Category: கோவை மாநகரம்

கழகத் தோழர் அறிவரசு நினைவேந்தல் நிகழ்வு

கழகத் தோழர் அறிவரசு நினைவேந்தல் நிகழ்வு

திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட தோழர் அறிவரசு கடந்த 21.02.2021 அன்று அதிகாலை 3:30 மணியளவில் மாரடைப்பால் முடிவெய்தினார். தோழர் அறிவரசு படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.2.2021 அன்று மாலை 6 மணி அளவில் கோவை துடியலூர் அண்ணா குடியிருப்பில் நடைபெற்றது. நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு படத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து  நேருதாசு நிகழ்விற்கு தலைமை வகித்தார். துடியலூர் அண்ணா குடியிருப்பைச் சேர்ந்த தோழர்கள் அல்போன்சு, திமுக முன்னாள் கவுன்சிலர் மருதாசலம், ளுனுஞஐ பாதுஷா, மக்கள் விடுதலை முன்னணி முகிலன், தமிழ் புலிகள் கட்சி  சபாபதி, புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், சமூக நீதிக் கட்சி வெள்ளமடை நாகராஜ், திராவிட தமிழர் கட்சி வெண்மணி,  ஜெயச்சந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்  சண்முகசுந்தரம், பொள்ளாச்சி விஜயராகவன், தோழர் அறக்கட்டளை சாந்தகுமார், கோவை மாவட்ட...

கழக செயல் வீரர் தோழர்.மு.அறிவரசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் !

கழக செயல் வீரர் தோழர்.மு.அறிவரசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் !

கழக செயல் வீரர் தோழர்.மு.அறிவரசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் ! வருகிற ஞாயிறு 28/02 மாலை 4 மணிக்கு, துடியலூர், அண்ணா (காலனியில்)குடியிருப்பு … படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றுபவர் : தோழர் கொளத்தூர் மணி அவர்கள். (தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்)

துடிப்பு மிக்க இளைஞரை கழகம் இழந்து விட்டதே; கோவை அறிவரசு மாரடைப்பால் முடிவெய்தினார்

துடிப்பு மிக்க இளைஞரை கழகம் இழந்து விட்டதே; கோவை அறிவரசு மாரடைப்பால் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்டத் தோழர் கார்த்தி என்கிற அறிவரசு (36) கடந்த 21.02.2021 அன்று அதிகாலை 3:30 மணியளவில் மாரடைப்பு காரணமாக முடிவெய்தினார். துடியலூரில் உள்ள அண்ணா குடியிருப்பில் அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக உடல் வைக்கப்பட்டது. தோழர் அறிவரசு கொள்கைப்படியே இறுதி நிகழ்வு எந்தவித, ஜாதி, மத சடங்குகள் இல்லாமல் கருப்புத் துணியும், கழகக் கொடியும் போர்த்தி, கழகப் பெண் தோழர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கை மெஹந்தி ஆகியோர் அவரது உடலை தூக்கினர். துடியலூர் மின் மயானத்தில் அறிவரசு உடல் மாலை 5:30 மணியளவில் எரியூட்டப்பட்டது. இல்லத்தில் இருந்து மின் மயானம் வரை கழகத் தோழர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே வந்தனர். கடந்த 09.02.2020 அன்று கோவையில் நடைபெற்ற நீலச்சட்டை பேரணியில் குடும்பத்துடன் தன்னை கழகத்தில் அறிவரசு இணைத்துக்கொண்டார். மேட்டுப்பாளையத்தில் நடந்த பெரியாரியல் பயிலரங்கில் குடும்பத்துடன் பங்கேற்றார். பெரியாரியலை தேர்வு செய்து...

நன்கொடை

நன்கொடை

மேட்டுப்பாளையம் நிகழ்வு களில் பா. ராமச்சந்திரன், 77ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது மகள் தென்றல்-பார்த்தசாரதி சார்பில் ஆயிரமும், மற்றொரு  மகள் அறிவுக் கொடி-வெங்கடேஷ் இணையர் சார்பில் ஆயிரமும் பாராட்டுரை வழங்கிய டி.டி. ரங்கசாமி (ம.தி.மு.க.) ரூ.500-ம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சிக்கு நன்கொடையாக வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 07012021 இதழ்

கோவை மாவட்டக் கழக சார்பில் சிறப்புடன் நடந்தது  பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம்  பா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா

கோவை மாவட்டக் கழக சார்பில் சிறப்புடன் நடந்தது பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம் பா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா

பெரியார் பெருந் தொண்டர் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் மேட்டுப் பாளையம் பா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா, கோவை மாவட்டக் கழக சார்பில் ஜன. 4, 2021 மாலை 5 மணியளவில் மேட்டுப் பாளையம் ஈஸ்வரியம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடை பெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை யில் நடந்த விழாவில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர் களும் பா. ராமச்சந்திரன் அவர்களின் உறுதியான பெரியார் கொள்கைப் பற்றையும் செயல்பாடுகளையும் பாராட்டி உரையாற்றினர். குட்டையூர் மா. கந்தசாமி, விழாவின் நோக்கத்தை யும், பா. ராமச்சந்திரனின் தீவிர செயல் பாடுகளையும் அவரோடு இணைந்து செயல்பட்ட நினைவுகளையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார். மேட்டுப்பாளையத்தில், பா. ராமச் சந்திரன் முன்முயற்சி எடுத்து நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் உருவாக்கிய தாக்கத்தைப் பலரும் குறிப்பிட்டனர். ம.தி.மு.க. தணிக்கைக் குழு உறுப்பினரும், பவானி நதி நீர் மற்றும்...

‘கொரானா’ இடைவெளிக்குப் பிறகு தோழர்களின் முதல் சந்திப்பு மேட்டுப்பாளையத்தில் நடந்த இரு நாள் பயிற்சி முகாம்

‘கொரானா’ இடைவெளிக்குப் பிறகு தோழர்களின் முதல் சந்திப்பு மேட்டுப்பாளையத்தில் நடந்த இரு நாள் பயிற்சி முகாம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பெரியாரியல் பயிலரங்கம் மேட்டுப்பாளையம், பேருந்து நிலையம் அருகில் ஈஸ்வரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 03.01.2021 ஞாயிறு, 04.01.2021திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் நடந்த இப்பயிலரங்கில், முதல் நிகழ்வாக தோழர்கள் சுய அறிமுகத்துடன் பயிலரங்கில் கலந்து கொள்ளும் புதிய தோழர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தொடர்ந்து பெண் தோழர்கள் கொள்கைப் பாடல்களைப் பாடினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பயிலரங்கின் அவசியம் குறித்தும் பெரியாரியலை, ‘வாழ்க்கை-சமூகம்-மாற்றம்’ என்ற மூன்று தளங்களில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்றும் விளக்கிப் பேசினார். தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் “செயல்பாடுகள், கட்டுப்பாட்டு நெறி முறைகள்” ஆகியவை குறித்து பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் உரையாற்றினர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, இணையதள செயல்பாடுகள் குறித்து இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் உரையாற்றினார். இரண்டாம் நிகழ் வாக ‘பெரியாரின் மொழிக்...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

அரசுப் பள்ளிகளில் பட்டியல் பிரிவு குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய பணிப்பதா? சட்ட நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர் கழகம் புகார்

அரசுப் பள்ளிகளில் பட்டியல் பிரிவு குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய பணிப்பதா? சட்ட நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர் கழகம் புகார்

கோவை மாநகர கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 காலை 11 மணியளவில் வ.உ.சி. பூங்கா அருகிலுள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.  அதில்கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தோழர் ஃபாரூக் நினைவு நாளை ஒட்டி 17.03.2020 அன்று  அண்ணாமலை அரங்கில் கருத்தரங்கம் மற்றும் மறைந்த  தோழர்கள் பேராசிரியர் அன்பழகன்,  ஆசிட் தியாகராஜன், இராவணன் ஆகியோரது படத்திறப்பு நடத்துவது. 09.03.2020 திங்கள் கிழமை அன்று அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளை  கழிவறைகளை அகற்ற வற்புறுத்தும் ஜாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு துறை ரீதியாக மட்டுமே நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து ஆசிரியர்கள் ஜெயந்தி, குமரேஷ்வரி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் காலை 10 மணிக்கு மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது . இதில் தோழர்கள் செ. வெங்கடேசன்,  ச. மாதவன், ஆ.சுரேஷ்,  நா.வே. நிர்மல்குமார் ப.கிருட்டிணன்   மா.நேருதாசு ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் முடிவின்படி 9.3.2020 திங்கள் அன்று  கோவை  மாவட்டத்தில்...

அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி

அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பாக கோவையில் கடந்த 9.2.2020 அன்று நீலச் சட்டை பேரணி ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுப்பின் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்வு பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்புத் தோழர்களின் இடையறாத முயற்சியால் நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெறப்பட்டு பேரணியும் மாநாடும் திட்டமிட்டபடி நடந்துள்ளது. இந்தப் பேரணியும் மாநாடும் பொதுமக்களின் பார்வையை ஈர்த்து விடக்கூடாது என்று அரசும் காவல் துறையும் பேரணி துவங்கும் போதும் மாநாடு நடைபெறும் பொழுதும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திய வண்ணமே இருந்தார்கள். பேரணி நடைபெறும் 9.2.2020 முந்தைய நாள் மதியம் திடீரென காவல்துறை ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்த பேரணி செல்லும் பாதைக்கு அனுமதி மறுத்து குறுகலான சாலையில் பொதுமக்களின் பார்வை படாத இடத்தில் ஊர்வலப் பாதையை மாற்றி அமைத்தது. கோவையில் அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் பொதுக் கூட்டங்கள் நடத்தும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துவதற்கு...

‘ஜே.என்.யூ’ வன்முறைக் கும்பலைக் கைது செய்: கோவையில் மாணவர்கள் போர்க் கொடி

‘ஜே.என்.யூ’ வன்முறைக் கும்பலைக் கைது செய்: கோவையில் மாணவர்கள் போர்க் கொடி

தமிழ்நாடு மாணவர்  கூட்டமைப்பு சார்பாக கோவை  பந்தயச் சாலையில் 10.01.2020 அன்று மாலை 4 மணியளவில்,  புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ‘வன்முறை’யாளர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகம் கனல்மதி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். சபரி கிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்), தினேசு (இந்திய மாணவர் மன்றம்), சம்சீர் அகமது மாநில அமைப்பாளர் (இந்திய மாணவர் ஜனநாயக சங்கம்), பூர்ணிமா (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), சந்தோஷ் (தமிழ்நாடு மாணவர் கழகம்), அபுதாகீர் (Campus), சண்முகவேல் பிரபு (தமிழ்நாடு மாணவர் மன்றம்), சௌந்தர் (தமிழ்நாடு மாணவர் கழகம்), பிரசாந்த் (தமிழ்நாடு மாணவர் கழகம்) ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். தமிழ்நாடு மாணவர் கழகம் ஒருங்கிணைத்த ஆர்பாட்டத்தில், இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களோடு...

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கோவை : கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் 46 வது நினைவு நாளில் தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து, மாநகர துணை தலைவர் வெங்கட் கொள்கை முழக்கங்கள் எழுப்பி, விஷ்ணு உறுதிமொழி வாசிக்க தோழர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் சுரேஷ்-தர்ஷினி இணையர்  தேனீர் வழங்கினர். சென்னை :  24.12.2019 அன்று காலை 9 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  தலைமையில் சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ, தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்....

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை : புரட்சியாளர் டாக்டர்அம்பேத்கர் 63 ஆவது நினைவு நாளான டிசம்பர் 6 அன்று திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர். அதன் பின் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ மாலை அணிவித்தார். இராயப்பேட்டை, பத்ரி நாராயணன் நினைவு நூலகத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு சைதை அன்பரசன் மாலை அணிவித்தார், கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோவை : கோவை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் வடகோவை, உணவு கிடங்கில் உள்ள  அம்பேத்கர் சிலைக்கு கொள்கை முழக்கங்கள் எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது, இராதாகிருஷ்ணன் சாலையில் வாழக்காய் மண்டியில் அம்பேத்கர் அவர்களின் உருவப் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. தோழர்கள் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், நிர்மல் குமார், வெங்கட், லோகு, மாதவன் சங்கர்,  இயல்,  விஷ்ணு, பார்த்திபன் ...

நீதிக்காகப் போராடிய தோழர்கள் பிணையில் விடுதலை

நீதிக்காகப் போராடிய தோழர்கள் பிணையில் விடுதலை

மேட்டுப்பாளையம் நடுவூரில் 17 தலித் மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து நீதி கேட்டுப் போராடிய தோழர்கள், பொது மக்கள் மீது காவல்துறை மூர்க்கத்தனமாக தடியடி நடத்தி கைது செய்தது. தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகக் கோவை மாநகர கழகத் தலைவர் நேரு தாசு, திராவிடர் தமிழர் கட்சியைச் சார்ந்த வெண்மணி, வழக்கறிஞர் கார்க்கி உள்ளிட்ட 28 தோழர்கள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 5 நாளுக்குப் பிறகு டிசம்பர் 7 அன்று நாகை திருவள்ளுவன் தவிர மற்ற தோழர்கள் பிணையில் விடுதலையானார்கள். பெரியார் முழக்கம் 12122019 இதழ்

சட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்

சட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்

திருச்சி : சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைச் சென்று சிறையிலேயே உயிர்நீத்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் நினைவிடத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பும், அண்மையில் முடிவெய்திய இராவணனுக்கு வீரவணக்க நிகழ்வும் 26.11.2019 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகக் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் சீனி. விடுதலையரசு பங்கேற்று வீர வணக்க உரை நிகழ்த்தினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் புதியவன் உறுதி மொழி வாசிக்க தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர். இறுதியாக மனோகர் நன்றி கூறினார். நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய பண்பாட்டு...

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட தலித் மக்களுக்காக போராடிய தோழர்கள் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டனம் !

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட தலித் மக்களுக்காக போராடிய தோழர்கள் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டனம் !

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட தலித் மக்களுக்காக போராடிய தோழர்கள் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டனம் ! மேட்டுப்பாளையத்தில் மழையில் சுவர் இடிந்து விழுந்து 17 தலித் மக்கள் கொல்லப்பட்டுள்ளதில் ஆபத்தான நிலையில் இருந்த சுவரை பராமரிக்காத உரிமையாளரை கைது செய்யாமல், கொல்லப்பட்ட ஏழை எளிய தலித் மக்களுக்காக போராடிய தோழர்களை காவல்துறை அநாகரீகமான முறையில் கைது செய்யப்ட்டுள்ளதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு, கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல், சுவரை பராமரிக்காமல் தலித் மக்களின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்ட தலித் மக்களுக்கு உடனடியாக இழப்பீடும்,வீடிழந்த மக்களுக்கு உடனடியாக புதிய வீடுகளும் கட்டித்தரவும் தமிழக அரசு முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி.காலணியில் 2.12.2019 அன்று அதிகாலை...

ஜாதி-மத-சமூக அரசியல் அதிகாரங்களை வீழ்த்த உறுதி ஏற்போம், வாரீர்!

ஜாதி-மத-சமூக அரசியல் அதிகாரங்களை வீழ்த்த உறுதி ஏற்போம், வாரீர்!

பச்சை என்றால் எப்படிப் பசுமையையும், உழவையும் குறிக்குமோ… வெள்ளை என்றால் எப்படித் தூய்மையையும், அமைதியையும் வெளிப்படுத்துமோ, கருப்பு என்றால் எப்படி அடக்குமுறைகளின் எதிர்ப்பை அடையாளப் படுத்துமோ…. சிவப்பு என்றால் எப்படி எழுச்சியையும் புரட்சியையும் புலப்படுத்துமோ… அப்படி நீலம் என்றால் சாதிய ஒடுக்குமுறைகளால் புறந்தள்ளப்பட்ட வாழ்க்கையையும், அச்சாதிய அடக்குமுறைகளை மறுத்த எழுச்சியையும் அடையாளப்படுத்துகிறது… காணாமை, தீண்டாமை, புறந்தள்ளல், ஒதுக்கி வைத்தல் அடக்குமுறை செய்தல், கல்வி வேலை வாய்ப்புகளை மறுத்தல், நட்பு, காதல் ஈடுபாடுகளைத் தடுப்பதோடு பிரித்தல், கொலையும் செய்தல் – என்றெல்லாம் இன்றைய அளவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எத்தனை எத்தனை வடிவங்கள்… இத்தனையையும் மீறி படிப்படியாகத் தன்னை, தன் அறிவை, தன் வாழ்வை அடையாளப்படுத்திக் கொள்ளவும், மீட்டுக் கொள்ளவும் வேண்டிய நிலையில் இருக்கின்றனர், சாதியால் புறந்தள்ளப்பட்ட மக்கள்… பொதுப்பட மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளைக் காட்டிலும் சாதியால் புறந்தள்ளப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் அதிகம்… இன்றைய பார்ப்பனிய இந்திய அரசும் பன்னாட்டு மூலதன...

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

சேலம் – சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், 16.11.2019 அன்று சேலம் இளம்பிள்ளை நகர அமைப்பாளர் தனசேகர் இல்லத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கலந்துரையாடல் கூட்டத்தில், நீலச் சட்டைப் பேரணிக்கு தோழர்கள் அதிகளவில் பங்கேற்பது, சேலத்தில் அலுவலகம் அமைப்பது, கிளைக் கழக பயிற்சி வகுப்புகள், மாணவர் பிரச்சினைக்கான துண்டறிக்கைகளை கல்லூரி முன்பு மாணவர்களிடத்தில் கொடுப்பது போன்ற கருத்துக்கள் தோழர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர், தோழர்களிடத்தில் கழகச் செயல்பாடுகள் மற்றும் நீலச் சட்டைப் பேரணிக்கு அதிகளவில் பங்கேற்பதன் நோக்கம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். கலந்துரையாடலில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சேலம் மாநகரத் தலைவர், சேலம் சரவணன் (மூணாங்கரடு), கிழக்கு...

அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ள மத அடையாள சுவரொட்டிகளை அகற்றுமாறு 16.10.2019 அன்று அரசு போக்குவரத்து கழகக் கோவை மாவட்ட மேலாண் இயக்குநரைச் சந்தித்து கோவை திவிக சார்பில் நேருதாஸ் தலைமையில்  மனு அளிக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட மேலாண் இயக்குநர், அப்படி இருந்தால் தவறு தான் நிச்சயம் இதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.  உடன் கலந்து கொண்ட தோழர்கள்: ஃபெரோஸ், வேல்முருகன் புஇக, இராவணன் தமிழ்ப் புலிகள்,  அஸ்வின் புஇமு,  ஜின்னா. பெரியார் முழக்கம் 07112019 இதழ்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக சத்தியமங்கலம் நகர அமைப்பாளர் மூர்த்தி – பூங்கொடி இல்லத் திறப்பு விழா  கெம்பநாயக்கன்பாளையம் சத்தியில், 03.11.2019 அன்று காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். நிகழ்வில் ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் 3.11.2019 அன்று சத்தி கெம்பநாயக்கம் பாளையம் திரு. கிட்டுசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்  இரத்தினசாமி தலைமை யேற்று நோக்கவுரை ஆற்றினார். கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கமும், கிராமங்கள் தோறும் பரப்புரைப் பயணமும், மருத்துவ முகாம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் உள்ளிட்டவைகளை நடத்த ஆலோசனை வழங்கினார். கழக மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மண்டலம் உள்ளடக்கிய ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை புறநகர், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர்...

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை நிறுத்தக் கோரி கோவை கழகம் காவல்துறையில் மனு

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை நிறுத்தக் கோரி கோவை கழகம் காவல்துறையில் மனு

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த பண்டிகைகள் கொண்டாடக்கூடாது என்று அரசாணை உள்ளது. எனவே அந்த அரசாணையை அரசு அதிகாரிகள் முறையாக காப்பாற்ற வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  5.10.2019  அன்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடமும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும்  கழகத் தோழர்கள்  நிர்மல், வெங்கட், கிருஷ்ணன், இயல் ஆகியோர் மனு கொடுத்தனர். பெரியார் முழக்கம் 10102019 இதழ்

மக்கள் பேராதரவோடு நடந்த திருப்பூர், கோவை பரப்புரை

மக்கள் பேராதரவோடு நடந்த திருப்பூர், கோவை பரப்புரை

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பிரச்சாரப் பயணத்தில் 4 நாட்களிலும் பெண் தோழர்கள் துண்டறிக்கை கொடுப்பது கடைகளில் வசூல் செய்வது என்று சிறப்பாக செய்தார்கள், குறிப்பாக, பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகளிடம் கருத்துகளை அதிகம் கொண்டு சேர்க்கப்பட்டது, திருப்பூர் அருள்புரம் பகுதி இந்து முன்னணி அதிகம் உள்ள பகுதி அங்கு நிறைய பேர் நிகழ்ச்சியை கேட்டார்கள்; புத்தகங்களும் வாங்கி சென்றார்கள், கோவை, செட்டிபாளையம், பனப்பட்டி, புதிய பகுதி எந்த இடையூறும் இன்றி சிறப்பாக நிகழ்வு நடந்தது, உடுமலை பேருந்து நிலையத்தில், பேருந்துகளில் பயணம் செய்வேரிடம், ஒவ்வொரு பேருந்திலும் நிர்மல்குமார் கருத்துகளை சொல்ல தோழர்கள், முனியப்பன், கிருஷ்ணன் இருவரும் நிதி வசூல் செய்தார்கள். நல்ல வரவேற்பு இருந்தது 1 மணி நேரத்தில் இரண்டாயிரத்து தொண்ணூற்று ஒரு ரூபாய் வசூல் செய்தார்கள், காங்கேயம் பேருந்து நிலையத்தில் நிகழ்வு நடக்கும் போது இந்து முன்னணியைச் சேர்ந்த 4 – 5 பேர் வந்து வீடியோ எடுத்து...

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கோவை போத்தனூரில் உள்ள சங்கம் திருமண மண்டபத்தில் 8.9.2019 அன்று மாலை 7 மணிக்கு தோழர்கள் கனிமொழி – பத்மநாதன் ஆகியோருக்கு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையேற்று நடத்தி வைத்தார். திமுகவின்  முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, அந்தியூர் செல்வராஜ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்,  தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றினர். திருமணத்தில் கோவை பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 19092019 இதழ்

அண்ணா பிறந்தநாள்: கழகம் மாலை அணிவிப்பு

அண்ணா பிறந்தநாள்: கழகம் மாலை அணிவிப்பு

மயிலாடுதுறை : 15.09.2019 அன்று காலை 10 மணிக்கு அண்ணா 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப் பட்டது. உடன் மயிலாடு துறை கழகத் தோழர்கள் சென்றிருந்தனர். முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோவை : 15.09.2019 அன்று காலை 9 மணிக்கு, கழகத்தின் சார்பில் காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பப்பட்டது. வெங்கட், கிருஷ்ணன், அறிவரசு, மாதவன் சங்கர், நிர்மல், கிருஷ்ணமூர்த்தி, செந்தில் வடிவேல், மன்சூர் அலி, ராஜ்.  மேலும் திராவிட விழுதுகள் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19092019 இதழ்

திருப்பூர்- கோவையில் விநாயகர் சதுர்த்தி நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மனு

திருப்பூர்- கோவையில் விநாயகர் சதுர்த்தி நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மனு

விநாயகர் சதுர்த்தியின் போது கடை பிடிக்க வேண்டிய சட்ட நடை முறை கள் அடங்கிய விண்ணப்பம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திராவிடர் விடுதலைக் கழகத் (திருப்பூர் மாவட்டம்) தோழர்களால் 19.08.2019 அன்று காலை 10 மணிக்கு அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியின் போது கடைபிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை தொடர் புடைய அதிகாரிகளிடம் வழங்கி நடைமுறைபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.  கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில் இராசு, முத்து, அய்யப்பன் ஆகியோர் சென்றிருந்தனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – சிலை அமைப்பது தொடர்பாக – சென்னை உயர்நீதிமன்றத்தின் (றுஞ சூடி 25586/2004. னுவ.17.09.2004) வழிகாட்டுதல்-தமிழக அரசின் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)துறையின் அரசாணை எண் 598, நாள் 09.08.2018 நிபந்தனைகளை விதி முறைகளை  செயல் படுத்தக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 21.08.2019  அன்று கோவை  மாநகர காவல் ஆணையாளர், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம்...

நிர்மல்குமார் பிணையில் விடுதலை

நிர்மல்குமார் பிணையில் விடுதலை

மாட்டிறைச்சி குறித்து முகநூல் பதிவிட்டதற்காக இந்து முன்னணியினர் தந்த புகார் அடிப்படையில் கோவை மாநகர கழகச் செயலாளர் நிர்மல் குமார், ஜூலை 27இல் செய்து செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கைதிகளுக்கான உயர் பாதுகாப்புப் பிரிவு என்ற கொட்டடியில் 24 மணி நேரமும் அடைத்து வைக்கப்பட்டதோடு உணவு பெறும் நேரத்துக்கு மட்டும் வெளியே திறந்து விடப்பட்டார். பெரியார், அம்பேத்கர் நூல்களை உள்ளே படிப்பதற்குக் கொடுத்தபோது, ‘இது ஜாதித் தலைவர்கள் நூல்’ என்று சிறை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டது. 10 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஆகஸ்டு 7ஆம் தேதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நிர்மல் கைதானவுடன் வழக்கறிஞர்கள் மலரவன், வெண்மணி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலரும் ஆர்வத்துடன் முன் வந்து சட்ட உதவிகளை செய்தனர். பி.யு.சி.எஸ். அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் பால முருகன் பிணை கோரி நீதிமன்றத்தில் வாதிட்டார். பெரியார் முழக்கம் 15082019 இதழ்

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

மாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது அனைத்து இயக்கங்கள் கண்டனம்

மாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது அனைத்து இயக்கங்கள் கண்டனம்

மாட்டிறைச்சியை ஆதரித்த முகநூல் பதிவுக்காக கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் நா.வே. நிர்மல்குமார், காவல்துறையால் பிணையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவு களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் துறையின் சிறப்பு பிரிவுகள் தொடர்ந்து மக்களுக்காய் களத்தில் நிற்கும் தோழர்களின் முகநூல் பதிவுகளைத் தொடர்ந்து கண் காணித்து வருகிறது. அந்த வகையில் கோவையில் ஜாதி, மத வெறியர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டமக்களோடு களத்தில் நின்று போராடும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் நிர்மல் பதிவை பதிவிட்ட அன்றே காவல்துறை கண்காணித் திருக்கும். அதன் பிறகு ஜாதி ஆணவப் படு கொலைகளைத் தடுக்கத் தவறும் தமிழக அரசு, காவல் துறை ஆகியவற்றை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. 17.07.2019 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்புக் கடிதம் கொடுத்த காவல்துறை அக்கடிதத்தில் நிர்மலின் முகநூல் பதிவையே காரணம் காட்டி யுள்ளது. மேலும்...

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

தொடரும் ஜாதி வெறித் தாக்குதல்கள், ஜாதிய ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து  கோவையில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 23/07/2019 செவ்வாய் மாலை நான்கு மணியளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவல் துறையின் தடையை மீறி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தலைமை நிர்மல்குமார் (கோவை மாநகர செயலாளர்), முன்னிலை ப கிருட்டிணன் (கோவை மாநகர அமைப்பாளர்), வரவேற்புரை மா.நேருதாசு (கோவை மாநகர தலைவர்), கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில்ராசு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ...

கோவையில் கழகம் நடத்திய  கல்விக் கொள்கைக் கருத்தரங்கம்

கோவையில் கழகம் நடத்திய கல்விக் கொள்கைக் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இந்தியை திணிக்காதே! கல்வியை காவி மயமாக்காதே! என்ற முழக்கத்துடன், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 பற்றிய கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் 12.07.2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கத்தில் மாலை 4:30 மணிக்கு நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு நேருதாசு தலைமை வகித்தார். வெங்கட் வரவேற்புரையாற்றினார். பா.இராமச்சந்திரன், யாழ் வெள்ளிங்கிரி, இரா. பன்னீர்செல்வம், நா.வே. நிர்மல் குமார், ஜெயந்த், கிருட்டிணன், சிலம்பரசன், வைத்தீஸ்வரி, அஜீத்குமார், சபரிகிரி, தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றிய விரிவான கருத்துரையை, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் மாநில ஒருங் கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வழங்கினார். தமிழ்நாடு மாணவர் கழகத்தின் விஷ்ணு நன்றியுரையாற்றினார். பெரியார் முழக்கம் 18072019 இதழ்

தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கோவை 31072019

தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கோவை 31072019

ஆர்ப்பாட்டம் ! கோவை – 31.07.2019. தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ! ”கருத்துரிமையை பறிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு” சார்பில் ……….. கழகத் தோழர் கோவை மாவட்டச்செயலாளர் தோழர் நிர்மல் குமார் அவர்கள் ஒரு முகநூல் பதிவிற்காக 27.07.2019 அன்று பொய் வழக்கில் தமிழக அர்சின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதனைக் கண்டித்தும்,தோழரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோவையில் ”கருத்துரிமையை பறிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு” சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 31.07.2019 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.பெ.தி.க.பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் அவர்கள் தலைமை வகித்தார்.கழகத்தின் மாவட்டத்தலைவர் தோழர் நேருதாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி கலையரசன், திராவிட தமிழர் கட்சியின் வெண்மணி, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பத்மநாபன், தமிழ்தேசிய இறையாண்மைக்கட்சி தென்மொழி, பு.இ.முவின்...

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் தலைவிரித்தாடுகின்றன. ஜாதிகளைக் கடந்து ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொள்ள அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஜாதிவெறிக் கூட்டம் கையில் எடுத்துக் கொண்டு வீச்சறிவாளையும் கத்தியையும் தூக்கிக் கொண்டு வருகிறது. ‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று மதவாதம் பேசும் கூட்டம், இந்துக்களுக்குள்ளே நடக்கும் ‘ஜாதிக் கொலைகளை’ எதிர்க்காமல் மவுனம் சாதிக்கிறது. தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளே நடக்கவில்லை என்கிறது, தமிழக அரசு! ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சட்டத்தையும் கொண்டுவர மறுக்கிறது, மத்திய சட்ட ஆணையம். ஜாதியப் படுகொலைகளைத் தடுக்கும் மசோதாவைத் தயாரித்து 2011ஆம் ஆண்டு நடுவண் ஆட்சிக்கு அனுப்பி பல ஆண்டுகளாகியும் மசோதா கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஜாதி ஆணவப் படுகொலைகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுகளுக்கு 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 22 மாநில அரசுகள் பதிலளித்து விட்டன. தமிழ்நாடு மட்டுமே பதிலளிக்கவில்லை. இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய முன் வந்தால் முதியவர்கள்...

தலைமை ஆசிரியரின் ஜாதி வெறியை எதிர்த்து களமிறங்கினர் கோவை கழகத் தோழர்கள்

தலைமை ஆசிரியரின் ஜாதி வெறியை எதிர்த்து களமிறங்கினர் கோவை கழகத் தோழர்கள்

கோவை சரவணம்பட்டி அருகே கரட்டு மேடு கந்தசாமி நகர் நகரில் உள்ள அரசு துவக்கப் பள்ளி யில் தாழ்த்தப் பட்ட சமூகத்தை சார்ந்த குழந்தை களிடம் ஜாதி வெறியுடன் தலைமையாசிரியர் ஜெயந்தி நடந்து வந்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் அந்த பகுதி மக்கள் புகார் அளித்ததனர். இதை அறிந்த  திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வெங்கட் கிருஷ்ணன் நிர்மல் அந்த பகுதிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட குழந்தை திவ்யபாரதி மற்றும் அங்கு படிக்கும் சில குழந்தைகளிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொண்டு அந்தப்  பகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அங்கு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தெரிந்ததால். 26.6.2019 அன்று அந்த தலைமையாசிரியர் மீது சட்டப்படி தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மாநகர காவல் ஆணையர் இடமும் மாவட்ட...

டாக்டர் ரமேசுக்கு நேரில் ஆறுதல்

டாக்டர் ரமேசுக்கு நேரில் ஆறுதல்

கோவை சமூக செயல்பாட்டாளர் டாக்டர் ரமேஷ், மனைவி ஷோபனா சாலை விபத்தில் மரணமடைந்தார். துணைவரை இழந்த நிலையிலும் தொடர் விபத்திற்கு காரணமான அப்பகுதி டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி டாக்டர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அந்த மதுபானக் கடை தற்போது மூடப்பட்டுள்ளது. 26.06.2019 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, டாக்டர் ரமேஷை இல்லத்தில் சந்தித்து நடந்தவற்றை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். கழகத் தோழர்கள் நேருதாஸ், நிர்மல்குமார் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கோவை விடியல் நண்பர்கள் ரூ.   4,20,000 (27.5.2019 அன்று மாலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் விடியல் நண்பர்கள் குழுவினரைச்  சந்தித்தபோது தங்கள் நிதியுடன் திரட்டிய நிதியையும் சேர்த்து ரூ. 4,20,000த்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ. 20,000 வழங்கியுள்ளனர்.) அ.மாசிலாமணி (கீழப்பாவூர்)  ரூ.         25,000 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட சார்பில்     ரூ.   4,35,000 (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டக் கழக கட்டமைப்பு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி 27.05.2019 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.4,35,000 (நான்கு இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) ரூபாயை கழகத் தலைவரிடம் ஒப்படைத்தனர்) மேட்டூர் நாத்திகர் விழாவில்…...

மேடை தோறும் திராவிடர் இயக்கக் கருத்தை முழங்கிய கோவை இராமநாதன் குரல் அடங்கியது

மேடை தோறும் திராவிடர் இயக்கக் கருத்தை முழங்கிய கோவை இராமநாதன் குரல் அடங்கியது

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் மிக்க பேச்சாளரும், திராவிடர் இயக்கக் கருத்தியலை தனது உரையின் உயிர் மூச்சாகக் கொண்டு பேசியவரும் பெரியார் இயக்கக் கழக மேடைகளில் தொடர்ந்து பங்கேற்றுப் பேசிய வருமான கோவை இராமநாதன் (87) மே 11ஆம் தேதி கோவையில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய புலவர் குழந்தை நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுஅவர் நிகழ்த்திய நீண்ட உரையும், பழனியில் தமிழ் வழிபாட்டை ஆதரித்து பெரியார் இயக்க மேடையில் அவர் ஆற்றிய உரையும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாகும். 1977, 1984ஆம் ஆண்டுகளில் தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும், 1996இல் நாடாளுமன்ற உறுப் பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றம் முன்னணியினர் அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களுடன் மே  11 அன்று மாலை அவரது இல்லம் சென்று குடும்பத் துக்கு ஆறுதல் கூறினார். கடந்த 2018ஆம்...

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

சென்னையில் : டாக்டர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாளான 14.04.2019 காலை 9 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழகத் தோழர்கள் ஜாதி, மத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் கழகத்  தோழர்கள் ராஜீ, சங்கீதா, அம்பிகா, பூர்ணிமா ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். திருப்பூரில் :  திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வாக 14.04.2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழகப் பொரு ளாளர்...

ஃபாரூக் துணைவியார் குடும்பத்தினருக்கு  கழகத் தலைவரின் அன்பு வேண்டுகோள்

ஃபாரூக் துணைவியார் குடும்பத்தினருக்கு கழகத் தலைவரின் அன்பு வேண்டுகோள்

கோவையில் அண்ணாமலை அரங் கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை 23.03.2019 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டம் கவரபாளையம் சரோஜா-இராமகிருஷ்ணன் ஆகியோரின் மகன் இராவண கோபால்  – ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலட்சுமி-நாச்சிமுத்து ஆகியோரின் மகள் கோமதி வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார்.   திருமணத்தை தலைமையேற்று நடத்திய கழகத் தலைவர் இந்தத் திருமணத்தில் ஒருவர் கணவனை இழந்தவர், ஒருவர் மனைவியைப் பிரிந்தவர். வாழ்க்கை இணையேற்கும் இரண்டு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். மேலும் கோமதியின் மகன், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் பிரபாகரன்தான் இந்த மறுமணத்திற்கு முன் முயற்சியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடைபெறும் இத்திருமணத்திற்கு வந்துள்ள ஹமீது (ஃபாரூக் தந்தை), இப்ராஹீம் (ரஷீதா தந்தை), ஷாஜகான்...

மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள்  மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்

மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள் மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்

கோவையில் அண்ணாமலை அரங்கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக் மதவெறியர்களால் படுகொலை செய்யப் பட்டார். இதைக் கண்டித்து மனிதநேய அமைப்புகள் மற்றும் திராவிட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து ஆண்டுதோறும் நினைவேந்தல் கூட்டங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. நிகழ்வின் தொடக்கத்தில் இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் சமூக ஊடகங்களில் மதவெறி பற்றியும், கழகப் பகுத்தறிவு பரப்புரைக்கு சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் டுவிட்டர் பயன்பாடு பற்றியும் பயிற்சி அளித்தார். இந்தக் கூட்டத்தில் ‘மதங்களை மறப்போம், மனிதத்தை விதைப்போம்’  என தலைவர்கள் பேசினர். அதேபோல, மதங்களால் நடைபெறும் படு கொலைகள் தடுக்கப்படவேண்டும், மத அடிப்படை வாதங்கள் மாற வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. திருப்பூர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மேட்டுப்பாளையம்...

”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !” கோவை 23032019

”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !” கோவை 23032019

”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !” இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித நேயன் தோழர் ஃபாரூக் நினைவேந்தல் கருத்தரங்கம் ! நாள் : 23.03.2019 சனிக்கிழமை. நேரம் : மாலை : 04.00 மணி இடம் : அண்ணாமை அரங்கம்,இரயில் நிலையம் எதிரில்,கோவை. உரை : ”தோழர் கொளத்தூர் மணி”, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். ”முனைவர் தோழர் சுந்தரவள்ளி”, மாநிலத்துணைச் செயலாளர்,தமுஎசக. ”தோழர் பாமரன்”, எழுத்தாளர். ”தோழர் பீர் முகமது”. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திராவிடர் விடுதலைக் கழகம், கோவை மாநகர் மாவட்டம். 9677404315 – 98652 85827 – 99942 85382

காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் ! கோவை 31012019

காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் ! கோவை 31012019

இன்று (31.01.2019) மாலை கோவையில் காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் வீரமணி, த.பெ.தி.க.பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார்கள். நாள் : 31.01.2019 வியாழக்கிழமை, நேரம் : மாலை 5.00 மணி இடம் : வி.கே.கே.மேனன் சாலை, புதுசித்தாப்புதூர், கோவை.

‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சமூகநீதியை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க அரசின் உயர்சாதிக்கான 10ரூ இட ஒதுக்கீட்டைக் கண்டித்து 11.1.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழக மாநகர மாவட்டத் தலைவர் நேருதாசு தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் வெண்மணி (திராவிடர் தமிழர் கட்சி), மலரவன் (புரட்சிகர இளைஞர் முன்னணி) வழக்கறிஞர் சேகர் பி.யு.சி.எல்., இராமசந்திரன் (திவிக), இளவேனில் (தமிழ் புலிகள்), சண்முக சுந்தரம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), எம்.எஸ். வேல்முருகன் (சி.பி.அய். எம்.எல்.), வழக்கறிஞர் சக்திவேல் (சி.பி.அய்.), சபரி தமிழ்நாடு மாணவர் கழகம், ரமேஷ் முற்போக்கு வழக்கறிஞர் சங்கம், இனியவன் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம், தண்டபாணி சமூக நீதி கட்சி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்திற்கு திவிக தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், பாலமுருகன் (பி.யு.சி.எல்.), சிங்கை பிரபாகரன்...

உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவை 11012019

உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவை 11012019

சமூகநீதியை சீர்குலைக்கும்* மத்திய பா.ச.க அரசின் உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து *கண்டன ஆர்ப்பாட்டம்* திராவிடர் விடுதலைக் கழக மாநகர மாவட்டத்தலைவர் தோழர் நேருதாசு தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கண்டன உரை தோழர்கள் வெண்மணி திராவிடர் தமிழர் கட்சி மலரவன் புரட்சிகர இளைஞர் முன்னணி வழக்கறிஞர் சேகர் Pucl இராமசந்திரன் திவிக இளவேனில் தமிழ்புலிகள் சண்முக சுந்திரம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் MS. வேல்முருகன் CPI ML வழக்கறிஞர் சக்திவேல் Cpi சபரி தமிழ்நாடு மாணவர் கழகமஃ ரமேஷ் முற்போக்கு வழக்கறிஞர் சங்கம் இனியவன் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் தண்டபாணி சமூக நீதி கட்சி வழக்றிஞர் கார்கி வழக்கறிஞர் சத்தியபாலன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர் கூட்டத்திற்கு திவிக தலைமை செய்ற்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம் Pucl பாலமுருகன் திமுக சிங்கை பிரபாகரன் உட்பட 80 திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் நன்றியுரை நிர்மல்குமார் மாநகர மாவட்ட செயலாளர் (11.1.2019)*...

கோவை கல்லூரி விழாவில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் அறிமுகம்

கோவை கல்லூரி விழாவில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் அறிமுகம்

கோவை அன்னூர் அருகே குப்பேபாளையம் கிராமத்தில் உள்ள ஜி.ஆர்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 14, 2018 அன்று முத்தமிழ் விழா நடந்தது. விழாவில் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நிர்மல், வெங்கட் ஆகியோர் பங்கேற்று, பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் குறித்து மாணவ மாணவிகளிடம் பேசினர். ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட 230 பேர் நிகழ்வில் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியம் பங்கேற்றார். கவிஞர் வைகை சுரேஷ், இந்நிகழ்வை மிகுந்த ஆர்வத்தோடு ஏற்பாடு செய்தார். 10 ரூபாய் விலையில் வெளியிடப்பட்டுள்ள நூலை தனது சொந்தப் பணத்தில் வாங்கி, மாணவிகளுக்கு வழங்கினார் வைகை சுரேஷ். கல்லூரியின் மனித வள மேம்பாட்டு அலுவலர் பாபு, மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட  ஒருங் கிணைப்பாளர்கள் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். சில மாதங்களுக்கு முன்பு இங்கே கல்லூரி நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்...

சின்னியம்பாளையத்தில் அம்பேத்கர் நினைவு பொதுக் கூட்டம்

சின்னியம்பாளையத்தில் அம்பேத்கர் நினைவு பொதுக் கூட்டம்

கோவை சின்னியம் பாளையத்தில் டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கரின் 62 ஆவது நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 1ஆம் தேதி நினைவு நாள் பொதுக்கூட்டம் சிவா தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி  மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் சீலாராஜ் உரையாற்றினர். டி.கே.ஆர். குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்னிலையில் திராவிடர் விடுதலை  கழகத்தில்  சிலம்பரசன் (வழக்கறிஞர்), ரஞ்சித் இணைந்தனர். அவர்களுக்கு நிமிர்வோம் இதழை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கி வரவேற்றார். பெரியார் முழக்கம் 13122018 இதழ்

சிறைக்குள் மரணமடைந்த ஜாதி ஒழிப்புப் போராளி நன்னிமங்கலம் கணேசன் நினைவிடத்தில் தோழர்கள் உறுதி ஏற்பு

சிறைக்குள் மரணமடைந்த ஜாதி ஒழிப்புப் போராளி நன்னிமங்கலம் கணேசன் நினைவிடத்தில் தோழர்கள் உறுதி ஏற்பு

ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்து கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல தோழர்களில் நண்ணிமங்கலம் கணேசன் ஒருவர். அவர் சிறையிலேயே இறந்துவிட்டார். அவருடைய உடல் கோவை ஆத்துப்பாலம் சுடுகாட்டில் பெரியாரின் போர்வாள் எம்.ஆர்.ராதா  மனைவி பிரேமாவதி மற்றும் மகன் தமிழரசன் நினைவிடத்திற்கு அருகே புதைக்கப் பட்டுள்ளார். அவரை நினைவு படுத்தும் விதமாக ஆத்துப்பாலம் சுடுகாட்டில் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சூலூர் பன்னீர்செல்வம் வெங்கட் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் உடுமலை இயல் கிருஷ்ணன் நிர்மல்குமார்  மலர் வளையம் வைத்து  ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். பெரியார் முழக்கம் 13122018 இதழ்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பேரணியாக வந்து மு.நாகராஜ் (அறிவியல் மன்ற அமைப்பாளர்) தலைமையில்  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்ட அமைப் பாளர் சி.சாமிதுரை முன்னிலை வகித்தார். ஜாதி ஒழிப்பு, ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இரா.துளசிராஜா, குமார், பாரதிதாசன், ராமச்சந்திரன் கார்மேகம், நீதிபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம் : திவிக சேலம் மாநகரம் சார்பாக 6.12.2018 அன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மற்றும் சேலம் மாநகர செயலாளர் பரமேஸ்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர். நிகழ்வில் மாநகர தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: இந்திய...

கழக ஏடுகளுக்கு சந்தா  சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகி வரும் கழகத் தோழர்கள் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்திலும் முனைப்போடு  செயல்பட்டு வருகிறார்கள். மாவட்டக் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். முதல் கட்டமாக பயணம் நவம்பர் 21ஆம் தேதி காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் காலை 11.30 மணியளவில் கழகத் தோழர் நிவாஸ் இல்லத்தில் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்டமான கோபியில் 7 ஒன்றியங்களில் கழக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் பரப்புரைக்காக வாங்கியுள்ள வாகனத்தைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக பரப்புரையை தொடர் நிகழ்வாக நடத்தி வருவது...

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

பேராவூரணி: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பேராவூரணி ஆவணம் சாலை முகத்தில் அமைந் துள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம்,  நகர அமைப்பாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா, மதிமுக பொறுப்பாளர்கள் குமார், கண்ணன், மணிவாசன், தேனி ஆல்பர்ட், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொறுப்பாளர்கள் பைங்கால் மதியழகன், வீரக்குடி ராஜா, சத்துணவு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் முத்துராமன், அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் வனராணி, ஜேம்ஸ்,   முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கீ.ரே. பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராசிரியர் ச.கணேஷ்குமார், திரைப்படப் பாடலாசிரியர் செங்கை நிலவன், பெரியார் அரும்புகள் அறிவுச் செல்வன், அரும்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு : தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளான...

பாரூக் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி உதவிய தோழர்கள்

பாரூக் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி உதவிய தோழர்கள்

மதவெறிக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் குழந்தைகளுக்கான  2018 முதல் பருவ பள்ளிக் கட்டணம் ரூ46,492/- செலுத்தி அவர்களது இரண்டாம் வருடத்திய கல்வியினை துவக்கி வைத்துள்ள வழக்கறிஞர் சிவகுமார், வழக்கறிஞர் கலையரசு ஆகியோருக்கும்,  கடந்தாண்டு இரண்டாம் பருவ கட்டணம் ரூ. 34000 செலுத்திய மதுரை வழக்கறிஞர் தன பாலாஜி அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. பாரூக் குழந்தைகளை இஸ்லாமிக் பள்ளியில் இருந்து எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு இரண்டு பருவக்கட்டணம் செலுத்த வேண்டும். வாய்ப்புள்ள தோழர்களிடம் உதவி பெற்று செலுத்தி வருகிறோம். வாய்ப்பிருக்கும் தோழர்கள், ஆதரவாளர்கள், பள்ளிக் கட்டணத்திற்கு உதவ விரும்பினால் மகிழ்வோம். நேருதாஸ், திராவிடர் விடுதலைக் கழகம் , கோவை மாவட்டம் பெரியார் முழக்கம் 13092018 இதழ்