Author: admin

காங்கிரஸ் ஒழிந்து விட்டதா?

காங்கிரஸ் ஒழிந்து விட்டதா?

  ஏன் அபேட்சகரை நிறுத்தவில்லை ஜஸ்டிஸ் கட்சியில் காலியான இரண்டொரு சென்னை சட்டசபை ஸ்தானங்களுக்கு அபேட்சகரை நிறுத்தாததால் ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்து போய் விட்டதென்றும் அதற்கு நாட்டில் சிறிதும் செல்வாக்கில்லை என்றும் காங்கிரஸ்காரர்களும் காங்கிரசின் பேரால் வாழும் பத்திரிகைகளும் செய்த விஷமப் பிரசாரத்துக்கு எல்லை இல்லை. சில பாமர மக்கள் இதை நம்பிக் கொண்டும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். அப்பொழுது “பகுத்தறிவு’ அதற்குத் தக்க பதில் புள்ளி விபரத்தோடு எழுதியிருந்தது. ஐயோ பாவம்! இந்த விஷமப் பிரசாரம் நடந்து 8 நாள் கூட ஆகவில்லை. இப்போது காங்கிரஸ் ஒழிந்து விட்டதா? நாட்டில் காங்கிரசுக்கு செல்வாக்கு இருக்கிறதா? என்று கேட்கக் கூடிய காலம் வந்துவிட்டது. என்னவென்றால் சமீபத்தில் காலியாகும் சென்னை நகரசபை ஸ்தானங்களுக்கு காங்கிரஸ் அபேட்சகர்களை நிறுத்துவதில்லை என்று தீர்மானம் செய்துவிட்டதாம். இது எல்லா பார்ப்பனப் பத்திரிகைகளிலும் காணப்படுகிறது. ஆகவே எந்த ஸ்தாபனமும் சமய சந்தர்ப்பம் சௌகரியம் ஆகியவை களை கவனித்துத்...

இந்தியாவுக்கு ஆங்கிலம் “”வரப்பிரசாதம்”

இந்தியாவுக்கு ஆங்கிலம் “”வரப்பிரசாதம்”

  தேசீய  வாதிகளுக்குப்  புத்தி  முளைக்கிறது ஹிந்தி  பக்தர்கள்  என்ன  செய்யப்  போகிறார்கள் மிஸஸ்  சரோஜினி  தேவியின்  பேச்சு தேசீயத் துரோகி இந்தியாவுக்குப் பொதுப் பாஷையாக ஆங்கிலம் வழங்கி வருகிறது. ஆங்கில அரசாங்கத்தார் செய்த நன்மையில்  இதுவொன்று. அவர்கள் நமது நாட்டிற்கு வந்திராவிட்டால் இது பொதுப் பாஷையாக ஆகி இருக்க மாட்டாது. ஆங்கிலங் கற்றதினால் நமது சமுதாயத்திலே சில மாறுபாடுகள் தோன்றின. ஜாதிப் பைத்தியம்  வேற்றுமை கொஞ்சம் அகலத் தொடங்கியது. மூடநம்பிக்கைகளின் பயனாய் வயிறு வளர்க்கும் கூட்டம் தவிர மற்றவர் களிடையில் கொஞ்சம் கொஞ்சம் மூடநம்பிக்கை ஒழிய ஆரம்பித்தன. பழக்க வழக்கங்கள் சிறிது சிறிது மாற ஆரம்பித்தன. சகோதரத்துவத்தைப் பற்றி வாயளவிலாவது பேசும்படியான நிலை ஏற்பட்டது. நடை உடை பாவனைகளிலும் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டு வந்தது. அன்றியும் மக்களுக்குள் சுதந்திர உணர்ச்சி தோன்றவும், தாழ்த்தப் பட்டவர்கள் விழித்தெழவும், பெண் மக்கள் கர்ஜனை செய்யவும், பல துறைகளிலும், சீர்திருத்தக்காரர்கள் தோன்றவும், இந்திய சமுதாயத்தையே...

சரணாகதி மந்திரிகள் மைனர் விளையாட்டு

சரணாகதி மந்திரிகள் மைனர் விளையாட்டு

  1938-39வது வருஷத்துக்கு பொக்கிஷ மந்திரியும் முதன் மந்திரியுமான கனம் ஆச்சாரியார் “சர்ப்ளஸ்” பட்ஜெட் தயார் செய்து விட்டதை காங்கரஸ் அபிமானிகளெல்லாம் பாராட்டுகிறார்கள். “பட்ஜெட் என்றால் இதுதான் பட்ஜட். இந்த பட்ஜெட்டே காங்கரஸ் பட்ஜெட் என்று சொல்லக்கூடிய அம்சங்கள் வாய்ந்திருக்கிறது” என ஒரு காங்கரஸ் பத்திரிகையும் பரவசத்துடன் கூறுகிறது. புதிய வருஷத்திலும் விவசாயிகள் கடன் பளுவைக் குறைத்தல், கிராமாந்தர ஜல வசதிக்காக தனிநிதி ஏற்படுத்துவதற்காக 15 லட்சம் ஒதுக்கி வைத்தல், விவசாயக் கடன் மசோதாவின்படி குறையக்கூடிய கடன்களைக் கொடுத்துத் தீர்ப்பதற்காக 50 லட்சம் ஒதிக்கிவைத்தல், கால்நடை மேய்ச்சல் கட்டணத்தை சரிபாதியாகக் குறைத்தல், சித்தூர் கடப்பை ஜில்லாக்களில் மதுவிலக்குச் செய்தல் முதலிய புண்ணிய கைங்கரியங்களைச் செய்த பிறகும் புதுவரிகள் போடாமல் மிச்சம் ஏற்படும் முறையில் கனம் ஆச்சாரியார் பட்ஜெட் தயார் செய்திருப்பதைப்பார்த்து சாமானிய மக்கள் மயங்கத்தான் செய்வார்கள். புகழத்தான் செய்வார்கள். ஆனால் பட்ஜெட்டை சிறிது ஊன்றி நோக்கினால் மிச்ச மேற்படும் பட்ஜெட் தயார்...

சிவில் கடனுக்கு ஜெயிலா?

சிவில் கடனுக்கு ஜெயிலா?

  ஆண்பிள்ளை பட்ட கடனுக்கு பெண்டுபிள்ளை பட்டினி கிடப்பதா? கடன்பட்டு கொடுக்க முடியாமல் போய்விட்டவர்களை சிவில் ஜெயிலில் வைக்கும் முறை அனாகரீகமானதும், மிக்க அனியாயமானதுமான காரியம் என்று இதற்கு முன் பலமுறை எழுதி இருக்கிறோம். ஜெயில் என்று சொல்லப்படுவது ஏதாவது ஒரு குற்றம் செய்து தண்டனை அடைந்தவர்களுக்கே உரியதாகும். அப்படிக்கின்றி உலக வாழ்க்கையில் வியாபாரம், விவசாயம், தொழில் முறை முதலிய காரியங்களுக்கு இருதரத்தாரும் லாபத்தை உத்தேசித்து செய்யப்படும் வரவு செலவுகளில் துண்டு விழுந்து கடன் கொடுக்காமல் போய்விட்டால் அதற்காக ஒருவனை ஜெயிலில் வைப்பது என்பது எந்த விதத்தில் நியாயமானது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்து முஸ்லீம் சமூகத்தில், ஏன் ஜர்மனி ஆரிய சமூகத்திலும், ஆண் பிள்ளை வெளியில் சென்று பாடுபட்டு பணம் கொண்டுவர  வேண்டியதும், பெண் பிள்ளை சமையலறையையும், படுக்கை வீட்டையும் அலங்கரித்துக் கொண்டிருந்து புருஷனுடன் கூடி பிள்ளைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டிருக்க வேண்டியதும்தான் தர்மம் என்றும், சில வகுப்புப் பெண்கள்...

ஒரு தொல்லை ஒழிந்தது  மறு தொல்லையை ஒழிக்க தயாராயிருங்கள்

ஒரு தொல்லை ஒழிந்தது மறு தொல்லையை ஒழிக்க தயாராயிருங்கள்

  காங்கரசுக்காரர்கள் பதவிக்கு வந்தது முதல் மனித சமூகத்துக்கும் அவர்களது முன்னேற்றத்துக்கும் பலவித தொல்லைகள் விளைவித்து முட்டுக்கட்டை போட்டு நாட்டை ஆரம்பகால காட்டுமிராண்டித் தன்மைக்கு கொண்டு போக வேண்டுமென்றே மனப்பூர்வமாய் பாடுபட்டு வருவதை அவ்வப்போது வெளியிட்டு வந்திருக்கிறோம். அவற்றுள் மிக்க அவசரமாகவும், அவசியமாகவும், கவனித்துப் பரிகாரம் தேடப்படவேண்டிய விஷயங்கள் மூன்று. அவையாவன 1. சட்டசபையில் வந்தே மாதரப் பாட்டுப்பாடுவது 2. கல்வித்துறையில் ஹிந்தி பாஷையை நம் மக்களுக்குக் கட்டாயமாகப் புகுத்துவது 3. காந்தியாரின் கல்வித் திட்டம். இம்மூன்றும் மனித சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் கேடானது என்பதற்காக எடுத்துக்காட்டி எதிர்த்து வந்ததோடு அவ்வெதிர்ப்பை காங்கரஸ் தலைவர்கள் லòயம் செய்யாததால் இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் கேட்டிற்கு உள்ளாகும் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி காங்கரஸ்காரர்களே கற்றுக் கொடுத்த பாடமாகிய சண்டித்தனத்தையும் காலித்தனத்தையும் கைக் கொண்டாவது தப்பித்துக்கொள்ள வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்து தீர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இதை அறிந்த காங்கரஸ்காரர்கள்...

சம்பளத்தைப் பற்றி சர்க்காருக்கு ஏன் இவ்வளவு கவலை

சம்பளத்தைப் பற்றி சர்க்காருக்கு ஏன் இவ்வளவு கவலை

  வரி கட்ட முடியவில்லை என்கின்ற கூச்சல் பொதுவாக எல்லா வகுப்பு மக்களிடமிருந்தும் கிளம்பிக் கொண்டே இருக்கிறது. இந்திய சட்டசபையிலும் மாகாண சட்டசபையிலும் ஜனப்பிரதிநிதிகள் என்பவர்கள் சகல வித வரிகளையும் குறைக்க வேண்டும் என்று கூப்பாடு போட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். சர்க்காராரும், “”ஒவ்வொன்றையும் அனுதாபத்தோடு கவனித்துத் தக்கது செய்கிறோம்” என்று சொல்லிக் கொண்டே வருகிறார்கள். சில இனத்தில் குறைப்பதாகவும் ஒத்துக் கொள்ளுகிறார்கள். இது ஒருபுறமிருக்க மற்றொரு புறத்தில் செலவுக்குப் பணம் போதவில்லை என்று நெருப்புப் பெட்டி போன்றவைகளுக்குப் புதிய வரிகளும் போடுகிறார்கள். காலணா கார்டை முக்காலணாவும், அரையணா கவர் ஒன்றே காலணாவும் ஆக்கினார்கள். இதுவும் தவிர விளை பொருள்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்கின்றது என்பதை சர்க்காரே ஒப்புக்கொண்டு உணவுப் பொருள்கள் மீதும் வரி போட வேண்டுமென்று கருதுகின்றார்கள். இவ்வளவும் அல்லாமல் மக்கள் நலனுக்காக செய்ய வேண்டிய சுகாதாரம், கல்வி, போக்கு வரவு சாதனங்கள், நீதி இலாக்கா ஆகியவை களுக்கு செய்ய...

அன்னிய அரிசிக்கு வரி விதிப்பது அனியாயம்

அன்னிய அரிசிக்கு வரி விதிப்பது அனியாயம்

  அன்னிய அரிசிக்கு வரி போடுவதனால், அரிசி விலை உயர்ந்து விடும் என்றும், அதனால் ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கஷ்டம் ஏற்படும் என்றும், நாம் சென்ற வாரம் விரிவாக எழுதியிருந்தோம். அன்னிய அரிசிக்கு வரி விதிக்கப் போகிறார்கள் என்ற விஷயம் தெரிந்தவுடனேயே அரிசியின் விலை மூட்டைக்கு 2 ரூபாய் ஏறி விட்டது. தொழிலாளிகளுக்கும் ஏழைகளுக்கும் இப்பொழுதே கஷ்ட காலம் ஆரம்பித்துவிட்டது. 21.2.35ல் சென்னையில், இந்திய அலுமினியம் சங்கத் தொழிலாளர்கள் ஆதரவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னிய அரிசிக்கு வரி விதிக்கக் கூடாதென்றும் அன்னிய அரிசிக்கு வரி விதிக்கும்படி இந்திய சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் பணக்காரர்களின் நன்மையை மாத்திரம் கருதி அரிசிக்கு வரி விதித்து இறக்குமதியைத் தடுக்க வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானத்தைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். 20.2.35ல் கூடிய சென்னை மாகாணத் தொழிற் கட்சியின் கமிட்டிக் கூட்டத்திலும் அன்னிய அரிசிக்கு வரி விதிப்பதைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். மற்ற இடங்களில் உள்ள தொழிலாளர்களும், சுயமரியாதைக்காரர்...

தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது

தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது

ஆரியர்கள் இந் நாட்டுக்கு வந்து குடியேறுவதற்கு முன் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றியும், அவர்களது மதம், தெய்வ வழிபாடு என்பவைகளின் மாதிரியைப் பற்றியும், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றபடி பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம்  பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்தவ மதத்தையுமே ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம். இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து வருவதாகக் காணப்படும் கோஷா முறை என்னும்படியான பெண்களுக்கு மூடி இடும் கொடுமை இல்லாமல் அவர்கள் தாராளமாய் ஆண்களைப் போல் வெளியில் ஊசலாடவும், உலக விவகாரத்தில் ஆண்களைப்போல் கலந்து கொள்ளவுமான முறை இருந்திருக்குமானால் இன்றைய “”வைதீகத்” தமிழ் மக்கள் வேண்டும் சீர்திருத்தங்கள் உள்பட சகல அபிலாசைகளுக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் இடம் இருக்கின்றன என்று சொல்லலாம். சுயமரியாதைக்காரர்கள் கோரும் மாற்றமும் திருத்தமும் அதில் பெரிதும் இல்லையானாலும் இன்று ஆரியர்களை வெறுக்கும் தமிழ் மக்களுக்கு தாராளமாய் இடமிருக்கின்றது....

பானகல் ராஜா வாசகசாலை ஆண்டுவிழா  மேனாட்டு வாசகசாலை நிலைமை

பானகல் ராஜா வாசகசாலை ஆண்டுவிழா மேனாட்டு வாசகசாலை நிலைமை

  அன்புள்ள தோழர்களே! இன்று இங்கு பானகல் இலவச வாசகசாலையின் முதலாவது ஆண்டுவிழாவிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்களித்ததற்காக இதன் நிர்வாகிகளுக்கும், அங்கத்தினர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த ஆண்டு விழாவிற்கு இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வூர் பிரமுகர்கள் எல்லோரும் இங்கு விஜயமாய் இருப்பதைப் பார்க்க இவ்வாசகசாலை மிகுதியும், செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்றே கருதுகின்றேன். பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கு இம்மாதிரி வாசகசாலைகள் பெரிதும் அவசியமானதாகும். பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவதொரு விஷயத்தில் விளக்கத்தையும் தான் உண்டாக்க உதவும். ஆனால் வாசகசாலை என்பது பொது அறிவு விளக்கத்தையும் சகல விஷயங்களிலும் ஞானத்தையும் உண்டாக்கும். நல்ல முறையில் அமைக்கப்படும் வாசகசாலையும், புத்தகசாலையும் மனிதர்களை சகல விஷயங்களிலும் ஞான பண்டிதர்களாகவும் அனுபவ ஞானமுடையவர் களாகவும் ஆக்கிவிடும். நம் நாட்டில் பொது உணர்ச்சியின்மீது ஏற்படுத்தப்படும் வாசகசாலை, புத்தகசாலை மிகக் குறைவென்றே சொல்லலாம். நம் நாட்டில் ஒரு புத்தகசாலை இயக்கம் இருப்பதாகவும், அதற்கு...

அனியாயம்!                 அனியாயம்!!

அனியாயம்!                 அனியாயம்!!

  அரிசிக்கு  வரி  போடுவது அனியாயம்!!! காங்கிரஸ்காரர்கள்  கூப்பாட்டுக்கு  பயந்து  இந்திய  சர்க்கார்  அரிசிக்கு  வரி  போடப்போகிறார்களாம்.  இதைத்  தொழிலாளிகளும்,  சு.ம.  சங்கங்களும்  கண்டித்து அரிசிக்கு வரி கூடாதென்று தீர்மானித்து வைசிராய்க்கு  அனுப்பவேண்டுகிறோம். குடி அரசு  பெட்டிச் செய்தி  17.02.1935

காங்கிரஸ் கூத்து

காங்கிரஸ் கூத்து

  வாக்குறுதிகள் தேர்தல் சூழ்ச்சியா? இனியும் பொது ஜனங்கள் ஏமாறப் போகிறார்களா? தேர்தல் காலத்தில் காங்கிரஸ்காரர்கள் வானத்தை வில்லாக வளைக்கிறோம், மணலைக் கயிறாகத் திரிக்கிறோம், வெள்ளைக்கார அரசாங்கத்தை அப்படியே மூட்டை முடிச்சுகளுடன் கப்பலேற்றி விட்டுத் தோழர் ராஜகோபாலாச்சாரியாரை கவர்னர் ஜெனரலாகவும், தோழர் சத்தியமூர்த்தி போன்றவர்களைக் கவர்னர்களாகவும் நியமிக்கப் போகிறோம் என்றெல்லாம் உளறிக் கொட்டினார்கள். (இணிணண்tடிtதtடிணிணச்டூ அண்ண்ஞுட்ஞடூதூ) அதாவது ஜனநாயக  சபை கூட்டி அதன் மூலம் இந்திய சுயராஜ்யத் திட்டத்தை ஏற்படுத்தப்  போவதாகவும், தற்பொழுது பார்லிமெண்டாரால் கொடுக்கப் போகும் சீர்திருத்தத்தை அடியோடு நிராகரிக்கப் போவதாகவும் வகுப்புத் தீர்ப்பு விஷயத்தில் மாத்திரம் நடுநிலமை வகிக்கப் போவதாகவும் பொது ஜனங் களிடம் கூறி ஓட்டு வாங்கினார்கள். அரசியல் சீர்திருத்தத்தை நிராகரிப்பதும், ஜனநாயக சபை கூட்டுவதும் தவிர வேறு காரியங்களில் காங்கிரஸ்காரர்கள் தற்பொழுதைய சட்டசபையில் தலையிடப் போவதில்லை என்றுகூடக் கூறினார்கள். ஆனால் சென்ற 5, 6, 7ந் தேதிகளில் இந்திய சட்டசபையில் நடந்த விவாதங்களிலிருந்தும், 7 ந்...

காங்கரசும் சுயமரியாதையும்  மறுபடியும் வாக்குறுதி நாடகம்

காங்கரசும் சுயமரியாதையும் மறுபடியும் வாக்குறுதி நாடகம்

  காங்கரஸ்காரர்கள் அரசியலில் மத உணர்ச்சியைப் புகுத்தி புராண முறையில் பிரசாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வெற்றி பெற்று மானத்தை இழந்து மனிதத்தன்மையைப் பறிகொடுத்து மந்திரி பதவி பெற்றார்கள் என்பது நம் வாசகர்கள் யாவரும் ஏற்கனவே உணர்ந்த சேதியாகும். காங்கரஸ்காரர்களுக்கு பகுத்தறிவாவது சுயமரியாதை உணர்ச்சியாவது இருந்திருந்தால் அவர்கள் அவ்வளவு பெரும்பான்மையான ஓட்டுகளால் வெற்றிபெற்றிருந்தும் அவ்வளவு மெஜாரிட்டியாக அங்கத்தினர்கள் வந்திருந்தும் மந்திரி பதவி பெறுவதற்கு இவ்வளவு பெரிய சரணாகதி அடைந்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருந்திருக்காது. மெஜாரிட்டி பெற்றுவிட்ட ஆணவத்தால் அரசியல் சட்டத்தைப் படித்துப் பார்க்காமலும் பின் விளைவை யோசித்துப் பார்க்காமலும் கவர்னரிடம் பயனற்ற வாக்குறுதி கேட்கப் போய் தாங்கள் மானக்கேடான வாக்குறுதி கொடுக்க ஏற்பட்டதோடு வைஸ்ராய் பிரபுவின் சாட்டை அடி வாங்கிக் கொண்டு சரணாகதி அடைந்து பதவி ஏற்க வேண்டியதாயிற்று. பதவி ஏற்றது முதல் வந்தே மாதரம் பிரார்த்தனை, ஒன்றரைக் கோடி ரூபாய் கடன், பழய கடன் ஏற்பு முதல்...

ஏழைகளை வஞ்சிப்பதே

ஏழைகளை வஞ்சிப்பதே

  காங்கிரஸ் தொண்டு சென்னை மாகாணத்து மிராசுதாரர்களுக்கு பூமி வியாபாரத்தில் ஆதாயமில்லாமல் போய்விட்டதாம். அதனால் மிராசுதாரர்கள் தங்கள் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் நில வரியைக் குறைக்க வேண்டும்  என்று “”மகாநாடுகள்” கூட்டி சர்க்காரைக் கேட்கிறார்கள். சர்க்காராருக்கு தாங்கள் வைத்துக் காப்பாற்றும் உத்தியோகஸ்தர் களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணம் வேண்டும். ஆதலால் நிலவரியைக் குறைக்க முடியாது என்கின்றார்கள். இது விஷயமாய் ஒரு போலி யுத்தம் சுமார் 2, 3 வருஷகாலமாகவே நடந்து வருகின்றது. காங்கிரசுக்காரர் என்பவர்கள் இப்போது இந்திய சட்டசபையில் சிறிது “”ஆதிக்கம்” பெற்றவுடன் இதற்கு ஒரு மத்தியஸ்தர் வழியைக் கண்டுபிடித்து மிராசுதாரர்களுக்கு அதிக லாபம் வரும்படியாகவும் சர்க்காருக்கு தங்கள் உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தைக் குறைக்காமல் இருக்கவும், வேண்டுமானால் இன்னும் அதிக சம்பளம் கொடுக்கக்கூட வசதி இருக்கும்படியாகவும் செய்து இருக்கிறார்கள். அது என்னவென்றால்  அதுதான் தொழிலாளிகள், கூலிக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய ஏழை மக்கள் வாயிலும், வயிற்றிலும் மண்ணைப் போட்டு, அவர்களுடைய பட்டினியால் மிராசுதாரர்கள் நஷ்டத்தையும்,...

 பார்லிமெண்டில் ராஜிநாமா விஷயம்

 பார்லிமெண்டில் ராஜிநாமா விஷயம்

  பீஹார், ஐக்கிய மாகாண மந்திரிகள் ராஜிநாமா விஷயமாக காமன்ஸ் சபையில் ஆக்டிங் உதவி இந்தியா மந்திரி லார்டு விண்டர்ட்டன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் சாரம் மூன்றாவது பக்கத்தில் வெளிவருகிறது. அரசியல் கைதிகள் விடுதலை காங்கரஸ் வேலைத் திட்டத்தில் ஒரு முக்கியமான அம்சம் என்பதை லார்டு விண்டர்ட்டன் மறுக்கவில்லை. “மாகாணத்தின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் பங்கம் ஏற்படாத முறையில் ஏற்பாடு செய்து திருப்தி செய்து கொண்டு, ஒவ்வொரு கைதியின் நிலைமையையும் தனித்தனியாக யோசித்து அத்தகைய கைதிகளை விடுதலை செய்வதென்ற மந்திரிகளின் யோசனையை, கவர்னர் ஜெனரலுடன் கலந்து ஆலோசித்தபின் கவர்னர்கள் ஒப்புக்கொண்டனர் என்றும் அதன்படி ஐக்கிய மாகாணத்தில் 14 ராஜீயக்கைதிகளும் பீஹாரில் 15 ராஜீயக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் இன்னும் ஐக்கிய மாகாணத்தில் 15 பேர்களும் பீஹாரில் 26 பேர்களும் விடுதலையாகாமல் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் சிலர் கொடூரமான பலாத்காரக் குற்றங்கள் செய்தவராகையினால் அவர்கள் விஷயத்தை தனித்தனியாகப் பரிசீலனை செய்து முடிவு...

காங்கிரஸ் வாக்குறுதிகள் எங்கே?

காங்கிரஸ் வாக்குறுதிகள் எங்கே?

  வகுப்பு தீர்ப்புக்கு ஆதரவு சமஷ்டி அரசாட்சி வேண்டாம் இந்திய சட்டசபையில் பார்லிமென்ட் கமிட்டி அறிக்கையைப் பற்றி மூன்று தினங்கள் தொடர்ந்து விவாதம் நடந்தது. காங்கிரசின் சார்பில் þ அறிக்கையை ஒப்புக் கொள்ள முடியாதென்று கொண்டு வந்த திருத்தத் தீர்மானமும், வகுப்புத் தீர்ப்பில் நடுநிலமை வகிப்பதாகக் கொண்டு வந்த திருத்தத் தீர்மானமும் ஏராளமான ஓட்டுக்களால் தோற்கடிக்கப்பட்டன. வகுப்புத் தீர்ப்பை அங்கீகரிப்பதாகவும், மாகாண சுயாட்சித் திட்டத்தைத் திருத்தி அமைப்பதோடு சமஷ்டி சர்க்கார் முறையை விட்டுவிட்டு இந்திய சர்க்காரில் பொறுப்பாட்சியை ஏற்படுத்த வேண்டு மென்பதாகவும் தோழர் ஜின்னா அவர்களால் கொண்டு வரப்பட்ட திருத்தத் தீர்மானங்கள் ஏராளமான ஓட்டுக்களால் வெற்றி பெற்றன. ஜனநாயக சபை கூட்டி இந்திய சுயாட்சியைப் பற்றித் தீர்மானம் செய்யப் போவதாகத் தேர்தல் காலத்தில் சரமாரியாக வாக்குறுதி கூறிய காங்கிரஸ்காரர் ஒருவரேனும், இந்த விவாதத்தின்போது ஜனநாயக சபை கூட்டும் விஷயமாக ஒரு எழுத்தைக்கூட உச்சரிக்கவில்லை. பார்லிமெண்ட் கமிட்டி அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறிச் சென்ற...

இதற்குப் பரிகாரமென்ன?

இதற்குப் பரிகாரமென்ன?

  இந்நாட்டில் இன்று நடைபெறும் தேசீயம் பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் போராட்டமென்றும் அப்போராட்டமானது ராமாயணக் கதையில் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் ஏற்பட்ட போரில் ஆரியர்கள் மிருகப்பிராயமுள்ள காட்டு மனிதர்களான இழிகுல திராவிட மக்களை பல சூழ்ச்சிகளால் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு அனுமார் (குரங்கு) என்று பெயர் கொடுத்து திராவிட கூட்டத்தையும் அவர்களது அரசர்களையும் ஒழித்தது போல் இன்றைய பார்ப்பனர்கள் திராவிட மக்களில் மனிதத் தன்மையும் மானாபிமானமும் அற்ற சில இழிமக்களை பல சூழ்ச்சிகளால் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு மற்றத் தமிழ் மக்களை அழுத்தி ஆதிக்கம் செய்ய முயற்சித்து வருகிறார்கள் என்றும் பல தடவை தக்க புள்ளி விபரம், ஆதாரம் ஆகியவைகளுடன் எழுதி வந்திருக்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம் பழஞ்சரித்திரம் என்னும் புராணங்களில் தேவர்கள் – ராக்ஷதர்கள் சண்டை என்றும் தேவர்கள் – அசுரர்கள் சண்டை என்றும் காணப்படுவதை சகல விதத்தும் ஒத்தது போலவே இன்று திராவிடர் என்றும்...

சேலம் ஜில்லா பள்ளர் சமூக  மகாநாடு

சேலம் ஜில்லா பள்ளர் சமூக மகாநாடு

  தோழர்களே! ஜாதி வகுப்பு சம்பந்தமான இம்மாதிரி மகாநாடுகள் கூட்டப்படுவது தேசாபிமானத்திற்கு விரோதமானதென்று சில தேசீயவாதிகளும், தேசபக்தர்களும் குறை கூறுகிறார்கள். நான் அவர்களை ஒன்று ஞானமில்லாதவர்களாக இருக்க வேண்டும், அல்லது தேசீயத்தின் பேரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பழமை விரும்பி, சோம்பேறிக் கூட்டத்தினராக இருக்க வேண்டும் என்றே கூறுவேன். இன்று இந்நாட்டில் நூற்றுக்கணக்கான ஜாதிகள் இருப்பதும், அவர்களுக்குள் ஒன்றுக்கொன்று மலையும் மடுவும் போன்ற வித்தியாசங்களும் ஒருவரை ஒருவர் கொடுமைப்படுத்துவதும், ஒருவர் உழைப்பில் ஒருவர் வாழ்வதுமான அக்கிரமங்கள் இன்று இருந்து வருகின்றது என்பதையும் மறைக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இக் கொடுமைகள் எவ்வளவு காலமாக இருந்து வருகிறது. இதையொழிக்க இது வரையில் யார் முன்வந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். தாங்கள் வேறு ஜாதி நீங்கள் வேறு ஜாதி; தங்களுக்கு வேறு உரிமை, வேஷம் என்று எண்ணாத தேசபக்தர்களோ, மகாத்மாக்களோ யாராவது இருக்கின்றார்களா என்பதை யோசித்துப் பாருங்கள். இந்நிலையில் அவரவர்களது கஷ்டங்களுக்கு அவரவர்கள் பரிகாரம்...

தேசீய காங்கரஸ்  கலப்புமணப் பிறவி

தேசீய காங்கரஸ் கலப்புமணப் பிறவி

தலைவரவர்களே! தோழர்களே! இந்த ஊருக்கு நாங்கள் ஈ.வெ.ரா. நாகம்மாள் ஞாபகார்த்த வாசக சாலையின் ஆண்டு விழாவுக்கு வந்திருந்த சமயத்தில் எங்களை மிக ஆடம்பரத்துடன் வரவேற்று உபசரித்து பல வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளித்ததுடன் இன்று இரவு சமீபத்தில் நாங்கள் கண்டிராத இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டி எங்கள் அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்ல அவகாசமளித்ததற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நான் இன்று இரவு இங்கு காங்கரசு, ஹிந்து முஸ்லிம் சமூக ஒற்றுமை, அரசியலும் காங்கரசும் என்பவை பற்றி பேசுவேன் என்பதாக துண்டு விளம்பரத்தில் விளம்பரப்படுத்தி இருக்கிறீர்கள். எனக்கு உடல் நலம் சரியாய் இல்லை. இந்த வாரத்தில் மோட்டார் காரில் மாத்திரம் சுமார் 2000 மைல் கிராமம் கிராமமாய் சுற்றி அலைந்திருப்பதுடன் மதராசில் இருந்து தூத்துக்குடிக்கு காரிலேயே வந்திருக்கிறேன். அது மாத்திரமல்லாமல் இன்று இரவு இப்பொழுதே புறப்பட்டு காரிலேயே ஈரோடு போய் சேர வேண்டியவனாய் இருக்கிறேன். ஏனெனில் நாளை காலை 10...

ஜஸ்டிஸ் கட்சி வேலைத் திட்டம்

ஜஸ்டிஸ் கட்சி வேலைத் திட்டம்

  ஜஸ்டிஸ்  கட்சி  தலைவர்  பொப்பிலிராஜா  அவர்களும்  மற்றும்  சில  ஜஸ்டிஸ்  கட்சி  பிரமுகத்  தலைவர்களும்,  தோழர்கள்  ஆர்.கே.  ஷண்முகம்,  ஈ.வெ. ராமசாமி,  ஙி.க.அ. சௌந்திரபாண்டியன்  ஆகிய  சுயமரியாதை  இயக்கப்  பிரமுகர்களும் சென்ற வாரம் மூன்று நான்கு நாள் தொடர்ந்து  பொப்பிலிராஜா  வீட்டில்  ஜஸ்டிஸ்  கட்சி  வேலைத்  திட்டத்தைப்  பற்றியும்,  பத்திரிகைகளைப்  பற்றியும்,  தோழர்  ஈ.வெ. ராமசாமி  கொடுத்திருந்த வேலைத்  திட்டத்தைப்பற்றியும்,  சுயமரியாதை  இயக்கத்துக்கும்  ஜஸ்டிஸ்  கட்சிக்கும்  உள்ள  சம்பந்தா  சம்பந்தத்தைப்  பற்றியும்  கலந்து  ஆலோசித்தார்கள். சில  வாசக  திருத்தத்தோடு  தோழர்  ஈ.வெ.ரா.  தீர்மானங்களை  ஒப்புக் கொண்டு  நிர்வாக  கமிட்டிக்கு  வைப்பதாக  முடிவு  செய்திருக்கிறது.  அடுத்த  மாதம்  முதல்  மாதம்  ஒரு  ஜில்லா  மகாநாடு  கூட்டுவதென்றும்,  ஜஸ்டிஸ்  கட்சியின்  வேலைத்  திட்டத்தையும்  அதற்குள்ளாகவே  முடிவு  செய்து  அம்மகாநாடுகளில்  பிரசாரம்  செய்து  தீர்மானிக்கச்  செய்ய  வேண்டும்  என்றும்  தீர்மானித்தார்கள். தோழர்  ஈ.வெ. ராமசாமி  தெரிவித்தது  போல்  தமிழ்  தெலுங்கு  முதலிய சுய பாஷை...

விவசாயக் கடன் குறைப்பு மசோதாவுக்கு வைஸ்ராய் அனுமதியளிக்கக்கூடாது

விவசாயக் கடன் குறைப்பு மசோதாவுக்கு வைஸ்ராய் அனுமதியளிக்கக்கூடாது

  காங்கரஸ் மந்திரிகள் என்னும் சரணாகதி புரோகிதக் கூட்ட ஆதிக்க மந்திரிகள் பொதுஜனங்களை ஏமாற்றுவதற்கு ஆகவும் பாமர மக்களிடம் ஓட்டு வேட்டை ஆடுவதற்கு ஆகவும் “விவசாயிகள் கடன் விடுதலை மசோதா” என்னும் பெயரால் இரு சட்டசபைகளிலும் கூலி மெஜாரிட்டியைக் கொண்டும் கட்சி கட்டுப்பாடு என்னும் அடக்குமுறை மெஜாரிட்டியைக் கொண்டும் சர்வாதிகார முறையில் நிறைவேற்றிக் கொண்டு இருக்கும் மசோதாவானது நடுத்தர விவசாயிகளான பெருவாரியான விவசாயிகளுக்கே பெரும் கேட்டைத் தருவதாய் இருப்பதாலும், பூமிக்குடையோனுக்கும் பூமியை பயிர் செய்வோனுக்கும், கடன் கொடுத்தவனுக்கும் கடன் வாங்கினவனுக்கும், ஒற்றுமையின்மையும் போராட்டமும் தொல்லையும் பொய் கணக்கும் பொய் ஆதார சிருஷ்டியும் செய்து தீரவேண்டிய நிலையில் கொண்டு வந்து விடக் கூடியதாய் இருப்பதாலும், ஏழை விவசாயிகளுக்கு நாணய செலாவணியே இல்லாமல் போய் அக்கிரமக் கடனுக்கே ஆளாக வேண்டிய நிலைமையைக் கொடுக்கக்கூடியதாய் இருப்பதாலும் மற்றும் கொஞ்சம் பூமிகளையுடைய சிறுசிறு விவசாயிகளையும், சிறு மிராசுதார்களையும் விவசாயச் செலவுக்கும் எதிர்பாராத திடீர் சம்பவ குடும்பச் செலவுக்கும்...

ஆத்திரப்பட்டு பயன் என்ன?  ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மார்க்கமல்லாமல் விமோசனமெங்கே?

ஆத்திரப்பட்டு பயன் என்ன? ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மார்க்கமல்லாமல் விமோசனமெங்கே?

  சுயமரியாதை இயக்கமானது நாஸ்திகத்தையும் மதங்கள் ஒழிப்பையும் கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை என்பது பல தடவை விளக்கப்பட்ட விஷயமாகும். ஆனால் சுயமரியாதை மகாநாடுகளில் “மக்கள் சுதந்தரமும் ஒற்றுமையும் சுயமரியாதையும் பெற்று சமூகம் பொருளாதாரம் அரசியல் ஆகிய துறைகளில் சமத்துவமும், சம உரிமையும், விடுதலையும் பெற வேண்டுமானால் மதங்கள் ஒழிக்கப்பட வேண்டும்” என்பதாகவும் இந்தக் கருத்தைக் கொண்டதாகவுமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதுடன் பல சுயமரியாதைத் தோழர்கள் தங்கள் தங்களை பொறுத்த வரையில் ஜாதிமதம் முதலியவைகளை விட்டு விலகி அனுபவத்திலும் அதற்கு ஏற்றதுபோல் நடந்து வருகிறார்கள். இந்தக் கருத்தை அனுசரித்தே இந்த தத்துவத்தை அமுலில் கொண்டுவரவே இந்தியாவில் வெகு காலத்திற்கு முன்னிருந்தே பல பெரியார்கள் முயற்சித்து அதற்கு ஏற்ற பல காரியங்கள் செய்தும் வந்திருக்கிறார்கள். சுமார் 100 வருஷங்களுக்கு முன் வங்காளத்தில் “பிரம்ம சமாஜம்” என்னும் ஒரு ஸ்தாபனத்தை தோற்றுவித்த பெரியார்களும் ஜாதி மதம் ஆகியவை ஏதும் இல்லை என்றும் மக்கள் யாவரும் பிறவியில் சமம்...

புத்தக வியாபாரிகள் கொள்ளை

புத்தக வியாபாரிகள் கொள்ளை

  கல்வி மந்திரி கவனிப்பாரா? தற்காலம் பள்ளிக்கூடங்களில் போதிக்கப்பட்டு வரும் படிப்பின் பிரயோஜனம் அற்ற தன்மையைப் பற்றிக் கல்வி நிபுணர்களும், கல்வியதிகாரி களும், அரசியல்வாதிகளும், சீர்திருத்தக்காரர்களும் ஏகமனதாய் ஒப்புக் கொண்டு வெகு காலமாகவே சீர்திருத்தம் பண்ண வேண்டும் என்று கூச்சலிட்டு வருகிறார்கள். நாமும் பல கூட்டங்களில் தற்காலக் கல்வி முறையைக் கண்டித்துப் பேசி வருவதோடுங்கூட பல மகாநாடுகளில் கல்வியைச் சீர்திருத்த வேண்டும் என்றும், மக்களுடைய மூடநம்பிக்கைகள் ஒழியவும், அவர்களுடைய அறிவு விளக்கமுறவும் தகுந்த பாடப் புத்தகங்கள் வெளிவர வேண்டுமென்றும் இந்தப் பத்து வருஷ காலமாகவே தீர்மானங்கள் மூலம் வெளியிட்டிருக்கின்றோம். இப்பொழுது பாடமாக வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் பெரும் பாலும், ஜாதி உயர்வுகளையும் மதச் சண்டைகளையும் தூண்டிவிடக்கூடிய ஒன்றுக்கொன்று முரண்பட்ட மத விஷயங்களையும், அறிவுக்கும் அனுபோகத்துக்கும் ஒத்துவராததும் மக்களுடைய வாழ்க்கையைத் துன்மார்க்க வழியில் செலுத்துவதற்குத் தூண்டக் கூடியதும் ஆகிய புராணக் கதைகளையும் போதிப்பதாகவே இருக்கின்றன என்பதை பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளே  சொல்லிக் காட்டுகின்றார்கள். இதற்கு ஏற்றாற்போல்...

காங்கரஸ் புரட்டு விளக்கம்  காங்கரசில் நான் என்ன செய்ய முடியும்?

காங்கரஸ் புரட்டு விளக்கம் காங்கரசில் நான் என்ன செய்ய முடியும்?

  இப்பவும் காங்கரசில் நான் இல்லை என்று குறை கூறுகிறார்கள். நான் அங்கிருந்தால் தான் என்னவாகிவிடும்? நான் காங்கரசிலிருந்தால் தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்குக் கஷ்டம் குறைந்துபோகும். எல்லோராலும் வெறுக்கப்படுகிற ஹிந்தியை என் வாயைக் கொண்டே “ஹிந்தி நல்லது இந்தியாவெங்கும் அது பொதுப்பாஷையாகத்தானிருக்க வேண்டும்” என்று சொல்லச் செய்து விடுவார். அதற்கு நான் சம்மதித்தால்தான் எனது காங்கரஸ் பக்தி பயன்படும். இதைத் தவிர வேறு என்ன நல்ல காரியம் நடக்கக் கூடும்? சுதந்தரமாகவும் சுயமரியாதையாகவும் ஏதாகிலும் செய்ய முடியுமா? அங்கிருக்கும் மற்ற பார்ப்பனரல்லாதார் யோக்கியதை எப்படி இருக்கிறது? இப்போதையத் தொண்டிலும் அவர்கள் என்னை குற்றம் சொல்லவில்லை, என் சொந்த நாணயத்திலும் குற்றம் சொல்ல அவர்களுக்கு முடிவதில்லை. நாங்களும் தவறாக நடந்து கொள்வதில்லை. அதனாலேயேதான் “சுயமரியாதைக்காரர்கள் எல்லாம் நல்லவர்கள் என்றும் அவர்கள் நம் பக்கத்தில் இருந்தாலும் நன்றாக தொண்டு செய்வார்கள் என்றும் அவர்களும் காங்கரஸிற்கு வரவேண்டுமென்றும் பல தடவை ஆச்சாரியார், சத்தியமூர்த்தியார் மற்றும் பல காங்கரஸ்காரர்...

நீடாமங்கலத்தில் நடந்ததென்ன?  “தினமணி”யில் வந்த மனமறிந்த வஞ்சகப்  பித்தலாட்டப் புரட்டு

நீடாமங்கலத்தில் நடந்ததென்ன? “தினமணி”யில் வந்த மனமறிந்த வஞ்சகப் பித்தலாட்டப் புரட்டு

நீடாமங்கலம் அரசியல் மகாநாட்டில் ஆதிதிராவிடர்கள் பலர் தேசபக்தர்களின் சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு ஆக அடித்துத் துன்புறுத்தி மொட்டையடித்து சாணித்தீர்த்தம் கொடுத்து அபிஷேகம் செய்த விஷயத்தை முன் தெரிவித்திருக்கிறோம். அதற்கு 15 நாள் பொறுத்து ஒரு பொய் அறிக்கை தயாரித்து உதைபட்டு மொட்டை அடிக்கப்பட்ட ஒருவரிடமும் மற்ற சம்பந்தமில்லாத இருவரிடமும் பொய் சொல்லி மிரட்டி பணம் கொடுத்து உட்கார வைத்து போட்டோ எடுத்து வெறும் காகிதத்தில் கையெழுத்து வாங்கி தங்கள் இஷ்டப்படி எழுதிக்கொண்டதை “தினமணி” பிளாக் செய்து அச்சேதியையும் படத்தையும் “சுயமரியாதைக் காரர்களின் புளுகு” என்று தலைப்பிட்டு “தினமணி” பிரசுரித்திருக்கிறது. அதில் ஒரு விசேஷமென்னவென்றால் காங்கரஸ்காரர்களால் மொட்டை அடிக்கப்பட்டு சாணி அபிஷேகம் செய்யப்பட்ட தோழர் தேவசகாயம் என்பவரை மொட்டைத்தலையுடன் அதாவது காங்கரஸ் பக்தர்களான மிராசுதார், பெரிய ஜாதிக்காரர் ஆகியவர்கள் அடித்த மொட்டைத் தலையுடனேயே போட்டோ எடுத்து இருப்பது விளங்குகிறது. இந்தப்படத்தையும் சேதியையும் கண்டவுடன் அதே தோழர் தேவசகாயம் என்பவர் நமக்கு தனது...

கூட்டுறவு மந்திரி  கவனிப்பாரா?

கூட்டுறவு மந்திரி  கவனிப்பாரா?

  ஸ்தாபன நிர்வாகிகளின் அட்டூழியம் எந்த எந்தக் காரியங்கள் ஒழுங்காகவும், திறமையாகவும், நாணய மாகவும் நடக்க வேண்டும் என்கின்ற கவலை அரசாங்கத்துக்கு இல்லையோ, அந்தக் காரியங்களைப் பொது ஜனங்கள் தலையில் போட்டுவிட்டு அவை பொது ஜனங்களால் ஊழலாய் நடத்தப்படுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பது நமது சர்க்காரின் திருவிளையாடலாய் இருந்து வருகிறதே என்று நாம் அனேக முறை சந்தேகிப்பதுண்டு. சில  சமயங்களில் உறுதி கொள்வதுமுண்டு. உதாரணமாக  ஸ்தல  ஸ்தாபனங்கள் விஷயத்தில் அதாவது ஜில்லா, தாலூக்கா போர்ட், முனிசிபாலிட்டி, பஞ்சாயத்து ஆகிய விஷயங்களில் பொது ஜனங்களும், ஓட்டர்களும், பிரதிநிதிகளும் நடந்து கொள்ளும் மாதிரியும்,  அதனால் பொது ஜனங்களின் செல்வமும், நலமும் கொள்ளை போய் பாழாவது பற்றியும் நாம் சுமார் 15 M காலமாகவே வறட்டுக் கூப்பாடு போட்டும், சர்க்காராரும் அனேக விஷயங்களில்  கைப்பிடியாய் பிடித்து கண்ணாடியில் தெரிவதுபோல் உண்மைகள் கண்டும், கட்சி அபிமானம் காரணமாகவும் ஜாதி அபிமானம் காரணமாகவும் அதைப் பற்றியதொரு நடவடிக்கையும் திருத்தப்பாடும்...

“”பகுத்தறிவு”க்கு  2000  ரூபாய்  ஜாமீன்

“”பகுத்தறிவு”க்கு  2000  ரூபாய்  ஜாமீன்

  வாரப்  பத்திரிகையாக  நடத்தி  வந்ததும்  இனி  மாதப்  பத்திரிகை யாகவும்,  காலணா  தினப்  பதிப்புப்  பத்திரிகையாகவும்  நடத்த  உத்தேசித்து  சகல  ஏற்பாடுகளும்  செய்து  வந்ததுமான  “”பகுத்தறிவு”  பத்திரிகைக்கும்  உண்மை  விளக்கம்  பிரசுக்கும்  அரசாங்கத்தார்  29135ல்  2000  ரூஜாமீன்  கேட்டிருக்கிறார்கள்.  ஜாமின்  கட்டி  þ  பத்திரிகைகளை  நடத்துவதற்கு  யோசனைகள்  நடந்து  வருகின்றன. குடி அரசு  பெட்டிச் செய்தி  03.02.1935

ஈரோட்டில் பொதுக்கூட்டம்

ஈரோட்டில் பொதுக்கூட்டம்

  தலைவரவர்களே! தோழர்களே! இங்கு மீட்டிங்குபோட நாங்கள் ஆசைபடுவதில்லை. உள்ளுர் தோழர்களுடன் கலகம் செய்துகொள்ளக்கூடாது என்பதற்காக நாங்கள் போடாமல் இருந்தோம். இந்த 10 நாளாய் அர்பன் பாங்கு தேர்தலை முன்னிட்டு சிலர் தினமும் கூட்டம் போட்டு எங்களை கண்டபடி வைவதும் சிறு பிள்ளைகளிடம் கொடியை கொடுத்து எங்கள் வீட்டிற்கு முன்னால் வந்து நின்று கொண்டு கேவலமாக வையச் சொல்வதும் கல்லு போட சொல்லுவதும் வீதிகளில் நடக்கும் போது எங்கள் பெயர்களைச் சொல்லி வெட்கம் வெட்கம் என்று வையச் சொல்லுவதுமான காரியம் தான் இங்கு என்னை உங்கள் முன் பேசச் செய்தது. இந்த ஊர் அர்பன்பாங்கு ஆரம்பமானது 1911ல் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் தான். நான் தான் முன்னின்று ஆரம்பித்தவன். அந்த பாங்கு பங்குதார் பெயரில் என் பேர் தான் முதலில் இருக்கும். போய் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்குப் பாங்கி நடவடிக்கையில் அக்கரை உண்டு. ஆனால் நான் வேறு பல விஷயங்களில் ஈடுபட்டிருப்பதால்...

“”பகுத்தறிவு”  திருத்தம்

“”பகுத்தறிவு”  திருத்தம்

  சென்றவாரக்  (27135)  குடி அரசு  இதழில்  பகுத்தறிவு  மாதப்  பதிப்புக்குத்  தோழர்  சாமி  சிதம்பரனார்  பிரதான  ஆசிரியராக  இருப்பார்  என்று  எழுதி  இருக்கிறது.  அவர்  உடம்பு  அசவுகரியமாய்  இருப்பதால்  சவுகரியம்  ஏற்படும்  வரையில்,  தற்பொழுது  பிரதான  ஆசிரியராக  ஈ.வெ. ராமசாமி  இருந்து  வருவார்  என்பதையும்,  முடிந்த  வரையிலும்  கட்டுரைகள்  மாத்திரம்  எழுதி  வருவார்  என்பதையும்  தெரிவித்துக்  கொள்ளுகிறோம். குடி அரசு  அறிவிப்பு  03.02.1935

நீடாமங்கல உண்மை

நீடாமங்கல உண்மை

  நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை ஜில்லா 3- வது அரசியல் மகாநாட்டில் ஆதி திராவிட தோழர்கள் சிலர் சாப்பாட்டுப் பந்தியில் கலந்து கொண்டதற்காக அவர்களை துன்புறுத்தி மொட்டையடித்து சாணி ஊற்றிக் கொடுமை செய்து தண்டித்த நடத்தையைப்பற்றி அவர்கள் பெயர்கள் உட்பட நமக்கு கிடைத்த உண்மையான சேதி “விடுதலை” “குடிஅரசு” பத்திரிகைகளில் வெளியாக்கப்பட்டதை வாசகர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் அதை காங்கரஸ் தோழர்கள் கவனித்து சமாதானம் சொல்லாமல் நடந்த விஷயத்தையே அடியோடு மறுத்துக் கூறுவதுடன் அவற்றைப் பொய்யாக்கிக் காட்ட தப்பான வழியில் முயற்சித்து வருவது மிகவும் வெறுக்கத்தக்கதாகும். பொறுப்புள்ள ஆதி திராவிட சமூகப் பிரமுகர்களுங்கூட இவ் விஷயத்திற்காகத் துக்கப்படாமல் பரிகாரம் தேட முயற்சிக்காமல் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு அடியோடு மறைக்க ஆசைப்படுவது மிகமிக வெறுக்கத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான செய்கையாகும். “விடுதலை”யில் இது விஷயமாய் வெளியான சேதிகளுக்கு 15 நாள் பொறுத்து – நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு அடிபட்ட உதைபட்ட மொட்டை அடித்து சாணி...

மூன்று பிரபல பிராமணர்கள் முடிவு

மூன்று பிரபல பிராமணர்கள் முடிவு

  பார்ப்பனர்களுக்கு நெருக்கடியான காலத்தில் உதவி புரிந்து வந்த தோழர் எல்.ஏ. கோவிந்தராகவ  ஐயர், தோழர் எம்.கே. ஆச்சாரியார், டாக்டர் மல்லைய்யா ஆகிய மூன்று பார்ப்பன பிரபலஸ்தர்கள் இந்த வாரத்தில் மரணமடைந்து விட்டார்கள். தோழர் கோவிந்தராகவய்யர் பிரபல வக்கீலாய் இருந்தவர். தோழர் எம்.கே.ஆச்சாரியார் இன்னாட்டுப் பார்ப்பனர்களின் உள்ளத்தைப் பளிங்குபோல் வெளிக்காட்டி வந்தவர். தோழர் மல்லய்யா அவர்கள் பார்ப்பனக் கட்சிக்கு உழைத்தவர். ஆகவே இவர்களது முடிவு வருந்தத்தக்கதாகும். குடி அரசு  இரங்கற் செய்தி  03.02.1935

காங்கிரசின் குலைவு

காங்கிரசின் குலைவு

  நெல்லூர் ஜில்லாவைச் சேர்ந்த தோழர்கள் பனகா கனகம்மா,  வென்னலகண்டி ராகவய்யா இருவரும் ஆந்திர மாகாண காங்கிரஸ் கமிட்டியிலிருந்து விலகிவிட்டார்கள். தோழர் ராகவய்யா உள்ளூர் ஜில்லாக் காங்கிரஸ் கமிட்டியிலிருந்தும் விலகி விட்டார். வெ.முரு. லெக்ஷ்மய்யா ஜில்லா காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி பதவியில் இருந்து விலகினார். எம். கோபால் ராவ்  நகர காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி பதவியிலிருந்து விலகினார். தோழர்கள் ராகவய்யா, லெட்சுமய்யா, கோபால்ராவ் ஆகியவர்கள் தங்களுடைய ராஜினாமாக் கடிதத்தில் காங்கிரசானது பணக்காரர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பாடுபடுகிறது என்றும்,  தொழிலாளர்களின் முன்னேற்றத்தைக் கவனிக்காமல் அலட்சியம் செய்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைப் போன்ற காரணத்தாலேயே வடநாட்டி லிருந்தும் பலர் காங்கிரசிலிருந்து விலகியிருக்கிறார்கள் என்பதையும் ஞாபகப்படுத்துகிறோம். இதிலிருந்து காங்கிரசின் உண்மையான போக்கு இன்னதென்று நன்றாகப் பொது ஜனங்களுக்கு விளங்குமென்று நம்புகிறோம். காங்கிரஸ் ஒன்றே ஏழை மக்களுடைய நன்மைக்கும், தொழிலாளிகளின் உரிமைகளுக்கும் பாடுபடுகிறது என்று சொல்வது பெரும் புரட்டென்று தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே காங்கிரஸ் ஏழை மக்களுடைய...

கடவுள் பற்றிய விளக்கம்

கடவுள் பற்றிய விளக்கம்

    ~subhead என் தொண்டிற்கு இடமுண்டு ~shend சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன். பெரிய பட்டணங்களில் சாதாரணமாகக் கூடும் அளவை விட இது இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே இருக்கிறது. நானோ விஷமிகளால் எவ்வளவோ தூற்றப்பட்டு – ஜாதி இழந்தவனெனவும், தேசத் துரோகி யெனவும், நாஸ்திகனெனவும், அரசியலில் பிற்போக்கானவன் என்று தூற்றப்பட்டு வந்தும் அப்படிப்பட்ட என் பிரசங்கத்தைக் கேட்க இந்த 100 வீடுகள் உள்ள கிராமத்தில் 10 , 20 மைல் தூரத்திலிருந்து 4000 பேர்கள் இவ்வளவு திரளான மக்கள் கூடியிருக்கும் இக்காட்சியை என் எதிரிகள் வந்து காண வேண்டுமென ஆசைப்படுகிறேன். விஷமப் பத்திரிகை ஆசிரியர்கள் பார்த்தால் அவர்கள் நெஞ்சு வெடித்துப் போகும் என்றே எண்ணுகிறேன். இந்த பிரமாண்டமான கூட்டத்தைப் பார்க்கும்போது, உண்மையிலேயே என்னைப்பற்றி யார் என்ன சொன்னாலும் என் தொண்டை விரும்புபவர்களும், ஆதரிப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் இருக்கிறார்கள் என்பதும்,...

கு.ஐ.கீ. கம்பெனியார் கவனிப்பார்களா?

கு.ஐ.கீ. கம்பெனியார் கவனிப்பார்களா?

  ஈரோடு தாலூக்கா சுற்றுப் பக்கங்களில் கன்று காலிகளுக்கு தீவனப் பஞ்சம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் ஈரோட்டு முனிசிபாலிட்டியில் உள்ள கால்நடைகளுக்குத் தீவனத்துக்காக தஞ்சை ஜில்லா நீடாமங்கலம், திருவாரூர் முதலிய இடங்களிலிருந்து தீவனம் (வைக்கோல்) தருவிக்கலாம் என்ற யோசனை மீது விஷயங்களை விசாரணை செய்து பார்த்ததில் வைக்கோல் ஈரோட்டு விலையைவிட பகுதி பங்கு சகாயமாய் இருந்தாலும் ரயில் சார்ஜ்ஜானது அதிகமாய் இருப்பதால் கட்டுபடி இல்லாமல் இருந்து வருவதால் தருவிக்க முடியவில்லை. அதனால் ஈரோடு முனிசிபல் கமிஷனர் அவர்கள் தென்னிந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு வைக்கோலைப் பொருத்தவரை சகாய ரேட்டு ஏதாவது ஏற்படுமானால் ஏராளமான அளவு தருவிக்கக் கூடும் என்று தெரிவித்து வேண்டிக் கொண்டிருக்கிறார். மாடு கன்றுகளுடைய நன்மையை உத்தேசித்தும், தஞ்சை ஜில்லாவில் உள்ள வைக்கோல்கள் பெரிதும் செலவு இல்லாமல் வீணாய் போகாமலும், விவசாயிகளுக்கு வைக்கோல் மூலம் ஏதோ சிறிது பணம் கிடைத்து அவர்களுக்குச் சவுகரியம் ஏற்படும்படியும் தீவனப் பஞ்சமுள்ள இடங்களில் சௌகரியம்...

காந்தியும்  காங்கிரசும்

காந்தியும்  காங்கிரசும்

  காங்கிரசு  ஜெயித்தது  என்று  மகிழ்ந்த  தோழர்களே! காங்கிரசுக்கு  வேலை  செய்த  தேசாபிமானத்  தோழர்களே! இதற்கு  என்ன  சொல்லுகிறீர்கள்? தோழர்  காந்தி  அவர்கள்  காங்கிரசை  விட்டு  விலகி  விட்டதாகப்  பொது  ஜனங்கள்  கருதும்படியாய்  எவ்வளவு சடங்குகளும்,  விளம்பரங்களும்  செய்து  மக்களை  நம்பும்படியாக  நமது  “”தேசபக்த”  கூட்டத்தார்கள்  செய்து  வந்தார்கள்  என்பது  யாவரும்  அறிந்ததேயாகும். ஆனால்,  அவற்றைப்  பற்றி  நாம்  அது  உண்மை  அல்லவென்றும்,  ஒரு  நாளும்  காந்தி  விலக  முடியாது  என்றும்,  நமது  பார்ப்பனர்களும்  அவரை  ஒரு  நிமிடமும்  விட்டு  பிரிய  மாட்டார்கள்  என்றும்,  ஆனால்  தற்சமயம்  நாட்டில்  ஏற்பட்ட  நிலைமையானது  அதாவது  காந்தியாரின்  கொள்கைகள்  பெரும்பாலும்  தோல்வி  அடைந்துவிட்டதாலும்  காங்கிரசின்  பேராலேயே  அக்கொள்கைகள்  தோற்றுப்  போய்  விட்டது  என்றும்,  அவற்றைக்  கைவிட்டுவிட  வேண்டுமானாலும்  முடிவு  செய்து  விட்டதாலும்,  “”குப்புற  விழுந்தாலும்  மீசையில்  மண்  ஒட்டவில்லை”  என்கின்ற  பழமொழிப்படி  “”காங்கிரஸ்  தோற்றுவிட்டதே  ஒழிய  காந்தியார்  தோல்வி  அடையவில்லை”  என்று  சொல்லி  பாமர ...

தமிழர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்?

தமிழர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்?

சரணாகதி மந்திரிசபை தமிழ் நாட்டிலே, ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கத் துணிந்து திட்டம் போட்டனர். சூழ்ச்சி, சுயநலம், விஷமம், வர்ணாச்சிரமமாகிய விஷங் கலந்த இத் திட்டத்தைத் தமிழர் உண்டு மாள்வரோ என நாம் பயந்தோம். அக்கிரகார மந்திரிசபையின் அக்கிரமப் போக்கால், தமிழர் சமூகம் நசிக்காதிருக்க வேண்டுமே என கவலை கொண்டோம். இத்திட்டம் அர்த்தமற்ற, அவசியமற்ற மோசமான மனு ஆட்சித் திட்டம் என்றோம். நம்மைப் போன்றே தமிழ் உலகும் கருதிற்று. தமிழர்கள் சீறி எழுந்தனர். எங்கும் ஒரு கொதிப்பு ஏற்பட்டது. தமிழ் நாடு கொந்தளித்தது. பலமான கிளர்ச்சி ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அடங்கிய கூட்டங்கள் கூடி பிரதி தினமும் ஹிந்தி கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்றன. “தமிழ் மொழி அழிக்கப்படுவதைக் கண்டும் நாங்கள் உயிரோடு இரோம்” என்ற முழக்கம் மூலை முடுக்குகளிலும் எழும்பிற்று. தமிழர் கழகங்களென்ன, பாதுகாப்பு சங்கங்களென்ன, ஹிந்தி எதிர்ப்பு சபைகள் எத்துணை, இவ்வளவும் தமிழ் நாட்டிலே தோன்றின. பண்டிதர்கள் பதறினார்கள். மாஜி கவர்னர்களும்,...

தோழர்  சிவராஜ்  தீர்மானமும்

தோழர்  சிவராஜ்  தீர்மானமும்

  சுவாமி  சகஜானந்தம்  வேஷமும் தாழ்த்தப்பட்டோன் பூனா  ஒப்பந்தமானது,  தாழ்த்தப்பட்டவர்களுக்குப்  பாதகத்தை  உண்டாக்கி  விட்டதென்பதையும்,  அதைத்  தாழ்த்தப்பட்டவர்கள்  ஆதரிக்க வில்லை  என்பதையும்  தெரிவிப்பதற்காகச்  சென்னை  சட்டசபையில்  தோழர்  சிவராஜ்  அவர்களால்  கொண்டு  வரப்பட்ட  பூனா  ஒப்பந்தக்  கண்டனத்  தீர்மானம்  பெரும்பான்மையோரின்  ஆதரவு  பெற்று  நிறைவேறிவிட்டது.  அத்  தீர்மானத்திற்கு,  ஜாதி  இந்துக்களின்  வால்  பிடித்துத்  திரியும்  நமது  வைதீகத்  தோழர்  சுவாமி  சகஜானந்தம்  அவர்களும்  சாதகமாகவே  ஓட்டுக்  கொடுத்ததாகப்  பத்திரிகைகள்  கூறுகின்றன.  ஆனால்,  தீர்மானம்  முடிந்து  வெளியில்  வந்தவுடன்  அவர்  மனதில்  என்ன  தோன்றியதோ  என்னமோ  பூனா  ஒப்பந்தத்தைக்  கண்டித்த  தோழர்கள்  சிவராஜ்,  ஜகநாதன்  முதலியவர்கள்  செய்கையைக்  கண்டித்து  ஒரு  அறிக்கையை  வெளியிட்டிருக்கிறார்.  உள்ளொன்று  செய்துவிட்டுப்  புறமொன்று  வெளியிடும்  செய்கையை  நமது  சுவாமிகள்  எதற்காகச்  செய்தார்  என்று  கேட்கின்றோம். பிரிட்டிஷ்  முதன்மந்திரி  தாழ்த்தப்பட்டவர்களுக்குச்  சென்னை  சட்டசபையில்  18  ஸ்தானங்களே  அளித்திருந்தார்.  ஆனால்  “”மகாத்மா”  காந்தியின்  முயற்சியால்  30  ஸ்தானங்கள்  கிடைத்தன  என்று  கூறுகின்றார். ...

குடி  அரசு  ஆபீஸ்  சோதனை

குடி  அரசு  ஆபீஸ்  சோதனை

  20135ந்  தேதி  ஞாயிற்றுக்  கிழமை  பகல்  ஒரு  மணி  சுமாருக்கு  சென்னை  அரசாங்கத்தாரால்  அனுப்பப்பட்ட  ஒரு  இ.ஐ.ஈ.  போலீஸ்  அதிகாரி,  உள்ளூர்  போலீஸ்  இன்ஸ்பெக்டர்,  சப்  இன்ஸ்பெக்டர்,  இரண்டு  மூன்று  ஹெட்கான்ஸ்டேபிள்கள்  பத்துப்  பனிரண்டு  கான்ஸ்டேபிள்களுடன்  குடி  அரசு  ஆபீசுக்குள்  புகுந்து  ஆபீசைச்  சுற்றியும்,  ஆபீசுக்குள்  இருந்த  ஆளுகளுக்கும்  காவல்  போட்டு  விட்டு  ஒவ்வொரு  அரையையும்  ஒவ்வொரு  ரிகார்டுகளையும்  பரிசோதித்தார்கள்.  அங்கு  ஒன்றும்  அவர்கள்  இஷ்டப்படி  கிடைக்காததால்  பகுத்தறிவு  நூற்பதிப்புக்கழக  நிலயத்துக்குள்  புகுந்து  அங்கும்  அதுபோலவே  பதினாயிரக்கணக்கான  புத்தகங்களையும்,  புத்தகக்கட்டுகளையும்  கலைத்து  விட்டார்கள்.  அங்கும்  ஒன்றும்  கிடைக்கவில்லை. பிறகு  தோழர்  ஈ.வெ.கி.  அவர்கள்  வீட்டிற்குச்  சென்று  அங்கும்  பல  புத்தக  அலமாரிகளைத்  திறந்தும்  மற்ற  இடங்களையும்  சுற்றிச்  சுற்றி  சோதனை  போட்டும்  ஒன்றும்  கிடைக்கவில்லை. கடைசியாக  பகத்சிங்கைப்  பாராட்டி  தோழர்  ஈ.வெ.ராவால்  எழுதப் பட்ட  ஒரு  கட்டுரை  அடங்கிய  குடி  அரசு  மலர்  ஒன்றை  எடுத்துக் கொண்டு  சென்று  விட்டார்கள். ...

பார்ப்பனருக்கும் ரயில்வேகாரருக்கும் ஒப்பந்தமா?

பார்ப்பனருக்கும் ரயில்வேகாரருக்கும் ஒப்பந்தமா?

  நம் நாட்டில் சுதந்தரமும் சுயமரியாதையும் சொந்த அரசியலும் ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்களால் அழிந்து போனதல்லாமல் மனித சமூகம் வஞ்சக மதத்துக்கும் ஒழுக்கமும் நீதியும் அற்ற கடவுளுக்கும் முட்டாள்தனமும் பித்தலாட்டமும் நிறைந்த மூடநம்பிக்கைக்கும் அடிமைப்பட்டு பெருவாரியான மக்கள் ஒரு வெகு சிறுபான்மையான வன்னெஞ்ச வஞ்சகர்களுக்கு ஆளாகி இன்னல் படுவதும் மிருகங்களிலும் மலத்திலும் கேவலமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலிருப்பதும் தமிழ் நாட்டுச் சரித்திரம் அறிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். இம் மாதிரியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டதற்கு காரணம் மக்கள் ஒன்று சேர்வதற்கு இல்லாமலும் சுதந்தரத்தோடு விஷயங்களை ஆராய்ச்சி செய்து முடிவு பெறுவதற்கில்லாமலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பதற்கு இல்லாமலும் மக்களை அடிமை படுத்தி வைக்க வென்றே ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட இந்து மதம் என்னும் ஆரிய சூழ்ச்சி மதமே ஆகும். அம்மதமானது “சிறுபான்மையோர் பெரும்பான்மையோரை அடக்கி ஆட்கொண்டு ஆட்சி புரிய வேண்டுமானால் அம் மக்கள் சமூகத்தை பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்து ஒருவரை ஒருவர்...

இந்தியா  சட்டசபைக்கு  ஒரு  பாரபக்ஷமற்ற  சுயேச்சையுள்ள  தலைவர்

இந்தியா  சட்டசபைக்கு  ஒரு  பாரபக்ஷமற்ற  சுயேச்சையுள்ள  தலைவர்

  சர். அப்துர்  ரஹிம்  அவர்களை  இந்தியா  சட்டசபைக்குத்  தலைவராகத்  தேர்ந்தெடுத்த  அங்கத்தினர்களை  நாம்  மனமாறப்  பாராட்டுகிறோம்.  சர். அப்துர்  ரஹிம்  அவர்கள்  பாரபக்ஷமற்ற  ஒரு  திறமை  வாய்ந்த  சுயேச்சையான  நீதிபதியாக  நமது  சென்னையில்  இருந்து  வந்தவர்  என்பது  யாவரும்  அறிந்ததாகும்.  அத்தகையார்  தற்போது  இந்தியா  சட்டசபைக்கு  ஏற்பட்டுள்ள  சந்தர்ப்பத்துக்குத்  தகுதியான  முறையில்  நீதிவழங்கத்  தலைமைப்பதவி  ஏற்றுக்  கொண்டிருக்கிறார்.  இவருக்கு  þ  பதவி  கிடைக்காமல்  இருக்கவேண்டுமென்று  தேசபக்தப்  பெருமையில்  மிகுதி யடைந்ததாகச்  சொல்லிக்  கொள்ளுபவர்களால்  சில  இடையூறுகளும்  சூழ்ச்சிகளும் நேரிலிருந்து செய்யப்பட்டிருந்தாலும்கூட மற்ற  அங்கத்தினர்கள்  அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் கடமையை  நிறைவேற்றினமைக்கு  நாம்  மகிழ்ச்சிப்பெருக்கடைகிறோம். குடி அரசு  துணைத் தலையங்கம்  27.01.1935

பகுத்தறிவு’

பகுத்தறிவு’

  மாதப்பதிப்பு பகுத்தறிவு  என்னும்  பேரால்  ஒரு  மாதப்பத்திரிகை  பகுத்தறிவு  நூற்பதிப்புக்கழக  ஆதரவில்  குடி அரசு  பதிப்பகத்தில்  இருந்து  வெளியிடப் படும்.  பொறுப்பாசிரியர்  ஈ.வெ. கிருஷ்ணசாமி,  அதன்  பிரதான  ஆசிரியர்  பண்டிதர்  சாமி  சிதம்பரனார்.  மற்றும்  தோழர்கள்  ஈ.வெ. கிருஷ்ணசாமி,  ஈ.வெ. ராமசாமி,  கைவல்ய  சாமியார்,  M. சிங்காரவேலு  ஆ.அ.ஆ.ஃ.,  க. சிதம்பரம்  ஆ.அ.ஆ.ஃ.,  கு. லட்சிமிரதன்  பாரதி  M.அ.ஆ.ஃ.,  ஓ.M. பாலசுப்பிரமணியம்  ஆ.அ.ஆ.ஃ., கு. குருசாமி, கு. குஞ்சிதம் அம்மாள், நீலாவதி அம்மாள்,  இந்திராணியம்மாள்,  ஓ.அ.க. விஸ்வநாதம்,  அ. இராகவன்,  இ. சுப்பையா  ஆ.அ.,  பிரமச்சாரி  M.அ.ஃ.கூ.,  பாரதிதாசன்,  ஜீவானந்தம்,  “”சித்திரபுத்திரன்”  முதலிய  50  அறிஞர்கள்  சந்தர்ப்பம்போல்  கட்டுரைகள்  எழுதுவார்கள்.  அனேக சர்க்கார் உத்தியோகஸ்தர்களும், மதத் தலைவர்களும்,  புனைப்பெயருடன்  எழுதுவார்கள். அமெரிக்கா,  இங்கிலாந்து,  ஜெர்மனி,  ரஷ்யா  முதலிய  தேசங்கள்,  பகுத்தறிவு முதலிய சங்கத்தார்களின் வெளியீடுகளுடையவும்,  அபிப்பிராயங் களினுடையவும்,  மொழிபெயர்ப்புகளும்,  சுகாதாரம்,  வைத்தியம்,  சட்டம்  முதலியவைகளும்,  சிறுகதைகளும்,  ஹாஸ்யங்களும்,  வாக்குவாதங்களும்,  பாட்டுகளும்,...

புது காங்கரஸ் தலைவர் யோக்கியதை

புது காங்கரஸ் தலைவர் யோக்கியதை

சுபாஷ் சந்திரபோசுக்கு பார்ப்பனர்களின் (ஆனந்தவிகடனின்) சர்ட்டிபிகேட் “சுபாஷ் போஸúக்கு ஒரே ஒரு குறை மட்டும் உண்டு. சுபாஷ் போசுக்கு மற்ற தேசத்தலைவர்களுடன் ஒத்து உழைக்கும் இயல்பு அவ்வளவு போதாது. தேசபந்து காலஞ்சென்றதும், உடனே தாம் வங்காளத்தின் தலைவராக வரவேண்டுமென்பதில் கொஞ்சம் அவசர புத்தி காட்டினார். இதன் பயனாக, உரிய காலத்தில் வங்காளத்தின் ஒப்பற்ற தலைவராக வரவேண்டியவர் ஒரு கும்பலின் தலைவர் ஆனார். வங்காளத்தில் காங்கரஸ்காரர்கள் பிளவுபட்டு, காங்கரஸ் வேலைகள் ரொம்பவும் சீரழிந்து போயிருந்ததற்கு ஸ்ரீ சுபாஷ் போஸ் பெரிதும் பொறுப்பாளி என்பதை தேசம் மறந்துவிடமுடியாது” ஜவஹர்லாலுக்கு இதே பார்ப்பனர்கள் (சுதேசமித்திரன்) கொடுத்த நற்சாட்சி பத்திரம் முன்னமே எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. எனவே எந்தத் தலைவரானாலும் சரி, பார்ப்பன அடிமையாய் இருந்தால் விளம்பரப்படுத்தி மகாத்மா வாக்குவதும் சுதந்தர புத்தி கடுகளவாவது இருந்தால் அவர் எப்படிப்பட்ட தியாகியானாலும் இழிவுபடுத்தி ஒழிப்பதும் பார்ப்பன இயற்கை – ஆரிய தர்மம் என்பதை உணர்வோமாக. குடி அரசு – செய்தி விளக்கக்...

காங்கரஸ் விஷமப்  பிரசாரத்துக்கு மறுப்பு

காங்கரஸ் விஷமப்  பிரசாரத்துக்கு மறுப்பு

  தலைவரவர்களே! தோழர்களே! பல சங்கங்களின் சார்பாக எனக்கு அனேக உபசாரப் பத்திரங்கள் படித்துக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவைகளில் அளவுக்கு மீறி என்னைப் புகழ்ந்திருக்கிறீர்கள். அவைகள் எனக்கு உரியதல்ல வென்றாலும் என் மீதுள்ள சொந்த அன்பினாலேயே என்னை இவ்வளவு தூரம் அதிகமாக புகழ்ந்திருக்கிறீர்கள். நான் செய்யும் தொண்டைப் பற்றி நானே பல சமயம் மிகவும் கடுமையாக யோசிப்பதுண்டு. நான் செய்யும் தொண்டானது எங்கு நமது நாட்டிற்கு தீமையை விளைவிக்கிறதோ என்கின்ற சந்தேகம் எனக்கு பல சமயங்களில் எழுவதுண்டு. ஆனால் நான் இப்போது இங்கே இவ்வளவு பிரம்மாண்டமான பொதுமக்களின் ஆவலையும் கணக்கற்ற உபசாரங்களையும் பார்க்கும்போது எனது தொண்டானது சரியான வழியில் தான் இருக்கிறது என்றும், இந்த உபசாரப் பத்திரங்களும், வரவேற்புகளும் எனது தொண்டிற்கு மேலும் மேலும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஊக்குவிப்பதாயிருக்கின்றன என்பதாகவும் கருதி இவைகளை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். முதலில் சில விஷயங்களைச் சொல்லக்...

உயிரைக்  காத்ததற்கு  உபகாரம்

உயிரைக்  காத்ததற்கு  உபகாரம்

  1932ம்  வருஷத்தில்  காந்தியாரின்  உயிரைக்  காப்பாற்றின  வீரர்கள்  ஆதிதிராவிட  தோழர்களாகும். பிரிட்டிஷ்  அரசாங்கம்  ஏற்பட்ட  200  வருஷகாலங்களுக்குப்  பிறகே  ஆதிதிராவிடர்களுக்கு  அரசியலில்  பிரதிநிதித்துவம்  பெற  வசதி  அளித்தார்கள். இந்த  வசதியும்  இந்திய  மக்களின்  பிரதிநிதி  ஸ்தாபனம்  என்று  சொல்லிக்கொள்ளும்  காங்கிரசும்,  அக்காங்கிரசிற்கு  சர்வாதிகாரி  என்று  சொல்லப்பட்டவர்,  தாழ்த்தப்பட்ட  மக்களுக்குத்  தொண்டு  செய்ய  வசதி  அளிக்காவிட்டால்  பட்டினிகிடந்து  உயிரை  விடுவேன்  என்று  சொன்னவர்,  தீண்டாமை  ஒழிக்கப்பட்டால்  அல்லாது  தீண்டப்படாதார்  என்பவர்களுக்கு  மற்ற  இந்து  மக்கள்  மீது  நம்பிக்கை  ஏற்பட்டாலல்லாது  இந்தியாவுக்கு  சுயராஜ்யம்  கிடைக்காதென்றும்,  கிடைத்தாலும்  நிலைக்காதென்றும்  சொன்னவர்  ஆன  தோழர்  காந்தியாரால்  “”தாழ்த்தப்பட்டவர்களுக்கு  அரசியலில்  தனிப்  பிரதிநிதித்துவம்  கொடுத்தால்  என்  உயிரைக்  கொடுத்தாவது  எதிர்ப்பேனே  ஒழிய  என்  உயிர்  போமளவும்  சம்மதிக்கமாட்டேன்”  என்று  சொன்ன  பிறகே  தான்  அரசாங்கத்தார்  கருணைவைத்து  தனிப்பிரதிநிதித்துவம்  கொடுத்தார்கள். அதுவும்  கூட  ஏன்?  எப்படி?  கொடுத்தார்கள்  என்று  யோசிப்போமே யானால்  சைமன்  கமிஷன்  இந்தியாவுக்கு  முதலில்  வந்த ...

காங்கரஸ் நாணயம் விளக்கம்

காங்கரஸ் நாணயம் விளக்கம்

  தலைவரவர்களே! தோழர்களே! நம்முடைய எதிரிகள் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடிவிட்டார்கள். எதிரிகளின் விஷமப் பிரசாரம் அளவுக்கு மீறி வெற்றியடைந்து விட்டது. அது மட்டுமா? ஜஸ்டிஸ் கட்சியை சாக அடித்து கருமாதி செய்ததாகவும் சொன்னார்கள். 5000 அடி ஆழத்தில் அவர்கள் புதைத்து விட்டதாகவும் சொன்னார்கள். அதுபோலவே முஸ்லீம் லீக்கும், சுயமரியாதைக் கட்சியும் செத்தே போய்விட்டதென்றும் கூறினார்கள். ஆனால் 5000 அடி ஆழத்தில் புதை குழியிலிருந்து செத்துப் போனவர்களாகிய நாங்கள் உங்கள் முன்னால் கிறிஸ்திவநாதர் கதை போல் வந்து நிற்கிறோம். நாம் செத்துப் போய் விட்டோமா? இல்லை. ஜஸ்டிஸ் கட்சிதான் செத்துப் போய்விட்டதா? இல்லை. லீக்தான் செத்துப் போய்விட்டதா? இல்லை. ஏன் அப்படி சொல்கிறேன். செத்துப் போனவர்களாயிருந்தால், இந்த கட்சிகள் எல்லாம் 5000 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தால் உங்கள் முன் இப்போது இவ்வளவு பெரிய கூட்டத்தின் முன் நாங்கள் இதே கட்சியின் பெயரால் எப்படி நிற்க முடியும்? செத்தவர்களை பார்க்க போகுமிடங்களில் 10 ஆயிரக்கணக்கான...

காந்தியின் பழைய பாடம்

காந்தியின் பழைய பாடம்

பெய்ஸ்பூர் காங்கிரஸ் நாடகத்தில் தோழர் ஜவஹர்லால் முக்கிய நடிகரானாலும் காந்தியாரும் முக்கிய நடிகரில் முன்னணியில் இருப்பவரானதால் அவரது நடிப்பும் கவனிக்கத்தக்கதாகும். அவர் வெறும் பழம் பாடங்களைப் படித்து பழய ஆசாமிகளுக்கு ஆறுதலளித்து இருக்கிறார். காங்கிரஸ் எங்கு புரட்சிகரமான காரியத்தை நினைத்துவிடுமோ என்று பயந்த பணக்காரர்களுக்கும் மேல் ஜாதிக்காரர் களுக்கும் பயம் நீங்கும்படியாயும், தைரியம் உண்டாகும்படியாகவும் தந்திரமாய் பேசி மழுப்பி இருக்கிறார். ஆனால் தோழர் காந்தியார் இதுவரையில் பேசிவந்த பாமரத்தனமான பேச்சுகளிலெல்லாம் இந்த காங்கிரஸ் பொருட்காட்சி திறப்பு பேச்சு பல அம்சங்களில் மிக மிக பிற்போக்கானது என்பது நமது கெட்டியான அபிப்பிராயமாகும். எப்படி எனில், “பருத்தி நூல் முனையிலும், ராட்டை முனையிலுமே சுயராஜ்யம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். இது பழம் பாடம் என்று சொல்லி தள்ளிவிடலாம். ஆனால் சுயராஜ்யத்துக்கு “நான்கு முக்கிய அம்சம்” கூறுகிறார். அவையாவன:- அனைவரும் இன்புற்றிருக்க வசதி வேண்டும். யாரும் பசியால் வாடக்கூடாது. செளகரியமான வாழ்க்கைக்கு அவசியமான எல்லா...

“ஹரிஜன” மந்திரிக்கும்  மேயருக்கும் சவால்

“ஹரிஜன” மந்திரிக்கும்  மேயருக்கும் சவால்

மராமத்து மந்திரி கனம் யாகூப் ஹாசன் திறந்து வைத்த தென் தஞ்சை ஜில்லா காங்கரஸ் மகாநாட்டில் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்ட பாவத்திற்காக மூன்று ஆதி திராவிடர்கள் அவமானப்படுத்தப்பட்டது தென்னாட்டிலே மிக்க பரபரப்பையுண்டு பண்ணியிருக்கிறது. காங்கரஸ் பத்திரிகைகளைத் தவிர ஏனைய பத்திரிகைகளில் எல்லாம் கண்டனச் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் “ஹரிஜனங்”களை முன்னேற்றிவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் மட்டும் மெளனம் சாதித்து வருகிறார்கள். எந்தக் காங்கரஸ் பத்திரிகையும் இந்த அக்கிரமத்தை இதுவரைக் கண்டித்து எழுதவில்லை. காங்கரஸ் பேரால் சென்னை அசெம்பிளியில் வீற்றிருக்கும் “ஹரிஜன” மெம்பர்களோ, “ஹரிஜன” மந்திரியோ இதுவரை வாய் திறந்ததாகவும் தெரியவில்லை. “ஹரிஜன” மந்திரி கனம் முனிசாமிப் பிள்ளையும் “ஹரிஜன” மேயர் தோழர் ஜே. சிவஷண்முகம்பிள்ளையும் ஜாதி ஹிந்துக்களுடன் சமபந்தி போஜனம் செய்வதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த சமபந்தி போஜன உரிமை “ஹரிஜன” மந்திரியுடையவும் “ஹரிஜன” மேயருடையவும் சமூகத்துக்கில்லையா?” தமது சமூகத்துக்கில்லாத மரியாதையை அவர்கள் ஒப்புக்கொள்ளுவதுதான் நீதியாகுமா? சமூகத்தின்...

முட்டாள்களுக்கு  வரி

முட்டாள்களுக்கு  வரி

  சித்திரபுத்திரன் முட்டாள்களுக்கு  வரி  விதிக்க  வேண்டும்  என்கின்ற  ஆசையின்  மீதே  நமது  அரசாங்கத்தார்  லாட்டரி  சீட்டுகளையும்,  போட்டிப்  பரிசுகளையும்,  குதிரைப்  பந்தயங்களையும்  அனுமதித்துக்  கொண்டிருக்கிறார்கள்  என்று  தரும  தேவதை  சொற்பனம்  அருளுகிறது. இதை  மிகவும்  சரி  என்றே  சொல்ல  வேண்டும். உதாரணமாக  ஒரு  தாசி  தன்  தாயாரை  நோக்கி  எனக்கு  இன்பம்  கொடுக்கும்  ஆடவர்கள்  எனக்குப்  பணத்தையும்  கொடுத்து  என்னை  வணங்குவதும்  ஏன்  என்று  கேட்டபோது  அந்த  தாசியின்  தாயாரானவள்  மகளைப்  பார்த்து,  நல்ல  காரியத்துக்கு  தங்கள்  பணத்தைச்  செலவு  செய்யாத  அயோக்கியர்கள்  பணம்  செலவாவதற்காக  வேசிகளாகிய  நம்மையும்,  கள்ளு  சாறாயத்தையும்,  சூது  ஆட்டங்களையும்  கடவுள்  அனுமதித்துக்  கொண்டிருக்கிறார்  என்று  சொன்னாளாம். அதற்கு  ஒரு  பாட்டும்  உண்டு. அன்னையே  அனையதோழி அறந்தனை  வளர்க்கும்மாதே, உன்னையோர்  உண்மை கேட்ப்பேன்,  உரை தெரிந்துரைத்தல்  வேண்டும், என்னையே  வேண்டுவோர்கள் எனக்கும் ஓர்  இன்பம்  நல்கி, பொன்னையும்  தந்து பாதப்  போதினில் வீழ்வதேனோ?  (அம்மா) பொம்மெனப்புடைத்து...

தர்மபுரி ஜில்லா போர்டு நம்பிக்கை இல்லாத் தீர்மான நாடகம்

தர்மபுரி ஜில்லா போர்டு நம்பிக்கை இல்லாத் தீர்மான நாடகம்

  காங்கரஸ் சரணாகதி மந்திரிகள் பதவிக்கு வந்தவுடன் ஸ்தல ஸ்தாபனங்களில் எங்கெங்கு காங்கரஸ் அல்லாத கட்சியார் தலைமைப் பதவி வகித்து வந்தார்களோ அவைகளை எப்படியாவது அழித்து பார்ப்பன ராஜ்யம் ஆக்கிக்கொள்ள முயற்சித்து வருகிறார்கள் என்பது யாரும் அறிந்ததேயாகும். இதற்காக மந்திரிமார்களும் காங்கரஸ்காரர்களும் எவ்வளவு இழிவாகவும், கேவலமாகவும் நடந்து கொள்கிறார்கள் என்பதை பொது ஜனங்கள் உணர வேண்டியது அவசியமாகும். உதாரணமாக தர்மபுரி ஜில்லா போர்டு இதுவரை காங்கரஸ்காரர் ஆதிக்கத்தில் இருக்கவில்லை. தர்மபுரி ஜில்லா போர்டு தலைவரும் உபதலைவரும் சுயமரியாதைக்காரர்கள் ஆனதால் அவர்களை ஒழிக்கக் காங்கரஸ்காரர்கள் சிறப்பாகப் பார்ப்பனர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு பார்ப்பனரல்லாத மெம்பர்களைக் கொண்டே மகா பிரயத்தனங்கள் செய்து வந்து வெற்றி பெற்றுவிட்டார்கள். அதாவது தர்மபுரி ஜில்லா போர்டு பிரசிடெண்ட் தோழர் மிட்டாதார் ஈ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மீதும், வைஸ் பிரசிடெண்ட் தோழர் M.N. நஞ்சய்யா அவர்கள் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டு வந்து, தீர்மானமும் பாஸாகிவிட்டதாகச் சேதி வந்துவிட்டது. அந்த நாடகம்...

தஞ்சை  ஜில்லா  4வது   சுயமரியாதை  மகாநாடு

தஞ்சை  ஜில்லா  4வது  சுயமரியாதை  மகாநாடு

  தோழர்களே! ஒரு வருஷ  காலத்துக்குப்  பிறகு  இன்று  சுயமரியாதை  மகாநாடு  இங்கு  கூடுகின்றது.  மாதத்திற்கு  2,  3  மகாநாடுகள்  கூட்டிக்  கொண்டிருந்த  நாம்  அடக்குமுறையில்  அடக்கப்பட்டது  போல்  ஒரு  வருஷ  காலமாக  ஒன்றும்  இல்லாமல்  இருந்து  இன்று  இங்கு  கூடி  இருக்கிறோம்.  மகாநாடு  என்கின்ற  முறையில்  நாம்  இந்த  ஒரு  வருஷ  காலமாய்  கூட்டம்  கூட்டி  இருக்காவிட்டாலும்  பிரசாரம்  என்கின்ற  முறையில்  ஏறக்குறைய வாரம்  ஒரு  முறையாவது  ஒவ்வொரு  இடங்களில்  பலர்  தனித்தனியேயும்,  கூடியும்  பிரசாரம்  என்கின்ற  முறையிலும்  சுயமரியாதைத்  திருமணம்,  சங்கத்  திறப்பு  விழா,  ஆண்டு  விழா  முதலிய  பெயர்களிலும்  கூட்டம்  கூட்டி  நமது  தொண்டுகளை  ஆற்றி  வந்திருக்கிறோம்.  ஆகையால்  நாம்  சோர்ந்தோ,  அயர்ந்தோ,  அலட்சியமாயோ,  அடக்கு  முறையில்  பின்  வாங்கியோ  இருந்து  விட்டோம்  என்று  யாரும்  சொல்லிவிட  முடியாது. வேலை  செய்ய  வேண்டும்  என்கின்றவர்களுக்கு  மகாநாடு  இருந்தாலும்,  இல்லாவிட்டாலும்  வேலை  செய்ய  இடமிருந்து  கொண்டுதான்  இருக்கும். ஆதலால் ...

காங்கரஸ் வண்டவாளம்  தாழ்த்தப்பட்டவருக்குச் செய்த துரோகம்  ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

காங்கரஸ் வண்டவாளம் தாழ்த்தப்பட்டவருக்குச் செய்த துரோகம் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

  தலைவரவர்களே! தோழர்களே! இன்று அரசியலும் முஸ்லிமும் என்பதுபற்றி பேசுவேன் என்று நிகழ்ச்சிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் மூலை முடுக்குகள் உள்பட கிராமங்கள் பட்டினங்கள் எல்லாவற்றிலும் வீட்டுப் பேச்சுக்களாய் இருப்பது இந்த விஷயம் தான். அரசியல் சீர்திருத்தம் வந்ததும் போதும், காங்கிரஸ் பதவிக்கு வந்ததும் போதும்; பொது ஜனங்கள் அனைவர்களுக்குள்ளும் அரசியலும் வகுப்பு விஷயங்களுமாகவே பேசப்பட்டு வருகின்றது. காங்கரஸ்காரர்கள் பதவிகளுக்கும் அதிகாரங்களுக்கும் வெளியில் இருந்து கொண்டு பதவிகளை இழித்துக் கூறியும் அதிகாரங்களை காலாகாலமில்லாமல் சந்தர்ப்ப சந்தர்ப்பமில்லாமல் குற்றங் கூறியும் வந்த பலனும் அரசாங்க நிர்வாகத்துக்கும் சமாதானத்துக்கும் சட்டதிட்டங்களுக்கும் மதிப்பில்லாமல் போகும்படி செய்து வந்த பலனும் இன்று காங்கரஸ்காரர்கள் பதவியில் அமர்ந்து அதிகாரம் பெற்று நிர்வாகம் நடத்த ஆரம்பித்த முதல் ஜனங்களுக்கு காங்கிரசை கேவலப்படுத்தத்தக்க அவசியமும் செளகரியமும் தானாகவே ஏற்பட்டு விட்டதின் பயனாய் காங்கரஸ் கர்ம பலனை அனுபவித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல காங்கரசின் ஆட்சி, வகுப்பு ஆதிக்க சூழ்ச்சி...