தோழர் பழனிக்கு திருச்சியில் வீர வணக்கம்
சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட கிருட்டிணகிரி மாவட்ட பெரியார் தி.க. அமைப்பாளர் பழனிச்சாமிக்கு வீர வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்திலிருந்து அண்ணா சிலை வரை வீரவணக்க ஊர்வலம் 14.7.2012 சனி மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து தலைமையிலும் திருவரங்க நகர செயலாளர் அசோக் முன்னிலையிலும் நடைபெற்றது.
மா.பெ.பொ.கட்சி மாவட்ட செயலாளர் கலியபெருமாள், ஆதித் தமிழர் பேரவை உறந்தை ரமணா, பெரியார் பாசறை அமைப்பாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழாதன், சட்ட எரிப்புப் போராளி முத்துச் செழியன் (பெ.தி.க.), பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியசாமி மற்றும் அகில இந்திய இளைஞர் இயக்கம் டார்வின் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கழக மாவட்ட இணை செயலாளர் த. புதியவன் மற்றும் குணா ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழக மாவட்ட பொருளாளர் மு.மனோகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட செயலாளர் வே.கந்தவேல் குமார் நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 26072012 இதழ்