கு.ஐ.கீ. கம்பெனியார் கவனிப்பார்களா?

 

ஈரோடு தாலூக்கா சுற்றுப் பக்கங்களில் கன்று காலிகளுக்கு தீவனப் பஞ்சம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் ஈரோட்டு முனிசிபாலிட்டியில் உள்ள கால்நடைகளுக்குத் தீவனத்துக்காக தஞ்சை ஜில்லா நீடாமங்கலம், திருவாரூர் முதலிய இடங்களிலிருந்து தீவனம் (வைக்கோல்) தருவிக்கலாம் என்ற யோசனை மீது விஷயங்களை விசாரணை செய்து பார்த்ததில் வைக்கோல் ஈரோட்டு விலையைவிட பகுதி பங்கு சகாயமாய் இருந்தாலும் ரயில் சார்ஜ்ஜானது அதிகமாய் இருப்பதால் கட்டுபடி இல்லாமல் இருந்து வருவதால் தருவிக்க முடியவில்லை.

அதனால் ஈரோடு முனிசிபல் கமிஷனர் அவர்கள் தென்னிந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு வைக்கோலைப் பொருத்தவரை சகாய ரேட்டு ஏதாவது ஏற்படுமானால் ஏராளமான அளவு தருவிக்கக் கூடும் என்று தெரிவித்து வேண்டிக் கொண்டிருக்கிறார்.

மாடு கன்றுகளுடைய நன்மையை உத்தேசித்தும், தஞ்சை ஜில்லாவில் உள்ள வைக்கோல்கள் பெரிதும் செலவு இல்லாமல் வீணாய் போகாமலும், விவசாயிகளுக்கு வைக்கோல் மூலம் ஏதோ சிறிது பணம் கிடைத்து அவர்களுக்குச் சவுகரியம் ஏற்படும்படியும் தீவனப் பஞ்சமுள்ள இடங்களில் சௌகரியம் ஏற்படும்படியும் கவனித்து மனது வைத்து ஏதாவது சிறிது ரயில் சார்ஜ்ஜில்  குறைவுபடுத்திக் கொடுப்பார்களானால் அது மிக நல்ல காரியமாகவும் புத்திசாலித்தனமான காரியமாகவும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  03.02.1935

You may also like...