பார்ப்பனர்களுக்கு சரியான இடி பார்ப்பன பார்ப்பனரல்லாதாரின் வகுப்பு வித்தியாசத்தைப் பற்றி ஸ்ரீமான் எஸ். ஆர். தாசின் அபிப்பிராயம்

“நான் இங்கு வந்ததின் முக்கிய நோக்கமெல்லாம் இங்குள்ள விஷயங்களை நேரில் அறிந்து அரசப் பிரதிநிதிக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற அபிப்பிராயத்தின் பேரிலேயேயாகும். இங்கு வந்து நேரில் விஷயங்களைக் கவனிக்கிறபோது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகிய இரு சமூகத்தாருக்குள்ளும் இருக்கும் வகுப்பு உணர்ச்சி எனக்கு நன்றாகத் தெரிகிறது. நான் எப்பொழுதும் இம் மாகாணத்திலுள்ள தாழ்ந்த நிலையிலி ருக்கும் வகுப்பாரிடமே அபிமானம் கொண்டிருப்பேன். ஏனென்றால் தாழ்ந்த சமூகத்தினர் முன்னுக்கு வரும்வரையில் தேசம் சுயராஜ்யம் பெறமுடியாது. தாழ்ந்த சமூகத்தினர் முன்னுக்கு வரவேண்டுமென்று சொல்வதையும், பிற்பட்ட வகுப்பினர் – தாழ்ந்த வகுப்பினர்களென்றும் பிறத்தியாரால் அழுத்தப்பட்டுக் கிடக்கிறவர்களென்றும் நினைத்துக் கொண் டிருக்கிற ஜனங்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக ஏற்படுத்திக் கொண் டிருக்கும் எந்த இயக்கங்களையும் வகுப்பு இயக்கங்களென்று சொல்லவே கூடாது. அவற்றையெல்லாம் தேசீய இயக்க மென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் தாழ்த்தப்பட்ட- பிற்பட்ட- அழுத்தப் பட்ட சமூகத்தார் முன்ன ணிக்கு வருகிறவரையில் தேசீய இயக்க மென்று சொல்லிக்கொண்டு வேலை செய்வது பிரயோஜனத்தைத் தராது. தாழ்ந்த வகுப்பினர் முன்னேற்றமடைய முயல்வதன் பயனாய் ஏற்கனவே முன்னணியிலிருந்து – உயர்ந்த வகுப்பார் என்று சொல்லுகிறவர்களுக்கு சிறிது பாதகம் ஏற்பட நேரும். அந்த பாதகங் களையும் தேச முன்னேற்றத்தை உத்தேசித்து ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவ்வித விஷயங்களையெல்லாம் தேசீய விஷயங்களாகத் தான் கருத வேண்டும். இதை உணர்ந்தால் தேசீய உணர்ச்சியுள்ள எந்தப் பார்ப்பனனும் உங்கள் இயக்கத்தைத் தடுக்க முன்வரமாட்டான். சில பார்ப்பனர்களாவது யோக்கியர்களாக இருக்கக்கூடும். அப்படியிருந்தால் அவர்களுடைய ஒத்தாசை உங்களுக்குக் கிடைக்கும். பார்ப்பனர்களும் அநாவசியமாக பார்ப்பனரல்லாதார்களுடைய முன்னேற்றத்தைக் கண்டு பயந்து இடைஞ்சல் செய்யமாட்டார்கள். புத்திசாலிகளாயுள்ள பார்ப்பனர் கள் பார்ப்பனரல்லாதாருக்கு உதவியாயிருந்து, பார்ப்பனர் பார்ப்பனரல்லா தார் என்கிற வகுப்புப் பிரச்சினையை தேசீயப் பிரச்சினையாக்கி, விரைவில் தேசம் முன்னேறுவதற்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும். பார்ப்பன ரல்லாதார் பார்ப்பனரைக் கொஞ்சமாவது நம்ப வேண்டும்” என்று பேசி யிருக்கிறார்.

இம்மாதிரி ஸ்ரீமான் எஸ். ஆர். தாஸ் அவர்கள் பேசி வகுப்புக் கிளர்ச்சிகளை ஆதரித்து “அதைத் தேசீயக் கிளர்ச்சியாகக் கருத வேண்டு மேயல்லாமல் வகுப்புக் கிளர்ச்சி என்று அதை அடக்கப் பிரயத்தனப்படக் கூடாது” என்று சொன்னதோடல்லாமல் இவ்வித கிளர்ச்சிகளுக்குத் தன்னாலான உதவியும், செய்வதாக வாக்களித்தும் போயிருக்கிறார். இப்படியிருக்க ‘சுதேசமித்திரன்’ இவற்றைத் தனக்கனுகூலமாகத் திருத்தி எழுதிக் கொண்டு “ஜஸ்டிஸ் கட்சிக்குச் சாட்டை” என்று விஷமத் தலையங்கமிட்டு வகுப்புப் பேச்சும் வகுப்புத் துவேஷமும் வேண்டா மென்று அவர் சொன்னதாகக் குறிப்பு எழுதி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் யோக்கியப் பொறுப்பற்ற பிரசாரம் செய்திருக்கிறான். ஆகையால் ஒருவரும் இதை நம்பாமல் ஆங் காங்கு உயர்ந்த வகுப்பார் களால் கொடுமைப் படுத்தப்பட்டு வரும் ஒவ்வொரு சமூகத்தாரும் தைரிய மாய் வெளியில் வந்து தங்களுக்கிருக்கும் கொடுமைகளை எடுத்துச் சொல்லி அதைப் போக்கிக் கொள்வதற்குக் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தற்காலம் நமது நாட்டின் தேசீய வேலை இதுவே யாகுமே யல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் பஞ்ச தந்திரப் பார்ப்பனர் களும் சொல்லிக் கொண்டு திரியும் சுயராஜ்யம், தேசம், விடுதலை, காங்கிரஸ், சர்க்காரை அழிப்பது என்கிற அர்த்தமற்றதும் முட்டாள் தனமானதும் சூழ்ச்சி களும் தந்திரங்களும் சுயநலமும் நிரம்பியதான போலி வார்த்தைகள் அல்லவென்பதைப் பொதுமக்கள் உணர வேண்டுகிறோம்.

குடி அரசு – கட்டுரை – 08.08.1926

You may also like...

Leave a Reply