நமது தனிப்பெரும் விண்ணப்பம்
சென்ற “ குடி அரசு” இதழில் திரு. ஈ.வெ.இராமசாமி நாயக்கரவர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு விடுத்த வேண்டுகோளை அன்பர்கள் கண்ணுற் ருக்கலாம். தற்காலம் தமிழ்நாட்டு அரசியல் நிலைமையும் சமுக நிலைமை யும் பெரிதும் குழப்பத்தோடிருக்கிற தென்பதை தமிழ் நாட்டவர்களுக்கு நாம் எடுத்து கூற வேண்டியதவசியமில்லை. இத்தகைய குழப்பமான நிலை மையில் அரசியல் துறையையும் சமுக விஷயத்தையும் சத்தியமான, ஒழுங் கான, உண்மையான அமைப்போடும் திட்டத்தோடும் நிலையிறுத்திச் சீர்பெறச் செய்வான் பொருட்டே திரு. நாயக்கரவர்கள் அவ்வேண்டு கோளை விடுத்தார்.
திரு. நாயக்கரவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இற்றைவரை சுமார் 500 தமிழர்கள் “ குடி அரசி”ன் கொள்கையை ஏற்றுக்கொள்வதாகவும் திரு. நாயக்கருள்ளிட்ட பலர் வெளியிடப் போகும் அறிக்கையில் தங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறும் தங்கள் கையொப்பம் அளித்துள் ளார்கள். இத்தகைய முறையில் அவ்வமைப்பு ஏற்படுத்தி இத்தகைய திட்டங் கோல வேண்டுமென்பதாகவும் ஒத்துழையாமை காங்கிரசில் முன்னின்று ழைத்த பல அறிஞர்கள் நீண்ட கடிதங்கள் எழுதி வருகிறார்கள். தேர்தல் காலம் மிகவிரைவாக நெருங்கி வருகிறது. ஆதலால் நமது கொள்கையை ஏற்கும் பார்ப்பனரல்லாத சகோதரர்கள் சிறிதும் காலந் தாழ்த்தாது உடனே தங்களதும் மற்றைய அன்பர்களதும் கையொப்பங்களைப் பொறித்தனுப்ப வேண்டுகிறோம். இன்று நாளை யெனக் காலங்கடத்த இது சமயமன்று. காலச் சக்கிரம் அதி விரைவாய் சுழன்று வருகிறது. ஆதலால் உடனே தமிழர்கள் தங்கள் கடமையைச் செய்வார்களாக. நன்றென்பதை இன்றே செய்யுங்கள்.
குடிஅரசு – துணைத் தலையங்கம் – 01 .08.1926