டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை

இந்து தேவஸ்தான மசோதாவைப் பற்றி பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதிர்க்கக் கடமைப்பட்டிருந்தாலும் அதைத் தாங்களே எதிர்ப்பதற்குப் போதுமான தைரியமும் யோக்கியதையும் இல்லாததால், குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல், தங்கள் கையில் சிக்கி நசுக் குண்டு கொண்டிருக்கும் காங்கிரசை இதற்காக உபயோகப்படுத்திக் கொண்டு காங்கிரசின் பெயரால் இந்துமத தர்ம பரிபாலன மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் எதிர்க்க வேண்டு மென்று ஒரு பொருளற்ற உத்திரவைப் போட்டுக் கொண்டு வரப்போகும் சட்டசபையில் பல பார்ப்பனரும் அவர்களது சிஷ்ய கோடிகளும் எதிர்க்கப் போகிறார்களாம். இதையறிந்த நமது டாக்டர் வரத ராஜுலு நாயுடுகார் அவர்கள் வீர கர்ச்சனை முழங்கியுள்ளார். அதாவது:-

“இப்பொழுது சட்டசபையில் வரப்போகும் சீர்திருத்தம் பெற்ற இந்து மத பரிபாலன மசோதா சம்பந்தமான விவாதம் அரசி யல் கட்சிப் பிரச்சினை அல்ல. ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டி யார் உள்பட காங்கிரஸ்காரர்கள் இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள். மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் சட்ட சபைக்குப் போய் எதிர்ப்பது இம்மாகாணத்தில் காங்கிரசுக்கே அழிவு தேடுவதாகும். ஆதலால் சட்டசபையிலுள்ள சுயராஜ்யக் கட்சி சட்டசபை அங்கத்தவர்கள் கண்டிப்பாய் இது விஷயத்தில் நடுநிலைமை வகிக்க வேண்டு மென்று வேண்டிக்கொள்ளுகிறேன். அரசியல் வேற்றுமை இருந் தாலும் சென்னை அரசாங்கத்திற்குக்கூட இது சம்பந்தமாய் நான் ஒரு தந்தி அனுப்பியிருக்கிறேன்”.

“அதாவது, வெளியிடப்பட்டிருக்கும் இந்துமத பரிபாலன மசோதாவை எல்லா பார்ப்பனரல்லாதாரும் முழு மனதுடன் ஆதரிக் கிறார்கள். மசோதாவுக்கு விரோதமாய் செய்யப்படும் கிளர்ச்சியானது சுயநலத்தை உத்தேசித்து சில சுயநலக்காரரால் நடத்தப்படும் பொய்க் கிளர்ச்சியாகும். இது விஷயமாய் அரசாங்கத்தாரோடு ஒத்துழைக்க வும் தயாராயிருக்கிறேன்”

என்று பார்ப்பனருக்கும் அரசாங்கத்திற்கும் தந்தி கொடுத்திருக்கிறார். ஆனால் இதற்கு மேல் ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இதை நாம் முழு மனதோடு போற்றுவதோடு மனப்பூர்வமாய் ஆதரிக்கவும் செய்கிறோம். இப்பார்ப்பனர்களின் கொடுமையானது அதிலிருந்து தப்புவதற்குத் தீவிர தேசீயவாதிகளை ஜஸ்டிஸ் கட்சியாரோடு சேரும்படி செய்வது மாத்திர மில்லாமல் சர்க்காரோடும் ஒத்துழைக்கச் செய்கிறது. இனியும் நமது பார்ப் பனர்களின் சூழ்ச்சியும் கொடுமையும் வெளியாக வெளியாக இன்னமும் என்னென்ன செய்யச் சொல்லுமோவென்பதை இப்பொழுது நம்மால் நிர்ணயிக்க முடியவில்லை. இயற்கை தேவிதான் அறிவாள்.

குடி அரசு – கட்டுரை – 15.08.1926

You may also like...

Leave a Reply