பகுத்தறிவு’

 

மாதப்பதிப்பு

பகுத்தறிவு  என்னும்  பேரால்  ஒரு  மாதப்பத்திரிகை  பகுத்தறிவு  நூற்பதிப்புக்கழக  ஆதரவில்  குடி அரசு  பதிப்பகத்தில்  இருந்து  வெளியிடப் படும்.  பொறுப்பாசிரியர்  ஈ.வெ. கிருஷ்ணசாமி,  அதன்  பிரதான  ஆசிரியர்  பண்டிதர்  சாமி  சிதம்பரனார்.  மற்றும்  தோழர்கள்  ஈ.வெ. கிருஷ்ணசாமி,  ஈ.வெ. ராமசாமி,  கைவல்ய  சாமியார்,  M. சிங்காரவேலு  ஆ.அ.ஆ.ஃ.,  க. சிதம்பரம்  ஆ.அ.ஆ.ஃ.,  கு. லட்சிமிரதன்  பாரதி  M.அ.ஆ.ஃ.,  ஓ.M. பாலசுப்பிரமணியம்  ஆ.அ.ஆ.ஃ., கு. குருசாமி, கு. குஞ்சிதம் அம்மாள், நீலாவதி அம்மாள்,  இந்திராணியம்மாள்,  ஓ.அ.க. விஸ்வநாதம்,  அ. இராகவன்,  இ. சுப்பையா  ஆ.அ.,  பிரமச்சாரி  M.அ.ஃ.கூ.,  பாரதிதாசன்,  ஜீவானந்தம்,  “”சித்திரபுத்திரன்”  முதலிய  50  அறிஞர்கள்  சந்தர்ப்பம்போல்  கட்டுரைகள்  எழுதுவார்கள்.  அனேக சர்க்கார் உத்தியோகஸ்தர்களும், மதத் தலைவர்களும்,  புனைப்பெயருடன்  எழுதுவார்கள்.

அமெரிக்கா,  இங்கிலாந்து,  ஜெர்மனி,  ரஷ்யா  முதலிய  தேசங்கள்,  பகுத்தறிவு முதலிய சங்கத்தார்களின் வெளியீடுகளுடையவும்,  அபிப்பிராயங் களினுடையவும்,  மொழிபெயர்ப்புகளும்,  சுகாதாரம்,  வைத்தியம்,  சட்டம்  முதலியவைகளும்,  சிறுகதைகளும்,  ஹாஸ்யங்களும்,  வாக்குவாதங்களும்,  பாட்டுகளும், நாடகங்களும், உலக அதிசய சேதிகளும் வரும்.  ஆரம்பத்தில்  64பக்கமாக  இருந்தாலும்  சீக்கிரத்தில்  100  பக்கங்களுடன்  வெளிவந்தாலும்  வரும்.

டிம்மி  1க்கு  8ல்  64பக்கம்  கொண்டது.

வருட  சந்தா  ரூ.1.

தனிப்பிரதி  அணா  1.  பைசா  6.

தயவுசெய்து ஒவ்வொரு தோழரும் சந்தாதாரர்களாக ஆகி  பகுத்தறிவுக்கு  ஆதரவளித்து  மக்களைப்  பகுத்தறிவு  மயமாக்கவேண்டும்  என்பதே  முக்கிய  வேண்டுகோள்.

குடி அரசு  அறிவிப்பு  27.01.1935

You may also like...