‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சமூகநீதியை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க அரசின் உயர்சாதிக்கான 10ரூ இட ஒதுக்கீட்டைக் கண்டித்து 11.1.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழக மாநகர மாவட்டத் தலைவர் நேருதாசு தலைமையில் நடைபெற்றது.

தோழர்கள் வெண்மணி (திராவிடர் தமிழர் கட்சி), மலரவன் (புரட்சிகர இளைஞர் முன்னணி) வழக்கறிஞர் சேகர் பி.யு.சி.எல்., இராமசந்திரன் (திவிக), இளவேனில் (தமிழ் புலிகள்), சண்முக சுந்தரம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), எம்.எஸ். வேல்முருகன் (சி.பி.அய். எம்.எல்.), வழக்கறிஞர் சக்திவேல் (சி.பி.அய்.), சபரி தமிழ்நாடு மாணவர் கழகம், ரமேஷ் முற்போக்கு வழக்கறிஞர் சங்கம், இனியவன் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம், தண்டபாணி சமூக நீதி கட்சி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கூட்டத்திற்கு திவிக தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், பாலமுருகன் (பி.யு.சி.எல்.), சிங்கை பிரபாகரன் (திமுக) உட்பட 80 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிர்மல்குமார் (மாநகர மாவட்ட கழகச் செயலாளர்)  நன்றி கூறினார்.

ஈரோட்டில் : சமூக நீதிக்கு எதிரான பொருளாதார இட ஒதுக்கீட்டைக் கண்டித்தும், பாசிச பாஜக அரசை கண்டித்தும் திராவிடர் விடுதலைக் கழகமும் தமிழ்நாடு மாணவர் கழக ஈரோடு தெற்கு மாவட்டம்  சார்பாக 12.01.2019 அன்று வீரப்பன்சத்திரத்தில் மாலை4.30க்கு  கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் விடுதலைக் கழகத் தின் அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். அ. கிருஷ்ணமூர்த்தி (திவிக மாவட்ட அமைப்பாளர்) முன்னிலை வகித்தார். சீ.ரா. சௌந்தர் (தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்) ஒருங்கிணைத்தார். தோழர் வெங்கட் முழுக்கத்துடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

ச. இந்தியப்பிரியன், கணகுறிஞ்சி (தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்), இரா. தமிழ்இன்பன் (நிறுவனர், விடுதலை வேங்கைகள் கட்சி), ரவி (புரட்சிகர இளைஞர் முன்னணி), ஆறுமுகம் (ஜனநாயக மக்கள் கழகம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் கு. சண்முகப்பிரியன், நகரச் செயலாளர் திருமுருகன், செய்தித் தொடர்பாளர்பிரபு, சிவானந்தம், முகுந்தன், கமலக்கண்ணன், தமிழ்ப்பிரியன், பெரியாரியவாதி புலிமோகன், மாணவர் கழகத்தின் மேட்டூர் திவாகர், யாதவன், பாரதி உள்ளிட்ட கழகத் தோழர்கள்பங்கேற்றனர்.

உடுமலையில் :  சமுக நீதிக்கு எதிரான  உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து கண்டன ஆர்ப் பாட்டம் உடுமலையில் 18-01-2019 வெள்ளி மாலை 5மணியளவில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின்  தலைமைக் குழு உறுப் பினர் மடத்துக் குளம் மோகன், தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் காசு நாகராஜ், கொங்கு ஆய்வு நடுவம் ரவி, திருப்பூர் தனபால் ராமசாமி, ஆதித் தமிழர் பெரியார் தாசன், அரிதாசு (ஒன்றிய செயலாளர்), ஆனந்த் (நகர தலைவர்), பிரபு, தினேசு (தமிழ்நாடு மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர், சபரி (தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர், திராவிடர் தமிழர் கட்சி), தங்கவேலு,  மடத்துகுளம் கணக்கன், சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னையில் : உயர்சாதிகள் பலனடையும் வகையில் மோடி அரசினால் சட்டமாக்கப்பட்டுள்ள பொருளாதார அடிப்படையிலான 10ரூ இடஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் 19-01-2019 அன்று மாலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன முழக்கங்களுடன் துவங்கிய ஆர்ப்பாட் டத்தில் திராவிடர் கழகத்தின் தோழர் அருள்மொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் ஆளூர் ஷா நவாஸ், டிசம்பர் 3 இயக்கத்தின் தோழர் தீபக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர் மல்லை.சத்யா, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள் முருகன், தமிழர் விடுதலை கழகத்தின் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தோழர் உமர் பாரூக், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன், மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் குணங்குடி ஹனீஃபா, இறுதியாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி  நோக்கத்தை அம்பலப்படுத்தி கண்டன உரையாற்றினர்.

பெரியார் முழக்கம் 24012019 இதழ்

You may also like...