவர், தீயர் சகோதரர்கள் நடக்கக்கூடாது என்கிற உபத்திரவம் இருந்து வருவதும், அதில் பிரவேசிக்கப் பல வருஷ காலமாய் பலர் முயற்சித்து வருவதும் வாசகர் அறிந்திருக்கலாம். இதை உத்தேசித்து சென்னை சட்டசபையில், “பொதுத் தெருக்களில் யாரும் நடக்கலாம்” என்று ஒரு தீர்மானம் நிறை வேற்றியதும் ஞாபகமிருக்கலாம். அத்தீர்மானம் அமுலுக்கு வருவதற்கில் லாமல் “வேலையிருந்தால்தான் போகலாம்” என்று சட்ட மெம்பர் வியாக் யானம் செய்ததும் ஞாபகமிருக்கலாம். ஆனால், சென்ற வருஷங்கூட தாழ்த்தப்பட்ட கனவான்களும் பலர் செல்ல முயற்சித்தும் அவர்களுக்கு 144 உத்திரவு போடச் செய்ததும் ஞாபகமிருக்கலாம். மற்றும் சில சமயங்களில் சிலர் மீறிச் சென்று அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு கோர்ட்டு களில் விசார ணையாகி விடுதலை ஆனதும் ஞாபகமிருக்கலாம். மற்றொரு சமயம் ஆரிய சமாஜி என்கிற முறையில் ஒருவர் சென்ற பொழுது அவரைத் தடுத்து உபத்திரவப்படுத்தியதற்காகச் சில பார்ப்பனர்கள் பேரில் நடவ டிக்கை நடத்தப் பட்டு...

பார்ப்பனரின் கனவு பலிக்காது 0

பார்ப்பனரின் கனவு பலிக்காது

வரப்போகும் தேர்தலில் பார்ப்பனர்களின் வெற்றியும் தோல்வியும் ஸ்ரீமான்கள் பனகால் ராஜா, ஏ.ராமசாமி முதலியார் ஆகிய இருவர்களின் வெற்றியையும் தோல்வியையும் பொறுத்திருப்பதாகவே நமது பார்ப்பனர் கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கனவு கண்டு கொண்டு லக்ஷக்கணக்கான ரூபாய்களையும் சர்வப் பிரயத்தனத்தையும் இதற்காகவே செலவழித்து வருவ தோடு பஞ்சதந்திரங்களையும் செய்து வருகிறார்கள். அல்லாமலும், மற்ற இடங்களிலும் தங்கள் கட்சி ஆட்களே வெற்றி பெறுவதற்காக ஓட்டர் களை ஏமாற்றும் பொருட்டு பனகால் ராஜா தேர்தலில் தோற்றுவிட்டா ரென்றும், ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வெற்றிபெற்றுவிட்டா ரென்றும், மற்றும் பல விடங்களில் பார்ப்பனக் கட்சியே வெற்றிபெறுமென் றும், ஆதலால் அல்லாடி அவர்களே அடுத்த தடவைக்கு முதல் மந்திரியாக நியமிக்கப்படப் போகிறாரென்றும் பொய்க் கட்டுகள் கட்டிவிட்டுப் பஞ்சாங் கப் பார்ப்பனர், காபி ஓட்டல் பார்ப்பனர், வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர், பரிசாரகப் பார்ப்பனர் முதல் கொண்டு எல்லா பார்ப்பனர்களும் திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவ்வித திண்ணைப் பிரசாரங்...

கக்ஷிகள் 0

கக்ஷிகள்

தயவு செய்து ஊன்றிப் படியுங்கள், உங்கள் நண்பர்களையும் படிக்கச் சொல்லுங்கள். அடுத்த வாரம் நடைபெறப்போகும் சட்டசபைத் தேர்தலில் பெரும் பாகம் இரண்டு கக்ஷிகளின் பெயர்களே அடிபடுகின்றன. அவற்றின் பெயர் களுள் ஒன்று ஜஸ்டிஸ் கக்ஷி, மற்றொன்று சுயராஜ்யக் கட்சி. இவை தவிர சுயேச்சைக்காரர் என்று சிலர் சொல்லிக் கொள்வதும் உண்டு. சுயேச்சைக் கக்ஷி ஆனால் அச் சுயேச்சைக்காரர்களுக்கு மெய்யாகவாவது, பொய் யாக வாவது, வேஷத்திற்காவது ஒரு ஸ்தாபனமோ கொள்கையோ இல்லாமலும் சுயேச்சை என்றால் சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தன்னிஷ்டம் போல் தான் நடந்து கொள்வதைத் தவிர வேறு எவ்வித இயக்கத்திற்கும் கொள்கைக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்பதே அதன் கருத்து. அல்லா மலும், அவர்களில் (சுயேச்சைக்காரர் என்பவர்களில்) ஒருவருக்கொருவர் கட்டுப் பட்டவர்கள் அல்ல என்பதும், குறைந்தது இரண்டு பேராவது சேர்ந்து ஒரு அபிப்பிராயம் கொண்டவர்கள் என்று சொல்லுவதற்கும் போது மான ஒற்றுமை இல்லாதவர்கள். அப்பெயர் கொண்டவர்கள் பெரும்பாலும் ஜஸ்டிஸ் கட்சி, சுயராஜ்யக் கட்சி...

சர்.சி.பி. அய்யரின் விஜயம் 0

சர்.சி.பி. அய்யரின் விஜயம்

சென்னையில் சுயராஜ்யக் கட்சியின் பேரால் நடைபெற்று வந்த காலித் தனங்களும் போலீசாரின் அலக்ஷியமும், சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் இந்தியாவை விட்டு கப்பலேறியும் அடங்கிக் கிடந்தது. இப்போது அவர் ஜினிவாவிலிருந்து இந்தியாவுக்கு வர கப்பலில் காலடி வைத்த உடன் பழைய படி ஆரம்பமாய் விட்டது. காலிகள் கூட்டங்களில் கல்லெறியவும், மோட்டார் டயர்களைக் கிழிக்கவும், பலவந்தமாய்த் தாக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். அவர் சென்னைக்கு வந்து சேர்ந்ததும் காலித்தனங்களும், போலீசைப் பற்றி பயமற்ற தன்மையும் கடைத்தெரு விலும் மூர் மார்க்கட்டிலும் விற்க ஆரம்பமாய் விட்டது. இது எங்குபோய் நிற்குமோ தெரியவில்லை. “முள் வாழையின் மேல் பட்டாலும் வாழைக் குத்தான் கேடு, வாழை முள்ளின் மேல் பட்டாலும் வாழைக்குத்தான் கேடு” என்பது போல் காலித்தனம் நடந்தாலும் பார்ப்பனரல்லாதாருக்குத் தான் உபத்திரவம். அதை அடக்கப் பிரயத்தனப் பட்டாலும் பார்ப்பனரல்லா தாருக்குத்தான் உபத்திரவம் என்கிற நிலையில் நமது பார்ப்பனர்கள் நம்மை வைத்துக் கொண்டு தங்கள் சூழ்ச்சி ரதத்தை ஓட்டுகிறார்கள். குடி...

பொய்ச் சமாதானம் 0

பொய்ச் சமாதானம்

ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் மண்ணடியில் ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி ஒன்றும் பேசவில்லை, ஒன்றும் பேசவில்லை என்று அய்யங்கார் பத்திரிகைகளும் அவரிடம் கூலி வாங்கும் பத்திரிகைகளும் விளம்பரப் படுத்திய வண்ணமாகவே இருக்கின்றன. அய்யங்கார் சொன்னதாக வைத்துக் கொண்டாலும் யாருக்கும் ஒன்றும் முழுகிப் போகவில்லை. தொழிலாளிகளை ஏமாற்றும் விஷயத்தில் ஸ்ரீமான் அய்யங்காருக்கு ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியார் தயவு வேண்டி வந்து விட்டதால் கூலி கொடுத்து மறுக்கிறார். ஆனால் நன்னிலத்தில் ஸ்ரீமான் நாயுடுகாரை தென்னாட்டுத் திலகரும் மாறி விட்டார், முதலியார் மாரீசனாய் விட்டார், ஆரியாவும் நாயக்கரும் வெளிப் படையாய் காங்கிரசுக்கு விரோதமாய்ப் போய் விட்டார்கள்; இவர்களை காங்கிரசை விட்டு வெளியாக்கி காங்கிரசை சுத்தப்படுத்தும் வேலையையே இவ்வருஷம் செய்யப் போகிறேன் என்று சொன்னதோடு கூட்டத்தில் இருந்த ஒருவர் முதலியார் கூடவா மாறி விட்டார் என்று கேட்டதற்கு ஏழு கிணத்து வீதியில் போய் கேட்டால் தெரியு மென்று சொன்னாரே; இதுகள் அப்போதே பல பத்திரிகைகள் இருந்ததே அதுகளை ஏன் மறுக்கவில்லை?...

கையெழுத்து போடக் கூடாது 0

கையெழுத்து போடக் கூடாது

இந்து மத பரிபாலன மசோதா என்னும் இந்து தேவஸ்தான மசோதா இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் சென்னை சட்டசபையில், நமது பார்ப்பனரின் கடுமையான எதிர்ப்பை ஜெயித்து நிறைவேறி, அரசாங்கத்தார் சம்மதம் பெற்று சுமார் 2 வருஷ காலம் அமுலிலும் இருந்து வந்த பிறகும் நமது பார்ப்பனர்கள் அதில் சில சட்ட சம்மந்தமான பிரச்சினைகளைக் கிளப்பி ஹைக்கோர்ட்டில் தங்களுக்குள்ள சட்ட ஞானத்தையும் செல்வாக் கையும் கொண்டு விவகாரம் தொடுத்து அச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்க பிரயத்தனப்பட்டதால் மறுபடியும் ஒருமுறை அச்சட்டம் சட்டசபைக்கு வர நேர்ந்தது. அந்தப்படி சட்டசபைக்கு வந்த சமயத்தில் நமது பார்ப்பனர்கள் ராஜீய இயக்கங்களையும் ஸ்தாபனங்களையும் தாங்கள் கைப்பற்றிக் கொண்ட தனால் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைக் கொண்டு சில பார்ப்பனரல்லாத சட்ட சபை அங்கத்தவர்களை (அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றால் இந்த தேவஸ்தான சட்டம் ஆரம்பத்தில் அதாவது 3, 4 வருஷங்களுக்கு முன்னால் தயாரிக்கும் போது கூட உதவியாயிருந்த வர்களும் இச்சட்டத்தை ஏற்படுத்தத் தீவிர...

பார்ப்பன பிரசாரத்தின் தன்மை 0

பார்ப்பன பிரசாரத்தின் தன்மை

மகா மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் சாஸ்திரியார் அவர்கள் தென் ஆப்பிரிக்கா ரவுண்ட் டேபிள் கான்பரன்சுக்கு சர்க்காரால் நியமிக்கப்பட்டு போவதை ஒட்டி ‘இந்து’ பத்திரிகை பிரமாதமாய் எழுதி இருப்பதோடு, அவரது படத்தையும் தனது பத்திரிகையில் போட்டு அவரை விளம்பரப் படுத்தியிருக்கிறது. ஸ்ரீமான் சாஸ்திரிகள் இந்து பத்திரிகையின் கோஷ்டிக்கும் அதன் கொள்கையான சுயராஜ்யக் கட்சிக்கும் விரோதமானவர். அப்படி யிருந்தும் அதாவது தங்களது கோஷ்டிக்கும் தங்களது கொள்கைக்கும் விரோதமாயிருந்தும் ஸ்ரீமான் சாஸ்திரியார் பார்ப்பனர் என்கிற காரணத்துக் காக அவரை விளம்பரப்படுத்தி தூக்கி விடுகிறது. அதுபோலவே ஸ்ரீமான் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களும் சர்க்கார் உத்தியோகஸ்தராயிருந்தும், சுயராஜ்யக் கட்சிக்கு விரோதமாய்ப் பேசிக்கொண்டிருந்தும் சர்க்கார் மனுஷனாக மேல் நாட்டுக் குப் போயிருந்தும்கூட அவரது பிரயாணத்தையும், வருகை, வரவேற்பு, உபசாரம் முதலியதுகளையும், சென்றிருந்த இடத்தில் நடந்த விசேஷங் களையும் பேட்டி கண்டு பேசியதுகளையும் பார்ப்பனர் என்கிற காரணத்திற் காக படம் போட்டுத் தனது பத்திரிகையில் பிரசுரித்து விளம்பரப்படுத்தி யிருக்கிறது. ஸ்ரீமான்...