இளம் விஞ்ஞானியின் நன்கொடை

தூத்துக்குடியில் பிறந்து, அமெரிக்காவில் உயர் கல்வியும் முனைவர் பட்டமும் பெற்ற இளம் விஞ்ஞானி தோழர் இராசா, பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளையும், பெரியார் முழக்கம் ஏட்டையும் இணைய தளங்கள் வழியாக படித்து மகிழ்ந்து ஜூலை 6 ஆம் தேதி கழகத் தலைமை அலுவலகம் தேடி வந்தார். தற்போது தமிழகம் வந்து, முகப்பேர் மேற்கு பகுதியில் தங்கியுள்ள தோழர் இராசா, தம்முடைய உயர்கல்வி பெறும் நிலை உயர்வுக்குக் காரணமான பெரியார் தொண்டினை நன்றியுடன் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் நினைவு கூர்ந்தார். விரைவில் சாதி மறுப்பு திருமணத்தை எளிமையாக பதிவு செய்ய விருப்பதையும் தெரிவித்தார். தான் பொருளாதார நிலையில் இன்னும் வளரவில்லை. ஆனாலும் இந்த கழகத்துக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று கூறி, ரூ.1000 நன்கொடையை பொதுச் செயலாளரிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்)

பெரியார் முழக்கம் 26072012 இதழ்

You may also like...