சீரழிக்கப்படும் திராவிடர் நாகரிகமும் – சீராட்டப்படும் ராமன் பாலமும்
அரியனாவில் ஹிகார் மாவட்டத்திலுள்ள இராக்கி ஷா, இராக்கி ஹாஸ் எனும் இரட்டை கிராமங்கள், வரலாற்று முக்கியத்துவமானவை. காரணம், இக்கிராமப் பகுதி சிந்து சமவெளி நாகரிகம் தழைத்தோங்கிய காலத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாக கண்டறியப்பட்டவை. 12 ஆண்டுகளுக்குமுன் இங்கே நடந்த அகழ்வாராய்ச்சியில் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அது, ஏடுகளில் தலைப்பு செய்திகளாகவும் வந்தன. சுமார் 160 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த பகுதிதான் இந்தியாவிலேயே கண்டறியப்பட்ட சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்த மிகப் பெரிய பகுதி. அமரேந்திரநாத் என்ற அகழ்வாராய்ச்சியாளர் தலைமையிலான குழு, 1997-1999 ஆண்டுகளில் 3 கோடை விடுமுறைகளில் இந்த ஆய்வுகளை மேற் கொண்டது. ஒரு சமூகததின் நாகரிகத்தைக் கண்டறிய முக்கிய ஆவணமாகக் கருதப்படும், இறந்தவர் உடல்கள் புதைக்கப்பட்ட குழிகளும் இங்கே கண்டறியப்பட்டது. தொண்மை மிக்க திராவிடர் நாகரிகத்தின் சான்றுகளைக் கொண்ட இந்தப் பகுதி, இப்போது மலைமலையாக மாட்டுச் சாணங்களை யும் குப்பைகளையும் கொட்டிக் கிடக்கும்...