பார்ப்பனரின் பிறப்புரிமை
வங்காள அரசாங்கத்தார் ஒற்றுமையும் சமாதானமும் என்னும் பெயரால் பண்டித மாளவியா அவர்களுக்கும் டாக்டர் மூஞ்சே அவர்க ளுக்கும் வங்காளத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதென்பதாக 144 உத்திரவு போட்டார்கள். அவற்றை ³ இரு கனவான்களும் வீரர்களைப் போல மீறி நடந்தார்கள். அம்மீறுதலானது கேவலம் வகுப்பு பிரச்சினையை உத்தேசித்தே மீறினார்கள் என்று நாம் நினைக்க ஏற்பட்ட போதிலும் இக்கனவான்களுடைய புதிய வீரத்தை நாம் மனதில் பாராட்டினோம்.
அம்மீறுதலின் பேரில் சர்க்கார் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக் கிறார்கள் என்று தெரிந்தும் இம்மகிழ்ச்சிக்கு அதிக ஆயுள் இருக்காதென்று நாம் சந்தேகப்பட்டதுண்டு. அதுபோலவே இப்பொழுது பண்டிதர் பேரிலும் டாக்டர் மூஞ்சே அவர்கள் பேரிலும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளக் கூடா தென்று ஸ்ரீமான்கள் சர்.சிவசாமி அய்யர், டி. ரங்காச்சாரியார் முதலிய பார்ப்ப னர்கள் அரசப் பிரதிநிதியிடம் போய் பல்லைக் கெஞ்சுவதாய்த் தெரிய வரு கிறது. ஜனங்களை ஏமாற்றுவதற்கு ஒருபுறம் வீரமும் சர்க்காரை ஏமாற்று வதற்கு மற்றொருபுறம் பல்லைக் கெஞ்சுவதும் நமது பார்ப்பனர்களுக்கு பிறப்புரிமை என்பது இதனால் விளங்கவில்லையா?
குடி அரசு – சிறு குறிப்பு – 15.08.1926