ககாபுதூர் சாதீய வன்முறை – உண்மையும் தீர்வும் கோவை 31012017

கா.க.புதூர் சாதீய வன்முறை மற்றும் பரவலாக நடைபெறும் ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து கோவை, பொள்ளாச்சி நகரங்களில் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!

கடந்த சனவரி 8ஆம் தேதி கா.க.புதூரில் தோழர் கா.சு. நாகராசன் இல்லத்தில் ஆதிக்க சாதியினரும் இந்து முண்ணனி மதவெறிக் கும்பலும் சேர்ந்து நடத்திய வன்முறை தாக்குதல் பற்றிய உண்மையும்,தீர்வும் என்ற தலைப்பில் 31.01.2017 செவ்வாய் மாலை 05 மணிக்கு கோவை ஆதித்தமிழன் அரங்கில் அனைத்து இயக்கங்களின் கலைந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் “கொளத்தூர்” மணி அவர்கள், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ” ஆதித்தமிழர்” பேரவை நிறுவனர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். திவிக தோழர் பொள்ளாச்சி வெ.வெள்ளிங்கிரி கா.க.புதூர் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அதிக்க சாதி இந்து முண்ணனி கூட்டணி குறித்தும் வரவேற்புரையில் தெளிவுபடுத்தினார்.தொடர்ந்து தோழர் கா.சு.நாகராசன் 8 ஆம் தேதி வன்முறை மற்றும் அதன் பின்னணி குறித்து அறிமுக உரையாற்றினார்.

திராவிடர் கழகம் – செந்தில்நாதன், சிற்றரசு., ஆதித்தமிழர் பேரவை – பொதுச்செயலாளர் நாகராசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி – பெரியார் சரவணன்., சமூகநீதிக் கட்சி – வழ.பன்னீர் செல்வம்,நாகராசு., தமிழ்ப் புலிகள் இயக்கம் – ஆதித்தமிழன்., ஆதித்தமிழர் கட்சி – அசோகன்., புரட்சிகர இளைஞர் முன்னணி – வழ.மலரவன், மனிதநேய மக்கள் கட்சி – ஜாபர் சாதிக்., SDPI – ரகுபுநிஸ்தார்., SDTU – ஷாஜகான், திராவிடர் பண்பாட்டு நடுவம் – முல்லை வேந்தன்., தமிழ்வழிக் கல்வி இயக்கம் – சின்னப்ப தமிழர்., பெரியார் சிந்தனையாளர் இயக்கம் – புதுவை தீனா, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் – பார்த்திபன்., தமிழ்நாடு விடுதலைப் புலிகள் – வழ.குணசேகரன், சமூகநீதி பதிப்பகம் – தமிழ்ச் செல்வி, தோழர் அறக்கட்டளை – சாந்தகுமார், வழக்குரைஞர்கள் – முருகேசன்,உடுமலை சாதிக் பாட்ஷா, தமிழ்நாடு மாணவர் மன்றம் – தினேசு ஆகியோர் பங்கேற்று கருத்துகளை வழங்கினார்கள்.

ஆதித்தமிழன் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான், சாதி – மதவாத கூட்டு வன்முறையினை எதிர்கொள்ள வேண்டிய தேவைகள் மற்றும் முறைகள் குறித்து உரையாற்றிய பின், இறுதியில் தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி போராட்டங்களை அறிவித்து நிறைவுரையாற்றினார்.

பார்ப்பன பயங்கரவாதம் தமிழ் மண்ணில் எந்த நிலையிலும் காலூன்ற முடியாத சூழலில் ஆதிக்க சாதியினரின் துணையோடு கிராம்ப் புறங்களில் சாதி – மதவாத கூட்டு வன்முறையை நடத்திவருகிறது.சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, சமூகநீதி தளங்களில் பணியாற்றுகிற பெரியார் – அம்பேத்கரிய இயக்கத் தோழர்கள், முற்போக்காளர்கள் ஆகியோரை குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய வன்முறைகளை தடுத்து நிறுத்துவதும், அவற்றிற்கு எதிராக ஒருங்கிணைந்த மக்கள் இயக்கத்தை முன்னெடுப்பதும் அவசியம் என்று பேசிய கொளத்தூர் மணி, கா.க.புதூர் வன்முறையைக் கண்டித்தும் பரவலாக நடைபெறும் சாதி மதவாத கூட்டு வன்முறையை எதிர்த்தும் பிப்ரவரி – 13 ஆம் தேதி கோவையிலும், பிப்ரவரி – 27 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் அனைத்து இயக்கங்கள் சார்பில் ” கண்டன ஆர்ப்பாட்டங்களை” நடத்துவதென அறிவித்துள்ளார்.

கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், ஆதித்தமிழர் பேரவை, பெரியார் தி.க. மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பொருப்பாளர்கள், தோழர்கள் என சுமார் நூறு பேர் கலந்துகொண்டனர்….

16298879_2196508477240097_3207938011938821052_n 16425819_2196508437240101_3984819503377362967_n 16473963_2196508403906771_1642333409015809561_n

You may also like...