கோயமுத்தூர் ஜில்லா போர்டு தேர்தல்களும் வேளாளர்களும்

கோயமுத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட் தேர்ந்தெடுத்தலின் முடிவையும் ³ ஸ்தானத்திற்கு அபேட்சகராக நின்று தோல்வி அடைந்தவரின் வகுப்பைச் சேர்ந்த மெம்பர்களின் ஏராளமான தொகைக ளையும் கவனித்தால் ஒரு விதமான ஆச்சரியமும் , வியப்புமுண்டாகும்.

ஆனால், இந்த ஜில்லாவிலுள்ள வேளாளர்களைப் பொருத்த மட்டும் இந்த தேர்ந்தெடுத்தலின் முடிவானது அநேக கிளர்ச்சியை உண்டு பண்ணக் கூடியதாய் இருக்கிறது. இந்த ஜில்லாவில் பெரும் பான்மையோர் வேளாள குலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனவந்தர்களாகவும் ஈகை முதலிய குணங்களில் சிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் மற்ற குலங்களெல்லாம் தத்தம் முன்னேற்றத்தைப் பற்றி வேண்டிய முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் போது இவர்கள் மாத்திரம் கட்சிப் பிரதி கட்சிகளிலும், மௌடீகத் தன்மையிலும், கல்வியறிவின்மையிலும் மூழ்கி யிருப்பது மிகவும் வருத்தத்தையுண்டு பண்ணுகிறது. நாகரீகம் அதிகரித்து வரும் இக்காலங்களிலுங் கூட தங்களுடைய அற்ப பொறாமைகளையும், குறுகிய நோக்கங்களையும், வினோதங்களையும் போக்கி ஒத்துழைத்து தங்கள் ஜாதி அபிமானத்தையும் அபிவிருத்தியையும் சிறிதேனும் கவனியா மல் ஆனந்த மௌடீகத்தில் காலங்கழிப்பது பரிதபிக்கத்தக்கதே. இன்னும், இக்குலத்தைச் சேர்ந்த கௌ ரவமும் அந்தஸ்தும் உடைய அங்கத்தினரின் நோக்கம் அதிக விந்தையா யிருக்கிறது. தங்களில் ஒருவரை பொறுப்பான ஸ்தானத்திற்கு கொண்டு வரக்கூடிய சமயமும் சக்தியும் இருந்தும் அவர்க ளுக்கு சிறிதேனும் ஊக்கமும், ஜாதி அபிமானமும் ஒற்றுமையுமில்லை யென்பது நன்கு விளங்குகிறது. மற்றும் தங்களுக்குள்ளே உள்ள சிறிய மனஸ்தாபங்களைப் பெரிதாக நினைத்துக் கொண்டும், மனோபாவனை யான சந்தேகங்களை உண்டு பண்ணிக் கொண்டும், மற்றவர்களின் சுவையான வார்த்தைகளினாலும், வாக்குத் தத்தங்களினாலும் தங்கள் நிலையை மறந்து நடந்து தங்களுக்கும் தங்கள் குலத்திற்கும் அபகீர்த்தி யையும் அவமானத்தையும் உண்டாக்கினார்கள். தங்கள் பொறுப்பை மறந்து நடந்த காரியம் தங்களைத்தான் பற்றுமென்பதை நினைக்க வில்லை போலும். வோட் கொடுக்கிறோ மென்று உறுதியாய்ச் சொல்லி, இறுதியில் இம்மாதிரி செய்வது ஏனோ விஷமம்? இப்படி இருக்க குலத்தாரை நம்பி தோல்வியடைந்த அபேட்சகருக்கு ஒருவிதமான அபகீர்த்தியுமில்லை யென்றே சொல்லலாம்.
ஆகையால் நமது குல முன்னேற்றத்திற்காக நான் ஒரு விண்ணப் பஞ் செய்து கொள்ளுகிறேன். மேலே கண்ட விஷயமானது நமது குலத்தின் கண்ணைத் திறக்குமென்று நம்புகிறேன். இனிமேலாவது நமது குலத்தினர் ஒற்றுமையாயிருந்து முன்னேற்றமடையக் கூடிய வழியைத் தேடுவாராக.

அ. பழனிசாமிக் கவுண்டர்,பி.ஏ.,கோயமுத்தூர்
குறிப்பு :
கோயமுத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்டு தேர்தல்களைப் பற்றி அபேட்சகர்கள் திருப்தியுடனிருந்த போதிலும் பலரால் பல கட்டுரைகள் நமக்கு பிரசுரிப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன. அவர்கள் பெரும் பாலும் ஒவ்வொன்றும் தெரிந்தெடுக்கப்பட்டவருக்கும் தெரிந்தெடுக்கப்படாத வருக்கும் இரு சார்பாரை ஆதரித்தவர்களுக்கும் மனம் புண்படும்படியாகவும் ஒருவருக்கொருவர் துவேஷத்தையும் வைராக்கியத்தையும் உண்டாக்கத்தக்க மாதிரியாகவும் இருப்பதாகக் காணப்படுவதால் நாம் அவைகளைப் பிரசுரிக் காததற்காக மன்னிக்க வேண்டுகிறோம்.
ஏனெனில் பார்ப்பனர்களின் கொடுமையிலிருந்தும் தப்ப பார்ப்பன ரல்லாதாராகிய நாம் ஒற்றுமையோடும் உணர்ச்சியோடும் இது சமயம் செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்க, எவ்வகையிலும் உயர்வு, தாழ்வு இல்லாத சமூகத்தார் வெள்ளாளரென்றும், வெள்ளாளரல்லாதவரென்றும், வெள்ளாளரில் பலவிதம் என்றும் ஒருவரையொருவர் புண்படுத்தத்தக்க மாதிரியான உணர்ச்சி மிகவும் அசம்பாவிதமானது.
தேர்தலில் நின்ற இருவர்களும் வேளாளர்களேயாவார்கள் . இருவரை ஆதரித்தவர்களும் மிகுதியும் வேளாளர்களும் தக்க அந்தஸ்தும் கண்ணிய மும் பொருந்தியவரேயாவார்கள். இப்படியிருக்க, இது சமயத்தை ஆதார மாகக் கொண்டு தங்கள் சுய நலத்திற்காக உண்மையிலேயே வித்தியாசம் உயர்வு, தாழ்வு இல்லாத வகுப்புக்கும் வித்தியாசங்களிருப்பது போல் பேச வருவது நன்மைகளான காரியமல்ல வென்றே கருதுவோம். அல்லாமலும் இப்படி யெல்லாம் நூல் பிடித்துக் கொண்டே போனால் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு வகுப்பாய் தான் முடியும். அப்பொழுது அது பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதையைத் தடைப்படுத்தும். ஆதலால் தனிப்பட்ட சுயநலத்தை முன்னிட்டு அவ்வுணர்ச்சிகளை விட்டுவிட்டு ஒத்து ழைத்து பொது நலத்துக்கான காரியத்தில் கட்டுப்பாடாய் இரங்க வேண்டு மாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.
( ப – ர் )


குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 15.08.1926

You may also like...

Leave a Reply