மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் ஆர்ப்பாட்டம்!

மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் ஆர்ப்பாட்டம்!
2500க்கும் மேற்பட்டோர் கைது !

இந்து முன்னணியை தடைசெய் !
தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுருத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது !

30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன.

மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கழக தோழர்களுடன் கலந்து கொண்டு கைதாகினார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழக தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும், கடைகளுக்கு அச்சுறுத்தலாக கலவரத்தை ஏற்படுத்தும் இந்து முன்னணியை தடை செய்யவும், அதன் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய்யவும் வலியுறுத்தி பேசினர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலை 6 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டனர்.

14448787_1812873902329835_7920270619876990322_n 14448898_1812874148996477_8283943077775318568_n 14449884_1812873842329841_2005336013148963829_n 14462780_1812874665663092_5863942887729206685_n 14494786_1812874302329795_3138451347362908258_n 14495478_1812873668996525_2736469784636583817_n 14495525_1812874502329775_1895825559392406688_n 14502977_1812874838996408_3164354373723668968_n 14517427_1812874762329749_908284950233033411_n 14523103_1812874098996482_412044257682687821_n 14441022_1812874802329745_4618222106435028198_n

 

You may also like...