Category: பெங்களுர்

கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் பீமாராவ்-சந்தியாராணி இணையேற்பு விழா

கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் பீமாராவ்-சந்தியாராணி இணையேற்பு விழா

24-04-2022 ஞாயிறு மாலை 4.00 மணியளவில் பெங்களூர் ஹோட்டல் கேபிடல் அரங்கில் தாமரை வேணி – ஜார்ஜ் இணையரின் மகன் பீமாராவ் க்கும் மங்கம்மா-புஷ்பராஜ் இணை யரின் மகள் சந்தியாராணிக்கும் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி   தலைமையில் இணையேற்பு விழா நடைபெற்றது. மணவிழா மேடையில் பெரியார், அம்பேத்கர் படங்கள் சுயமரியாதைத் திருமணம் என்ற எழுத்துகளோடு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் தொடக்கத்தில் நிமிர்வு கலையகத் தோழர்களின் பறையிசை எழுச்சி யோடு முழங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சமதா  தேஷ்மானே, ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜிகானி சங்கர், மனநல மருத்துவரும் சமூக செயல்பாட்டாளருமான  டாக்டர் பத்மாக்ஷி லோகேஷ், முனியஜினப்பா, லோகேஷ் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். முனைவர் சமதா தேஷ்மானே பேசும்போது, தான் தாலியில்லாத சடங்கில்லாத திருமணத்தை 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திக் கொண்டு நலமாக வளமாக வாழ்ந்து வருவதை எடுத்துக்கூறி, வேத, புராண, சாத்திர...

மு.மீனாட்சி சுந்தரம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

மு.மீனாட்சி சுந்தரம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்நாட்டரசின் 2022 திருவள்ளுவர் விருதாளரும் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அனைத்து இந்திய தமிழ்ச் சங்க பேரமைப்பின் தலைவரும், திராவிடர் கழகத்தின் மூத்த  கருஞ்சட்டைத்  தோழருமான மு.மீனாட்சி சுந்தரம் (முத்து செல்வன்) நினைவேந்தல் நிகழ்வு 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் பெங்களூர் தமிழ்ச் சங்க திருவள்ளுவர் அரங்கத்தில், பெங்களூர் தமிழ்ச் சங்கம்  நடத்தியது. இந்நினைவேந்தல் நிகழ்வுக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கோ. தாமோதரன் தலைமை தாங்கினார்.  திராவிடர்  விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மீனாட்சி சுந்தரத்தின் (முத்து செல்வன்) உருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.  நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் சானகிராமன், க.த.ம.இ. தலைவர் சி. இராசன்,  பெரியாரிய பொதுவுடமை இயக்கத்தின் அமைப்பாளர் கி.சு. இளங்கோவன், கருநாடக திமுக அமைப்பாளர் இராமசுவாமி, உ.த.க. தலைவர் மதலைமணி, மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் பிரான்சிஸ்,...

‘ஜெய் பீம்; ஜெய் பெரியார்’ முழக்கங்களுடன் பெங்களூரில் சுயமரியாதைத் திருமணம்

‘ஜெய் பீம்; ஜெய் பெரியார்’ முழக்கங்களுடன் பெங்களூரில் சுயமரியாதைத் திருமணம்

7.12.2019 சனிக்கிழமை அன்று பெங்களூர் ‘கற்பி, ஒன்று சேர்’ அமைப்பின் ஏற்பாட்டில், பெங்களூர் சேஷாத்திரிபுரம் ஏ.வி. வரதாச்சாரி நினைவு அரங்கில் வேலூர், அங்கராங்குப்பம், கலா-கோவிந்தன் இணையரின் மகன் சிவக்குமார் – திருவள்ளூர் மாவட்டம் மாலம்மாள்-ஆனந்தன் இணையரின் மகள் அன்னபூரணேசுவரி ஆகியோரின் ஜாதி, சடங்கு, தாலி மறுப்பு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்தார். அன்று காலை 11 மணியளவில் பகுத்தறிவு, ஜாதியொழிப்பு இன்னிசை நிகழ்வோடு நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவை ஹெப்பால் பழங்குடி மக்களின் கலை நிகழ்வு, ‘நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறையிசை நடந்தது. நண்பகல் உணவுக்குப் பின்னர் நாத்திகனின் ‘மந்திரமல்ல! தந்திரமே!’ நிகழ்ச்சி நடந்தது. பிற்பகல் 4.30 மணியளவில் கழகத் தலைவர் தலைமையில் வாழ்க்கை ஒப்பந்த விழா தொடங்கியது. விழாவின் தொடக்க உரையை மைசூர் உரிலிங்கப்பட்டி மடத்தின் அருட்திரு ஞானப் பிரகாச சாமிகள் ஆற்றினார். தனது உரையில்...

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கோவை விடியல் நண்பர்கள் ரூ.   4,20,000 (27.5.2019 அன்று மாலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் விடியல் நண்பர்கள் குழுவினரைச்  சந்தித்தபோது தங்கள் நிதியுடன் திரட்டிய நிதியையும் சேர்த்து ரூ. 4,20,000த்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ. 20,000 வழங்கியுள்ளனர்.) அ.மாசிலாமணி (கீழப்பாவூர்)  ரூ.         25,000 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட சார்பில்     ரூ.   4,35,000 (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டக் கழக கட்டமைப்பு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி 27.05.2019 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.4,35,000 (நான்கு இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) ரூபாயை கழகத் தலைவரிடம் ஒப்படைத்தனர்) மேட்டூர் நாத்திகர் விழாவில்…...

பெங்களூர் வந்த இராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி

பெங்களூர் வந்த இராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி

9-02-2019 காலை 10 மணி அளவில் ‘இந்திய இலங்கை வெளியுறவு கொள்கையின் எதிர்காலம்’  என்ற தலைப்பிலான  இந்துக் குழும நிகழ்வில்  கலந்து கொள்ள பெங்களூருக்கு வந்த இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் பெங்களுர் ப்ரீடம் பார்க் அருகில் நடந்தது. கருநாடக தமிழர் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் உள்பட சுமார் 300 பேர் இந்திய சிங்கள இனக்கொலை கூட்டணியை  அம்பலப்படுத்தியும் இனக்கொலையாளி இராஜபக்சேவே திரும்பிப் போ என்றும் இனக்கொலைக்கு துணை போகிற இந்துக் குழுமம் ராமை கண்டித்தும் எழுச்சியுடன் முழக்கமிட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம், கருநாடக தமிழர் கட்சி, நாம் தமிழர் கட்சி, கருநாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம், பாசிச எதிர்ப்பு  கூட்டமைப்பு, கருநாடக தமிழர் பேரவை, கன்னட தமிழர் பெடரேசன், கருநாடக தமிழ் மக்கள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தங்க வயல் நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை, இளந்தமிழகம்,  மே 17...

பெங்கரூருவில்  பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா ! 28102018

பெங்கரூருவில் பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா ! 28102018

பெங்கரூருவில் பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா ! கழகத்தலைவர் சிறப்புரையாற்றுகிறார். நாள் : 28.10.2018 ஞாயிறு நேரம் : மாலை 4.00 மணி இடம்: பெங்களூர் தமிழ்ச் சங்கம் திராவிட இயக்க பண்பாடுப் புரட்சி எனும் தலைப்பில் கழகத் தலைவர் ” தோழர் கொளத்தூர் மணி ” அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். மேலும் பல்வேறு தலைப்புகளில் தோழமை அமைப்புகளின் தோழர்கள் உரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திராவிடர் விடுதலைக் கழகம், பெங்களூரு, கர்நாடக மாநிலம்

பெங்களூருவில் திருமதி.சென்னம்மாள் – திரு.முத்துச்சாமி மக்கள் படிப்பகம் திறப்பு விழா ! 28102018

பெங்களூருவில் திருமதி.சென்னம்மாள் – திரு.முத்துச்சாமி மக்கள் படிப்பகம் திறப்பு விழா ! 28102018

பெங்களூருவில் திருமதி.சென்னம்மாள் – திரு.முத்துச்சாமி மக்கள் படிப்பகம் திறப்பு விழா ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைக்கிறார் நாள் : 28.10.2018 ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி இடம: எஸ்.ஆர்.நகர் மெயின் ரோடு, அண்ணல் அம்பேத்கர் சாலை, பெங்களூரு

தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் எழுதிய சங் பரிவாரின் சதி வரலாறு – கன்னட மொழியில் வெளியீடு

கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் எழுதிய “சங் பரிவாரின் சதி வரலாறு” என்ற தமிழ் புத்தகம் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, “சன்சுகாரா சங்க பரிவாரா” என்ற பெயரில் வருகிற 20.1.2018 அன்று சனிக்கிழமை பெங்களுரில் உள்ள கன்னட பவனில் இருக்கும் நயன சபாங்கணத்தில் : புத்தக வெளியிடு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் வெளியிடுபவர் : திரு B K ஹரிபிரசாத் , மக்களவை உறுப்பினர், புது தில்லி தலைமை: பேராசிரியர் DR. K மருளு சித்தப்பா, தலைவர், குவெம்பு பாக்ஷாபாரதி, கரு நாடக அரசு சிறப்பு விருந்தினர் : தோழர் விடுதலை இராஜேந்திரன் . மூல நூல்ஆசிரியர் புத்தகத்தை குறித்து பேசுபவர் : திரு அக்னி சிரிதர், பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் முன்னிலை : திரு கலைச்செல்வி, திரு அகஸ்தியன் மற்றும் திரு இரவீந்திரனாத் சிரிவர, சிரிவர வெளியீடு. தோழர் கவுரி லங்கேஷ் அவர்களுக்கு இந்த புத்தகம் சமர்ப்பணம்...

பெங்களூரில் கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழா மாட்சி

கருநாடக மாநில திராவிடர் விடுதலைக் கழகம், பெங்களூர் சித்தார்த்த நகரில் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. 17.1.2015 அன்று நடந்த விழாவில் தோழர் வே.மதி மாறன் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று உரையாற்றினார். விழாவுக்கு சித்தார்த்தன் தலைமை தாங்கினார். தோழர்கள் சரவணன், இராமநாதன், சிவக்குமார், இலட்சுமணன், ‘கற்பி-ஒன்றுசேர்’ அமைப்பின் பொறுப்பாளர்கள் ஜார்ஜ், நாகரத்தினம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். வே. மதிமாறன் தனது உரையில், தமிழருக்கான புத்தாண்டு தை முதல் நாள்; சித்திரை அல்ல என்பதை ஆதாரங்களோடு எடுத்து விளக்கி, பெரியார்-அம்பேத்கர், ஜாதி இந்து மத பார்ப்பன எதிர்ப்பு கருத்துகளை விரிவாக விளக்கி உரையாற்றினார். கழகத் தோழர் இல. பழனி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பெரியார் முழக்கம் 21012016 இதழ்

பெங்களூரில் மாநாடு போல் நடந்த பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள் 0

பெங்களூரில் மாநாடு போல் நடந்த பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள்

பெங்களூர், சிவாஜி நகர், வேளாண்மை அறிவியல் நிறுவன அரங்கில் ‘கற்பி ஒன்று சேர் ’ அமைப்பின் தலைவர் ஜார்ஜ் ஒருங்கிணைப்பில் 26-01-2015 திங்கள் அன்று பிற்பகல் 3-00 மணி முதல் 8-00 மணிவரை பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு நடந்தேறியது. நிகழ்ச்சி கர்நாடக மாநில ரிபப்ளிகன் கட்சி, சமதா சைனிக் தள் ஆகியவற்றின் தலைவராகிய முனைவர் வெங்கடசுவாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்டையா, சப்தகிரி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேந்திரநாத், பெங்களூர் பல்கலைக் கழக சமூகவியல்துறை தலைவர் முனைவர் சமதா தேஷ்மானே ஆகியோர் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சமூகப் புரட்சிப் பணிகளை தமிழிலும், கன்னடத்திலும் விரிவாகப் பேசினர். கூட்டத் தலைவரும் கன்னட தலைவர்களும் பெரியாரைப் பற்றியும் அவரது போராட்டங்களைப் பற்றியுமே அதிகம் பேசினர். நிகழ்ச்சியில் பெரியார், அம்பேத்கர் ஆகியோரை பற்றிய ஆறு, ஆறு பாடல்களைக்...