Tagged: கண்டன ஆர்ப்பாட்டம்

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் கோவை 02092017

இன்று கோவையில் காந்திபார்க்கில் நீட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 02092017 காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் “தோழர் பூர்ணிமா நந்தினி” தலைமையில் சிறப்பாக நடந்தது.. நிமிர்வு குழுவின் பறை முழக்கத்தோடு ஆரம்பமானது. நீட் தேர்வு விலக்கு பெறும்வரை “தினமும் நடக்கும்” இடம் அந்தந்த அமைப்பு தோழரிடம் அறிவிக்கப்படும் . “அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நடக்கும்” என்ற முடிவோடு ஆர்ப்பாட்டம் முடிந்தது. பொதுவாக வேடிக்கை பார்த்தவர்கள் கூட நிகழ்வு முடிவடையும் நேரத்தில் பங்கேற்பாளர்களாக இருந்தார்கள்.. தேன்மொழி தோழர் (bjp+பார்ப்பனர்களின்) நோக்கங்களை அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி விளக்கி சிறப்பாக பேசினார். கண்மனி,வினோத்,இளந்தமிழகம்,CFI தோழர்களும் உணர்வுப் பூர்வமாக பேசினர்..நிமிர்வு சக்தி ,மாதவன் சங்கர் முழக்கங்கள் சிறப்பு. செய்தி நிர்மல்குமார்

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் 02092017

சேலத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்கிட கோரியும், NEET தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் 02092017 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் கருப்பூர் சக்திவேல் தலைமை தாங்கினார், சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் தோழர் ஏற்காடு பெருமாள் முன்னிலை வகித்தார். தோழர் இரணியாவின் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் சூரி, மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராசு, தோழர் முல்லை வேந்தன், சேலம் மாநகர அமைப்பாளர் தோழர் பாலு, தலைமை செயர்குழு உறுப்பினர் தோழர் R.S.சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சேலம் மாநகர செயலாளர் தோழர் பிரபு நன்றியுரை ஆற்றினார். இவ்ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகரம், இளம்பிள்ளை, நங்கவள்ளி, ஏற்காடு, மேட்டூர், கொளத்தூர், ஆர்.எஸ் பகுதி பொறுப்பாளர்கள், தோழர்கள்...

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி பாஜக அலுவலகம் முற்றுகை, மோடி உருவ மொம்மை எரிப்பு சென்னை 02092017

சென்னையில், மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுருத்தியும் பா.ஜ.க. தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் நீட்டுக்கு எதிராக சமூக நீதி கோரி வழக்கு தொடுத்தவரும் மத்திய காவி பா.ஜ.க. மோடி அரசால் மருத்துவ படிப்பு கனவு சிதைக்கப்பட்டு தோழர் அனிதாவின் . படுகொலைக்கு காரணமான மோடி அரசை கண்டித்தும்,நீட் தேர்வை ரத்து செய்ய வலியுருத்தியும் 02.09.2017 அன்று மாலை 3 மணியளவில் பா.ஜ.க தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு மத்திய மோடி அரசுக்கு எதிராகவும், தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோக செயலை கண்டித்து போர் முழக்கமிட்டனர்… தமிழக கல்வி உரிமைகளை மாநில பட்டியலில் இருந்து நீக்கி, பொதுப்பட்டியலுக்கு...

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு 03092017

ஈரோட்டில், “கல்வி உரிமைப்போராளி ” அரியலூர் அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு , 03.09.2017 அன்று மாலை 3 மணிக்கு ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய மாநிலை அரசுகளைக் கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன. நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டார்.. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் வேணுகோபால், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, வெளியீட்டுச் செயலாளர் தோழர் இராம.இளங்கோவன், ஆசிரியர் சிவகாமி, சங்கீதா, இணையதளப் பொறுப்பாளர் தோழர் விஜய்குமார், அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினார்

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் 02092017

திருப்பூரில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் 02.09.2017 அன்று மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொருளாளர் தோழர் துரைசாமி தலைமை தாங்கினார்.  த.வா.க. மத்திய மாவட்ட செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார் மாவட்டத் தலைவர் தோழர் முகில் ராசு, மாவட்டச் செயலாளர் நீதிராசன், இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார்,மாநில அறிவியல் மன்றத்தலைவர் சிவகாமி, மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள், தனகோபால், சங்கீதா,மாதவன்அருண் த.நா. மக்கள் கட்சி,கெளதம், மாதவன், ராஜசிங்கம்,ரவி,கனல் மதி,தேன்மொழி த.நா.மாணவர் கழகம்,பார்வதி, முத்து, கருணாநிதி,சங்கீதா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

கதிராமங்கலம் காப்போம், நெடுவாசல் மீட்போம் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 24072017

பல எதிர்ப்புகளை கடந்து கொட்டும் மழையில் கதிராமங்கலம் காப்போம், நெடுவாசல் மீட்போம் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மேலூரில் 24072017 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி வரவேற்புரையாற்றினார். தமிழ் பிரபாகரன் மாநகர் பொறுப்பளர், சத்திய மூர்த்தி மேலூர் பொறுப்பாளர், ஆசிரியர் நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மீ.த.பாண்டியன்.தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் வெ.கனியமுதன். துனை பொது செயலாளர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரறிவாளன். பொதுச் செயலாளர். தமிழ் புலிகள் கட்சி பெரியார்.சரவணன். மாநில கொள்கை பரப்புச் செயலாளர். தமிழக வாழ்வுரிமை கட்சி கா.சு.நாகராசு. ஒருங்கிணைப்பாளர்.பெரியார் திராவிடர் கழகம் சிதம்பரம். மாவட்ட செயலாளர். ஆதித்தமிழர் கட்சி தலித்.ராஜா ஆதித்தமிழர் பேரவை தாஹா. SDPI கட்சி மேலூர் தொகுதி தலைவர். இரணியன். பொதுச் செயலாளர். வன வேங்கைகள் பேரவை ரோசி. சமூக செயற்பாட்டாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர் பரமக்குடி கர்ணன் ,ரமேஸ் ,சகாயராஜ் ,கோபால் உள்ளிட்ட தோழர்களும் தோழமை அமைப்பு தலைவர்கள் தோழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும்...

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் 21062017

மாட்டுக்கறியை தடைக்கு தடை விதிக்கும் மதவாத மோடி அரசைக் கண்டித்து…. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஒன்றை பண்பாட்டை திணிக்க முயற்சிக்கும் மோடி அரசே.! மாட்டுக்கறி மீதான தடை நீக்கப்படவில்லை எனில் திராவிட நாடு மலர்ந்தே தீரும்.! என்ற கண்டன முழக்கத்தோடு காஞ்சி மக்கள் மன்றம் சார்பாக காஞ்சிபுரம், தாலுக்கா அலுவலகம் எதிரில்…திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) மற்றும் இயக்க தோழர்களும் இணைந்து இன்று (21.06.2017) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் யாதவ சாஷில பரிபரன சபை மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தோழர் ஃபாரூக் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி 29032017

தோழர் ஃபாரூக் படுகொலையை கண்டித்து சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டம் 29032017 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 50 மேற்பட்ட தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மதவெறிக்கு எதிராய் முழக்கங்களை எழுப்பினர் செய்தி வைரவேல்

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்து மார்ச் 25 மாலை 5 மணியளவில் பெரம்பலூர் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. என். செல்லத்துரை (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ் முத்து, குணராசு, வீ. ஞான சேகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கிருட்டிணசாமி (அம்பேத்கர் அறக்கட்டளை), அக்ரி. ஆறுமுகம் (தி.க.), சித்தார்த்தன் (தி.க.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாரூக் குடும்பத்துக்கு தோழர்கள் ரூ.13,000 நிதியை மாவட்ட தலைவர் தாமோதரனிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

தோழர் ஃபாருக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கைது செய் ஆர்ப்பாட்டம்

மதவெறியர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட கோவை திராவிடர் கழக தோழர் பாரூக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கண்டித்து காவல் துறையே கைது செய் என்று ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்து பின் சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார் சிலைக்கருகில் சாலை மறியலில் ஈடுப்பட்ட திவிக, தபெதிக, சேவ்தமிழ் இயக்க தோழர்கள் 60 கைது.  

நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் தக்கலை 04032017

குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  நீட் தேர்வைக் கண்டித்து தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. மாவட்டச் செயலாளர் தோழர் தமிழ் மதி தலைமைத் தாங்கினார். தோழர் நீதி அரசர் (தலைவர் பெ.தொ.க) முன்னிலை வகித்தார். தோழர் விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் பால் பிரபாகரன்,கழக பரப்புரைச் செயலாளர் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம் ச.ம.தொ.செயலாளர்,வி.சி.க,) போஸ் (சமூக ஆர்வலர்)  முரளீதரன் (பொது பள்ளிகான மாநில மேடை செயலாளர்) தோழர்கள்  இரமேஸ், இராஜேஸ் குமார், இராதா கிருஸ்ணன் MCUP(I), ஜாண் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் கலந்துக் கொண்டனர். தோழர்கள் அனைவரும் மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை ஆவேசத்துடன் முழங்கினர். தோழர் மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது. ட

மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் ! குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்.. மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து. நாள் : 04.03.2017 சனிக்கிழமை,காலை 9 மணி. இடம் : வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,அண்ணா சிலை அருகில்,தக்கலை,குமரி மாவட்டம். கண்டன உரை : தோழர் பால்.பிரபாகரன், பரப்புரைச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள்

பேச்சுரிமையை மறுக்கும் தமிழக அரசு !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று 01032017 அன்று மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் காஸ் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது இந்த நிலையில் திடீரென 27022017 நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து மன்னார்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கடிதம் கொடுத்து உள்ளார் . நீதிமன்ற அனுமதிக்கு வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோத அரசுகளின் முகமூடிகள் மக்கள் மன்றத்தில் தோலுரிக்கப்படும் . செய்தி மன்னை காளிதாசு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் ! ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 01.03.2017 மாலை 6 மணிக்கு இடம் : மன்னார்குடி, பெரியார் சிலை அருகில். தலைமை : இரா .காளிதாசு மாவட்ட செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் சிறப்புரை : தஞ்சை விடுதலைவேந்தன் தலைமை கழக பேச்சாளர் ம தி மு க  

அரியலூர் சிறுமி நந்தினியின் படுகொலையை கண்டித்து நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி 19022017

அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தலித் சிறுமி நந்தினியின் படுகொலையை கண்டித்து நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…   ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள்: சிறுமி நந்தினியின் கொலையை CBIக்கு மாற்று… இந்து முன்னணி அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜாதி வெறியன் ராஜசேகரை கைது செய்… ராஜசேகர் மற்றும் அவனின் கூட்டாளிகளின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்து… தலித் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்து…

பழங்குடிகளின் உரிமை மீட்பு கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 17022017

மதுரையில் காவல் துறைக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்.. குறவர் சமுதாய மக்களை திருடர்களாக சித்தரித்து தொடர்ச்சியாக அவர்கள் மீது பொய் வழக்கு போடும் போக்கை தொடரும் காவல் துறையினருக்கு தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனத்தை தெரிவித்து இன்று மதுரையில் நடைபெற்ற குறிஞ்சியர் நலச்சங்கம் சார்பிலான கண்டன ஆர்பாட்டத்தில் தலைமை உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புத் தோழர்கள் கலந்து கொண்டனர். செய்தி மா பா மணிகண்டன் உரிமை

பள்ளிப்பாளையத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பாளையத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

மாணவர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் வன்முறைகளுக்கு நீதி கேட்டு, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. 30.1.2017 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் மு. முத்துப்பாண்டி (மாவட்ட பொருளாளர்) தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மா. வைரவேல் (மாவட்ட அமைப்பாளர்), மு. சரவணன் (மாவட்ட செயலாளர்), இரா. ஃபிடல் சேகுவேரா (இராசிபுரம் நகர அமைப்பாளர்) கண்டன உரையாற்றினர்.   பெரியார் முழக்கம் 09022017 இதழ்

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்

தமிழகத்தின் பல ஊர்களில் நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அரியலூர் : கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமி நந்தினி படுகொலையை கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துரை அருகில்  சிறுகடம்பூரில் 04-01-2017 அன்று திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை பின்புறம் காலை 10.00மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தை விழுப்புரம் அய்யனார், கழகத் தலைமை செயற் குழு உறுப்பினர் தொகுத்து வழங்கினார் . முன்னதாக புதுச்சேரி சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தீனா, நாமக்கல் மாவட்ட திவிக செயலாளர் வைரவேல், புதுச்சேரி திவிக அமைப்பாளர் இளையரசன், சமூக ஆர்வலர் தமிழரசன், தமிழ் வழிக் கல்வி இயக்கம் சின்னப்பத் தமிழர், மக்கள் கண்காணிப்பகம் இராமு, பெரம்பலூர் மாவட்ட திவிக. செயலாளர் துரை.தாமோதரன்  ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். பெரியார் திராவிடர் கழகம் – சுயமரியாதை சமதர்ம...

நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாவட்டம் செந்துரை அருகில் சிறுகடம்பூர் தலித் சிறுமி நந்தினி படுகொலையை கண்டித்தும் 1.நந்தினியின் கூட்டுபாலியல் வன்கொலையின் முக்கிய குற்றவாளி இந்து முன்னனி மாவாட்ட தலைவர் ராஜசேகரனை உடனே கைது செய். 2. தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி மத கலவரங்களை தூண்டிவரும் இந்துமுன்னனி அமைப்பை தடைசெய். 3.நந்தினி குடும்பத்திற்கு ஒருகோடி நிதியும் அரசு வேலையும் உடனே வழங்கு. 4.சாதி மத அமைப்புக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவும் சாதிய உணர்வோடு செயல்படும் காவல்துறை ஆய்வாளர் மற்றும் Dsp மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து உடனே கைது செய். 5. வழக்கினை CBI விசாரனைக்கு உத்திரவிடு. 6. நந்தினி குடும்பத்திற்க்கு உரிய பாதுகாப்பு வழங்கிடு. 7. மாவட்டதோறும் இயங்கும் தீண்டாமை ஒழிப்பு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடு. 8. SC ST வழக்குகளை விசாரிக்க தனி நீதீமன்றம்...

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23.01.2017 அன்று மாலை 3 மணியளவில் குடியாத்தம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உண்மையான கொலைக் குற்றவாளிகளை  உடனே கைது செய் ! தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய் ! குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடு ! – என காவல் துறையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி  பங்கேற்று கண்டன உரையாற்றினார். அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் சிறுகாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் நந்தினி (16) கடந்த டிச.29 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் ஈடுபட் டுள்ள இந்து முன்னணியைச் சேர்ந்த உண்மையான கொலைக் குற்றவாளிகளை உடனே கைது செய்யவும்,குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த...

ககாபுதூர் சாதீய வன்முறை – உண்மையும் தீர்வும் கோவை 31012017

கா.க.புதூர் சாதீய வன்முறை மற்றும் பரவலாக நடைபெறும் ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து கோவை, பொள்ளாச்சி நகரங்களில் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்! கடந்த சனவரி 8ஆம் தேதி கா.க.புதூரில் தோழர் கா.சு. நாகராசன் இல்லத்தில் ஆதிக்க சாதியினரும் இந்து முண்ணனி மதவெறிக் கும்பலும் சேர்ந்து நடத்திய வன்முறை தாக்குதல் பற்றிய உண்மையும்,தீர்வும் என்ற தலைப்பில் 31.01.2017 செவ்வாய் மாலை 05 மணிக்கு கோவை ஆதித்தமிழன் அரங்கில் அனைத்து இயக்கங்களின் கலைந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் “கொளத்தூர்” மணி அவர்கள், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ” ஆதித்தமிழர்” பேரவை நிறுவனர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். திவிக தோழர் பொள்ளாச்சி வெ.வெள்ளிங்கிரி கா.க.புதூர் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அதிக்க சாதி இந்து முண்ணனி கூட்டணி குறித்தும் வரவேற்புரையில் தெளிவுபடுத்தினார்.தொடர்ந்து தோழர் கா.சு.நாகராசன் 8 ஆம் தேதி வன்முறை மற்றும் அதன் பின்னணி குறித்து அறிமுக உரையாற்றினார்....

மதுரையில் நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ! 31012017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.1.2017 அன்று காலை 11 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்ட கழகச்செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் தலைமை தாங்கினார்

அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

அரியலூரில் ஆர்ப்பாட்டம். #Justice_for_nandhini அரியலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நந்தினிக்கு நீதிவழங்கு என்கிற முழக்கத்தோடு… தோழர் கோபால் ராமகிருஷ்ணன். தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். இடம்:அண்ணாசிலை பின்புறம். பேருந்து நிறுத்தம். அரியலூர். நாள் :04.02.2017.சனிக்கிழமை. நேரம்:காலை.10.00மணிக்கு.

மெரினாவில் காவல்துறை தாக்குதலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு 30012017

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் வன்முறைகளுக்கு நீதிகேட்டு…. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் 30012017 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்.   செய்தி தோழர் வைரவேல்

திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! 27012017

நாமக்கல் மாவட்ட திவிக சார்பில் திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! பொள்ளாட்சி,ஈரோடு,திருப்பூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட ஜாதி ஒழிப்பு போராளிகள் பங்கேற்பு. (10 பெண்கள் உட்பட) நன்றி: •கா.சு.நாகராசு.ஒருங்கிணைப்பாளர். பெரியார் திக. •இரத்தினசாமி. மாநில அமைப்பு செயலாளர். திராவிடர் விடுதலைக் கழகம். •சிவகாமி.மாநில அமைப்பாளர். தமிழ்நாடு அறிவியல் மன்றம். •முல்லைவேந்தன்.மேட்டூர் •மணிமொழி.திவிக.பொள்ளாட்சி செய்தி வைரவேல்

வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம் 23012017

வேலூர் மாவட்ட திவிக சார்பில் குடியாத்தம் பகுதியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி அவர்களை வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த இந்து முன்னணியைச் சேர்ந்த ராஜசேகரை கைது செய்யக்கோரியும், அவனை தப்பவிட்ட காவல்துறையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம். தோழர் கொளத்தூர் மணி கண்டன உரை காணொளி செய்தி பூரணாசுரன் சு

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10012017

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10012017

பொள்ளாச்சியில் நாளை 10.01.17 “கண்டன ஆர்ப்பாட்டம்” ஜாதி வெறியர்களால் தோழர் கா.சு.நாகராசன் மற்றும் தோழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவல்நிலைய பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தியும், தப்பவிட்ட காவல்துறைமீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அனைத்துக்கட்சிகள்,அனைத்து சமுக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை : தோழர் “கொளத்தூர்மணி” (தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்) நாள் – 10.01.17,காலை -11.00மணி. இடம்: திருவள்ளுவர் திடல்,பொள்ளாச்சி அனைவரும் ஒன்றுபடுவோம் சாதிவெறியர்களுக்கு எதிராக ! பேச : 9842487766, 8344053307

மனித உரிமை மீறல்கள் மற்றும் போலி மோதல் கொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு – FASR நடத்தும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போலி மோதல் கொலைகளை கண்டித்து 19 : 11 :2016 சனிக்கிழமையன்று காலை 10 : 00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ” கண்டன ஆர்ப்பாட்டம் ” திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றுகிறார். சென்னை மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

ஜாதி வெறியர்களை கண்டித்து சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் 03112016

தலித்துகள் மீதான வன்கொடுமை தாக்குதல் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மையனூர் கிராமத்தில் ஏசு குழந்தை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமையாளர் பாதிரியார் சகாயராஜ் இந்த பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்களை செப்டம்பர் 5 அன்று அங்கு படிக்கும் மாணவர்களின் செருப்பை திருடியதாக பிடித்து, அதற்கு தண்டனையாக அடித்தும், விளையாட்டு திடலை சுற்றிவர சொல்லியும் கொடுமை படுத்தியுள்ளனர். நான்கு பேரில் இருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட்டு,இருளர் சமூகத்தை சேர்ந்த இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர் .அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று வெளியூர் போக பணம் இல்லாததால் வீடு திரும்ப முயன்றபோது, பள்ளி ஊழியர்கள் பார்த்து பள்ளிக்கே கொண்டு சென்றனர். செய்தி பெற்றோர்களுக்கு தெரிந்து அவர்கள் பாதிரியார் சகாயராஜை சந்தித்து விவரம் கேட்டபோது, அவர் பெற்றோர்களை மிரட்டியதோடு இது பிற்படுத்தப்பட்டோர் பலம் வாய்ந்த பகுதி அவர்களை அழைத்து உங்களை தாக்குவேன். நாளை காலை வந்து விடுப்பு சான்றிதழ் ( TC...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து திவிக சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து, 10.10.2016 அன்று மாலை 4 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். திவிக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி வரவேற்புரையாற்றினார். பல்வேறு அமைப்புகளின் சார்பாக அவற்றின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.. கண்டன உரையாற்றியோர்: பிரபு,தி.க குமரகுருபரன்,த.பெ.தி.க விநாயகமூர்த்தி,விடுதலைச் சிறுத்தைகள் கி.வே.பொன்னையன்,தற்சார்பு விவசாயிகள் சங்கம் சித்திக், த.மு.மு.க பார்த்திபன், பி.யு.சி.எல் நிலவன்,தமிழ்த்தேச நடுவம் சிந்தனைச் செல்வன், தமிழ்ப்புலிகள் தமிழ் இன்பன், விடுதலை வேங்கைககள் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரியசாமி, காந்திய மக்கள் இயக்கம் விடுதலைச் செல்வன், தலித் விடுதலைக் கட்சி லுக்மான், எஸ்.டி.பி.ஐ ஆதவன், தமிழக...

ஆர்ப்பாட்டம் ! ஈரோடு 10102016

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் ஒருங்கிணைப்பில், காவிரி ஆணையம் அமைக்க முடியாது என கூறி ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் எதிராக செயல்படும் மதவாத பாஜக வை கண்டித்து, நாள் : 10.10.16 திங்கட் கிழமை நேரம் : மாலை 4 மணி. இடம் : வீரப்பன் சத்திரம்பேருந்து நிலையம் அருகில், ஈரோடு. மேற்கு மண்டல தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வாருங்கள் !

கோவை கலவரம் செய்த இந்து முன்னணியை தடை செய் – திருப்பூரில் ஆர்ப்பாட்டம் கழகத் தலைவர் உரை

கழக தலைவர் உரை! (காணொளியை காண சொடுக்கவும்) மதவாதத்திற்கெதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் 30.09.2016 அன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. கலவரத்தில் ஈடுபட்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்து முன்னணியை தடை செய்! தமிழகம் குஜராத் தாக மாறும் என அச்சுறுத்திய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியை கைது செய் என வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அதில் ஒரு பகுதியினர் காவல் வைக்கப்பட்ட திருப்பூர் காதர் சலீமா திருமண மண்டபத்தில் கூடியிருந்த பல்வேறு அமைப்பு தோழர்கள் மத்தியில் கழக தலைவர் ஆற்றிய உரை.  

மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் ஆர்ப்பாட்டம்!

மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் ஆர்ப்பாட்டம்! 2500க்கும் மேற்பட்டோர் கைது ! இந்து முன்னணியை தடைசெய் ! தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுருத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது ! 30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன. மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கழக தோழர்களுடன் கலந்து கொண்டு கைதாகினார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழக தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும்,...

காவிரி உரிமைக்கு பேராவூரணியில் கழகம் ஆர்ப்பாட்டம்

காவிரி உரிமைக்கு பேராவூரணியில் கழகம் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், கர்நாடக தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கன்னட வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன், தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஆயர் த.ஜேம்ஸ், தி.வி.க காளிதாஸ், சிபிஐ ராஜமாணிக்கம், சித்திரவேல், சிபிஎம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தா.கலைச்செல்வன், த.ம.பு.க மூர்த்தி, சம்பத், ஆயில் மதி, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், கு.பாரி, திருக்குறள் பேரவை கொன்றை சண்முகம், மதிமுக பாலசுப்பிரமணியன், குமார், கண்ணன், தேமுதிக சீனிவாசன், பழனிவேல், த.ம.மு.க ஆசீர்வாதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 29092016 இதழ்

சமூக அவமதிப்புக்கு உள்ளாகும் திருநங்கைகளின் சுயமரியாதைப் போராட்டம்

தமிழகம் முழுதும் திருநங்கைகள் பல்லாயிரக்கணக்கில் சென்னையில் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தினர். மோடி ஆட்சி திருநங்கைகள் நலனுக்காக மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த மசோதா திருநங்கை களின் வாழ்வை மேலும் மோசமாக்கிவிடும் என்று செப்.21 அன்று திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள்    கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பால கிருஷ்ணன், தி.மு.க.வைச் சார்ந்த விஜயா தாயன்பன், பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பலரும் திருநங்கைகள் கோரிக்கையை ஆதரித்துப் பேசினர். திருநங்கைகள் உரிமைகளுக்காக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தனிநபர் மசோதா ஒன்றை மாநிலங்களவையில் கொண்டு வந்தார். அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. 35 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு தனி நபர் மசோதா, அப்போதுதான் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவில் இடம் பெற்றிருந்த நல்ல அம்சங்களை இப்போது மோடி ஆட்சி அறிமுகப்படுத்தியுள்ள மசோதா...

இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் 30092016

கோவையில் திட்டமிட்டு பொதுமக்கள் மீதும், வணிக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை(30.09.2016) திருப்பூரில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தோழமை இயக்கங்களை இணைத்து மாலை 3 மணிக்கு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவசியம் பங்கேற்கவும்.

தமிழர் மீதான வன்முறையைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பேராவூரணி 20092016

கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான வன்முறையைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்  20092016 மாலை 4 மணி இடம்  பேராவூரணி அண்ணா சிலை அருகில்   தலைமை தோழர் சித. திருவேங்கடம், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திவிக கண்டன உரை தோழர் பால் பிரபாகரன் பரப்புரை ச் செயலாளர், தவிக தோழர் ஆறு. நீலகண்டன் கொள்கை பரப்புச் செயலாளர், தமபுக மற்றும் சனநாயக முற்போக்கு இயக்கத் தோழர்கள் தொடர்புக்கு 9865621895 9524428253

கண்டன ஆர்ப்பாட்டம் ! ஈரோடு 29082016

கண்டன ஆர்ப்பாட்டம் ! ஈரோடு 29082016

கடமையாற்றத்தவறும் கவுந்தப்பாடி காவல்நிலைய அதிகாரிகளை கண்டித்தும், ஆள்கடத்தல் குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ! நாள் : 29.08.2016,திங்கட்கிழமை,காலை 10 மணிக்கு இடம் : கவுந்தப்பாடி நால்ரோடு. ஈரோடு மாவட்டம்,சலங்கப்பாளையம் திராவிடர் விடுதலைக் கழக தோழருடைய மனைவி தேஜாஶ்ரீ அவர்கள் கடத்தப்பட்ட சம்வத்தின் மீதான வழக்கில் மக்கள் கைப்பிடியாக பிடித்து கடத்தல் குற்றவாளிகளை காவல்துறையிடம் ஒப்படைத்தும் குற்றவாளிகள் மேல் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்காமலும்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள் இரண்டையும் பிடித்துக்கொடுத்தும் அவற்றை பறிமுதல் செய்யாமலும் கடமை ஆற்றாமல் மெத்தன போக்குடன் நடந்து கொள்ளும் கவுந்தப்பாடி காவல்நிலைய அதிகாரிகளை கண்டித்தும், ஆள்கடத்தல் குற்றவாளிகள் மீது உடனடியாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இப்படிக்கு, திராவிடர் விடுதலைக் கழகம், ஜாதிமறுப்பு கூட்டியக்கம்.

நுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம்-ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

நுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம்-ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும், தனியார் பள்ளிகளில் 25ரூ இட  ஒதுக்கீட்டை முழுமையாக நடை முறைப்படுத்தவும், பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பை கைவிடக் கோரியும். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் மாநில அமைப்பாளர் பாரி சிவக்குமார் தலைமையில் 7.7.2016 அன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகை அருகே திரண்ட தோழர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர் பின்னர் ஊர்வலமாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்ட மாணவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இப் போராட்டத்தில் தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், விவேக், பல்லடம் மதிவாணன், மயிலாடுதுறை கார்த்திக், மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்த பாரி மைந்தன், பார்வைதாசன், பகலவன், ரம்யா, கலை, செம்பியன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம்...

சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம்! கழகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம்! கழகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்டிருக்காத போது, சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக ஏற்க முடியாது. எனவே ஆட்சி மொழிப் பட்டியலி லிருந்து அதை நீக்கக் கோரியும், மத்திய அரசு அய்.அய்.டி., சி.பி.எஸ்.ஈ., பள்ளிகளில் சமஸ்கிருத்தைப் பாடமாக திணிப்பதைக் கண்டித்தும் கல்வி உரிமையை பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி மீண்டும் மாநில உரிமைப் பட்டியலுக்குக் கொண்டு வர வலியுறுத்தியும், கடந்த 8 ஆம் தேதி தமிழகம் முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அது குறித்த செய்திகளின் தொகுப்பு:   சென்னையில் கல்வியில் மத்திய பா.ஜ.க. அரசின் சமஸ்கிருததிணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழிபட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08.07.2016 வெள்ளிக்கிழமை காலை 10  மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியாரியல் சிந்தனையாளர் வாலாசா வளவன் (மா.பெ.பொ.க), கண்ணன் (மக்கள் விடுதலை), தந்தை பெரியார்  திராவிடர் கழகத்தின் சார்பில்...

காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 21072016

கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய அரசே!  காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! காஷ்மீர் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமல்ல காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே! இந்திய ராணுவமே காஷ்மீரை விட்டு வெளியேறு! எனும் முழக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 21.7.16 அன்று மாலை 4 மணிக்கு கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இதில் அபதுல் சமது மனித நேய மக்கள் கட்சி, ஏ.கே. கரீம் எஸ.டி.பி.ஐ, சுந்தரமூர்த்தி த.வி.இயக்கம், பொழிலன் த.மக்கள் முன்ணனி, கரு.அண்ணாமலை த.பெ.திக, முகமது ரபீக் ராஜா பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, சதீஷ் CPImட மக்கள் விடுதலை, செந்தில் இளந்தமிழகம் மற்றும் கழக பொறுப்பாளர்கள் தபசிகுமரன், உமாபதி, வேழவேந்தன், இயேசு உள்ளிட்ட கழக தோழர்கள் தோழமை இயக்க தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இளந்தமிழகம் இயக்கம்.