தமிழ் சர்வகலாசாலைக் கமிட்டி

தமிழ் நாட்டிற்கென ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்துவான் வேண்டி சின்னாட்களாகப் பல தமிழர் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். இக்கிளர்ச் சியை ஒடுக்குவான் வேண்டியும், தமிழ் கலாசாலையே ஏற்படாதிருக்க பார்ப்ப னர்கள் செய்துவரும் சூழ்ச்சி முறைகளையும் அனேகர் அறிந்திருக்கலாம். கடைசியில் இக்கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு வழியில்லாது போய் தமிழ் சர்வகலாசாலை ஏற்படுத்த வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டது. இதற்கென ஒரு கமிட்டியும் நியமிக்கப்படலாயிற்று.

இக்கமிட்டியும் பெருங் கபடத்துடனேயே நியமிக்கப்பட்டுள்ளதெனக் கூறவேண்டும். ஏனெனில் தமிழ் மொழியின் ஆணி வேர் Žநுனி வரை Žநுணுகி ஆராய்ந்து தமிழ் மொழியே உயர் தனிச் செம்மொழியெனக்கொண்டு, தமி ழையே உயரினும் பெரிதாய் ஓம்பி வளர்த்து, அதற்கெனவே அருந் தொண் டாற்றி வரும் திருவாளர்கள் சுவாமி வேதாச்சலனார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பா.வே.மாணிக்க நாயக்கர், கா.சுப்பிரமணிய பிள்ளை, மு.சா. பூரணலிங்கம் பிள்ளை முதலியோரை நியமிக்காது, ஆரியத்திற்கும் தமிழுக்கும் உள்ள பதத்தை ஒரு சிறிதும் உணராத பலரையும் தமிழில் பற்றுடைய மிகச் சிலரையும் நியமித்திருக் கிறார்கள். இவ்வாறு அடிப்படையிலே கையை வைத்து நியமிக்கப்பட்ட கமிட்டியால் தமிழ்த் தாய்க்கு எவ்வித ஆக்கமும் அளிக்கப் பெறாதென்பதே நமது கருத்து.

குடி அரசு – செய்திக் குறிப்பு – 01.08.1926

You may also like...

Leave a Reply