பேச்சுரிமையை மறுக்கும் தமிழக அரசு !
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று 01032017 அன்று மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் காஸ் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது
இந்த நிலையில் திடீரென 27022017 நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு
அனுமதி மறுத்து மன்னார்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கடிதம் கொடுத்து உள்ளார் .
நீதிமன்ற அனுமதிக்கு வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோத அரசுகளின் முகமூடிகள்
மக்கள் மன்றத்தில் தோலுரிக்கப்படும் .
செய்தி மன்னை காளிதாசு